தென்சென்னை மாவட்டக் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் கழகத் தோழர்கள் ரூ.27,500 நிதியை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினர். உடன் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன், மாநில மாணவரணிச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்.
-விடுதலை,29.11.16
செவ்வாய், 29 நவம்பர், 2016
தமிழர் தலைவர், ஆசிரியர் பிரச்சார ஊர்தி நிதி வழங்கல்
திங்கள், 28 நவம்பர், 2016
வேன் நிதி வழங்குதல்.....
தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் செங்குட்டுவன் ரூ.5000/-- நிதியை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் வழங்கினார். உடன் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் மற்றும் தோழர்கள்.
-விடுதலை,26.11.16
வெள்ளி, 25 நவம்பர், 2016
நடக்க இருப்பவை நுங்கம்பாக்கம் எம்.நடராஜன் முதலாண்டு நினைவேந்தல்
நடக்க இருப்பவை
நுங்கம்பாக்கம் எம்.நடராஜன் முதலாண்டு நினைவேந்தல்
26.11.2016 சனிக்கிழமை
சென்னை: மாலை 5 மணி
இடம்: ஓட்டல் ராஜ் பவன், கங்காதீசுவரர் சாலை, புரசைவாக்கம், சென்னை
வரவேற்புரை: செ.ர.பார்த்தசாரதி (மாவட்டச் செயலாளர்)
தலைமையுரை: பெ.செல்வராசு (மாநில தி.தொ.க.)
நினைவேந்தல் சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
பாராட்டுரை: இரா. வில்வநாதன் (மாவட்டத் தலைவர்), கோ.வீ.ராகவன் (துணைத் தலைவர்), சி.செங்குட்டுவன் (துணைத் தலைவர்), டி.ஆர்.சேதுராமன் (துணைச் செயலாளர்), க.தாமோதரன் (துணைச் செயலாளர்), நுங்கம்பாக்கம் வெற்றிவீரன், நா.மதிவாணன்,
க.தமிழினியன், துரை.ராவணன்
நன்றியுரை: பத்மாவதி நடராசன்.
ஞாயிறு, 30 அக்டோபர், 2016
சனி, 29 அக்டோபர், 2016
சி.பா.ஆதித்தனார் அவர்களின் 112ஆம் ஆண்டு பிறந்தநாள்
இராணுவப் பயிற்சி மிகப் பெரிய அச்சுறுத்தல்!
சென்னையில் உள்ள தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அவரது 112ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி இன்று (27.9.2016) காலை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்தார்.
சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்தபின் செய்தியாளர்களை சந்தித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தெரி வித்ததாவது:
தமிழர் தலைவர் பேட்டி
அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர் களுக்கு மிகவும் நெருங்கியவராகவும், அதே நேரத்திலே தந்தை பெரியார் அவர்களுடைய உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு நாம் தமிழர் இயக்கத்தின் மூலமாக, மிகச்சிறப்பான வகையிலே தமிழ் உணர்வை ஊட்டிய அருமை அய்யா ஆதித்தனார் அவர்களு டைய பிறந்த நாள் விழாவாகிய இன்றைக்கு அவரால் தோற்றுவிக்கப்பட்ட அந்த உணர் வுகள், மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.
தமிழ் உணர்வு - இனவுணர்வு
எனவே, ஆதித்தனார் அவர்களால் ஊட் டப்பட்ட தமிழ் இன உணர்வு, பற்று மேலும் ஓங்கி, நம்முடைய உரிமைகளை பாதுகாப் பதற்கு இந்நாளில் நாம் மீண்டும் நம்மை அந்த உணர்வின்மூலமாக புதுப்பித்துக் கொள்வோம். வளர்க ஆதித்தனார் அவர்கள் நினைவு!
செய்தியாளர்: உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்களே இதுகுறித்து...?
தமிழர் தலைவர்: உள்ளாட்சித் தேர்தல் என்பது இருக்கிறதே, அது மக்கள் தேர்தலாக நடைபெற வேண்டியதற்குப் பதிலாக, மக் களைத் தூக்கிக் கொண்டு போய், மீண்டும் பதவிக்குக் கொண்டுவரக்கூடிய தேர்தலாக நடக்கக்கூடாது.
செய்தியாளர்: இலங்கையில் போர் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆனபின்பும், தமிழர்கள் நிலை மாறவில்லையே?
தமிழர் தலைவர்: இலங்கையில் போர் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆனபின்பும், அங்கே மீண்டும் சகஜ நிலை, தமிழர் களுடைய உரிமை வாழ்வு திரும்பவில்லை. தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகள் எல்லாம் சிங்களக் குடியேற்றங்கள் இருக்கின்றன. ஊர்ப்பெயர்களில் தமிழ்ப்பெயர்கள் எல்லாம் சிங்கள மயமாக ஆக்கப்படுகின்றன. இராணு வத்தை அவர்கள் திரும்பப் பெறவில்லை. திரிகோணமலையில் இராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகள் பூராவும் இராணுவப் பிரதேசமாக இருக்கிறது. அதை முற்றிலும் தமிழர்கள் வாழாத சிங்களர்களுடைய குடியேற்றமாக ஆக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, இராணுவத் துக்குப் பயிற்சி அளிப்பது மிகப் பெரிய அளவுக்கு ஆபத்து. அச் சுறுத்தல் ஆக.
அதேபோல, தமிழக மீனவர் களுடைய பிரச்சினை. இது வரையில் கைப்பற்றப்பட்ட படகு களை திருப்பிக் கொடுத்ததாக வரலாறு கிடையாது. எத்தனையோ முறை மீனவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே, எந்தப் பிரச்சினை என்றாலும் மத்திய அரசு கண்டும் காணாததைப்போல இருந்து வரு வது நல்லதல்ல. தமிழ்நாட்டின் உரி மைக்கு மட்டுமல்ல, அது இந்திய உரிமைக்கே ஆபத்து ஏற்படும் போக்காகவே இருக்கும்.
கலந்து கொண்டவர்கள்
இந்நிகழ்ச்சியில் கழகத் துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், வெளியுறவு தொடர்பு செயலாளர் வீ.குமரேசன், தஞ்சை மாவட்டத் தலைவர் அமர்சிங், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, தென் சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்டச் செயலாளர் தே.ஒளிவண்ணன், வழக்குரை ஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, சென்னை மண் டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை, ஆடிட்டர் சண்முகம், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், கலை மணி, கொடைரோடு மாலதி, அரும்பாக்கம் சா.தாமோதரன், தரமணி மஞ்சுநாதன், செஞ்சி ந.கதிரவன், சுரேஷ், ராஜ், அசோக், ஆனந்த், அருள், கலைமதி, பவானி, யுவராஜ், காரல் மார்க்ஸ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
-விடுதலை,27.9.16

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 138ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மாட்சிகள் (17.9.2016)

தரமணி தந்தை பெரியார் சிலைக்கு மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மாலை அணிவித்தார்










தென் சென்னை மாவட்ட துள்ளுந்து பிரச்சார பயணம் 17.9.2016 காலை 7.30 மணி அளவில் தரமணி தந்தை பெரியார் நகர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி நினைவு மன்றத்தின் வாயிலி லுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, தந்தை பெரியார் படம் பொறித்த அட்டைகளை தாங்கி நடைபெற்றது.
கானகம், அடையாறு, கோட்டூர் புரம், நந்தனம், வடக்கு உஸ்மான் சாலை வழியாக தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலையை அடைந்தது. அங்கிருந்து புறப்பட்டு பர்கிட் சாலை, செவாலியர் சிவாஜி சாலை, தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, அண்ணா சாலை, சிந்தாதரிப்பேட்டை வழியாக பெரியார் திடல் அடைந்தது.
அங்கிருந்து புறப்பட்டு பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை வழியாக சேத்துப்பட்டு அடைந்தது, அங்கிருந்து புறப்பட்டு எழும்பூர், புதுப்பேட்டை வழியாக திருவல்லிக்கேணி, அய்ஸ் அவுஸ் சென்று முடிவுற்றது.
தரமணி - தந்தை பெரியார் நகர்
காலை 8.00 மணிக்கு தரமணி-பெரியார் நகரிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு தரமணி மஞ்சநாதன் தலைமையில் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் முன்னிலையில் மாவட்ட தலைவர் இரா.வில்வ நாதன் மாலை அணிவித்தார். ஜாபர், நொச்சி நகர் சேது, ந.இராமச்சந்திரன், அய்ஸ் அவுஸ் அன்பு, ஏ.வி.பி.ஆசைத்தம்பி நினைவு மன்ற பொறுப்பாளர்கள் பி.வேம்புலி, கோ.மனோகர், டி.சேகர் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். அங்கிருந்து புறப்பட்டு சென்று,
தியாகராயர் நகர்
காலை 9 .00 மணிக்கு தியாகராயர் நகர் அடைந்து தந்தை பெரியார் சிலைக்கு மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன் தலைமையில் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைத்தலைவர் டி.ஆர்.சேதுராமன் முன்னிலையில் அமைப்பாளர் மு.ந.மதியழகன் மாலை அணிவித்தார்.
மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், கு.செல் வேந்திரன், தரமணி மஞ்சநாதன், நொச்சி நகர் சேது, ந.இராமச் சந்திரன், அய்ஸ் அவுஸ் அன்பு மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர். அங்கிருந்து புறப்பட்டு முற் பகல் 10.45 மணிக்கு பெரியார் திடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு சேத்துப்பட்டு சென்றடைந்தனர்
சேத்துப்பட்டு
முற்பகல் 11.30 மணிக்கு சேத்துப்பட்டு அம்பேத்தர் திடலிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அவர்களும், டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி அவர்களும் துணைத்தலைவர் டி.ஆர்.சேதுராமன் மற்றும் துணைச் செய லாளர் கோ.வீ.ராகவன் ஆகியோர் முன்னிலையில் பகுதி பொறுப்பாளர் அ.பாபு தலைமையில் மாலை அணிவித்தனர். தரமணி மஞ்சநாதன், இளைஞரணி துணைச்செயலாளர் இரா.பிரபாகரன் நொச்சி நகர் சேது, ந.இராமச்சந்திரன், நுங்கம் பாக்கம் க.வெற்றிவீரன், ந.மணித்துரை, ச.துணைவேந்தன் கோட்டூர் பாஸ்கர், மற்றும் பல தோழர்கள் கலந்து கொண் டனர்.
திருவல்லிக்கேணி - அய்ஸ் அவுஸ்:
திருவல்லிக்கேணி சென்றடைந்து நண்பகல் 12.00மணிக்கு திருவல்லிக்கேணி - அய்ஸ் அவுஸ் பகுதியில் மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில், மாவட்ட செயலா ளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையில் பெரியார் படத்திற்கு துணைத்தலைவர் டி.ஆர்.சேதுராமன் மாலை அணிவித்தார். 150 பேருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், இளைஞரணி துணைச் செயலாளர் இரா.பிரபாகரன், தரமணி கோ.மஞ்சநாதன், நுங்கம்பாக்கம் க.வெற்றிவீரன், நொச்சி நகர் சேது ந.மணித்துரை, ச.துணை வேந்தன், கோட்டூர் பாஸ்கர், ஆட்டோ அன்பு, பெரியார் சித்தன், பாவலன் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர். பிரச்சார பயணம் முடிவுற்றது
நுங்கம்பாக்கம்
காலை 7.00மணிக்கு மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்த சாரதி இல்லம் எதிரில் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
சூளைமேடு
பிற்பகல் 3.00 மணிக்கு சூளைமேடு ஆத்ரேயா நகரில், தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து ந. இராமச்சந் திரன் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடினார். தோழர்கள் கலந்து கொண்டனர்.
நொச்சிக்குப்பம் (கடற்கரை):
பிற்பகல் 3.30. மணிக்கு நொச்சிக் குப்பம் (கடற்கரை) பகுதி யில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் முன்னிலையில் இளைஞரணி துணைச் செயலாளர் இரா.பிரபாகரன் அவர்களால் 150 பேருக்கு இனிப்பு வழங்கப்பட்டு பெருமகிழ்ச்சியுடன் கொண் டாடினர். ச.துணைவேந்தன், வி.வளர்மதி, பி.அஜந்தா, இரா.கார்த்தி, நொச்சி நகர் சேது, தீனா, கிருஷ்ணமூர்த்தி, வி.தங்க மணி, வி.யாழ்ஒளி மற்றும் பல தோழர்கள் கலந்துகொண்டனர்.
நொச்சி நகர் (காமராசர் கடற்கரை சாலை):
பிற்பகல் 4.00 மணிக்கு நொச்சி நகர் (காமராசர் கடற்கரை சாலை) பகுதியில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் முன்னி லையில் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி அவர்களால் கழகக் கொடியேற்றி வைக்கப்பட்டது. இளைஞரணி துணைச் செயலாளர் இரா.பிரபாகரன், ச.துணைவேந்தன், வி.வளர்மதி, பி.அஜந்தா, இரா.கார்த்தி, நொச்சி நகர் சேது, தீனா, கிருஷ்ண மூர்த்தி, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி மற்றும் பல தோழர்கள் கலந்துகொண்டனர்.
தென்சென்னையில் பல இடங்களில் தந்தை பெரியார் படத்தை வைத்து மாலை அணிவித்தும், ஒலி பெருக்கி வைத்து கொள்கை பாடல்கள் ஒலிபரப்பியும் இனிப்பு வழங் கியும் பிறந்தநாள் விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

