சனி, 14 டிசம்பர், 2024

வைக்கம் நூற்றாண்டு விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் புகழ்மாலை!


Published December 13, 2024
இந்தியா

சீர்திருத்தவாதிகளின் வரிசையில் முதன்மையான இடத்தில் உள்ளவர் தந்தை பெரியார்!

சென்னை, டிச.13 ‘சமூக சீர்திருத்தவாதிகளில் முதன்​மை​யானவர் பெரி​யார்’ என்று பெரி​யார் நினை​வகம் திறப்பு விழா​வில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் புகழாரம் சூட்​டி​னார்.
கேரள மாநிலம், கோட்​டயம் மாவட்​டம், வைக்​கத்​தில், நேற்று (12.12.2024) நடைபெற்ற வைக்கம் போராட்​டத்​தின் நூற்​றாண்டு நிறைவு விழா​வில், பெரி​யார் நினை​வகம், நூலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்​டா​லின் திறந்து வைத்​தார். விழாவுக்கு தலைமையேற்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசி​ய​தாவது:
சமூக சீர்​திருத்​தவா​தி​களில் முதன்​மை​யானவர் பெரி​யார். கேரள மக்கள் நாராயணரை ‘குரு’ என்று அழைப்​பது​போல், தமிழ்நாடு மக்கள் ஈ.வெ.ராவை ‘பெரி​யார்’ என்று அழைக்​கின்​றனர். ‘பெரிய’ ஆள் என்ற சொல்​தான் பெரி​யாராக மாறியது. சுதந்​திரம் மற்றும் சமூக சீர்​திருத்த சிந்​தனை​யாளரான பெரி​யார், உழைப்​பாளி வர்க்​கத்​தினர், கம்யூனிஸ்ட் அமைப்​பினருடன் இணைந்து போராட்​டங்களை முன்னெடுத்​தார். எம்.சிங்​கார​வேலு, ப.ஜீவானந்தம் ஆகியோ​ருக்கு மிக நெருங்கிய நண்பராக இருந்​தார்.

ஜாதி, மத, நிற வேறு​பாடுகளை ஒழிப்​ப​தற்கான போராட்டம்!
கடந்த 1952 இல் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி​யின் வெற்றிக்கு பெரி​யாரின் பங்களிப்பு நாம் அனைவரும் அறிந்த விடயம். மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் உருவான​போது, பொலிட்​பீரோ உறுப்​பினர்​களில் ஒருவராக நியமிக்​கப்​பட்ட பி.ராமமூர்த்தி​யின் திரு​மணத்​துக்கு தலைமை தாங்​கியது பெரி​யார்​தான். அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி​யினருக்​கும், பெரி​யாருக்​கும் நெருங்கிய தோழமை இருந்​தது. அவர் தனது சீர்​திருத்தக் கொள்​கைகளை மக்களிடம் கொண்டு செல்​வதற்​காகத்​தான் ‘குடிஅரசு’ என்ற பத்திரி​கை​யைத் தொடங்​கினார். கடந்த 1970 இல் திராவிடர் கழகத்தால் தொடங்​கப்​பட்ட ‘உண்மை’ என்ற பத்திரி​கை​யில், பெரி​யார், ‘ஜனநாயக நாட்​டில் உயர்ந்​தவர், தாழ்ந்​தவர் என்று யாரும் இல்லை, அனைவரும் சமமே’ என்று எழுதினார். ஜாதி, மத, நிற வேறு​பாடுகளை ஒழிப்​ப​தற்கான போராட்டமே ‘வைக்கம் போராட்​டம்’. அனைத்து உரிமை​களும் அனைவருக்​கும் கிடைக்க வேண்​டும் என்பதே ‘சமதர்​மம்’ என்று பெரி​யார் முழங்​கினார்.

ஒரு நாட்​டின் பிரச்சினை​யாகக் கருதி போராடிய​வர்கள்!
வைக்கம் கோயி​லின் சுற்றுப்​பாதை தடை விலக்​கப்​பட்டது மலையாள மக்களுக்கு மட்டுமே. ஆனால், இதை மலையாள மக்களுக்கான, திரு​வி​தாங்​கூருக்கான பிரச்​சினை​யாகக் கருதாமல் ஒரு நாட்​டின் பிரச்சினை​யாகக் கருதி போராடிய​வர்கள் பெரி​யார் மற்றும் இதர போராட்​ட​வா​தி​கள். தேசத் தலைவர்கள் மற்றும் சீக்​கியர்​களும் இந்த போராட்​டத்​தில் பங்கேற்​றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக