30.1.2020 அன்று சென்னை எம்.ஜி.ஆர். நகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொள்ளும் "நீட்" தேர்வு ஒழிப்பு பரப்புரைக் கூட்ட துண்டறிக்கை கொடுத்து வசூல் பணியில் புரசை அன்புச் செல்வன், பசும்பொன்செந்தில் குமாரி, பவானி, வேலவன், விஸ் வாஷ் ஆகியோருடன் நாங் களும் ஈடுபட்டிருந்த போது, ஒரு பாட்டியை சந்தித் தோம். அந்த பாட்டி ஒரு நாளுக்கு மேல் தாங்காத கீரை வியாபாரம் செய்கிறார். அந்த பாட்டியிடம் பரப்புரை கூட்ட துண்டறிக்கை கொடுத்தவுடன், அதில், தந்தை பெரியார் படம் இருப்பதை பார்த்த மாத்திரத்தில் எதுவும் யோசிக்காமல் ரூ.50 கொடுத்தவுடன் அதிர்ந்து போனோம்.
திருப்பிகொடுக்க முனைந்தபோது "பெரியாருக்காக மகிழ்ச்சி யோடு கொடுக்கிறேன்" என்று சொன்னதும் வியந்தோம். நன்றி! பாட்டி அவ்வளவுதான் எங்களால் சொல்லமுடிந்தது.
அய்யாவே உங்கள் பணி மகத்தானது!
இடம்: சென்னை, கலைஞர் கருணாநிதி சாலை, எம்.ஜி.ஆர் நகர் (சந்தை) மார்கெட்
செய்தி: கழகத் தோழர் அரும்பாக்கம் தாமோதரன்
- விடுதலை நாளேடு 28 1 20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக