திங்கள், 28 ஆகஸ்ட், 2023

பெண்களை அடிமைப்படுத்தும் மனுதர்மத்தின் ஆட்சி தொடரலாமா? சென்னை கருத்தரங்கில் மகளிர் அறைகூவல்

 

 12

சென்னை, ஆக.10 - சென்னை கழக மாவட்டங்களின் திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் நேற்று (9.8.2023) மாலை 6 மணிக்கு "பெண்களுக்கெதிராக தொடரும் பாலியல் வன்கொடுமைகள் - மணிப்பூர் வரை" எனும் தலைப்பில் கருத்தரங்கம் சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. கருத்தரங்கில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

கருத்தரங்க அறிமுக உரையுடன் திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணி யம்மை வரவேற்புரை ஆற்றினார். திராவிடர் கழக துணைப்பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி தலைமையுரை வழங்கினார்.

திராவிடர் கழக மகளிரணி மாநில செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி இணைப்புரை வழங்கினார்.

எழுத்தாளர் கவிதா சொர்ணவல்லி,  இந்திய கம்யூ னிஸ்டு கட்சி மத்திய கமிட்டி உறுப்பினர், உழைக்கும் பெண்கள் அமைப்பின்தேசிய கன்வீனர் தோழர் வகிதா நிஜாம், திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி ஆகியோரின் கருத் துரையைத் தொடர்ந்து திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி கருத்தரங்கத்தின் நிறைவுரையாக சிறப்புரை ஆற்றினார்.

13

கருத்தரங்கில் பேசியவர்கள் மணிப்பூர் கொடூரம் குறித்தும், அதற்குக்காரணம் இன அழிப்பு நோக்கமே என்பதையும்,  ஆணாதிக்கம், பெண்களை மனிதத்தின் ஓர் அங்கமாக, சமமாக கருதாமல் இருப்பதற்கு மதங்களே காரணம் என்றும், அதிலும் குறிப்பாக மனுதர்மம்தான் பெண்களை போகப்பொருளாக, அடிமையாக, ஒரு பண்டமாகக் கருதும் அளவுக்கு கீழ்மைப்படுத்தியுள்ளது என்பதையும் எடுத்துக்கூறியதுடன், அந்த மனுதர்மத்தின் படி ஆட்சிநடத்தவே ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துடன் பாஜக அரசியல் வடிவத்தில் உள்ளது என்பதையும் தகுந்த ஆதாரங்களுடன் எடுத்துக் கூறினார்கள்.

மணிப்பூர் கொடூரம் சமூகத்தின் பார்வைக்கு வந்தது சிறிதளவே என்றும், மறைக்கப்பட்ட நிகழ்வுகள் ஏராளமாக உள்ளன என்றும், மணிப்பூர்போல் நாட்டின் பிற பகுதிகளும் பாதிப்புக்கு உள்ளாகாமல் தடுத்திட  2024இல் ஆட்சி மாற்றமே தகுந்த தீர்வு என்றும் விரிவாக உறுதியாகக் குறிப்பிட்டு உரையாற்றினார்கள்.

பெண்கள்மீதான பாலியல் வன்முறை இதற்கு முன் னரும் நடந்துள்ளது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத் துடன் ஆளக்கூடிய பாஜக அரசு வன்முறைகளைக் கட்டுப்படுத்தாமல், அரச பயங்கரவாதத்துடன் பெண் களை ஒடுக்கி வருகிறது. வன்முறைக்கும்பலுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது என்று குறிப்பிட்டார்கள். 

காஷ்மீரில் கோயிலுக்குள்ளேயே சிறுமி ஆசிஃபாவை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி கொன்ற கொடூரம், குஜராத்தில் கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை தாக்கி பாலியல் வன்முறைக்குள்ளாக்கியதுடன், தன் தாய்க்கு நேர்ந்த கதியைக் கண்டு கதறிய இரண்டு வயது குழந்தையை தூக்கி அடித்துக் கொன்றது உள்ளிட்ட பல்வேறு பாலியல் வன்முறைகள், வன்முறை வெறியாட்டங்கள் அனைத்தும் நிறுவனப்படுத்தப்பட்ட குற்றங்களாக தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பாலியல் குற்றமிழைத்த குற்றவாளிகள் பாஜக அரசால் நன் னடத்தை என்கிற பெயரில் விடுதலை செய்யப்படும் அவலம், பெண்களுக்கு எதிரான பாஜக அரசில் சிறு பான்மை மக்களை, பெண்களை அச்சத்துடன் தொடர்ச்சியாக இருக்கச் செய்வது, கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்முறைகள் அனைத்துக்கும் அரசே ஆதரவாக இருப்பது உள்ளிட்ட பாஜகவின் உண்மை முகத்தை தோலுரித்துக்காட்டினர்.

1925, 1926களிலேயே தந்தை பெரியார் தொலை நோக்குடன் ஆர்.எஸ்.எஸ். மதவாத நஞ்சுகுறித்து மக்களை எச்சரித்துள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டினார்கள்.

தாம்பரம் மாவட்ட திராவிட மகளிர் பாசறைத் தலைவர் இராசு.உத்ரா பழனிச்சாமி நன்றி கூறினார்.

கழகப் பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பகுத்தறி வாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன் மற்றும் கழகப்பொறுப்பாளர்கள், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் பெருந்திரளாக கருத்தரங்கில் பங்கேற்றனர்.

18
எழுத்தாளர் கவிதா சொர்ண வல்லி தனது உரையில் : தொடர்ந்து வெறுப்பு அரசியலை விதைக்கும் பாசிச பிஜேபியின் சித்தாந் தத்தின் வடிவத்தை எடுத்து ரைத்தார். 80 நாள்களாக நடக்கும் வன்முறை வெறியாட்டத்தை இந்த பொது சமூகம் பேசுவதற்கு, இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்யும் காட்சிப் பதிவு தேவைப்படுகிறது என்பதை நினைக்கும்போது தனக்கு அயர்ச்சி ஏற்படுகிறது என்று மனிதநேய உணர்வுடன் அவரது  கருத்தினை பதிவு செய்தார்.

16

வகிதா நிஜாம் தனது உரையில் : குடும்பம் என்ற அமைப்பு முறை பெண்களுக்கு எவ்வளவு எதிரானது என்றும், தாய்வழிச் சமூகம் எப்படி  தனியுடைமையினால் பெண்களை அடிமைப் படுத்தியது என்பதையும் ஏங்கெல்சு எழுதிய புத்தகத்தின் மூலம் தெளிவாக விவரித்தார்.

முதலாளித்துவம் எப்படி பாசி சத்தின் கோர முகத்துடன் கைக் கோர்த்து இன்று பிஜேபி என்ற வடிவத்தில் நிற்கிறது என்றும், மணிப் பூர் பற்றி மட்டுமல்ல, பெண்களுக்கு எதிரான தொடரும் வன்கொடுமைகள் குறித்து, உரையாடல் தொடர்ந்து நடக்க வேண்டும் என்றார்.

19

வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி தனது உரையில் : சட்டம் மட்டுமே பெண்களுக்கு எதிரான வன்கொடுமை களுக்கு தீர்வாக அமையாது, சமூகத்தின் பார்வை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்றும், குடும்பம் தொடங்கி அனைத்து இடங்களிலும் பெண்களை பாலியல் பண்டமாக பார்க்கும் பார்வை மாறினால் ஒழிய நிரந்தர தீர்வு கிடைக்காது என்றும், ஒழுக்கம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்ற பெரியாரின் பார்வைத் துணை கொண்டு எல்லா இடங்களுக்கும் இதனை கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்றார்.

17

வழக்குரைஞர் அ.அருள்மொழி தனது உரையில்: மிகுந்த கருத்தாழமிக்க நிகழ்வால் நடைபெறும் கருத்தரங்கம் மிகுந்த பொருத்தமான நாளில் நடைபெறு கிறது என்றும், நாடாளுமன் றத்தில் எதிர்க் கட்சிகளின் உரையை உலக அரங்கமே இன்று பார்க்கிறது என்றும், ஆர்.எஸ்.எஸ்.  சித்தாந்தம் எத்தனைக் கொடியது என்பதை பல்வேறு வழக் குகள் மூலமும் விவரித்தார். பெண் களுக்கு மட்டுமல்ல இந்து சகோதரர் களுக்கும் இந்த சித்தாந்தம் எவ்வளவு ஆபத்தானது என்று பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் மூலம் விளக்கினார். இந்த கொடிய ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் பற்றி தந்தை பெரியார் தொலைநோக்கோடு எச்சரித்ததையும், தமிழர் தலைவர் ஆசிரியர் ஒவ்வொரு முறையும் இதன் ஆபத்தை முன்பே உணர்ந்து தமிழ்ச் சமூகத்தை காப்பாற்றி நிற்கும் விதத்தை வரலாற்று செய்திகளுடன் குறிப்பிட்டார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையாக பிஜேபி அற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று கூறி நிறைவு செய்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக