தந்தை பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்களின் பெயரனும், ஈ.வெ.கி.சம்பத் – சுலோசனா ஆகியோரின் மகனும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவரும், மேனாள் ஒன்றிய இணை அமைச்சரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், சீரிய பகுத்தறிவாளருமான தோழர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக் குறைவின் காரணமாக நேற்று ( 14.12.2024) மறைவுற்றார்.
தகவலறிந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று மாலை சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி, அவரின் வாழ்விைணயர் வரலட்சுமி இளங்கோவன், மகன் சஞ்சய் சம்பத், பெயர்த்தி தி.சமனா மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்வில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவை தலைவர் ஆ.வீரமர்த்தினி, துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி, தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம், மாநில இளைஞரணி துணைச்செயலாளர்கள் சோ.சுரேஷ், மு.சண்முகப்பிரியன் , தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ரா.பார்த்தசாரதி, வட சென்னை மாவட்ட தலைவர் தளபதி பாண்டியன், வட சென்னை மாவட்ட செயலாளர் சு.அன்புச்செல்வன், தாம்பரம் மாவட்ட செயலாளர் நாத் திகன், ஆவடி மாவட்ட செயலாளர் இளவரசன், காப்பாளர் வெ.ஞானசேகரன், தென் சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் துரை.அருண், தென் சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.மணிதுரை, வட சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் நா.பார்த்திபன், தென் சென்னை மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் மு.பவானி, திருவொற்றியூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் இரா.சதீசு, தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் தாமோதரன், தாம்பரம் நகர செயலாளர் மோகன்ராஜ், பக. ஜெயராமன், கருப்பையா, குணசேகரன், படப்பை சந்திரசேகரன், வழக்குரைஞர் வேலவன், இராமாபுரம் ஜனார்த்தனன், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் வை.கலையரசன், கரு.அண்ணாமலை, மு.ரெங்கநாதன், சென்ன கிருஷ்ணன், சுப்பிரமணி, யுவராஜ், க.கலைமணி, இரா. அருள், ச.சஞ்சய், ம.பூவரசன், கே.என்.மகேஸ்வரன், யுகேஷ், பெரியார் பிஞ்சு சாரல் மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக