சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்பாளராகவும், கலைஞர் கருணாநிதி நகர் இலக்கிய வட்டம் அமைப்பின் காப்பாளராகவும் இருந்த ந.சி. இராசவேலு (வயது 83) நேற்று (26.8.2023) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பாரதிதாசன் குடியிருப்பில் பலமுறை பகுத்தறி வாளர் கழகத்தின் சார்பாக புரட்சிக்கவிஞர் விழாவினை மிகச் சிறப்பாக நடத்தியவர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மீது ஆழ்ந்த பற்றுடையவர். அவரது இறுதி நிகழ்வில் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி கலந்து கொண்டு மறைந்த தோழர் ராசவேலு அவர்களின் துணைவியார் ஜெயா அம்மையார், மகன்கள் அண்ணாதுரை, அன்பரசன், அரவிந் தன், கருணாநிதி, மகள் தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு திரா விடர் கழகத்தின் சார்பில் - தமிழர் தலைவர், கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஆறுதலைத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக