வியாழன், 19 அக்டோபர், 2017

டிச. 2 (சுயமரியாதை நாள்): மனித நேய நாளாக கொண்டாடுவோம் சென்னை, தஞ்சாவூர் மண்டல கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

சென்னை மண்டலம்
வடசென்னை, தென்சென்னை, தாம்பரம், ஆவடி, கும்மிடிப்பூண்டி ஆகிய கழக மாவட்டங்கள் அடங்கிய சென்னை மண்டல கழகக் கலந்துரையாடல் கூட்டம், 15.10.2017 மாலை 6 மணிக்கு சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி கடவுள் மறுப்பு, ஆத்மா மறுப்பு கூறினார். சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், விடுதலை சந்தா சேர்ப்பது குறித்தும், கழகப் பிரச்சாரப் பணிகள் குறித்தும் கலந்துரையாடுவதே இக்கூட்டத்தின் நோக்க
மெனக் கூறி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்து உரையாற்றிய கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன், “வரும் டிசம்பம் 2ஆம் தேதியன்று ஈரோட்டில் நடைபெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் மாநாடு போன்று நடைபெற உள்ள பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் 15 ஆயிரம் விடுதலை சந்தாக்கள் நம்முடைய தலைவரை உற்சாகப்படுத்த வழங்குவதென முடிவெடுக் கப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்டு ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் இடைவெளியின்றி நடத்தப்பட்டு வருகின்ற விடுதலை ஏடு மட்டுமே பெண்ணுரிமை, சமூகநீதி, அறிவியல், விஞ்ஞானம், பகுத்தறிவு வளர்ச்சிப் பாதையில் நடைபோடுகின்ற ஏடு!
அது மட்டுமல்லாது கல்வி வள்ளல் காமராசர், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரால் விரும்பிப் படிக்கப்பட்ட கொள்கை ஏடுமாகும்.
50 ஆயிரம் சந்தாக்கள் வழங்குவதென முடிவெடுத்து அதனை நிறைவேற்றிக் காட்டியது போல, தற்போது நிர்ணயித்துள்ள இலக்கினை அடைய சென்னை மண்டல அளவில் குறைந்தது இரண்டாயிரத்து அய்நூறு சந்தாக்கள் வழங்கிட தோழர்கள் முனைப்போடு செயலாற்றிட வேண்டும்'' என்று குறிப்பிட்டு தொடர் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாக விளக்கி சிறப்புரையாற்றினார்.
கழகப் பொதுச் செயலாளரைத் தொடர்ந்து, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, மாவட்ட ப.க. அமைப்பாளர் கொரட்டூர் பன்னீர்செல்வம், வட சென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமார தேவன், தாம்பரம் மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன், சென்னை மண்டல இளைஞரணிச் செயலாளர் இர.சிவ சாமி, காவல்துறை முன்னாள் ஆய்வாளர் அம்பத்தூர் பூ.இராமலிங்கம், கும்மிடிப்பூண்டி மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் கு.செல்வி, ஆவடி மாவட்ட இளைஞரணித் தலைவர் கார்வேந்தன், வடசென்னை மாவட்ட மகளிரணிச் செயலாளர்  ச.இன்பக்கனி, மதுரவாயல் க.பாலமுரளி, ச.அருள்தாசு, வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் தளபதி பாண்டியன், புரசை சு.அன்புச்செல்வன், தென்சென்னை மாவட்டத் துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், புழல் சிறை ஆசிரியர் சா.இராசேந்திரன், கொரட்டூர் இளவரசன், பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவுப் பாசறை அமைப்பாளர் கொரட்டூர் இரா.கோபால், பொறியாளர் குணசேகரன் ஆகியோர் உரையாற்றினர்.
கூட்டத்தில் உரையாற்றிய கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் அதிக அளவில் (100க்கும் மேலாக) சந்தாக் களை சேர்த்துத் தருவதாக உறுதி கூறினர். பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி இணையர், மகள் செ.பெ.தொண்டறம் ஆகியோர் இணைந்து மாதந்தோறும் தங்கள் குடும்பம் சார்பில் வழங்கப்பட்டு வரும் கழக நிதியை கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரனிடம் வழங்கி மகிழ்ந்தனர்.
தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
1. ஈரோடு மாநகரில் மாநாடு போன்று நடைபெற உள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் பெருவிழாவில் சென்னை மண்டலக் கழகம் சார்பில் தனிப் பேருந்துகளில் சென்று, ஏராளமானத் தோழர்கள் கலந்து கொள்வதென முடிவெடுக்கப் படுகின்றது.
2. விடுதலை சந்தா சேர்க்கும் பணியில் சென்னை மண்டலக் கழகத் தோழர்கள் முனைப்பாகச் செயல்பட்டு, ஏனைய மண்டலங்களை விஞ்சும் அளவுக்கு சந்தா சேர்ப்பிக்கப்படல் வேண்டுமென அனைத்துத் தோழர்க ளையும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
3. தந்தை பெரியார் 139ஆவது ஆண்டு பிறந்த நாள் முன்னிட்டு சென்னை மண்டலம் முழுவதும் மாவட்டத் திற்கு 28 கூட்டங்கள் வீதம் தொடர் பிரச்சாரத் தெரு முனைக் கூட்டங்கள் நடத்தப்படுவதற்கு மண்டலக் கழகத் தோழர்கள் அனைவரும் முனைப்போடு செயலாற் றிட வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.
கலந்து கொண்டோர்
தலைமை செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, சி.வெற்றிச் செல்வி, பொதுக்குழு உறுப்பினர் வெ.மு. மோகன், தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, ஆவடி மாவட்ட செயலாளர் சு.சிவக் குமார், மற்றும் சி.செங்குட்டுவன், கி.இராமலிங்கம், மஞ்சநாதன், இசை இன்பன், ச.அருள்தாஸ், ந.மணி துரை, மு.சண்முகப்பிரியன், ஆ.துரைராவணன், சு.மோகன்ராஜ், உடுலை வடிவேல், வை.கலையரசன், க.கலைமணி, மு.மணி காளியப்பன், வழக்குரைஞர் இரா.உத்திரகுமாரன், சேத்துப்பட்டு அ.பாபு, பெரியார் மூர்த்தி, அரங்க பொய்யாமொழி, புழல் க.ச.க. இரணியன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, வி.வளர்மதி, வி.வ.தங்கமணி, கி.மணி மேகலை, கி.இரா.சந்தியா, ச.கற்பகம், த.லலிதா, இ.ப. சீர்த்தி, இ.ப.இனநலம், பார்த்திபன், வேலவன், திலீபன் உள்ளிட்ட கழகத்தின் பல்வேறு அணிகளைச் சார்ந்த ஏராளமான தோழர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அனைத்துக் தோழர்கட்கும், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் அவர்களால் பிரியாணி உணவு வழங்கப்பட்டது.
நிறைவாக சென்னை மண்டல மாணவரணிச் செயலாளர் பா.மணியம்மை நன்றி கூறினார்
-விடுதலை,19.10.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக