செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

தென்சென்னை மயிலை பல்லக்கு மான்யம் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்


4

மயிலை, ஆக. 1
- தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் மயிலாப்பூர் இளைஞர் அணி சார்பில் "வைக்கம் போராட்ட நூற்றாண்டு - முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு" தெருமுனைப் பிரச்சார கூட்டம் 28.7.2023 மாலை 6.30 மணி அளவில் மயிலாப்பூர் பகுதி பல்லக்கு மான்யம் குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது.

மயிலாப்பூர் பகுதி கழகத் தலைவர் ஈ.குமார் கூட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றி னார். மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி அனைவரை யும் வரவேற்று உரையாற்றினார். மாவட்டத் தலைவர் இரா.வில் வநாதன், மாவட்டத் துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் சா.தாமோதரன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.சண்முகப்பிரியன் தொடக்க உரையாற்றினார்.

மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை முதன்மை உரையாற்றினார்.

அதற்கடுத்து கழக பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் உரையில், தந்தை பெரியார், அறி ஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், கல்வி வள்ளல் காமராஜர் ஆகியோரின் சமூகப் போராட்டங்களையும், அத னால் திராவிட மக்கள் அடைந்த பயன்களையும் எடுத்துக் கூறி யதோடு, தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக தொண்டினையும், ஆட்சியை நடத்தும் பாங்கையும் விரிவாக எடுத்துக் கூறினார். மூடநம்பிக்கைகளை விளக்கி கூறி மக்களுக்கு பகுத்தறிவு ஊட்டும் வகையில் எழுச்சிமிகு உரையாற்றினார்.

நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், பகுதி கழகத் தலைவர் ஈ.குமார், பல்லக்கு மாநகர் இளைஞர் அணி தோழர் க. விஜயராஜா ஆகியோருக்கும் மற்றும் சிறப்பு பேச்சாளர்களான தஞ்சை இரா பெரியார் செல்வன், வழக்குரை ஞர் பா.மணியம்மை ஆகியோருக் கும் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தென் சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் துரை.அருண், செயலாளர் ந.மணி துரை, வட சென்னை மாவட்ட செயலாளர் சு.அன்புச் செல்வன், ஆவடி மாவட்ட துணைச் செய லாளர் க. தமிழ்ச்செல்வன், தாம் பரம் நகர செயலாளர் சு.மோகன் ராஜ், இரா.மாரிமுத்து, தரமணி ம.ராஜி, ச. துணைவேந்தன், ச.சந் தோஷ், ஆலந்தூர் சிவா, க. கலைமணி, ஒளிப்படக் கலைஞர் பா. சிவக்குமார், வி.ரஞ்சிதா, அரங்க.ராசா, செ. சந்திரசேகரன், க.செல்லப்பன், ஆகியோருடன் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு ஆர்வமுடன் செவிமடுத்தனர். நிகழ்ச்சியின் முடிவில் க.விஜயராஜா நன்றி உரையாற்றினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக