செவ்வாய், 28 ஜனவரி, 2020

சோழிங்கநல்லூர் கழக மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

கிராமம்தோறும் கழக பிரச்சார கூட்டங்கள்

சோழிங்கநல்லூர் கழக மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

சோழிங்கநல்லூர், ஜன. 20- சோழிங்க நல்லூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், மாவட்ட செயலாளர் விடுதலை நகர் பி.சி.ஜெயராமன் ஆகியோர் முன்னி லையில் மிக சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்கத்தில் தாம்பரம் மாவட்ட துணைத் தலைவர் கு.ஆறுமுகம் அவர் களின் வாழ்விணையர் ஆ.மல் லிகா என்கிற சந்திரா அவர்களின் மறைவையொட்டி அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து மகளிர் அணி தோழர் ஜெ.தேவி சக்திவேல் வாழ்விணை யர்களின் அன்பு மகன் பொற்ச்செழியன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, விடுதலை சந்தா வழங் குதல்,தந்தை பெரியார் பிறந்தநாள் கூட்டங்கள் நடத்துவது, ஆசிரியர் அவர்களின் பிறந்தநாள் கூட்டங்கள் நடத்துவது, கிராமம் தோறும் கழக பிரச்சார கூட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமையுரையில் கழகத்தின் வரலாறு, பார்ப்பனர்கள் தொல்லைகள் எதிர்ப்புகள் (பார்ப்பனர் கொடுக்குகளை தந்தை பெரியார் முறியடித்த விதம்) தந்தை பெரியார் அவர் களின் உழைப்பு, ஆசிரியர் அவர் களின் தற்போதைய கடுமையான உழைப்பு, எதிர் காலத்தில் ஏற்படும் இடர்பாடுகள், ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா இயக்கத்தால் ஏற்படும் தொல்லைகள், மனுதர்ம சாஸ் திரத்தினால் ஏற்படும் சங்கடங்கள், தந்தை பெரியார் அவர்களுக்கு கூட்டங்களில் ஏற்பட்ட அவமானங்கள் அதனால் திராவிட தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்ட வளர்ச்சி மாற்றங்கள், அறிவியல் விஞ்ஞானம் விழிப்புணர்வு ஆகி யவைகளை நம் சமூகம் பெற்று குறிப்பாக நம் பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறி நம் பிள்ளைகள் மூலம் பிரச்சாரம் செய்து நம் பிள்ளைகளையும் இந்த சமூகத்தையும் காப்பாற்றுவோம் என்று கூறி தொடக்க உரையை மிக நேர்த் தியாக முடித்தார்.

பங்கேற்றோர்

மாநில அமைப்பு செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாநில பகுத்தறி வாளர் கழக தலைவர்  அ.த. சண்முக சுந்தரம், சென்னை மண்டல தலைவர் தி.இரா.இரத்தினசாமி, சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், தாம்பரம் மாவட்ட செயலாளர். கோ.நாத்தி கன், சீ.லட்சுமிபதி, குழ.செல்வராஜ், விழுப்புரம் மண்டல செயலாளர், விஜய்ஆனந்த், மடிப்பாக்கம். பாண்டு ,நடராசன், அப்துல் சத்தார், நித்யானந்தம், நி.அனுசா, ந.குண சேகரன், பாக்கிய லட்சுமி, ம.நந்தினி, ஜெ.குமார், பொழிச் சலூர் வி.சரவணன், ஜெ.தேவி, ம.சக்தி வேல், வேலு கோபாலகிருஷ்ணன், வே.மணிகண்டன், ம.சுமதி, அருணா, த.யாழ்திலீபன், இராமநாததிலகம், மதிவதனி, கனிமொழி, தரணி, ஆர்.விஜயா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலந்துகொண்ட அனை வருக்கும் மதிய உணவாக ஆட் டுக்கறி பிரியாணி, வறுத்த மீன், சிக்கன் 65, அழித்த முட்டை, கேரட், வெள் ளரிக்காய், வெங்காயம், ஆகியவை கலந்த தயிர் பச்சடி, ரவா கேசரி, மற்றும் ரசம் சோறு ஆகியவை வழங்கி திக்கு முக்காட வைத்தார் 82வயதான இளைஞர் சுறுசுறுப்பின் சிகரம் ஆர்.டி.வீரபத் திரன் அவர்கள். நிகழ்ச்சியை சிறப்பாக அமைத்தனர் ஆர்.டி.வீரபத்திரன் குடும் பத்தினர்.

- விடுதலை நாளேடு 20 1 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக