விடுதலை நாளேடு
Published December 30, 2024
27.12.2024 மாலை 6.30 மணி அளவில் சென்னை மயிலாப்பூர் இராமகிருஷ்ணா மடம் சாலை மற்றும் கபாலீஸ்வரர் கோயில் தெற்கு மாட வீதி சந்திக்கும் இடமான மயிலாப்பூர் குளக்கரை அருகில் தென் சென்னை மாவட்ட கழக இளைஞரணி சார்பில் தென் சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மாவட்டத் துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன், இளைஞர் அணி செயலாளர் ந.மணிதுரை, இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து ஆகியோர் முன்னிலையில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு. சண்முகப்பிரியன் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். கோட்டூர்புரம் ச.தாஸ் கலந்து கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக