ஞாயிறு, 6 ஜனவரி, 2019

தென்சென்னை மேனாள் மகளிர் அணித் தலைவர் மறைவு



திராவிடர் கழக தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் சைதை மு.ந. மதியழகன் அவர்களின் தாயாரும், மேனாள் தென்சென்னை மாவட்ட மகளிரணித் தலைவரும், ஜோலார்பேட்டை சுயமரி யாதைச் சுடரொளி கே.கே. சின்னராசு அவர்களின் சம்பந்தியுமாகிய நீலாயதாட்சி நடராஜன் (வயது 92) நேற்று (02.01.2019) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

இவருக்கு அன்பழகன், மதியழகன் , குமணன் ஆகிய மகன்களும், பூங்கோதை என்ற மகளும் உள்ளனர்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்,  சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன், வடசென்னை மாவட்ட  திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன்,  செயலாளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம், சென்னை மண்டல இளைஞரணிச் செயலாளர் சோ.சுரேஷ் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.

மறைந்த அம்மையார் கழக நிகழ்ச்சிகளில் குடும்பத்தோடு பங்கு கொள்பவர். கழகம் நடத்திய போராட்டங்களில் பங்கு கொண்டவர் ஆவார்.

இன்று  (3.01.2019) பிற்பகல்  12.00 மணிக்கு  அம்மை யாரின்  இறுதி ஊர்வலம் புறப்பட்டு, ஜாபர்கான் பேட்டை இடுகாட்டில் இறுதி நிகழ்வுகள் நடை பெற்றன. தொடர்புக்கு: (மதியழகன்) 9884840326

-  விடுதலை நாளேடு,3.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக