வியாழன், 2 ஜனவரி, 2020

நீதிபதி மோகன் மறைவு சமூக நீதிக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பு : தமிழர் தலைவர்

சென்னை, டிச.28, உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.மோகன் நேற்று (27.12.2019) மாலை மறைவுற்றார். திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று (28.12.2019) காலை  7.40 மணிக்கு  சென்னை இராஜாஅண்ணாமலைபுரத் தில் அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து  மரியாதை செலுத்தினார். அவர் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் கூறியதாவது:

மாண்பமை நீதிபதியார் தலைசிறந்த மனிதநேயராக, சீரிய பகுத்தறிவுவாதி யாக  வாழ்ந்த  உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜஸ்டிஸ் மோகன் அவர்கள் ஆவார்கள். தந்தைபெரியார் அவர்களு டைய இயக்கத்தில் ஆரம்ப காலத்தில் தொடர்பு கொண்டிருந்தவர். அதன்மூல மாக தந்தைபெரியார் அவர்களுடைய பற்றுக்கு ஆளானவர். அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், முதல்வர் காம ராஜர்  போன்ற பெருந்தலைவர்களெல் லாம் மதிக்கக்கூடிய அளவிற்கு அவர் தன்னுடைய உழைப்பால் உயர்ந்தவர்.

சட்டக்கல்லூரியிலே எங்களைப் போன்றவர்கள் படித்தபோது, எங்க ளுக்கு ஆசிரியராக இருந்தவர். பிறகு, எப்போதும் இறுதியில் மறைகின்ற வரை யில் எங்களுக்கு வழிகாட்டியாகவும், நல்ல ஆலோசகராகவும் என்றைக்கும் இருந்தார்கள். அவர்களுடைய பண்பு நலன் என்பது மிகவும் தெளிவானது. அந்த வகையில் அவருடைய இழப்பு என்பது, அவருடைய தீர்ப்புகள் எல்லாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப் புகள் என்கிற காரணத்தால், நீதித் துறைக்கும் மட்டுமல்ல அந்தப் பேரி ழப்பு; மனிதநேயத்துக்கு ஏற்பட்ட, சமூக நீதிக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பு. என்றாலும், நாம் இயற்கையை வெல்ல இயலவில்லை என்ற காரணத் தால், ஆறுதலடையவேண்டியது பகுத் தறிவா ளர்களது கடமை. எனவே, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவர் களுக்கு வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில்  துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், சட்டத்துறை தலைவர் த. வீரசேகரன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் த. யாழ்திலீபன், தென் சென்னை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் மணிதுரை, அமைப்பாளர் சிவசீலன், மந்தைவெளி சண்முகப்பிரியன், பா. சிவகுமார், தேனாம் பேட்டை பாஸ்கர் மற்றும் தோழர்கள் உடன் சென்றனர்.

ஆசிரியர் அறிக்கை

அந்தோ, ஜஸ்டீஸ் எஸ்.மோகன் மறைந்தாரே!

தமிழ்நாட்டின் தலைசிறந்த சட்டநிபுணர்களில் ஒருவரும், தந்தை பெரியார் அவர்களின் சமூகத் தொண்டால் ஈர்க்கப் பட்டவரும், சீரிய பண்பாள ருமான நீதியரசர் ஜஸ்டீஸ் எஸ்.மோகன் (வயது 90) இன்று (27.12.2019) மறைந்தார் என்ற செய்தியை தொலைக்காட்சி களின் மூலம் அறிந்தபோது, சொல்லொணாத் துயரமும், துன்பமும் அடைந்தோம்!

மாணவப் பருவத்திலேயே திராவிடர் இயக்கத்தாலும், தந்தை பெரியார் அவர்களாலும் ஈர்க்கப்பட்டு, சட்டக் கல்லூரி விரிவுரையாளராகவும், பிறகு அரசு வழக்குரைஞராகவும், அதன்பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, கருநாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, பிறகு உச்சநீதிமன்ற நீதிபதி போன்ற பெரிய பொறுப்புகளையெல்லாம் வகித்து, தனது சட்ட ஞானத்தின் மூலம் புகழ்பெற்ற தீர்ப்புகளை வழங்கிய மனிதநேயர்.

சட்டக் கல்லூரியில் அவரது மாணவர்களில் ஒருவன் நான். அப்போதிலிருந்து சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் மாணவர் - ஆசிரியர் - நண்பர் என்ற நட்புரிமையுடன் நாங்கள் பழகியவர்கள்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, காமராசர், முத்தமிழ் அறிஞர் கலைஞர், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். முதலிய பல தலைவர்களின் பேரன்பிற்குப் பாத்திரமானவர்.

தமிழறிஞர் புலவர் மா.நன்னன், உடுமலைப்பேட்டையில் நண்பர் கே.ஏ.மதியழகன் ஆகியோரது குடும்பத்திற்கும் மிக நெருக்கமானவர்.

அவரது பிறந்தநாள் விழாவினை சிறப்புடன் சென்னையில் பெருவிழாவாக நடத்தினோம்.

மானமிகு. கலைஞரின் வீரவணக்க நாளில் அவரது உரை முத்திரை பதித்த ஒன்று.

அவர் ஓர் அரிய எழுத்தாளர். சிறந்த கவிஞரும்கூட! ஆங்கிலம், தமிழில் புலமையும் வாய்ந்தவர். அவரது பண்பாடு அனைவரையும் ஈர்க்கும் ஒன்றாகும். சீரிய பகுத்தறிவாளர்! தமிழக மூதறிஞர் குழுவின் தலைவராக இருந்தவர்.

அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவருக்கு நமது இயக்கச் சார்பில் வீரவணக்கம்!

- கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

27.12.2019

- விடுதலை நாளேடு, 28.12.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக