புதன், 19 பிப்ரவரி, 2020

‘நீட்'டை ஒழிக்கும்வரை ஓயப்போவதில்லை - பிப்ரவரி 21 இல் திருச்சியில் தீர்மானிப்போம்!

நாகர்கோவில் முதல் சென்னை வரை - 11 நாள்கள் பெரும் பயணம் பிரச்சாரப் பயணத்தில் பெரும் பங்காற்றிய தோழர்களுக்குப் பாராட்டு - அனைத்துக் கட்சித் தலைவர்கள், தொண்டர்களின் பரிவு - பங்களிப்பு - பாராட்டு அனைத்திற்கும் நன்றி!

நாகர்கோவிலில் தொடங்கி - சென்னையில் நிறைவு பெற்ற ‘நீட்' எதிர்ப்புப் பிரச்சாரப் பெரும் பயணம் குறித்தும், அடுத்தகட்ட நமது நடவடிக் கைகள் திருச்சியில் வரும் 21 ஆம் தேதி தீர்மானிக்கப்படும் என்று அறிவித்தும்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:

நம் மக்களின் அடிப்படைத் தேவை கல்வியாகும். பகுத்தறிவு - பட்டறிவு - ஒத்தறிவு - பொது அறிவு ஆகிய அனைத்து அறிவுகளையும் ‘‘சாணை தீட்டுவது'' கல்வியாகும்.

அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கல்வியை பெரும்பாலான ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கொடாது பறிக்கப்பட்ட கொடுமை, ஆரியத்தின் மனுதர்மப் படையெடுப்பின் காரணமாகவே! ஜாதி தர்மக் கொடுமையின் விளைவு இது!

நமது அரசர்களின் மனுதர்மப் பாதை

ஆயிரம் ஆண்டுகாலத்துக்குமுன் ஆண்ட அரசர்களின் ஆட்சி மனு மயமானதால், திராவிட சமுதாயம் கல்விக் கண்ணை இழந்தது! கல்வி ஆரியத்தின் ஏகபோகமாகியது!

இதனை மீட்டெடுக்கும் முயற்சி ஒரு தொடர் தடை ஓட்டப் பந்தயமாகவே இன்றுவரை நடத்தப்பட்டது - நடந்தும் வருகிறது!

நீதிக்கட்சி என்ற திராவிடர் இயக்க ஆட்சியில் தொடங்கிய கல்வி மறுமலர்ச்சி - தந்தை பெரியார், காமராஜர், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆட்சிகளின் போது தொடரவே செய்தது!

திராவிடர் இயக்கத்தின் தொடர்ச்சி என்று கருதப் பட்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் முன்னே போவதும், பின்னே வருவதுமான சில பல நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் ஒரு தொடர் வளர்ச்சிக்கு அதிக பாதிப்பு அற்ற நிலை ஏற்பட்டு, பல போராட்டங்கள் மீட்டுருவாகி தொடர்ந்தன.

மோடி ஆட்சியும் -

தமிழகத்தின் சரணாகதி ஆட்சியும்!

ஆனால், கடந்த 3  ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சி - மத்தியில் மோடி ஆட்சி ஏற்பட்டவுடன், டில்லியே சரணம் என்று ‘‘சாஷ்டாங்கமாக'' கீழே விழுந்து, மாநில உரிமைகளை - ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படி, கூட் டாட்சிக்கு (Federal) விடை கொடுத்து, ஒற்றை ஆட்சி  (Unitary) ஆட்சியாகவே அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நடைமுறைபடுத்துகின்றனர். அதில் முதல் தாக்குதலுக்கான பலியாக (First Casualty) நம் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி குலதர்மக் கல்வியாக மாற்றப்பட்டு, சமஸ்கிருத மொழி - கலாச்சாரத்தின் படையெடுப்பாகவே மாறிவருகிறது!

நமது அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அடிக் கட்டுமான உறுதிகளான - சமூகநீதி உள்ளிட்ட அடிப் படை உரிமைகள் திட்டமிட்டே பறிக்கப்படுகின்றன.

நமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியை

அழித்திட கண்ணிவெடி

நம் பிள்ளைகளின் ‘கல்விக் கண்' திட்டமிட்டே குத்தப்படுகிறது; நமது கல்வி வளர்ச்சி - குறிப்பாக தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி - நீதிக்கட்சி, காமராசர் ஆட்சி, பிறகு வந்த தி.மு.க. ஆட்சியில் வளர்ந்த தொழிற்படிப்பிலிருந்து தொடக்கக் கல்வி வரையில் மண்ணைப் போட்டு, பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிப் பாதையில், ‘நீட்' என்றும், புதிய மத்தியக் கல்விக் கொள்கை என்றும் கண்ணிவெடிகளை மத்தியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் புதைத்து வைத்துள்ள பேரபாயம் நீடிக்கிறது!

நமது இயக்கப் பெரும்

பயணத்தின் எழுச்சி!

இதைப் பெற்றோர்களுக்கும், வருங்கால சந்ததியின ருமான நம் மக்களுக்கும் உணர்த்தி, மனுதர்மக் கல்வியை மாற்றி, சமதர்ம - மனித தர்மக் கல்வியை - அறிவியல் மனப்பான்மையோடு கூடிய முற்போக்குத் தொழிற்கல்வியை அளிக்கும் முந்தைய பொற்காலத் தைப் புதுப்பிக்கச் செய்ய ஓர் விழிப்புணர்வு இயக்கமாக - நமது பரப்புரைக்கான பெரும் பயணம் அமைந்தது. கடந்த 2020 ஜனவரி 20 ஆம் தேதி கன்னியாகுமரி - நாகர்கோவிலில் தொடங்கிய நமது கல்வி மீட்டெடுப்பு கடமைப் பயணம்,

நாகர்கோவில்

திருநெல்வேலி

கோவில்பட்டி

சாத்தூர்

மதுரை

காரைக்குடி

புதுக்கோட்டை

திருச்சி (மறைவு நிகழ்ச்சி)

கரூர்

சேலம் (கமிட்டி)

பெத்தநாயக்கன்பாளையம்  (படத்திறப்பு - கொடி யேற்றம்)

ஆத்தூர்

கல்லக்குறிச்சி

பெரம்பலூர்

அரியலூர்

மயிலாடுதுறை

சிதம்பரம்

புதுச்சேரி (மாநிலம்)

திண்டிவனம்

செய்யாறு

காஞ்சிபுரம்

அரக்கோணம்

திருத்தணி

பிரச்சாரக் கூட்டங்கள்  வெற்றி முரசு கொட்டின! நிறைவு விழா சென்னையில் மிகப் பெருந்திரள் நிகழ்ச் சியாக சென்னை மாவட்டக் கழகங்களின் பொறுப் பாளர்களால் வெகுதிறம்பட பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி நடத்தி வெற்றி வாகை சூட வைத்தார்கள்! சென்னை எம்.ஜி.ஆர். நகர் குலுங்கியது!

பயணத்தில் பங்கு கொண்டோரின்

மகத்தான பணிகள்

ஆங்காங்கே நமது மதச்சார்பற்ற முற்போக்கு அணிகளைச் சார்ந்தவர்களும், கிளைக் கழகங்களின் பொறுப்பாளர்களும், பெற்றோர்களும், மாணவர்கள் - இளைஞர்கள், வணிகர்கள் என்று பலதரப்பட்டோரும் நமது பரப்புரைக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து வரலாறு படைத்தனர்.

ஏழு வாகனங்கள் (நகர்வு புத்தகச் சந்தை) உள்பட

26 தோழர்கள்

பயணம் 2700 கிலோ மீட்டர்

11 நாட்கள்

சிறு சிறு வெளியீடுகளை மக்கள் வாங்கிய வகையில் ரூ.75,000.

அத்துடன் ஒவ்வொரு நாளும் நாம் தங்கியிருந்த இடங்களில்  நேரில் வந்து அன்பையும், ஆதரவையும், பாசத்தையும் பொழிந்ததும், நமது உடல்நிலைப்பற்றி எல்லையற்ற கவலையைத் தெரிவித்ததும், நமக்கு உறவுகள் உலக உறவுகள் - ‘‘யாவரும் கேளிர்'' என்பதை உறுதிப்படுத்தின!

இம்முறை இந்த ஏற்பாடுகளை நமது இயக்கப் பொறுப்பாளர்கள், தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், மாவட்ட, நகர, கிராம, கிளைக் கழகப் பொறுப்பாளர் கள்வரை ஆர்வமும், உற்சாகமும் கரைபுரண்டு ஓடும் வண்ணம் மகிழ்ச்சியுடன் சிறந்த முறையில் கடமையாற்றி மக்களைத் திரட்டிய பணி மகத்தானது.

என்னுடன் வந்த பேச்சாளர்கள், அமைப்பினர் முதல் ஓட்டுநர் தோழர்கள், புத்தகப் பரப்புவோர், ஊடக உதவியாளர் உள்பட யாரும் சோர்வோ, களைப்போ, அலுப்போ இன்றி சுறுசுறுப்புத் தேனீக் களாகவே ‘குடிசெய்வார்க்கில்லை பருவம்' என்பதற்கு இலக்கணமாகவே செயல்பட்டனர். மகிழ்ச்சிக் குடும்ப மாகவே ஒவ்வொரு நாளும் கடந்தது!

எல்லோருக்கும் நமது இதயம் கனிந்த நன்றி! நன்றி!! நன்றி!!!

‘‘அந்த நாளும் வந்திடாதோ'' என்று பிரிந்து சென்ற பின் ஏங்கும் பயணம் இது!

சென்னை நிறைவு விழாவின் மாட்சியும் - அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பும்!

நிறைவாக, சென்னையில் நமது கழக மாமணிகளின் சிறந்த ஏற்பாடு - நமது வெற்றி மகுடத்தில் முத்துகள்!

நமது தோழமைக் கட்சிப் போராளித் தலைவர்கள்,

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி,

டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., தி.மு.க.,

தோழர்  கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி

தோழர் இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி

பேராசிரியர் ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி,

வழக்குரைஞர் அழகுசுந்தரம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

- இப்படி கலந்துகொண்டு ஊக்கப்படுத்திய பல கட்சி தலைவர்களுக்கும் எமது தலைதாழ்ந்த நன்றி!

திருச்சியில் தீர்மானிப்போம்!

அடுத்த களத்திற்கான ஆயத்தத்திற்குத் தொடக்கம் சரியாகவே அமைந்தது.

திருச்சியில் பிப்ரவரி 21 இல் கூடுவோம்!

திடமான போராட்ட அறிவிப்புகள் வெளிவரும்,

எம் தலைவர் தந்தை பெரியார் என்றும் வாழ்வார்!

எப்போதும், எவருக்கும் தேவைப்படுவார்!

ஆம்! இது காலத்தின் கட்டளை, கடமையின் உயிர்ப்புடன் ஆயத்தமாவீர்,  ஆயத்தமாவீர் - தோழர்களே!

களம் காண, சிறைபுக ஆயத்தமாவீர்!!

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

1.2.2020

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

நாகர்கோவில் முதல் சென்னை வரை ‘நீட்' எதிர்ப்புப் பரப்புரைப் பயணம்

நாகர்கோவில் முதல் சென்னை வரை ‘நீட்' எதிர்ப்புப் பரப்புரைப் பயணம் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு தமிழர் தலைவர் தலைமையில் அணிவகுத்தது காண்!

தொகுப்பு: இரா.ஜெயக்குமார் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

நேற்றைய விடுதலையில் வெளிவந்ததின் தொடர்ச்சி....

22.01.2020 ஹார்விப்பட்டி இராமசாமி உடல்

மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைப்பு

காலை உணவை முடித்து விடுதியிலிருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு மருத்துவக்கல்லூரிக்கு வருகை தந்தார் தமிழர் தலைவர். இயக்கத்தின் புரவலர், 60 ஆண்டு கால விடுதலை வாசகர் மதுரை ஹார்விப்பட்டி பெரியார் பெருந் தொண்டர் இராமசாமி அவர்கள் உடலை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களிடம் கொடையாக வழங்கினார். முன்னதாக நடை பெற்ற இரங்கல் கூட்டத்தில் தமிழர் தலைவர் அவர்கள் இரங்கலுரையாற்றினார். 21.01.2020 அன்று மறைவுற்ற பெரியார் பெருந்தொண்டர் இராமசாமி அவர்களுக்கு மதுரை பொதுக் கூட்ட மேடையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

செய்தியாளர்கள் சந்திப்பு

22.01.2020 முற்பகல் 11 மணிக்கு மதுரை மருத்துவக் கல் லூரியில் கூடிய செய்தியாளர்களிடம் பெரியார் பெருந் தொண்டர் இராமசாமி அவர்கள் நமது நிறுவனத்திற்கு உதவியது பற்றியும், நீட் தேர்வு பரப்புரைப் பெரும் பயணம் குறித்தும் பேட்டியளித்தார். 11.15 மணிக்கு தமிழர் தலைவர் உடன் வரும் தோழர்களுடன் காரைக்குடி நோக்கி புறப் பட்டார்.

காரைக்குடியில் வரவேற்பு

மதுரையில் புறப்பட்ட பயணக்குழுவினர் மதியம் ஒரு மணிக்கு காரைக்குடி வந்தடைந்தனர்.  காரைக்குடி பெரியார் சிலையருகில் கழகத் தோழர்கள் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வரவேற்று மகிழ்ந்தனர்.

என்.ஆர்.சாமி நகர் பெரியார் தோட்டத்தில் மதிய உணவு

காரைக்குடி என்.ஆர்.சாமி நகர் பெரியார் தோட்டத்திற்கு மதியம் 1.15 மணிக்கு வருகைதந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு காரைக்குடி என்.ஆர்.சாமி பேராண்டாள் குடும்பத்தினர் சாமி.திராவிடமணி - ஜெயாதிராவிடமணி, சாமி.திராவிடச்செல்வன் - தமிழ்செல்வி, தி.என்னாரசு பிராட்லா  ஜான்சிராணி, ச.பிரின்சு என்னாரசு பெரியார், தி.புருனோ என்னாரசு  ரம்யா மலர், சரத்குமார் - ரம்யா, பெரியார் பிஞ்சுகள் சித்தார்த்தன், கவுதமன் ஆகியோர் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.  பிறகு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் பயணக்குழுவில் வருகை தந்த அனைவருக்கும் மண்டலத்தலைவர் சாமி.திராவிடமணி - ஜெயா ஆகியோரின் தி.சாக்ரடீஸ் இல்லத்தில் மதிய உணவு அளித்து உபசரிக்கப்பட்டது.  பிறகு திராவிடச் செல்வன் இல்லம் மற்றும் பெரியார் தோட்டத்தை சுற்றிப் பார்த்தார் தமிழர் தலைவர். ஈரோடு தாத்தா புத்தகம் எழுதிய நாராநாச்சியப்பன் அவர்களுடைய தம்பி மகன் பிராட்லா இல்லத்தை கட்டிய பொறியாளர் நாச்சியப்பன், தமிழர் தலைவர் அவர்கள் கொடியுடன் உள்ள படத்தை ஆசிரி யருக்கு அன்பளிப்பாக அளித்து மகிழ்ந்தார்.  அவருக்கு ஆசிரியர் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்து அனைவரிடமும் விடைபெற்று காரைக்குடி நாச்சியப்பா பேலஸ் தங்கும் விடுதிக்கு பயணக்குழுவினருடன் ஓய்வுக்கு சென்றார் ஆசிரியர் அவர்கள்.

காரைக்குடியில் பொதுக்கூட்டம் (22.01.2020)

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாலை 6.45 மணிக்கு விடுதியிலிருந்து புறப்பட்டு 7 மணிக்கு காரைக்குடி அய்ந்து விளக்கு திடலில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு வருகை தந்தார்கள். மாவட்டச் செயலாளர் ம.கு.வைகறை அனைவரையும் வரவேற்றார்.  மாவட்டத் தலைவர் ச.அரங்கசாமி தலைமையேற்றார். மண்டலத் தலைவர் சாமி. திராவிடமணி, மாநில மகளிரணி அமைப்பாளர் மு.சு கண்மணி, மாநில மாணவர் கழக செயலாளர்

ச.பிரின்ஸ்என்னாரசு பெரியார், தலைமைக் கழக பேச்சாளர் தி.என்னாரசுபிராட்லா, மண்டலச் செயலாளர் அ.மகேந்திர ராசன், மாவட்ட துணைச் செயலாளர் பழனிவேல், சிவகங்கை வழக்குரைஞர் இன்பலாதன், சுப்பையா, ராஜாராம், அனந்த வேல், மாவட்ட துணைத்தலைவர், கொ.மணிவண்ணன், நகரத்தலைவர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலையேற்றனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இரவு 7.20 மணி முதல் 8.05 மணி வரை 45 நிமிடங்கள் சிறப்புரையாற்றினார். நகர செயலாளர் தி.க.கலைமணி நன்றி கூறினார்.

தோழமை கட்சியினர் வரவேற்பு

தி.மு.க. நகர செயலாளர் நா.குணசேகரன், ம.தி.மு.க. மாநில இளைஞரணி துணைச்செயலாளர் சி.மனோகரன், காங்கிரஸ் நகர தலைவர் ந.பாண்டிமெய்யப்பன், AITUC மாநில குழு உறுப்பினர் பழ.இராமச்சந்திரன், சி.பி.அய் (எம்) மாவட்டக்குழு கருப்பசாமி. சி.டி.அய். நகர செயலாளர் சீனிவாசன், வி.சி.க. இளையகவுதமன் உள்ளிட்ட தோழமை இயக்க பொறுப் பாளர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

வாழ்நாள் சாதனையாளர் படம் அன்பளிப்பு

அமெரிக்காவில் நடைபெற்ற மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு அளிக்கப்பட்ட மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது படத்தினை டைல்சில் பதிவு செய்து காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கழகப் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களுக்கு அளித்தனர்.  இரவு 8 மணிக்கு அனைவரிடமும் விடைபெற்று தமிழர் தலைவர் வாகனம் புதுக்கோட்டையை நோக்கி புறப்பட்டது.

புதுக்கோட்டை பொதுக்கூட்டம்  (22.01.2020)

இரவு 9.00 மணிக்கு புதுக்கோட்டை நகர எல்லையில் கழக இளைஞரணி தோழர்கள் இருசக்கர வாகனத்தில் ஏராளமானோர் வருகைதந்து பயணக் குழுவினரை வரவேற்று இரவு 9.05 மணிக்கு புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் அமைக்கப்பட்ட பொதுக்கூட்ட மேடைக்கு வருகை தந்தனர்.  மாவட்டத் தலைவர் கு.அறிவொளி வரவேற்றார், மண்டலத் தலைவர் பெ.இராவணன் தலைமை வகித்தார். மண்டலச்செயலாளர் சு.தேன்மொழி, பொதுக்குழு உறுப்பினர்கள், இரா.புட்பநாதன், இரா.சரஸ்வதி, மாவட்டச் செயலாளர், ப.வீரப்பன், அறந்தாங்கி மாவட்டச் செயலாளர் இளங்கோ, மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து ஆகியோர் முன்னிலையேற்றனர்.  இரவு 9.20 மணி முதல் 10.00 மணிவரை 40 நிமிடங்கள் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். பெருந்திரளாக பொதுமக்கள் கூடி நின்று தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.

தோழமை இயக்கத்தினர் வரவேற்பு

தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் டாக்டர் சந்திரசேகரன், தி.மு.க. இலக்கிய அணி செயலாளர் கவிச்சுடர் கவிதைபித்தன், பெரியார் விருது பெற்ற மருத்துவர் உள் ளிட்டோர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர்.  பெரியார் திடலில் பெரியார் விருது பெற்ற மருத்துவர்   அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

இரவு  திருச்சி பெரியார் மாளிகை

22.01.2020 இரவு 10.00 மணிக்கு புதுக்கோட்டையில் புறப்பட்டு பயணக்குழுவினர் வரும் வழியில் சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி தமிழர் தலைவர் ஆசிரியர் உட்பட இரவு உணவை முடித்து இரவு சரியாக 11.30 க்கு திருச்சி பெரியார் மாளிகை வருகை தந்து ஓய்வுக்கு சென்றார் ஆசிரியர்.

தோழர்கள் சந்திப்பு

லால்குடி, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கழக பொறுப் பாளர்கள் தோழர்கள் பெரியார் மாளிகையில் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ந்தார்கள்.

கரூரில் வரவேற்பு (23.01.2020)

திருச்சி பெரியார் மாளிகையிலிருந்து 23.01.2020 முற்பகல் 11.30 மணியளவில் பயணக்குழுவினருடன் புறப்பட்டு மதியம் 1 மணிக்கு கரூர் வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களுக்கு பெரியார் சிலை அருகில் கரூர் மாவட்டக் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.  தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.  1.15 மணிக்கு கரூர் அரசி விடுதிக்கு ஆசிரியர் வருகை தந்தார்கள்.  மதியம் 2. மணிக்கு கரூர் அன்பு இல்லத்திலிருந்து கொண்டு வந்த உணவு ஆசிரியர் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.  மாலை வரை கழகத் தோழர்கள் அரசியல் கட்சியினர், சமூக நீதி பற்றாளர்கள் பலர், ஆசிரியர் அவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ந்தனர்.

கரூர் பொதுக்கூட்டம் (23.01.2020)

23.01.2020 மாலை 6.45 மணிக்கு நான்காவது நாள் பரப்புரைக்காக கரூர் அரசி விடுதியிலிருந்து புறப்பட்டு கரூர் குமரன் சிலை முன்பு அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு 6.55 மணிக்கு வருகை தந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், மாவட்டச் செயலாளர் ம.காளிமுத்து வரவேற்றார், மாவட்டத் தலைவர் ப.குமாரசாமி தலைமை தாங்கினார், சே.அன்பு, ம.பொம்மன், பொத்தனூர், க.சண்முகம், மு.க. இராஜசேகரன், க.நா.சதாசிவம் ஆகியோர் முன்னிலை யேற்றனர். 7.20 மணிக்கு உரையை தொடங்கி தமிழர் தலைவர் 8.05 மணிக்கு நிறைவு செய்தார். மாணவர்கள், பெற்றோர்கள், இளைஞர்கள் பெருந்திரளாக கூடி உரையை கேட்டு மகிழ்ந்தனர்.  நகர செயலாளர் ம.சதாசிவம் நன்றி கூறினார்.

தோழமை இயக்கத்தினர் வரவேற்பு

நீட் எதிர்ப்பு பயணம் மேற்கொண்டு கரூர் வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் பேங்க் கே.சுப்ரமணி, காங்கிரஸ் மாவட்டத்தலைவர் சின்னசாமி, உள்ளிட்ட அனைத்துக்கட்சி தோழர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரி வித்தனர். அவர்களிடமிருந்து விடைபெற்று 8.10 மணிக்கு கரூரிலிருந்து ஈரோடு நோக்கி புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர்.

ஈரோடு பொதுக்கூட்டம் (23.01.2020)

23.01.2020 ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் அமைக்கப் பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 9.40 மணிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேடை ஏறியவுடன் நேரடியாக பேச்சை தொடங்கி இரவு 10 மணிக்கு நிறைவு செய்தார். மாவட்டச் செயலாளர் சிற்றரசு வரவேற்றார்.  மாவட்டத் தலைவர் நற்குணம் தலைமையேற்றார்.  கோபால கிருஷ்ணன், த.சக்திவேல், இரா.சீனிவாசன், ந.சிவலிங்கம், ப.காளிமுத்து, த.சண்முகம், ப.பிரகலாதன், பெ.இராஜ மாணிக்கம் ஆகியோர் முன்னிலையேற்றனர்.  மணிமாறன் நன்றி கூறினார்.

ஆசிரியர் அவர்களை வரவேற்ற தோழமை கட்சியினர்

தி.மு.க. பொறுப்பாளர்கள், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திருமதி.சுப்புலெட்சுமி ஜெகதீசன், காங்கிரஸ் கமிட்டி மாநகரத் தலைவர் ஈ.பி.ரவி, சி.பி.எம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், சி.பி.அய். மாவட்டச்செயலாளர் திருநாவுக்கரசு, ம.தி.மு.க. சட்ட திருத்தக்குழு உறுப்பினர் கு.குணசேகரன், வி.சி.க மண்டல அமைப்பு செயலாளர் ந.விநாயகமூர்த்தி உள்ளிட்டோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து ‘நீட்' எதிர்ப்பு பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.

சம்பத் இல்லம்

ஈரோடு சம்பத் அவர்களின் வாழ்விணையர் (திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களது தங்கை) அண்மையில் மறைவுற்றார்கள் ஈரோடு பொதுக்கூட்டத்திற்கு வருகைதந்த ஆசிரியர் அவர்கள், அவர்கள் இல்லத்திற்கு வருகை தந்து துக்கம் விசாரித்து மறைந்த அம்மையார் படத்திற்கு - மாலை அணிவித்து இரவு 10.30 மணிக்கு சேலம் நோக்கி புறப்பட்டார்.

(23.01.2020) இரவு சேலத்தில் வரவேற்பு

ஈரோட்டிலிருந்து புறப்பட்டு வரும் வழியில் சாலை ஓரத் தில் இரவு உணவை முடித்து நள்ளிரவு 1.15 மணிக்கு சேலம் சிரிசாந்த் விடுதிக்கு வருகை தந்த ஆசிரியர் அவர்களை சேலம் தோழர்கள் வரவேற்றனர். பிறகு உறங்கச் சென்றார்கள்.

24.01.2020 சேலம்

காலை 8 மணி முதல் சேலம், மேட்டூர் மாவட்ட கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், ஆசிரியர் அவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ந்தனர்.

‘பெரியார் 1000' மாணவர்களுக்கு பரிசு

தந்தை பெரியார் 141ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும், பெரியார் பிஞ்சு மாத இதழும் இணைந்து நடத்திய பெரியார் 1000 வினா விடை போட்டியில் சேலம் மாவட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு சேலம் சிரிசாந்த் விடுதி அரங்கில் காலை 9.00 மணியளவில் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

சேலம் செவ்வாய்ப்பேட்டை

சுயமரியாதை சங்க கூட்டம் சேலம் செவ்வாய்பேட்டை சுயமரியாதைச் சங்கம் உறுப்பினர்கள் கூட்டம் 24.01.2020 அன்று காலை 9.30 மணியளவில் சிறீசாந்த் விடுதி அரங்கில் பழனி புள்ளையண்ணன் அவர்கள் தலைமையில் நடை பெற்றது.  தமிழர் தலைவர் அவர்கள் வழிகாட்டுதல் உரை யாடல்களுடன் 10 மணிக்கு கூட்டம் நிறைவு பெற்றது.

செய்தியாளர்கள் சந்திப்பு

சேலம் சிறீசாந்த் விடுதியில் கூடிய செய்தியாளர்களிடையே காலை 10.00 மணியளவில் பேட்டியளித்தார். சேலம் சுயமரியாதை சங்கம் கட்டட வழக்கில் வெற்றிபெற்று அந்த சொத்து பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்கு சொந்தமானது என்பதை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  நீட் பரப்புரையின் நோக்கத்தையும் விவரித்தார்.

பெத்தநாயக்கன் பாளையத்தில் வரவேற்பு

10.15 மணிக்கு சேலத்தில் புறப்பட்டு 11.00 மணிக்கு பெத்தநாயக்கன் பாளையம் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.சுரேசு தலைமையில் அனைத்து கட்சியினர் பேண்ட் வாத்தியம் முழங்க வரவேற்றனர்.

காளிச்செட்டியூர் கா.பொ.ராசு இல்லம்

அண்மையில் மறைவுற்ற காளிச்செட்டியூர் பெரியார் பெருந்தொண்டர் கா.பொ.ராசு இல்லத்திற்கு 11.00 மணிக்கு சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை ஊர்பெரு மக்கள், உறவினர்கள் வரவேற்று மகிழ்ந்தனர்.  பிறகு அவர் கள் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ராசு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அங்கிருந்து விடைபெற்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

கழக கொடியேற்றுதல்

பெத்தநாயக்கன் பாளையம் கடை வீதியில் அமைக் கப்பட்டிருந்த கழக இலட்சிய கொடியை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முற்பகல் 11.20 மணிக்கு ஏற்றிவைத்தார்கள். அங்கும் பொதுமக்கள் கூடி நின்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்று மகிழ்ந்தனர்.

கா.பொ.ராசு படத்திறப்பு

முற்பகல் 11.35 மணிக்கு பெத்தநாயக்கன் பாளையம் பிச்சமுத்து நாயக்கர் திருமண மண்டபம் வருகை தந்த தமிழர் தலைவருக்கு பேண்ட் வாத்திய இசையுடன் முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.  பிறகு மறைந்த பெரியார் பெருந்தொண்டர் காளிசெட்டியூர் கா.பொ.ராசு அவர்களின் படத்தினை திறந்து வைத்து நினைவுரையாற்றினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.  மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.சுரேசு தலைமை வகித்தார். ஆசிரியர் பழனி வேல், விடுதலைசந்திரன் ஆகியோர் முன்னிலையேற்றனர் நண்பகல் 12.10 மணிக்கு ஆத்தூர் நோக்கி புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

(தொடரும்)

தமிழ்நாட்டில் 11 நாள்கள் சூறாவளி சுற்றுப்பயணம்

நீட்', 'புதிய கல்வி'யின் ஆபத்துக்களை சுட்டிக்காட்டி

மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி சாதனை

தொகுப்பு: இரா.ஜெயக்குமார்

பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

நேற்றைய விடுதலையில் வெளிவந்ததின் தொடர்ச்சி....

ஆத்தூரில் தோழர்கள் சந்திப்பு

24.01.2020 நண்பகல் 12.30 மணிக்கு ஆத்தூர் ராம கிருஷ்ணா ரெசிடென்சிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை ஆத்தூர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குடும்பத்துடன் சந்தித்து உரையாடி மகிழ்ந் தனர்.  மதிய உணவுக்குப் பின் ஓய்வுக்கு சென்றார் ஆசிரியர் அவர்கள்.

ஆத்தூர் தங்கவேல் இல்லம்

மாலை 6.10 க்கு விடுதியிலிருந்து புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் தங்கவேல் வாழ்விணையரை சந்தித்து உடல் நலம் விசாரித்து விடைபெற்றார்.

ஆத்தூர் பொதுக்கூட்டம் (24.01.2020)

ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப் பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு 6.20 க்கு வருகை தந்தார்.  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை மாவட்டச் செயலாளர் நீ. சேகர் வரவேற்றார். மாவட்டத் தலைவர்

த. வானவில் தலைமையேற்றார். பெ. சோமசுந்தரம், சி. சுப்ர மணியன், விடுதலைசந்திரன், வெ. அண்ணாத்துரை, திவாகர், வீராச்சாமி ஆகியோர் முன்னிலையேற்றனர்.  உ. செல்வன் நன்றி கூறினார். 7.10 மணி முதல் 8.05 வரை 55 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.  பல்வேறு ஆதாரங்களுடன் கூடிய ஆசிரியர் அவர்களின் உரையை பெருந்திரளாக பொது மக்கள் கூடி கேட்டனர்.

எடைக்கு எடை நாணயம்

நீட் எதிர்ப்பு பரப்புரை மேற்கொண்டு ஆத்தூர் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ஆத்தூர் கழக இளைஞரணி தோழர்களால் பொதுக்கூட்ட மேடையில் பொது மக்களின் வாழ்த்துக்களிடையே எடைக்கு எடை நாணயம் வழங்கப்பட்டது.  நாணயத்தை பெற்றுக்கொண்ட ஆசிரியர் அவர்கள் எனது எடைக்கு மேலாக வழங்கப்பட்ட நாணயம் ரூ.16,000 திருச்சியில் இயங்கி வரும் நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு வழங்கப்படும் என அறிவித்தார்.

இளைஞர்கள் கழகத்தில் இணைந்தனர்

ஆத்தூர் பொதுக்கூட்ட மேடையில் தோழர் இளமாறன் அவர்கள் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆசிரியர் அவர்கள் முன்னிலையில் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களிடத்தில் விடைபெற்று இரவு 8.10 க்கு கல்லக்குறிச்சி நோக்கி புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

கல்லக்குறிச்சியில் வரவேற்பு

ஆத்தூர் பொதுக்கூட்டம் முடிந்து கல்லக்குறிச்சிக்கு வருகை தந்த ஆசிரியர் அவர்களுக்கு இரவு 9.05 க்கு மண்டலத் தலைவர் கா.மு. தாஸ் அவர்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  தோழர்கள் பயனாடை அணி வித்து மகிழ்ந்தனர்.

கல்லக்குறிச்சி பொதுக்கூட்டம் (24.01.2020)

கல்லக்குறிச்சி மந்தவெளி பொதுக்கூட்ட மேடைக்கு 24-01-2020 இரவு 9.10 மணிக்கு வந்தடைந்தார் தமிழர் தலைவர் அவர்கள். மாவட்டச்செயலாளர் கோ.சா.பாஸ்கர் வரவேற்றார். மாவட்டத் தலைவர் ம. சுப்பராயன் தலைமையேற்றார். பொன்.ராமகிருஷ்ணன், க,மு.தாஸ், குழ. செல்வராசு, த. பெரிய சாமி, து. சுந்தரராசன் உள்ளிட்டோர் முன்னிலையேற்றனர்.  9.15 மணி முதல் 10 மணி வரை தமிழர் ஆசிரியர் அவர்கள் 45 நிமிடங்கள் சிறப்புரையாற்றினார்கள். முத்துசாமி நன்றி கூறினார்.

தமிழர் தலைவருக்கு மலர் கிரீடம்

நீட் பரப்புரை மேற்கொண்டு கல்லக்குறிச்சி வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மலர் கிரீடமும் மலர் மாலையும் அணிவித்து மகிழ்ந்தனர். மாவட்ட தி.மு.க. செயலாளர் அங்கையர்கண்ணி, தி.மு.க. செயற்குழு உறுப்பினர் அருணாசலம், உலகத் தமிழர் கவிஞர் பேரவை பொதுச் செயலாளர் புலவர் . கு,சீத்தா. வழக் குரைஞர் செல்வநாயகம், சி.பி.அய். மாவட்டச் செயலாளர் சரவணன், சி.பி.எம். மாவட்டச் செயலாளர் ஏழுமலை, காங் கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய் கணேஷ், தி.மு.க ஒன்றிய செயலாளர் சி. வெங்கடாசலம், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர், வி.சி.க மாவட்டச் செயலாளர் தமிழ்மாறன், மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் ஆ. பகல்முகமது உள்ளிட்ட தோழமை இயக்கத் தோழர்கள் ஆசிரியர் அவர் களை வரவேற்று பயனாடை அணிவித்து மகிழ்ந்துள்ளனர்.  இரவு 10.10 மணிக்கு திருச்சி நோக்கி புறப்பட்டார் ஆசிரியர். வேப்பூர் ஆரியாஸ் உணவு விடுதியில் இரவு உணவை முடித்து புறப்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு திருச்சி பெரியார் மாளிகை வருகை தந்து ஓய்வுக்கு சென்றார் தமிழர் தலைவர்.

தோழர்கள் சந்திப்பு

திருச்சிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை திருச்சி, லால்குடி மாவட்ட கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் சந்தித்து சந்தாக்கள் வழங்கி சிறப்பித்தனர். திருச்சி வருகை தந்த கழகத் துணைத் தலைவர் கலி.பூங் குன்றன் ஆசிரியர் அவர்களை சந்தித்து உரையாடினார்.

பெரம்பலூரில் வரவேற்பு

6ஆவது நாள் பரப்புரை பயணம் மேற்கொண்டு 25.01.2020 மாலை 5.30 மணிக்கு திருச்சி பெரியார் மாளிகையிலிருந்து புறப்பட்டு பெரம்பலூர் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களுக்கு மாலை 6.50 மணியளவில் பெரம்பலூர் மூன்று ரோட்டில் தி.மு.க பொறுப்பாளர் முகுந்தன் தலைமை யில் தி.மு.க, தி.க, வி.சி.க தோழர்கள் பயனாடை அணிவித்து உணர்ச்சி மிக்க வரவேற்பு அளித்து இருசக்கர வாகனங்களில் முன்னே அணிவகுத்து சென்றனர்.

பெரம்பலூர் பொதுக்கூட்டம் (25.01.2020)

பெரம்பலூர் தேரடியில் அமைக்கப்பட்டிருந்த பொதுக் கூட்ட மேடைக்கு மாலை 7 மணிக்கு வருகை தந்தார் ஆசிரி யர் அவர்கள், நகரத் தலைவர் அக்கி ஆறுமுகம் வரவேற்றார். மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையேற்றார் மண்டலத் தலைவர் காமராஜ் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கி.முகுந் தன்  கழக பொதுக்குழு உறுப்பினர்கள், ப.அறுமுகம், இரா.அரங்கராசன், சா.தங்கபிரகாசம், ஆதிசிவம், அண்ணாத்துரை, பெ.துரைசாமி ஆகியோர் முன்னிலையேற்றனர் 7.15 மணி முதல் 7.55 வரை 40 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் "நீட்டி"ன் அவலங்களை எடுத்துரைத்து உரையாற் றினார்கள். அனைத்துகட்சி தோழர்கள் பொதுமக்கள் பெருந் திரளாக கூடி நின்று உரையை கேட்டு தெளிவு பெற்றனர். மு.விசயேந்திரன் நன்றி கூறினார்.

தோழமை இயக்க பொறுப்பாளர்களின் வரவேற்பு

மாவட்ட தி.மு.க செயலாளர் சி.இராஜேந்திரன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் செ.துரைராஜ், சி.பி.அய் (எம்) மாநில விவசாய அணி செயலாளர் ந.செல்லதுரை இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி தலைவர் சுல்தான்மொய்தீன் உள்ளிட்ட ஏராள மான அனைத்து இயக்கங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் பெரம்பலூர் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களை வரவேற்று பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பு

பெரம்பலூர் பொதுக்கூட்டம் முடிந்து புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அங்கு கூடியிருந்த செய்தியா ளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து நீட் பரப்புரை பயண நோக்கங்களை விளக்கி பேட்டியளித்தார் அனைவரி டமும் விடைபெற்று இரவு 8 மணிக்கு அரியலூர் நோக்கி புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

அரியலூரில் வரவேற்பு

அரியலூர் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த ஆசிரியர் அவர்களுக்கு ஊர் எல்லையில் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம் அவர்கள் தலைமையில் கழகக் கொடியுடன் ஏராளமான தோழர்கள் கூடிநின்று ஒலி முழக்கங்களுடன் வரவேற்று பொதுக் கூட்ட மேடைக்கு அழைத்து சென்றனர்.

அரியலூர் பொதுக்கூட்டம் (25.01.2020)

25.01.2020 இரண்டாவது கூட்டம் அரியலுர் ஆயிரங்கால் மண்டப வீதியில் அனிதா நினைவரங்கத்தில் எழுச்சியுடன் நடந்தது. மாவட்டச் செயலாளர் க.சிந்தனைச்செல்வன் அனைவரையும் வரவேற்றார். மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம் தலைமையேற்றார் மாநில இளைஞரணி செயலா ளர் த.சீ.இளந்திரையன் மண்டலத் தலைவர் சி.காமராசு மண் டல செயலாளர் சு.மணிவண்ணன், இரத்தின.இராமச்சந்திரன் தங்க.சிவமூர்த்தி, சி.சிவக்கொழுந்து, பேராசிரியர் தங்கவேலு பொறியாளர் இரா.கோவிந்தராசன் உள்ளிட்டோர் முன்னிலை யேற்றனர் இரவு 8.50 மணிக்கு மேடைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 9.05 க்கு பேச்சை தொடங்கி 9.55 வரை 50 நிமிடங்கள் உரையாற்றினார், நீட் என்ற தேர்வால் அனிதா உட்பட நமது பிள்ளைகளை எத் தனை பேரை இழந்துள்ளோம.; நீட்டை விரட்டும் வரை நமது போராட்டம் ஓயாது பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட தயாராக வேண்டும் என அழைப்பு விடுத்து உரையாற்றினார். பெருந்திரளாக மக்கள் கூடிநின்று ஆசிரியர் உரையை கேட்டு தெளிவு பெற்றனர். ஒன்றிய செயலாளர் மு.கோபாலகிருஷ் ணன் நன்றி கூறினார்.

தோழமை கட்சியினர் வரவேற்பு

ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் கு.சின்னப்பா, சி.பி.அய் (எம்) மாவட்டச் செயலாளர் இரா.மணிவேல், காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் சந்திரசேகர், சி.பி.அய் மாவட்டச் செயலாளர் இரா.உலகநாதன், எம்.ஜி.ஆர் கழக மாவட்டச் செயலாளர் எம்.ஜி கலைவாணன் உள்ளிட்ட தோழமை கட்சி பொறுப்பா ளர்கள் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து பரப் புரை பயணம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இரவு வல்லத்தில் ஓய்வு

அரியலூர் கூட்டம் முடித்து இரவு 10 மணிக்கு தோழர் களிடம் விடைபெற்று புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் பயணக் குழுவினர் இரவு 11.15 மணிக்கு தஞ்சை வல்லம் வந்தடைந்தனர் இரவு உணவுக்கு பின் ஓய்வுக்கு சென்றார் ஆசிரியர் அவர்கள்.

தோழர்கள் சந்திப்பு (26.01.2020)

26.01.2020 அன்று காலை 10 மணியளவில் தஞ்சை மாவட்டம் உரத்தநாடு ஒன்றியம் ஒக்கநாடு மேலையூர் கிளைக்கழக தோழர்ள், பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து நலம் விசாரித்து ஒக்கநாடு மேலையூரில் நடைபெறும் மன்னை நாராயணசாமியின் 100ஆவது ஆண்டு விழா, நீட் எதிர்ப்பு கிராமப்புற வட்டார மாநாட்டு அழைப்பிதழ்களை வழங்கி மகிழ்ந்தனர். அனை வரிடமும் விடைபெற்று முற்பகல் 11 மணிக்கு மயிலாடுதுறை நோக்கி புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

இராஜகிரி தங்கராசிடம் நலம் விசாரிப்பு

தஞ்சை வல்லத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 11.45 அளவில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன துணைத் தலைவர் இராஜகிரி தங்கராசு (96) அவர்களின் இல்லத்திற்கு திடீரென்று சென்று நலம் விசாரித்து ஒளிப்படம் எடுத்து சிறிது நேரம் உரையாடி மகிழ்ந்தார்கள். தங்க.பூவானந்தம் அவரின் வாழ்விணையர் ஆசிரியர் அவர்களை வரவேற்று தங்கள் தோட்டத்தில் விளைந்த பழங்களை வழங்கி மகிழ்ந்தார். அனைவரிடமும் விடைபெற்று மயிலாடுதுறை நோக்கி பயணக்குழுவினர் புறப்பட்டனர்.

மயிலாடுதுறையில் வரவேற்பு

26.01.2020 மதியம் 1.30 மணிக்கு மயிலாடுதுறை வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மில்லினியம் விடுதியின் முன் மாவட்டத் தலைவர் குடவாசல் குணசேகரன் தலைமையில் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பிற்பகல் 2 மணிக்கு மதிய உணவுக்கு பின் ஓய்வுக்கு சென்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

தோழர்கள் சந்திப்பு

மயிலாடுதுறை மில்லினியம் விடுதியில் தங்கியிருந்த ஆசிரியர் அவர்களை மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, கும்பகோணம் மாவட்டக் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் சந்தித்து தங்கள் பகுதியில் நடைபெறும் இயக்கப் பணிகள் குறித்து தமிழர் தலைவர் அவர்களிடம் உரையாடி மகிழ்ந் தனர்.

மயிலாடுதுறை பொதுக்கூட்டம் (26.01.2020)

மயிலாடுதுறை தங்கும் விடுதியிலிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 6.40 மணிக்கு 7ஆவது நாள் முதல் கூட்டமான மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் அமைக்கப்பட்ட கூட்ட மேடைக்கு வருகை தந்தார்கள். மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ் வரவேற்றார்.  மாவட்டத் தலைவர் குடவாசல் குணசேகரன் தலைமையேற்றார்.  மண்டலத் தலைவர் ச.மு.ஜெகதீசன், மாவட்ட துணைச் செயலாளர் கட்பீஸ் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட அமைப்பாளர் நா.சாமிநாதன் நகரத் தலைவர் சீனிமுத்து, நகரச் செயலாளர் அரங்க. நாகரத்தினம் ஆகியோர் முன்னிலையேற்றார்கள். கழகத் துணைத்தலைவர் கவிஞர். கலி.பூங்குன்றன் வருகை தந்து நீட் பரப்புரை பயணத்தை தமிழர் தலைவர் மேற்கொள்வதின் அவசியம் குறித்து உரை யாற்றினார்.  இரவு 7 மணி முதல் 7.55 மணி வரை 55 நிமிடங் கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விளக்கவுரையாற் றினார்கள். பெருந்திரளாக பொதுமக்கள் கூடி நின்று உரையை கேட்டு விழிப்புணர்வு பெற்றனர்.  அனைவரிடமும் விடை பெற்று இரவு 8 மணிக்கு சிதம்பரம் நோக்கி புறப்பட்டார் ஆசிரியர்.  கா.அருள்தாஸ் நன்றி கூறினார்.

தோழமை இயக்கத்தினர் வரவேற்பு

நாகை வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் நிவேதா எம்.முருகன், தி.மு.க தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் பி.கல்யாணம், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எஸ்.இராஜகுமார், சி.பி.அய் மாநிலக்குழு உறுப்பினர் இடும் பையன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொறுப் பாளர் ரவிச்சந்திரன் மற்றும் தி.மு.க நகர, ஒன்றிய செய லாளர்கள் முக்கிய பிரமுகர்கள் நீட் எதிர்ப்பு பரப்புரை பெரும்பயணத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சிதம்பரம் பொதுக்கூட்டம் (26.01.2020)

சிதம்பரம் போல் நாராயணதெருவில் அமைக்கப்பட்டி ருந்த பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 9.05 மணிக்கு தமிழர் தலைவர் வருகை தந்தார்கள்.  மாவட்டச் செயலாளர் அன்பு.  சித்தார்த்தன் வரவேற்றார்.  மாவட்டத் தலைவர்  பேரா.பூ.சி. இளங்கோவன் தலைமையேற்றார். மண்டலத் தலைவர் அரங்க. பன்னீர்செல்வம், மண்டல செயலாளர் சொ.தண்ட பாணி, மாவட்டத் துணைத்தலைவர் கோவி.பெரியார்தாசன் மாவட்ட இணைச் செயலாளர் சி.யாழ்திலீபன், மாநில இளைஞரணி செயலாளர் தி.சீ.இளந்திரையன், விருத்தாசலம் மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், கடலூர் மாவட்டச் செயலாளர்  நா.தாமோதரன், மாவட்ட துணைச் செயலாளர் கா. கண்ணன், மாவட்ட அமைப்பாளர் கு.தென்னவன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன் ஆகி யோர் முன்னிலையேற்றனர். தி.மு,க. மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நீட் பயணம் மேற்கொண்டு வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வாழ்த்தி பேசினார். இரவு 9.20 மணி முதல் 10 மணி வரை 40 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார். சிதம்பரம் நகர கழக தலைவர் கோவி.குணசேகரன் நன்றி கூறினார்.

தோழமை இயக்கத்தினர் வாழ்த்தும் வரவேற்பும்

கடலூர் மாவட்ட தி,மு.க. செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சி.பி.அய். மாநிலக்குழு உறுப்பினர் மணிவாசகம், வி.சி.க. மாவட்டச் செயலாளர் பால. அறவாழி, சி.பி.அய்.(எம்) மாவட்டக்குழு எஸ்.ஜி.இரமேஷ்பாபு, இஸ்லாமிய அய்க்கிய ஜமாத் வட்டாரத் தலைவர் முகமது ஜியாவுதீன் உள்ளிட்ட தோழமை இயக்கத்தினரும், கழகத் தோழர்களும் குடும்பம் குடும்பமாக மேடைக்கு வருகை தந்து நீட் எதிர்ப்பு பயணம் மேற்கொண்டு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இரவு புதுச்சேரியில் வரவேற்பு

26.01.2020 அன்று சிதம்பரம் கூட்டம் முடித்து பயணக் குழுவினருடன் புதுச்சேரி நோக்கி இரவு 10.05 மணிக்கு புறப்பட்டார் தமிழர் தலைவர், வழியில் கடலூரில் பெட்ரோல் பங்கில் வாகனத்தை நிறுத்தி இரவு உணவு முடித்து மீண்டும் பயணத்தை தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புதுச்சேரி அண்ணாமலை தங்கும் விடுதிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு புதுச்சேரி மண்டலத் தலைவர் இர.இராசு, மண்டலச் செயலாளர் கி. அறிவழகன், இளைஞரணி தலைவர் தி. இராஜா உள்ளிட்ட கழகத் தோழர்கள் வரவேற்றனர். புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ. வீரமணி சிதம்பரத்திற்கே வருகை தந்து தலைவரை வர வேற்று அழைத்து சென்றார்கள். இரவு 1 மணியளவில் ஓய் வுக்கு சென்றார் தமிழர் தலைவர் அவர்கள்.

27.01.2020 புதுச்சேரியில் முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு

புதுச்சேரி அண்ணாமலை விடுதியில் தங்கியிருந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை புதுச்சேரியை சேர்ந்த அரசியல் கட்சி, சமுதாய இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் காலை முதல் மாலை வரை சந்தித்து சமூக நீதி தொடர்பான நடவடிக்கைகள் புதுச்சேரி அரசியல் நிலவரங்கள், புதுச்சேரி காரைக்கால் பகுதி உரிமை பிரச்சினைகள், நீட் புதிய கல்விக் கொள்கை போன்றவற்றின் ஆபத்துக்கள் குறித்து விவாதித்து உரையாடி மகிழ்ந்தனர். வி.சி.க. பொதுச் செயலாளர் பாவ ணன் மீனவர் விடுதலை பேரியக்க நிறுவனர் மங்கையர் செல்வன், சி.பி.அய் மாவட்டச் செயலாளர் ராஜாங்கம், மத்திய குழு உறுப்பினர் முருகன், விடுதியின் உரிமையாளர் செண்பக ராஜன், ஏகாம்பரம் சமூக நீதி பேரவை பொறுப்பாளர் தன ராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் அமைச்சர்

திரா. விசுவநாதன் சி.பி.அய் மாநிலச் செயலாளர் சலீம் உள்ளிட்ட தோழமை இயக்க பொறுப்பாளர்கள், புதுச்சேரி கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் ஆசிரியர் அவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ந்தனர்.

புதுச்சேரி முதலமைச்சர் சந்திப்பு

நீட் எதிர்ப்பு பரப்புரை பயணம் மேற்கொண்டு புதுச்சேரி வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அவர் தங்கியிருந்த அண்ணாமலை விடுதிக்கு புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு. வே.நாராயணசாமி அவர்கள் வருகை தந்து சந்தித்து புதுச்சேரி அரசியல் நிலவரங்கள், மத்திய அரசின் நிலைப்பாடுகள், புதுச்சேரி அரசின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை பரிமாறி பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். முதல்வர் அவர்களுக்கு ஆசிரியர் அவர்களும் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

புதுச்சேரி பொதுக்கூட்டம் (27.01.2020)

27.01.2020 அன்று எட்டாவது நாள் பயணமாக மாலை 6.40க்கு அண்ணாமலை விடுதியில் இருந்து புறப்பட்டு புதுச்சேரி அவ்வைத்திடல் சாரம் பகுதியில் அமைக்கப்பட் டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு 6.45க்கு வருகை தந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர். புதுச்சேரி மண்டலத் தலைவர் இர. இராசா வரவேற்றார்.  புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி தலைமையேற்றார்.  மண்டலச் செயலாளர் கி. அறிவழகன், பொதுக்குழு உறுப்பினர் கோ. கிருஷ்ணமூர்த்தி, இரா. சடகோபன், கு. ரஞ்சித் குமார், ந. நடராசன், வீர. இளங்கோவன், லோ. பழனி, இரா. விலாசினிராஜ், அ. எழிலரசி, மு. ஆறுமுகம் உள்ளிட்டோர் முன்னிலையேற்றனர்.  மாலை 7 மணிமுதல் 7.55 வரை 55 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை நிகழ்த்தினார்கள்.  முதுகெலும்புள்ள புதுச் சேரி அரசையும் அதன் ஆற்றல்மிகு முதல்வர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களையும் பாராட்டி பேசினார். புதுச்சேரி மாண்புமிகு முதலமைச்சர் வே.நாராயணசாமி அவர்கள் இறுதியாக சிறப்புரையாற்றினார்.  இளைஞரணி தலைவர் தி.இராசா நன்றி கூறினார்.

- தொடரும்

நாகர்கோவில் முதல் சென்னை வரை நீட் எதிர்ப்புப் பெரும் பயணம் நாடெங்கும் மக்கள் பேராதரவு

தொகுப்பு: இரா.ஜெயக்குமார் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

9.2.2020 அன்றைய விடுதலையில்

வெளிவந்ததின் தொடர்ச்சி....

புதுச்சேரி தோழமை இயக்கத்தினர் வரவேற்பு

புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் மாண்புமிகு இர.கமலக்கண்ணன், மாநில தி.மு.க தெற்கு அமைப்பாளர் இரா.சிவா, மேனாள் அமைச்சர் இரா.விசுவ நாதன் சி.பி.அய் மாநில செயலாளர் அ.மு.சலீம், சி.பி.அய். எம்.முருகன் சி.பி.அய் (எம்) செயலாளர் இரா. இராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், மனித உரிமை அமைப்பின் பொதுச்செயலாளர், இரா.முருகானந்தம், பெரியார் சிந்தனையாளர் இயக்க பொறுப்பாளர் அ.சி.தீனா, த.பெ.தி.க தலைவர் வீர.மோகன் ஆகியோர் நீட்- பரப்புரை பயணம் மேற்கொண்டு புதுச்சேரி பரப்புரைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வரவேற்பும் வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்ந்தனர்.

புதுச்சேரி முதல்வரும், தமிழர் தலைவரும் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பு

புதுச்சேரி பொதுக்கூட்டத்தை முடித்து புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும் புதுச்சேரி மாண்புமிகு முதல் வர் அவர்களும் பொதுக்கூட்ட மேடையிலேயே செய்தியா ளர்களை சந்தித்து நீட் எதிர்ப்பு பரப்புரை பயணம் மற்றும் புதுச்சேரி அரசின் மாநில உரிமைகள் குறித்து பேட்டி அளித் தனர்.  8.10க்கு திண்டிவனம் நோக்கி புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

திண்டிவனம் பொதுக்கூட்டம் (27.1.2020)

எட்டாவது நாள் இரண்டாவது கூட்டமாக திண்டிவனம் காந்தியார் திடலில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 9.05 மணிக்கு வருகைதந்தார் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்கள்.  மாவட்ட செயலாளர் செ.பரந்தாமன் வரவேற்றார்.  மாவட்டத் தலைவர் மு.கந்தசாமி தலைமை யேற்றார்.  குழ.செல்வராசு, கே.பாலசுப்பிரமணியன், இரா.அன் பழகன், சு.பெத்தண்ணன், இரா.சாமிநாதன், விஸ்வநாதன் கோதை, மண்டலத்தலைவர் க.மு.தாஸ், விழுப்புரம் சுப்ராயன் ஆகியோர் முன்னிலையேற்றனர்.  இரவு 9.15 மணி முதல் 10 மணிவரை 45 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் 'நீட்' தேர்வால் நமது மாணவர்கள் அடையும் துன்பங் களை எடுத்துரைத்து உரையாற்றினார்.  மண்டல இளைஞரணி செயலாளர் தா.இளம்பரிதி நன்றி கூறினார்.

தோழமை இயக்கத்தினர் வரவேற்பும் வாழ்த்தும்

மயிலம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.ஆர்.மாசிலாமணி (தி.மு.க) விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி கே.மஸ்தான், திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் பி.சீத்தாபதிசொக்கலிங்கம், சி.பி.அய் (எம்) தெற்கு பகுதி செயலாளர் ராமதாஸ், சி.பி.அய் வட்டச் செயலாளர் ஆ.இன்பஒளி, ம.தி.மு.க நகரச் செயலாளர், ஜெ.பாஸ்கரன் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கே.ஜான்பாஷா, எஸ்.டி.பி.அய் மாவட்டச் செயலாளர் ஏ.எம்.ஆர் சையத்ஹசன் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மாவட்டச் செயலாளர் எச்.தாஜீதின் எம்.டி.கே மாவட்டச் செயலாளர், ஜெ.முகமதுதில்லன், உள்ளிட்ட தோழமை இயக்க பொறுப்பாளர்கள் கழகத் தோழர்கள் நீட் எதிர்ப்பு பயணம் மேற்கொண்டு வருகை தந்த ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அனைவரிடமும் விடைபெற்று திண்டிவனம் ஆரியாஸ் தங்கும் விடுதியில் இரவு உணவு முடித்து பிறகு ஓய்வுக்கு சென்றார்.

திண்டிவனத்தில் தீப் பந்த வரவேற்பு

முன்னதாக திண்டிவனம் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு திண்டிவனம் எல்லையில் மண்டலத் தலைவர் க.மு.தாஸ் அவர்கள் தலை மையில் கழகக் கொடியுடன் எழுச்சி முழக்கமிட்டு கழகத் தோழர்கள் வரவேற்பு அளிக்கப்பட்டது.  இளைஞரணி தோழர்கள் சார்பில் தமிழர் தலைவருக்கு தீப்பந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

28.01.2020 திண்டிவனத்தில் தோழர்கள் சந்திப்பு

ஆரியாஸ் தங்கும் விடுதியில் தங்கியிருந்த தமிழர் தலை வர் அவர்களை ஆரியாஸ் விடுதி உரிமையாளர் மற்றும் தோழமை இயக்க பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக சந்தித்து பயனாடை, பழங்கள் வழங்கி பயணம் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். அனைவரிடமும் விடைபெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 28.01.2020 முற்பகல் 10.50 மணிக்கு செய்யாறு நோக்கி புறப்பட்டார்.

செய்யாறு தோழர்கள் வரவேற்பு

9ஆவது நாள் பயணத்தை திண்டிவனத்தில் தொடங்கி முற்பகல் 12 மணிக்கு செய்யாறு வருகை தந்த ஆசிரியர் அவர்களுக்கு பெரியார் சிலை அருகில் மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன் அவர்கள் தலைமையில் ஏராளமான கழகத் தோழர்கள் கழகக் கொடியுடன் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.  பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அங்கி ருந்து புறப்பட்டார் ஆசிரியர்.

செய்யாறு முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு

பகல் 12.15 மணிக்கு செய்யாறு பயணியர் மாளிகைக்கு வருகை தந்தார் ஆசிரியர் அவர்கள்.  மதியம் 2 மணி வரை யும்,  மதிய உணவுக்கு பின் 4 மணிமுதல் 6 மணி வரையும் செய்யாறு முக்கிய பிரமுகர்கள், வழக்குரைஞர்கள், அரசு ஊழியர்கள், அதிகாரிகள், மருந்து வணிகர் சங்கத்தினர், ஆசிரியர்கள், தோழமை இயக்க பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் (குடும்பத்துடன்) என 100 க்கும் மேற்பட்டவர்கள் சாரைசாரையாக வருகை தந்து ஒளிப்படம் எடுத்து நீட் எதிர்ப்பு பரப்புரைக்கு ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.  அனைவரிடமும் விடைபெற்று மாலை 6.10 க்கு கூட்ட மேடை நோக்கி புறப்பட்டார் ஆசிரியர்.

செய்யாறு பொதுக்கூட்டம் (28.01.2020)

செய்யாறு ஆரணி கூட்டுரோடு அருகில் அமைக்கபட் டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு மாலை 6.20 க்கு வருகை தந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர். நகரத்தலைவர் தி.காம ராசன் வரவேற்றார்.  மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன் தலைமையேற்றார். பொன்.சுந்தர், ஏ.அசோகன், வடமணப் பாக்கம் வி.வெங்கட்ராமன், முனைவர் மு.தமிழ்மொழி, நா.வெ.கோவிந்தன் ஆகியோர் முன்னிலையேற்றனர்.  இரவு 6.45 மணிமுதல் இரவு 7.30 மணிவரை 45 நிமிடங்கள் சிறப் புரையாற்றினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.  ஏரா ளமான பொதுமக்கள் கூடிநின்று ஆசிரியர் உரையை கேட்டு தெளிவு பெற்றனர்.  நகரச் செயலாளர் தங்கம் பெருமாள் நன்றி கூறினார்.

'பெரியார் 1000' மாணவர்களுக்கு பரிசு

தந்தை பெரியார் 141ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும், பெரியார் பிஞ்சு இதழும் இணைந்து நடத்திய மாணவர்களுக்கான பெரியார் 1000 வினா? விடை போட்டியில் செய்யாறு மாவட்டத்தில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கூட்ட மேடையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். பெற்றோர்களும் ஆசிரியர் களும் உடன் வருகைதந்து பங்கேற்றனர்.

தோழமை இயக்க பொறுப்பாளர்களின் வரவேற்பு

தி.மு.க. மாநில விவசாய அணி துணைச்செயலாளர் வ.அன்பழகன், முன்னாள் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன் சி.பி.அய்(எம்), கோவை பழனி, வட்டாரத் தலைவர் பஜ்ராசலம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் எச்.கமால் ஆகியோர் ஆசிரியர் அவர்களுக்கு சால்வை அணிவித்து பயணம் வெற்றிபெற வாழ்த்துகளை தெரிவித்தனர். அனைவரிடமும் விடைபெற்று இரவு 7.35 மணிக்கு காஞ்சிபுரம் நோக்கி புறப்பட்டார் ஆசிரியர்.

காஞ்சிபுரத்தில் மக்கள் மன்றத்தின் எழுச்சிமிகு வரவேற்பு

28.01.2020 இரவு 8.30 மணியளவில் காஞ்சிபுரம் வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களுக்கு காஞ்சி மக்கள் மன்றத்தி னர் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.  மாவட்ட கழக தலை வர் டி.ஏ.ஜி.அசோகன் காஞ்சி மக்கள் மன்ற பொறுப்பாளர்கள் ஜெஸ்சி, மகேஷ் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.  பிறகு செங்கொடி ஏந்தி இருசக்கர வாகனங்களில் 30 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காஞ்சி நகர வீதிகளில் எழுச்சிமிகு முழக்கங்களுடன் தலைவர் அவர்களை கூட்ட மேடை வரை ஊர்வலமாக அழைத்து சென்ற காட்சி காஞ்சிபுரத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் பொதுக்கூட்டம் (28.01.2020)

ஒன்பதாவது நாள் இரண்டாவது கூட்டமாக  காஞ்சிபுரம், காந்திசாலை, பெரியார் நினைவுத்தூண் அருகில் அமைக்கப் பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 8.45 மணிக்கு வருகை தந்தார் ஆசிரியர் அவர்கள்.  மாவட்டச் செயலாளர் பூ.சுந்தரம் வரவேற்றார்.  மாவட்டத்தலைவர் டி.ஏ.ஜி அசோ கன் தலைமையேற்றார். இ.இரவீந்திரன், க.வேலாயுதம், பொன்.இராஜேந்திரன், க.தனசேகரன், செ.ரா.முகிலன் உள் ளிட்டோர் முன்னிலையேற்றனர்.  இரவு 9 மணி முதல் 10 மணி வரை 60 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் எழுச்சி முழக்கமிட்டார்.

தமிழர் தலைவர் எழுப்பிய ஒலிமுழக்கங்கள்

காஞ்சிபுரம் கூட்டத்தில் உரையை நிறைவு செய்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திடீர் என்று ஒழிப்போம் ஒழிப் போம் நீட்டை ஒழிப்போம்,  விரட்டுவோம் விரட்டுவோம் புதியக் கல்விக்கொள்கையை விரட்டுவோம்,  போராடுவோம் போராடுவோம் நீட்டை விரட்டும்வரை போராடுவோம் என எழுச்சி முழக்கமிட்டார். கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், பொதுமக்கள் அனைவரும் எழுந்து நின்று எழுச்சி முழக்க மிட்டது பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.  காஞ்சிபுரம் நகரத் தலைவர் கி.இளையவேல் நன்றி கூறினார்.  கூட்டம் முடித்து காஞ்சிபுரம் பயணியர் மாளிகையில் ஆசிரியர் அவர்களும் பயணக் குழுவினரும் இரவு உணவு அருந்தி முடித்த நிலையில் சோகமான செய்தி ஆசிரியர் அவர்களுக்கு வந்தது.  திருச்சி தங்காத்தாள் வாழ்விணையர் சின்னப்பன் மறைவு செய்தி.

பெரியார் மாளிகை தங்காத்தாளின் இணையர் சின்னப்பன் மறைவு திருச்சி விரைந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர்

திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப் பாளர் பெரியார் மாளிகை தங்காத்தாள் அவர்களின் வாழ் விணையர் திருச்சி பதிப்பு விடுதலை பொறுப்பாளர் சின்னப் பன் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தி காஞ்சிபுரம் கூட்டம் முடித்து பயணியர் மாளிகை வருகைதந்த ஆசிரியர் அவர்களுக்கு இரவு 10.30 மணிக்கு கிடைத்தது.  உடனடியாக தோழர்களை அழைத்து ஆலோசனை செய்து இரவு 11 மணிக்கு சாலை வழியாக வாகனத்தில் திருச்சி நோக்கி தோழர்களுடன் புறப்பட்டார் ஆசிரியர் அவர்கள்.  29.01.2020 அதிகாலை 4.15 மணிக்கு திருச்சி பெரியார் மாளிகை வருகை தந்த ஆசிரியர் அவர்கள் மறைந்த சின்னப்பன் உடலுக்கு தோழர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்து தங்காத்தாள், அறிவுமணி உள்ளிட்டோருக்கு ஆறுதல் தெரிவித்து சில மணித்துளிகள் கழித்து பெரியார் மாளிகையில் தங்கியிருந்தார்.

ஓடும் வாகனத்திலேயே இரங்கல் அறிக்கை எழுதிய ஆசிரியர்

வாகனத்தில் திருச்சி நோக்கி தோழர்களுடன் உரையா டியபடி பயணமான ஆசிரியர் அவர்கள் பேனாவையும், பேடையும் எடுத்தார். மளமளவென சின்னப்பன் அவர்க ளுக்கு இரங்கல் அறிக்கையை 15 நிமிடத்தில் எழுதி வண்டி யில் பயணம் செய்த ச.பிரின்சு என்னாரசு பெரியார் அவர் களிடம் இரவு 11.45 மணியளவில் கொடுத்தார்கள். அவர் உட னடியாக தனது செல்பேசியிலேயே டைப் செய்து ஆசிரியர் அவர்களிடம் படித்துக்காட்டி திருத்தம் பெற்று சென்னை விடுதலை அலுவலகத்துக்கு அனுப்பினார். இந்நிகழ்வு உடன் வருகை தந்தோரை வியக்க வைத்தது.

காலை 9.30 மணிக்கு இரங்கல் கூட்டம்

சென்னையிலிருந்து மோகனா அம்மையாரும், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் குடும்பத்தினர், கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவரது வாழ்விணையர் ஆகியோர் 29.01.2020 அதிகாலை திருச்சி வந்து சேர்ந்தனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் அனைவரும் காலை 9.30 மணியளவில் மறைந்த சின்னப்பன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், பிறகு நடந்த இரங்கல் கூட்டத்தில் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன் றன் அவர்களும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும் இரங்கலுரையாற்றினர். பிறகு அனைவரிடமும் விடைபெற்று காலை 10.30 மணிக்கு மீண்டும் காஞ்சிபுரம் நோக்கி சாலை வழியாக புறப்பட்டார் ஆசிரியர்.

திண்டிவனத்தில் மதிய உணவு

29.01.2020 திருச்சியிலிருந்து சாலை வழியாக காஞ்சிபுரம் நோக்கி வருகை தந்த தமிழர் தலைவர் மற்றும் உடன் வருகை தந்தோருக்கு நண்பகல் 1.15 மணிக்கு திண்டிவனம் க.மு.தாஸ் அவர்கள் ஏற்பாட்டில் திண்டிவனம் ஆரியாஸ் உணவு விடுதியில் மதிய உணவு அளிக்கப்பட்டது. மதிய உணவுக்கு பின் அவர்களிடமிருந்து விடைபெற்று மதியம் 2 மணிக்கு காஞ்சிபுரம் நோக்கி புறப்பட்டார். ஆசிரியர் அவர்கள் மாலை 3.30 மணியளவில் காஞ்சிபுரம் பயணியர் மாளிகையை வந்தடைந்தார். ஆசிரியரை காஞ்சிபுரம் மாவட்ட கழக தலைவர் டி.ஏ.ஜி.அசோகன் வரவேற்று அனைவருக்கும் தேனீர் வழங்கினார்.

அரக்கோணம் பொதுக்கூட்டம் (29.01.2020)

29.01.2020 அன்று மாலை 6.10 மணிக்கு காஞ்சிபுரம் பயணி யர் மாளிகையிலிருந்து தனது 10  ஆவது நாள் பயணத்தை தொடங்கினார் ஆசிரியர். அரக்கோணம்  எஸ்.ஆர்.கேட் அருகில் அமைக்கப்பட்டிருந்த கூட்ட மேடைக்கு மாலை 6.55 க்கு வருகை தந்தார்கள். மாவட்ட அமைப்பாளர் கொ.ஜீவன்தாசு வரவேற்றார், மாவட்டத் தலைவர் சு.லோகநாதன் தலைமையேற்றார், க.தீனதயாளன், பொன்.வெங்கடேசன் உள்ளிட்டோர் முன்னிலையேற்றனர். இரவு 7 மணி முதல் 7.51 வரை 51 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள், பொது மக்கள் பெருந்திரளாக கூடிநின்று ஆசிரியர் உரையை கேட்டு தெளிவு பெற்றனர், நகர செயலாளர் பெரியார் நேசன் நன்றி கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பு

அரக்கோணம் கூட்டம் முடித்து புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேடை எதிரே இருந்த செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து நீட் எதிர்ப்பு பரப்புரை பயணம் குறித்தும் பேட்டியளித்தார். இரவு 7.55 மணிக்கு திருத்தணி நோக்கி பயணமானார் அசிரியர்.

அரக்கோணத்தில் வரவேற்பு

அரக்கோணம் கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்டத் தலைவர் லோகநாதன் அவர்கள் தலைமையில் கழகத் தோழர்கள் கழகக் கொடியுடன் எழுச்சி முழக்கமிட்டு அரக்கோணம் எல்லையில் வரவேற்றனர்.

திருத்தணி பொதுக்கூட்டம் (29.01.2020)

திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் அமைக்கப் பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 8.35 மணிக்கு வருகை தந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர். மாவட்டச் செய லாளர் அறிவுச்செல்வன் வரவேற்றார், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மணி வரவேற்றார், மோகனவேல், க.எழில், இரா.ஸ்டாலின், சி.வீரமணி ஆகியோர் முன்னிலையேற்றனர். இரவு 8.55 மணி முதல் 9.35 மணி வரை 40 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார், பொது மக்கள் பெருந்திரளாக கூடிநின்று ஆசிரியர் உரையை கேட்டு தெளிவு பெற்றனர், நகர செயலாளர் கோ.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். நிகழ்ச்சி தொடக்கத்தில் திருத்தணி பன்னீர் செல்வத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

பொதட்டூர் புவியரசன் இல்லத்தில் இரவு உணவு

திருத்தணிக் கூட்டம் முடித்து ஆசிரியர் அவர்களும் பயணக்குழுவினரும் பொதட்டூர் புவியரசன் இல்லத்தில் இரவு உணவு அருந்தி அவர்களிடமிருந்து 10.30 மணியளவில் விடைபெற்று நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை அடையாறு இல்லத்திற்கு ஆசிரியர் அவர்களை வழியனுப்பிவிட்டு இரவு 1.15 மணியளவில் சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்தனர் பயணக்குழுவினர்.

சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் அவர்கள் பயணக் குழுவினரை சந்திப்பும் - பாராட்டும்

நிறைவு நாள் 30.01.2020 அன்று காலை 10.30 மணியளவில் சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்தார் ஆசிரியர். 10 நாட்களாக தேங்கிக் கிடந்த கடிதங்களை படித்தல் மற்றும் அலுவலகப் பணிகளை முடித்து பகல் 1.00 மணியளவில் பெரியார் அருங்காட்சியகத்தில் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணத்தில் ஏற்பட்ட நிறை குறைகளை கேட்டு, பேச்சாளர்கள், ஓட்டுநர்கள் பொறுப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் அனைவரின் உழைப்பையும் பாராட்டியதோடு ஒரு சிறு பிரச்சினைகள் கூட ஏற்படாமல் வெற்றிகரமாக பயணம் முடிந்ததை மகிழ்ச்சியோடு பரிமாறி எதிர்காலத்தில் சரி செய்யப்பட வேண்டிய சில யோசனைகளையும் தெரிவித் தார், அனைவருக்கும் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். பிறகு பயணக்குழுவினர் அனைவரும் ஆசிரி யர் அவர்களோடு குழு ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். தாம்புரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் அவர்கள் ஏற்பாட்டில் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய் யப்பட்டு பரிமாறப்பட்டது.  தமிழர் தலைவர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் பயணக்குழுவினருடன் மதிய உணவு அருந்தினர்.  மதியம் 2.30 மணியளவில் அனைவரிடமும் விடைபெற்று புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர்.

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நிறைவுவிழா பொதுக்கூட்டம் (30.01.2020)

30.01.2020 மாலை 6.10 மணிக்கு சென்னை அடையாறு இல்லத்திலிருந்து புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை எம்.ஜி.ஆர் நகர். கலைஞர் கருணாநிதி சாலையில் அமைக்கப்பட்டிருந்த நீட் எதிர்ப்பு பரப்புரை பெரும்பயண நிறைவு விழா பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 7 மணிக்கு வருகை தந்தார். வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்கு ரைஞர் சு.குமாரதேவன் வரவேற்றார்.  தென்சென்னை மாவட் டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையேற்றார்.  தி.இரா.ரத்தினசாமி, செ.கோபால், பழநி.பன்னீர்செல்வம், ப.முத்தை யன், மதியழகன், ராகவன், தாமோதரன், அய்யாத்துரை, சேகர், மகேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலையேற்றனர்.

நீட் விளக்க புத்தகத்தை பொதுமக்களிடம் விற்பனையில் இறங்கிய தமிழர் தலைவர்

பொதுக்கூட்ட மேடைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஒலிபெருக்கியை பிடித்து நீட் தொடர் பான புத்தகங்களை பொதுமக்களிடம் பெருமளவில் கொண்டு செல்லும் நோக்கோடு மேடையில் இருக்கின்ற நமது தலைமைக் கழக பொறுப்பாளர்கள் அனைவரும் மேடையை விட்டு கீழே இறங்கி பொதுமக்களிடையே கொண்டு வருவார்கள்.  அனைவரும் வாங்கி மக்களிடையே பரப்ப வேண்டும் என அறிவித்து நானே தொடங்கி வைக்கிறேன் என மேடையிலிருந்து கீழே இறங்கி ரூ.1800 க்கு பொது மக்களிடம் ஆசிரியர் அவர்களே புத்தகங்களை விற்பனை செய்தார்.  மேடையிலிருந்த தலைமைக் கழகப் பொறுப்பா ளர்கள் அனைவரும் பொதுமக்களிடம் சென்று புத்தகங்களை விற்பனை செய்தனர்.  தலைவரே களத்தில் இறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள் போட்டி போட்டு கொண்டுக் புத்தகங்களை வாங்கினர்.

அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்று உரை

11 நாட்கள் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணம் மேற்கொண்டு வருகைதந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் ஆதரவு தெரிவித்தும் அனைத்து கட்சி தலைவர்கள் உரையாற்றினார்கள்.  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், ம.தி.மு.க கொள்கை விளக்க அணி செயலாளர் க.அழகுசுந்தரம், மனிதநேய மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் எம்.எச்.ஜவஹருல்லா, சி.பி. அய்.(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சி.பி.அய் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி, தி.மு.க செய்தி தொடர்பு செயலாளர், டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி, தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட் டோர் சிறப்புரையாற்றினார்கள்.  87 வயதிலும் மிகவும் உற் சாகமாக கடந்த 11 நாட்கள் பயணம் மேற்கொண்டு வரும் தமிழர் தலைவர் அவர்களின் நோக்கம் நிறைவேற எங்களின் ஆதரவு என்றும் உண்டு என வாழ்த்து தெரிவித்து உரை யாற்றினார்.  இரவு 9.40 முதல் 10 மணிவரை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நிறைவு விழா பேருரையாற்றினார். கூட்டத்தை ஏற்பாடு செய்த தோழர்களுக்கும், வருகைதந்து கலந்துகொண்டு ஊக்கப்படுத்திய தோழமைக்கட்சி தலை வருக்கும் நன்றி தெரிவித்து, நீட்தேர்வின் அவலங்களால் நமது சமுதாய மாணவர்களுக்கு சமூகநீதி மறுக்கப்படுவதை எடுத்துரைத்து உரையாற்றினார். இறுதியாக மாவட்டச் செய லாளர் பார்த்தசாரதி நன்றி கூறினார், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், கிராமப்பிரச்சாரகுழு அமைப் பாளர் முனைவர் அதிரடி.க.அன்பழகன், கழக பேச்சாளர் இரா.பெரியார்செல்வன் ஆகியோர் தொடக்கவுரையாற் றினார்கள். கழகப் பொதுச் செயலாளர்கள் வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், கழக பொருளாளர் வீ.குமரேசன், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், அமைப்பு செயலாளர்கள் பழனி.பன்னீர்செல்வம், வே.செல்வம், ஊமை.ஜெயராமன், துணைப் பொதுச் செயலாளர் இன்பக்கனி, மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரசு பெரியார், மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டியன், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும் பொன், மகளிர் பாசறை செயலாளர் மணியம்மை, வழக்கு ரைஞர் வீரமர்த்தினி, பவானி உள்ளிட்ட கழகப் பொறுப்பா ளர்களும், பொதுமக்களும் கழகத் தோழர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர், நிறைவு விழா பொதுக்கூட்டத்தை மாநாடு போல் ஏற்பாடுகளை செய்த சென்னை மாவட்டப் பொறுப்பாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

சென்னை அடையாறு இல்லத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பிரியாவிடை பெற்ற பயணக்குழு தோழர்கள்

சென்னை நிறைவு விழா பொதுக்கூட்டம் முடிந்து தமிழர் தலைவர் அவர்களோடு சென்னை அடையாறு இல்லம் வருகை தந்த பயணக்குழுவினர் அனைவரும் இரவு உணவு முடித்து அவரவர் ஊருக்கு புறப்பட தயாராக இருந்த கழகத் தோழர்களை இரவு உணவு முடித்து ஓய்வுக்கு செல்லாமல் கீழே இறங்கி வந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அனைவரும் பத்திரமாக பாதுகாப்பாக ஊர் போய் சேர வேண்டும் என தெரிவித்து நுழைவு வாயில் வரை வந்து அனைவரையும் இரவு 11.30 மணிக்கு வழியனுப்பிவைத்துவிட்டு பிறகு ஓய்வுக்கு சென்றார். பயணக்குழுவில் பங்கேற்ற தோழர்கள் அனைவரும் தங்கள் தலைவரிடம் பிரியாவிடை பெற்று தங்கள் ஊருக்கு பயணமானார்கள். யாருக்கும் கிடைக் காத நமது தலைவர் ஆசிரியர் தலைமையில் பணி செய்ய கிடைத்த வாய்ப்பை பெருமையாக கருதி மகிழ்ச்சியுடன் பயணித்தனர். நீட் எதிர்ப்பு பரப்புரை பெரும் பயணத்தின் அனைத்து கூட்டங்களிலும் கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வன், கிராம பிரச்;சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் தொடக்கவுரையாற்றினார்கள்.

சிறப்பான ஏற்பாடுகளை செய்து உபசரித்த மாவட்டக் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் பாராட்டுக்குரியவர்கள்

நீட் தேர்வால் ஏற்படும் பேராபத்துக்களை மக்கள் மத்தியில் பரப்புரை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்திட தமிழர் தலைவர் அவர்கள் 11 நாட்கள் மேற்கொண்ட பரப்புரை பெரும்பயணம் குறுகிய கால இடைவெளியில் அறிவிக்கப்பட்டாலும் இடையில் பொங்கல்விழா குறுக்கிட் டாலும், தலைவர் இடுகின்ற கட்டளைகளை இராணுவக் கட்ட ளையைவிட மேலாக கருதி உழைத்திடும் நமது மாவட்டக் கழக, ஒன்றியக் கழக, நகரக் கழக, மாநிலக்கழக, மண்டலக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் புயல் வேகத்தில் பணிகளை தொடங்கி வசூல்பணி, சுவர் விளம்பரம், சுவ ரொட்டிகள் விளம்பரம் தோழமைக் கட்சிகள் ஒருங்கிணைப்பு, மேடை, ஒலி,ஒளி அமைப்பு உட்பட அனைத்து ஏற்பாடுக ளையும் மிகவும் நேர்த்தியாக செய்திருந்தனர்.  பயணக் குழுவில் பங்கேற்று வந்த தோழர்களுக்கு தங்குமிட வசதி, உணவு ஏற்பாடு உபசரிப்பு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்று உபசரிப்பு உட்பட அனைத்தையும் மகிழ்ச்சியுடன் செய்து முடித்த சுயநலம் கருதாத நமது கழக தோழர்களின் கடும் உழைப்பு பாராட்டுக்குரியது.  நீட்டை விரட்டும் வரை நமது தலைவர் இடும் எந்த கட்டளையையும் ஏற்று போராட்டத்தில் சிறை செல்ல தயாராவோம் தயாரா வோம்.  நன்றி.

(நிறைவு)

-  விடுதலை நாளேடு 8 ,9 ,11 .2 .20



விடுதலை சந்தாக்களுக்கான தொகை வழங்குதல்

விருகம்பாக்கத்தைச் சேர்ந்த குடந்தை நாதன் விடுதலை 4 சந்தாக்களுக் கான தொகை ரூ.3600அய் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் வில்வநாதன், தாமோதரன், பார்த்தசாரதி மற்றும் குடும்பத்தார் (சென்னை, 17.2.2020)

 - விடுதலை நாளேடு, 17.2.20

 

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

பெரியார் ஆயிரம் வினா விடை தேர்வில் பரிசு வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு



7.2.2020 பிற்பகல் 3.30 மணி அளவில் தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் பெரியார் ஆயிரம் வினா விடை தேர்வில் பரிசு வென்ற மாணவர்கள்  எஸ்.கிருத்திகா, வி.ஆப்ரகாம், பி.அர்சினிபாமா ஆகியோருக்கு சென்னை அரும்பாக்கம் நேஷனல் ஸ்டார் மேல் நிலைப் பள்ளியில், பள்ளி தாளாளர் ஜி.பி.சாரதி முன்னிலையில் தென்சென்னை மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் மு.இரா.மாணிக்கம் தலைமையில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
உடன் மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ. ராகவன், மாவட்ட துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், அரும்பாக்கம் பகுதி கழக தோழர் பிரகாசம், அரும்பாக்கம் க.தமிழ்ச் செல்வன், அம்பேத்கர் பேரவை செயல் வீரர் மகேந்திரன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித் தனர். பெரியார் ஆயிரம் வினா விடை நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற ஒத்துழைத்த பள்ளி ஆசிரியர்களுக்கும் சிறப்பு பரிசுகளை வழங்கி தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.


- விடுதலை நாளேடு,16.2.20


 
 
 
தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  

1000 எழுத்துகள் மீதமுள்ளன

 
Security code
Refresh

சனி, 1 பிப்ரவரி, 2020

‘‘ஒழிப்போம், ஒழிப்போம் - ‘நீட்'டை ஒழிப்போம்!'' சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வெடித்த போர்க்குரல்!

‘‘விரட்டுவோம், விரட்டுவோம் - புதிய கல்வி திட்டத்தை விரட்டுவோம்!''

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வெடித்த போர்க்குரல்!

நமது சிறப்புச் செய்தியாளர்

ஜனவரி 20 ஆம் தேதி - திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தொடங்கப்பட்ட ‘நீட்' எதிர்ப்புப் பிரச்சாரப் பெரும் பயணத்தின் நிறைவு விழாப் பொதுக்கூட்டம் நேற்று (30.1.2020) சென்னை எம்.ஜி.ஆர். நகரில் போராட்டக் குணத்துடன் நிறைவு பெற்றது.

‘‘ஒழிப்போம்! ஒழிப்போம்!! ‘நீட்'டை ஒழிப்போம்!''

‘‘விரட்டுவோம்! விரட்டுவோம்!! தேசிய கல்வி திட்டத்தை விரட்டுவோம்!'' என்ற முழக்கத்தைத் தமிழர் தலைவர் கூட்டத்தின் இறுதியில் தொடுத்தபோது, மேடையில் இருந்த பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், பொதுமக்களும் தொடுத்து முழங்கியது இக்கூட்டத்தின் முத்தாய்ப்பான நோக்கத்தை முரசடித்து அறிவித்தது.

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டம் - மக்கள் திரள்- தலைவர்களுடையே முழக் கங்கள் - ‘நீட்' என்னும் கொடுவாளின் கூர்மையை மழுக்கிப் பறிமுதல் செய்யும் என்பதற்கான அச்சார மாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.

பேராசிரியர் ஜவாஹிருல்லா

நிறுவனர், மனிதநேய மக்கள் கட்சி

இன்று காந்தியார் நினைவு நாளில் பொருத் தமாக சமூகநீதிக்கான பெரு விழா நடைபெறு கிறது.

காந்தியார் படுகொலை யின் பின்னணியில் கோல் வால்கர் இருக்கிறார்.

காந்தியார் படுகொலை செய்யப்பட்டபோது, தந்தை பெரியார் ஒரு மாபெரும் பொறுப்புமிக்க தலைவராகப் பரிணமித்தார்.

காந்தியாரைக் கொன்றவன் முசுலிம் என்று பரப்புரை செய்தபோது - அதனை மறுத்தும், மக்களை அமைதி காக்கக் கூறியும் - திருச்சி வானொலியில் தந்தை பெரியார் ஆற்றிய உரை - அவரின் பெரும் பண்பாட்டுக்கு உரை கல்லாகும்.

(காந்தியாரைக் கொன்றவன் மகாராட்டிரத்தைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பனன் என்று சிலாகித்து, கொஞ்சம் ஜாடை காட்டியிருந்தால், மகாராட்டிரத்தின் பல பகுதிகளிலும் பார்ப்பனர்களுக்கு எதிரான வன்முறைகள் வெடித்தனவே - அவற்றைவிடத் தமிழ்நாட்டில் அதிக மாகவே நடந்திருக்க வாய்ப்புண்டு - அதனைத் தடுத் தாட்கொண்டவர் தந்தை பெரியார்).

இன்றைக்கு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பி.ஜே.பி. அரசு - குடியுரிமை தொடர்பாகக் கொண்டு வந்துள்ள சட்டங்கள் இவரின் குருநாதரான கோல்வால்கர் எழுதிய ‘‘We or Our Nation hood Defined'' எனும் நூலில் குறிக்கப்பட்டிருப்பதுதான். (சிறுபான்மை யினர் எந்தவித சலுகைகளையும் எதிர்பார்க்காமல் பிரஜா உரிமையின்றியும், வாழத் தயாராக இருக்க வேண்டும் என்று அந்நூலில் குறிக்கப்பட்டுள்ளது).

‘நீட்', புதிய கல்வி திட்டம் என்று நம் மக்களின் தலை யில் கைவைத்ததோடு, பொது சுகாதார துறையையும் மாநிலத்திலிருந்து கபளீகரம் செய்ய முடிவெடுத்துவிட்டது மத்திய பி.ஜே.பி. அரசு.

இதில் திராவிடர் கழகத்தின் பணி, ஆசிரியரின் பணி மகத்தானது.

வழக்குரைஞர் அழகுசுந்தரம்

ம.தி.மு.க. கொள்கைப் பரப்பு அணி செயலாளர்

நான் வழக்குரைஞர்; எனது மகள்கள் மருத்துவக் கல்லூரிகளில் - இவை எல்லாம் பெரியார் போட்ட பிச்சை.

பெரியார் பிறந்த தமிழ் நாடு சமூகநீதிப் போரில் தோற்காது - நம் போரைத் தொடர்வோம்!

தோழர் இரா.முத்தரசன்

மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

நாம் நடத்துவது கோரிக்கைப் பொதுக்கூட்டமல்ல - இலட்சியத்தை நோக்கிய பயணம்.

மீண்டும் பழைய மனுதர்மத்திற்கு நம்மைத் தள்ளி விடப் பார்க்கிறார்கள்.

மதச் சார்பற்ற கொள்கையைச் சொன்னதற்காக மதவெறியர்களால் கொல் லப்பட்டவர் காந்தியார் - அந்நாள்தான் இந்நாள்!

1947 ஆகஸ்டு 15 இல் சுதந்திரம் என்றால், 1948 ஜனவரி 30 இல் சுதந்திரத் திற்காகப் பாடுபட்ட காந் தியார் சுட்டுக் கொல்லப் பட்டார். 5 மாதங்களுக்கு மேல் அவரை உயிரோடு விட்டு வைக்காத கூட்டம், நாட்டை ஆள்கிறது.

5, 8, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கெல்லாம் அரசு தேர்வு என்றால், இதன் பொருள் மேல்நிலைப்பள்ளியோடு உன் கல்வியை முடித்துக்கொள் - கல்லூரிக்குள் நுழையாதே என்பதற்கான ஏற்பாடுதான் - இதுதான் அவாள் திட்டம்!

உங்களுக்கு நாங்கள் விசுவாசமாக இருப்போம் - எங்கள் நாற்காலிகளை ஆட்டாதே என்பதுதான் மத்திய பி.ஜே.பி.க்கு தமிழக அ.தி.மு.க. அரசின் எழுதப்படாத ஒப்பந்தம்.

இந்த யுத்தத்தில் நாம் வென்றே தீருவோம்.

87 வயதிலும் சமூகநீதிக்காகப் பாடுபடும் - பெரும் பயணம் மேற்கொண்டு மக்களிடத்திலே விழிப்புணர் வைச் செய்த ஆசிரியர் அவர்களுக்கு நாடு கடமைப் பட்டுள்ளது - வாழ்த்துகள், பாராட்டுகள்!

தோழர் கே.பாலகிருஷ்ணன்

மாநில செயலாளர், சி.பி.எம்.

87 வயது இளைஞராக நமது ஆசிரியர் அவர்கள் 11 நாள்கள் பெரும் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு நமது வாழ்த் துகளும், பாராட்டுகளும் உரித்தாகுக!

‘நீட்' என்பது நமது மக்களை மருத்துவக் கல் லூரி பக்கம் தலை வைக் காதே என்பதற்கான சதித்திட்டமே!

இந்த ஆண்டு ‘நீட்' தேர்வுக்காக விண்ணப்பித்த வர்களின் எண்ணிக்கையும் 17 விழுக்காடு குறைவு. ஏன்? ‘நீட்' எழுதி நாம் வெற்றி பெறப் போவதில்லை என்ற முடிவுதான்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்கள் குடியரசுத் தலைவர் மாளிகைக்கே வரவில்லை என்று கைவிரித்துவிட்டார்கள் - தமிழக அரசு அதனைக் கொண்டுகொள்ளவேயில்லை.

தமிழ்நாட்டில் எத்தனை மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன என்பது முக்கியமல்ல- அதில் யாருக்குப் படிக்க வாய்ப்பு என்பதுதான் முக்கியம்.

பிளஸ் டூ தேர்வில் மதிப்பெண் என்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதாம். பின் எதற்கு 12 ஆண்டுகள் படிக்கவேண்டும்?

பல லட்சம் ரூபாய் செலவு செய்து கோச்சிங் வகுப் புக்குச் சென்றவர்களுக்குத்தான் 80 சதவிகித மருத்துவக் கல்லூரி இடங்கள் கிடைத்துள்ளன.

எல்லோரும் லட்சக்கணக்கில் செலவு செய்ய வாய்ப்பு உண்டா?

12 ஆம் வகுப்புக்குள் நான்கு அரசு தேர்வுகள் என்றால், இதன் பொருள் - விரைவில் நாடு கைநாட்டுப் பேர்வழிகள் நிறைந்த பழைய நாடாக மாறப் போகிறது என்பதுதான்.

இது தந்தை பெரியார் பிறந்த நாடு - பன்முகத் தன்மையையும், மதச்சார்பற்ற தன்மையையும் வளர்த்த நாடு, ரஜினிகாந்த் அவர்களே தந்தை பெரியார் இல்லாமல் இருந்தால் உங்கள் நிலை என்ன?

டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி.,

தி.மு.க. செய்தித் தொடர்புச் செயலாளர்

கலைஞர் ஆட்சிக் காலத்தில்தான் மாவட்டத் துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, உரு வாக்கப்பட்டது. 26 மருத் துவக் கல்லூரிகள் உள்ளன; இவை அல்லாமல் தனியார் மருத்துவக் கல்லூரிகள் வேறு; வேறு எந்த மாநிலத்திலும் இந்த நிலை கிடையாது.

நம் மக்கள் வரிப் பணத்தில் நம் மக்கள் படிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி களில், யார் யாரோ வந்து படித்துவிட்டுப் போகிறார்கள்; வடநாட்டுக்காரர்கள் குவிகிறார்கள்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்று கூறி, பிரதமரே வந்து அடிக்கல் நாட்டினார்; அதற்குப் பிறகு அடுத்த கல்லை எடுத்து வைக்கவில்லையே - யாரை ஏமாற்றிட!

இந்தியாவில்தான் நாங்களும் வாழ்கிறோம். நாங்கள் புத்தர், வர்த்தமானர், மகாவீரர், திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர், அண்ணா சிந்தனைகளை ஏற்று வாழ்கி றோம்.

கைபர் கணவாய் வழியே வந்த உங்கள் சிந்தனைகளை பிறவியில் ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் வருண தர்மத்தை நாங்கள் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்த்தால், அதுதான் நடக்காது, நடக்கவும் விடமாட்டோம்!

1971 இல் சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய மாநாட்டையும், ஊர்வலத்தையும் இப்பொழுது நினைவு படுத்துகிறார்கள்.

அந்த 1971 ஆம் ஆண்டோடு ராஜாஜியின் அரசியல் அஸ்தமனம் ஆகிவிட்டதே.

பெரியாரை எதிர்த்து  - பெரியார் ஆதரித்த தி.மு.க.வை எதிர்த்து சேலம் மாநாட்டைக் காரணம் காட்டி ‘சோ' தலைமையில் பிரச்சாரம் செய்து பார்த்தீர்களே - தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பு என்னவென்பது மறந்துவிட்டதா? 1967 இல் 138 இடங்களைப் பெற்ற தி.மு.க. 1971 ஆம் ஆண்டில் 183 இடங்களையல்லவா பெற்று சட்டமன்றத் தேர்தலில் இமாலய வெற்றி பெற்றது.

திராவிட இயக்கத்தை, தந்தை பெரியாரை சீண்ட சீண்ட நீங்கள் முகவரியில்லாமல் போய்விடுவீர்கள்.

கே.எஸ்.அழகிரி

தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

உடலிலும் உள்ளத் திலும் உறுதி இருப்பதால், 87 வயதிலும் நமது ஆசி ரியர் ஓய்வில்லாது உழைக் கிறார் - பிரச்சாரம் செய் கிறார் - அவர் மேலும் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து தமிழ்நாட்டுக்குத் தொண்டு செய்யவேண் டும்.

திராவிடர் கழகம் ஓட்டுப் பக்கம், பதவிப் பக்கம் செல்லக்கூடிய அமைப்பு அல்ல -  அது ஒரு சமூகப் புரட்சி இயக்கம். நம் மக்களின் உரிமைத் திசையில், சமூகநீதித் திசையில் பயணிக்கும் இயக்கம்.

நமது கடந்த கால வரலாறு மக்களிடையே பிளவு படுத்தப்பட்ட, ஏற்ற தாழ்வுகள் உருவாக்கப்பட்டதாகும்.

இத்தகைய சமநிலையும், சம வாய்ப்பும் இல்லாத ஒரு நாட்டில் சமூக அமைப்பில் தகுதி - திறமை பேச முடியுமா - பேசலாமா? சம நிலை உண்டாகட்டும் - அதற்குப் பின் தகுதி - திறமையைப்பற்றிப் பேசலாம்!

உரிமை மறுக்கப்பட்ட சமுதாயத்தில் சமூகநீதி அவசியம் தேவை - அதற்கு உலை வைப்பதுதான் ‘நீட்.' அதனை எப்படி அனுமதிக்க முடியும்?

12 வகுப்புக்குள் ஒரு மாணவன் ஆறு அரசுத் தேர்வுகளை எழுத வேண்டுமா?

தகுதி - திறமை என்கிறார்கள்; மேலோட்டமாகப் பார்த்தால், அது சரிதானே என்று கூடத் தோன்றலாம். உண்மை நிலை என்ன?

ஒரு கட்டடத் தொழிலாளியின் மகன், சாக்கடை சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் தொழிலாளியின் மகன்  இவர்கள் கூறும் அந்தத் தகுதியை அடைய முடியுமா? ‘நீட்' தேர்வு எழுதித் தேர்வு பெற்றிட முடியுமா?

முதலில் சமமற்ற தன்மையை மாற்று - சமநிலையை உருவாக்கு, உண்டாக்கு. அதுவரை தேவையான வாய்ப்புகளை, இட ஒதுக்கீட்டைக் குளறுபடியில்லாமல் செயல்படுத்து - இதனைத்தான் தந்தை பெரியார் கூறினார் - பாடுபட்டார்.

ஏழை, எளியவர்களும், கல்விச் சூழல் இல்லாதவர் களும், மருத்துவக் கல்லூரிகளுக்குச் செல்ல ஆசைப்பட்டால் அது கனவாகி  தற்கொலையில்தான் முடியும் என்பதுதான் எதார்த்த நிலை. அனிதாக்களின் தற்கொலைகள் - இதனைத்தான் எடுத்துக்காட்டுகின்றன.

எங்கள் தந்தையார் திராவிடர் கழகத்தவர்.  நான் சத்தியமூர்த்தி பவனில் நுழையும்போது, தந்தை பெரியாரை நினைவு கூர்ந்தேன். அவர் தலைவராக இருந்த காங்கிரஸ் அல்லவா என்று எண்ணிப் பார்க்கிறேன்.

திராவிடர் கழகக் கொள்கைகளுக்கும், எங்களுக்கும் ஒன்றும் அதிக வேறுபாடுகள் கிடையாது. சமுதாய, சமத் துவ, சமூகநீதியில் யாருக்குத்தான் உடன்பாடு இருக்க முடியாது?

எழுச்சித் தமிழர்

தொல்.திருமாவளவன்

தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி

இன்றைக்கு அரசியல் நிலை என்னவாக இருக்கிறது? மத்தியில் உள்ள பி.ஜே.பி.  ஆட்சி - அதன் பிரதமர் மோடியின் பின்னாலே ஓடிக் கொண்டிருக்கக்கூடிய, துரத்தக் கூடிய நிலையில்தான் இருக்கிறது.

‘நீட்'டை மறந்து திசை திருப்பப்படும் பிரச்சினைகளில் பயணிக்க வேண்டியதாகிறது.

ஆனால், நமது ஆசிரியர் அய்யா அவர்களின் கவனம் மட்டும் சிதறுவதில்லை; அவரைத் திசை திருப்பவும் முடியாது.

இந்த 87 வயதில் குமரி யில் தொடங்கி தலைநகர் சென்னைவரை தொடர் பிரச்சாரப்  பெரும் பய ணத்தை மேற்கொண்டு வந்துள்ளார்.

நாம் மந்தமாக இருக் கக்கூடாது - தொய் வடைந்துவிடக் கூடாது - மக்களிடம்  போராட்ட உணர்வு குன்றிவிடக் கூடாது - சமூகநீதியில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதற்காக  சதா மக்களிடம் செல்லுகிறார். விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

தந்தை பெரியார் கடைபிடித்த அதே அணுகு முறையை - அவரின் கொள்கை வாரிசான நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கொஞ்சம்கூடத் தொய்வு இல்லாமல் சுழன்றபடியே பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்.

தமிழர் தலைவரிடம் உள்ள அந்தப் போராட்டக் குணத்தை நாம் கற்கவேண்டும், ஏற்கவேண்டும்.

அண்ணல் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்கள் இப்பொழுது தந்தை பெரியார் சிலைகளை உடைக்க ஆரம்பித்துள்ளனர். அதன் பின்னணியை நாம் அடையாளம் காணவேண்டும்.

எந்த பெரியாரால் உரிமை பெற்றார்களோ - அப்படி பலன் பெற்றவர்களே யாருக்கோ கருவியாகப் பயன்படு கிறார்கள். உரிய நேரத்தில் அவர்களை  அடையாளம் காணவேண்டும்  - காட்டுவோம்!

திராவிடர் கழகம்தான் நமக்குத் தாய்க்கழகம் - எல்லோரையும் ஒருங்கிணைக்கும் இடத்தில் தாயாக இருந்து வருகிறது. அந்த வழியில் நாமும் பயணிப்போம்!

தமிழர் தலைவர்

ஆசிரியர் கி.வீரமணி

தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்தார் (சென்னை, 30.1.2020).

அன்று ஆச்சாரியார் குலக்கல்வியைக் கொண்டு வந்தார். பழைய கள் - புதிய மொந்தை அதுதான் தேசிய கல்வி, ‘நீட்' என்பன.

இவற்றை எதிர்க்கத்தான் நாம் அனைவரும் இங்குக் கூடியிருக்கிறோம். இது ஒரே அணிதான் - சமூகநீதிக்கான அணிதான்.

மக்களின் வளர்ச்சிக்கு அடிப்படைக் கல்வியாகும். அந்த அடிப்படையைத் தகர்ப்பதே ஆரியத்தின் மனுதர்மம்.

‘‘இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற நூலில் அக்னிஹோத்திரம் இராமானுஜ தத்தாச்சாரியார் கூறு கிறார்,

‘‘ஆரியர்கள் இங்கு வந்தபோது கையோடு மனுதர் மத்தைக் கொண்டு வந்தார்கள்'' என்று எழுதுகிறார்.

அவர்களுக்கானது மனுதர்மம் - நமக்கானது குறள்.

இரண்டுக்கும் இடையிலான போராட்டம்தான் இன்றுவரை.

அண்ணல் அம்பேத்கர், அரசமைப்புச் சட்டத்தில் சுதந்திரம், சமதர்மம், சமத்துவத்தை வலியுறுத்தினார். அவற்றுக்கு அச்சுறுத்தல் இன்று ஏற்பட்டுள்ளது.

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று எல்லாம் ‘‘ஒரே, ஒரே'' என்று கூச்சல் போட்டாலும், எல்லோரும் ஒரே ஜாதி - சரி நிகர் என்று சொல்லத் தயங்குவது ஏன்?

சமத்துவத்தைப் போதித்த அண்ணல் அம்பேத் கரையே அணைத்து அழிக்கப் பார்க்கின்றனர். அவர்மீது ஆர்.எஸ்.எஸ். முத்திரை குத்தப் பார்க்கிறார்கள் - நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

ஆனால், இங்கு அது நடக்காது.

தந்தை பெரியார் பார்வை என்பது ‘ஸ்கேன்' - அது போட்டோகிராபி அல்ல - ஓவியமும் அல்ல - உடைந்த எலும்பை அப்படியே உடைந்ததாகக் காட்டும் ‘ஸ்கேனுக்குப்' பெயர்தான் தந்தை பெரியார்.

நாம் இன்னும் எத்தனை அனிதாக்களை இழக்கப் போகிறோம் - அருமைப் பெற்றோர்களே,  உங்களுக்குப் பொறுப்பு இல்லையா? உங்கள் பிள்ளைகளின், பேரப் பிள்ளைகளின் எதிர்காலம் முக்கியம் இல்லையா?

சமூகநீதியை வென்றெடுக்க வீட்டை விட்டு வெளியே வாருங்கள்! வாருங்கள்!

வரும் 21 ஆம் தேதி திருச்சியில் திராவிடர் கழகப் பொதுக்குழு - மாலையில் சமூகநீதி மாநாடு.

போராட்டத் திட்டம் வகுப்போம்! சிறைச்சாலைகளை நிரப்புவோம்!

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சொன்னார், ‘‘ஓடப்பரா யிருக்கும் ஏழையப்பர் எல்லாம் உதையப்பர் ஆகி விட்டால், ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ'' என்றார்.

உதையப்பர் ஆகவேண்டாம்; வன்முறையில் நம்பிக் கையில்லை.

ஓட்டப்பர் ஆகிவிடலாம் அல்லவா? தேர்தலில் உங்கள் ஓட்டு என்பதுதான் அந்த ஓட்டப்பர். அந்த ஆயுதத்தைப் பொறுப்போடு, சமூகநீதி உணர்வோடு பயன்படுத்திடவேண்டும் என்று கூறினார்.

- விடுதலை நாளேடு 31 1 20

'எழுச்சியுடன் நடைபெற்ற 'நீட்' எதிர்ப்புப் பெரும்பயணம் நிறைவு பொதுக்கூட்டம்

'நீட்' எதிர்ப்புப் பெரும்பயணத்தில் பங்கேற்ற தோழர்கள் தமிழர் தலைவர், துணைத் தலைவருடன்

(சென்னை பெரியார்திடல், 30-1-2020)

சென்னை,ஜன.31, ‘நீட்’ தேர்வை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் பயணம் செய்து, நேற்று  30.1.2020 மாலை சென்னையில் பரப்புரைப் பெரும்பயணத்தை நிறைவு செய்தார்.

20.1.2020 அன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் தொடங்கிய நீட் எதிர்ப்புப் பெரும்பயண நிறைவு பொதுக் கூட்டம் நேற்று (30.1.2020) மாலை சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கலைஞர் கருணாநிதி  சாலையில் மார்க்கெட்பகுதியில்  நடைபெற்றது.

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர் களின்  மருத்துவக்கல்வி கனவை கேள்விக்குறியாக்கிய ‘நீட்’ நுழைவுத் தேர்வு தமிழகத்தில் விரும்பாத  நிலையில் மத்திய அரசால் திணிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை எதிர்த்து, பல்வேறு மாவட்டங்களில் திராவிடர் கழகத் தலைவர் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் தொடங்கி திருத்தணி, சென்னை வரை நடைபெற்ற பெரும்பயணம் அனைத்து தரப்பு மக்களின் பேராதரவை பெற்றுள்ளது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை ஒவ்வொரு பகுதியிலும் அனைத்துக்கட்சிப் பொறுப்பாளர்கள் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்து ஆர்வமுடன் வரவேற்றார்கள்.

நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரைப் பயணங்களின் பொதுக்கூட்டங்களில் மக்கள் திரண்டு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையைக் கேட்டு பயன்பெற்றனர். உணர்ச்சிப் பெருக்குடன் போர்க்குணம் பெற்றனர். நீட் தேர்வை ஒழித்தே தீருவோம் என்கிற உறுதி யான நம்பிக்கையுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தங்களின் நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.

'நீட்' எதிர்ப்புப் பரப்புரைப் பெரும்பயண

நிறைவுப் பொதுக்கூட்டம்

நேற்று (30.1.2020) மாலை 6 மணியளவில் சென்னை எம்.ஜி.ஆர். நகர் கலைஞர்கருணாநிதி சாலையில் மார்க்கெட் பகுதியில் தென்சென்னை மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற  ‘நீட்' எதிர்ப்புப் பெரும் பயணம் -நிறைவுப் பொதுக்கூட்டத்துக்கு தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமை வகித்தார். வடசென்னை மாவட்டத் தலைவர்  வழக்குரைஞர் சு.குமாரதேவன் வரவேற்றார். சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, செயலாளர் தே.செ.கோபால்,  எம்.பி.பாலு, ப.முத்தையன்,  மு.ந.மதியழகன், செங்குட்டுவன், மு.இரா.மாணிக்கம், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், கு.அய்யாத்துரை, மு.சேகர், ச.மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  நிறைவு பொதுக்கூட்டத்தின் தொடக்கத்தில் திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினரின் பகுத்தறிவு இசைநிகழ்ச்சி நடைபெற்றது.

ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கின்ற ‘நீட்’ தேர்வு ஒழிக்கப்பட வேண்டும், 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு களுக்கான பொதுத்தேர்வு கூடாது, ஒத்திசைவுப்பட்டியலிலுள்ள கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகள் இப்பரப்புரைப் பெரும்பயணத்தில் முன் வைக்கப்பட்டன.

கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன், கிராமப் பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி.க.அன்பழகன் ஆகியோர் நீட் எதிர்ப்பு விளக்க பரப்புரைப்பயணத்தின் நோக்கம் மற்றும் மத்திய அரசின் பல்வேறு செயல்பாடுகளின் மூலம் தமிழகத்துக்கு நேர்ந்துவரும் கேடுகள் குறித்து விளக்கிப் பேசினார்கள். சமஸ்கிருதத்திணிப்பு, நீட் தேர்வால் விளைந்த கேடுகள், அவலங்கள், முறைகேடுகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.

தமிழக மக்களின் உரிமைகள், மாணவர்களின் கல்வி உரிமைகள், தமிழகத்தில் நுழைவுத் தேர்வு ஒழிப்பு, சமூக நீதியைக் காப்பதில் திராவிடர் கழகம் கண்ட களங்கள்,  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஓய்வறியா உழைப்பு, அயராதத் தொண்டாற்றி வெற்றி பெற்ற செயல்பாடுகள் குறித்து திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் தொடக்கவுரையில் விளக்கிக் கூறினார்.

நீட் எதிர்ப்புப் பெரும்பயணம் மேற்கொண்டு, வெயில், பனி பாராமல் தொடர்பயணம் மேற்கொண்ட திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களை பாராட்டி தலைவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.

சிறப்பு விருந்தினர்களுக்கு இயக்க நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அளித்து சிறப்பு செய்தார். தென்சென்னை மாவட்டக் கழகம் சார்பில் தலைவர்களுக்கு பயனாடை அணிவிக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.

நீட் தேர்வு எதிர்ப்பு பெரும்பயணம் பெற்றுள்ள வெற்றி குறித்தும்,  தமிழர் தலைவர் வழிகாட்ட, அனைவரும் அவரைப்பின்பற்றி தமிழக உரிமைகளை மீட்டெடுப்போம் என்று நீட் எதிர்ப்புப் பெரும்பயண நிறைவுப் பொதுக் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் உறுதி கூறினார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்டு) கட்சி மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மதிமுக  கொள்கை விளக்க அணி செயலாளர் மதுரை க.அழகுசுந்தரம், கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரை சிறப்புரை ஆற்றினார்.

கலந்து கொண்டவர்கள்

திமுக, மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஅய், சிபிஎம் ஆகிய கட்சிகளின் பொறுப்பாளர்கள், சென்னை மண்டலத்தைச் சேர்ந்த தென்சென்னை, வட சென்னை, தாம்பரம், சோழிங்கநல்லூர், ஆவடி, திருவொற்றியூர் மற்றும் கும்மிடிப்பூண்டி மாவட்டங்களைச் சேர்ந்த கழகப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சி செயல்தலைவர் மோகன்குமாரமங்கலம், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் உ.பலராமன், செய்தி தொடர் பாளர் கோபண்ணா, எஸ்.எம்.குமார், நாஞ்சில் இராஜேந்திரன், சேலம் மணி, மதிமுக பொறுப்பாளர்கள் மாவட்டச் செயலாளர் மற்றும் வட்டச் செயலாளர்கள் சதாசிவம், அரி, பாபு, விடுதலைசிறுத்தைகள் கட்சிப் பொறுப்பாளர்கள் வீ.கோ.ஆதவன், எஸ்.எஸ்.பாலாஜி, கரிகால்வளவன், விக்ரம், செந்தில், விஜயக்குமார், ஜெயகரன், சரவணன் மற்றும் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர்  வீ.குமரேசன், வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் கிருஷ்ணேசுவரி, கழகப் பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா, மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மண்டல  இளைஞரணி செயலாளர்சிவசாமி, வடசென்னை மாவட்டச் செயலாளர் தி.செ. கணேசன், பெரியார் வீரவிளை யாட்டுக்கழகம் பேராசிரியர் ப.சுப்பிரமணியன், நெய்வேலி கனகசபாபதி, ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன்,  தாம்பரம் மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன், தாம்பரம் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், ஊரப்பாக்கம் ராமண்ணா, சீனுவாசன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், ஆவடி தமிழ்மணி, வடசென்னை மாவட்டத் துணைத் தலைவர் செம்பியம் கி.இராமலிங்கம்,  புரசை அன்புச்செல்வன், பெரியார்மாணாக்கன், தமிழ்சாக்ரட்டீஸ்,  தென்சென்னை இளைஞரணி மு.சண்முகப் பிரியன், மயிலை ஈ.குமார், அடையாறு மணித்துரை,  கொடுங்கையூர் கோ.தங்கமணி,  சூளைமேடு இராஜேந்திரன், பகுத்தறிவாளர் கழகம் ஆ.வெங்கடேசன், சைதை தென்றல், பெரம்பூர் கோபாலகிருஷ் ணன், தொழிலாளர் கழகம் கூடுவாஞ்சேரி ராசு, நங்கநல்லூர் க.தமிழினியன், மகிழ்க்கோ, சி.வெற்றிசெல்வி, தங்க.தனலட்சுமி, பெரியார் களம் இறைவி, பூவை செல்வி, பூங்குழலி, பசும் பொன்செந்தில்குமாரி, பவானி, மாணவர் கழகம் தொண்டறம் உள்பட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

'நீட்' எதிர்ப்புப் பெரும்பயணத்தில் கலந்துகொண்ட குழுவி னருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார்.

தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி நன்றி கூறினார்.

தமிழர் தலைவர் உரையாற்றிய ஊர்கள்

'நீட்' எதிர்ப்பு பெரும்பயணத்தில் பொதுக் கூட்டங்களில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றிய பகுதிகள் வருமாறு:

நீட்' எதிர்ப்பு பிரச்சாரப் பெரும் பயணத்தின் நிறைவு விழாப் பொதுக் கூட்டத்தில் திரண்டிருந்தோர் (எம்.ஜி.ஆர். நகர், 30.1.2020)