சனி, 29 அக்டோபர், 2016

சி.பா.ஆதித்தனார் அவர்களின் 112ஆம் ஆண்டு பிறந்தநாள்


தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் அவர்களின் 112ஆம் ஆண்டு பிறந்தநாளான இன்று (27.9.2016) சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழகத் தோழர்களோடு சென்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் விழா
தமிழர்களின் உரிமை பறிக்கப்படும் இந்தக் கால கட்டத்தில் அவர் ஊட்டிய உணர்வு தேவைப்படுகிறது!
இலங்கையில் தமிழர் பகுதியில் சிங்களமயம்
இராணுவப் பயிற்சி  மிகப் பெரிய அச்சுறுத்தல்!
செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் அளித்த பேட்டி
சென்னை, செப். 27 தமிழர்களின் தமிழ்நாட்டின் உரிமைகளுக்குச் சவால்கள் நிறைந்துள்ள இந்தக் காலக் கட்டத்தில், சி.பா. ஆதித் தனார் - தந்தை பெரியார் அவர் களின் உணர்வோடு கலந்து வெளிப் படுத்திய உணர்வுகள் தேவைப்படு கின்றன. அவற்றை மீண்டும் புதுப் பித்துக் கொள்வோம் என்றார் திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.
சென்னையில் உள்ள தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அவரது 112ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி இன்று (27.9.2016)  காலை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்தார்.

சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்தபின் செய்தியாளர்களை சந்தித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தெரி வித்ததாவது:

தமிழர் தலைவர் பேட்டி


அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர் களுக்கு மிகவும் நெருங்கியவராகவும், அதே நேரத்திலே தந்தை பெரியார் அவர்களுடைய உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு  நாம் தமிழர் இயக்கத்தின் மூலமாக, மிகச்சிறப்பான வகையிலே தமிழ் உணர்வை ஊட்டிய அருமை அய்யா ஆதித்தனார் அவர்களு டைய பிறந்த நாள் விழாவாகிய இன்றைக்கு  அவரால் தோற்றுவிக்கப்பட்ட அந்த உணர் வுகள், மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.
ஏனென்றால், தமிழ்நாட்டைப் பொறுத்த வரையிலே ஒவ்வொரு துறையிலும் ஆக்கிர மிப்புகள், உரிமைப்பறிப்புகள் இருக்கிற இந்தக் காலக்கட்டத்திலே, தமிழன் என்ற உணர்வும், மொழி உணர்வும், நம்முடைய உரிமைகளை நாம் பாதுகாப்போம் என்ற அளவிலே, உரிமைக்குக் குரல் கொடுத்து, உறவுக்குக் கைகொடுக்கக்கூடிய அந்த அளவிலே இருக்க வேண்டும். அதுமாத்திரம் அல்லாமல் தமிழ்ப் பத்திரிகை உலகிலே அவர் போட்டியிட்டு ஒரு பெரிய புரட்சி செய்தது என்பது வேறு எந்த தமிழராலும், இதுவரையிலே வேறு யாராலும் அடைய முடியாத இலக்காக இருக்கிறது.

தமிழ் உணர்வு - இனவுணர்வு

எனவே, ஆதித்தனார் அவர்களால் ஊட் டப்பட்ட  தமிழ் இன உணர்வு, பற்று மேலும் ஓங்கி, நம்முடைய உரிமைகளை பாதுகாப் பதற்கு இந்நாளில் நாம் மீண்டும் நம்மை அந்த உணர்வின்மூலமாக புதுப்பித்துக் கொள்வோம். வளர்க ஆதித்தனார் அவர்கள் நினைவு!

செய்தியாளர்: உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்களே இதுகுறித்து...?

தமிழர் தலைவர்: உள்ளாட்சித் தேர்தல் என்பது இருக்கிறதே, அது மக்கள் தேர்தலாக நடைபெற வேண்டியதற்குப் பதிலாக, மக் களைத் தூக்கிக் கொண்டு போய், மீண்டும் பதவிக்குக் கொண்டுவரக்கூடிய தேர்தலாக நடக்கக்கூடாது.

செய்தியாளர்: இலங்கையில் போர் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆனபின்பும், தமிழர்கள் நிலை மாறவில்லையே?

தமிழர் தலைவர்: இலங்கையில் போர் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆனபின்பும், அங்கே மீண்டும் சகஜ நிலை, தமிழர் களுடைய உரிமை வாழ்வு திரும்பவில்லை. தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகள் எல்லாம் சிங்களக் குடியேற்றங்கள் இருக்கின்றன. ஊர்ப்பெயர்களில் தமிழ்ப்பெயர்கள் எல்லாம் சிங்கள மயமாக ஆக்கப்படுகின்றன. இராணு வத்தை அவர்கள் திரும்பப் பெறவில்லை. திரிகோணமலையில் இராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகள் பூராவும் இராணுவப் பிரதேசமாக இருக்கிறது. அதை முற்றிலும் தமிழர்கள் வாழாத சிங்களர்களுடைய குடியேற்றமாக ஆக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, இராணுவத் துக்குப் பயிற்சி அளிப்பது மிகப் பெரிய அளவுக்கு ஆபத்து. அச் சுறுத்தல் ஆக.

அதேபோல, தமிழக மீனவர் களுடைய பிரச்சினை. இது வரையில் கைப்பற்றப்பட்ட படகு களை திருப்பிக் கொடுத்ததாக வரலாறு கிடையாது. எத்தனையோ முறை மீனவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே, எந்தப் பிரச்சினை என்றாலும் மத்திய அரசு கண்டும் காணாததைப்போல இருந்து வரு வது நல்லதல்ல. தமிழ்நாட்டின் உரி மைக்கு மட்டுமல்ல,  அது  இந்திய உரிமைக்கே ஆபத்து ஏற்படும் போக்காகவே இருக்கும்.

கலந்து கொண்டவர்கள்

இந்நிகழ்ச்சியில் கழகத் துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், வெளியுறவு தொடர்பு செயலாளர் வீ.குமரேசன், தஞ்சை மாவட்டத் தலைவர் அமர்சிங், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு,  தென் சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்டச் செயலாளர் தே.ஒளிவண்ணன்,  வழக்குரை ஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி,   சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, சென்னை மண் டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை, ஆடிட்டர் சண்முகம்,  ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், கலை மணி, கொடைரோடு மாலதி,  அரும்பாக்கம் சா.தாமோதரன், தரமணி மஞ்சுநாதன், செஞ்சி ந.கதிரவன், சுரேஷ், ராஜ், அசோக், ஆனந்த், அருள்,  கலைமதி, பவானி,  யுவராஜ், காரல் மார்க்ஸ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


-விடுதலை,27.9.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக