வியாழன், 2 ஜனவரி, 2020

சென்னை மண்டலத்தில் துணைத்தலைவர் தலைமையில் விடுதலை சந்தா சேர்ப்புப் பணிகள் தீவிரம்!

சென்னை.டிச, 28- சென்னை மண்டலத்தில் சந்தா சேர்க்கும் பயணத்தில் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கலந்துகொண்டு சேகரித்தார்.

விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 87ஆம் ஆண்டு பிறந்தநாளை, விடுதலை சந்தாக்களை சேகரித்துக் கொண்டாடுங்கள் என்று அறிவித்ததை யொட்டி, பல்வேறு மாவட்டங்களில் சந்தா சேர்ப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை மண்டலத்தில் உள்ள 8 மாவட் டங்களில் சந்தா சேகரிப்பதற்காக கடந்த 18-.12.2019, புதன்கிழமை அன்று பெரியார் திடலில் தொடங்கி மீண்டும் பெரியார் திடலியே முடியும் வகையில் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   இந்தப் பயணத்தில் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கலந்து கொண்டார். அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டலச் செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் வெங்கடேசன், உடுமலை வடிவேல் ஆகியோர் உடன் சென்றனர்.

பெரியார் திடலும், புழலும்!

பெரியார் திடலில் உள்ள பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்திலிந்து தொடங்கியது முதல் கட்டப்பயணம்! திருமண நிலையத்தின் சார்பில், அதன் இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி மற்றும் இசையின்பன் இருவரும் முதல் கட்டமாக  24 ஆண்டு சந்தாக்கள் கொடுத்து பயணத்தைத் தொடங்கி வைத் தனர். உற்சாகமாகத் தொடங்கிய பயணத்தில் இரண் டாவதாக கும்மிடிப்பூண்டி மாவட்டத் தோழர்கள் ஆண்டு சந்தா 7, ஆறுமாத சந்தா 6 ஆக 13 சந்தாக்களைக் கொடுத்தனர்! இதில் மாவட்டத் தலைவர் புழல் ஆனந்தன், இளைரணித் தலைவர் சக்ரவர்த்தி, சோழ வரம் ஒன்றியத் தலைவர் கஜேந்திரன், புழல் ஒன்றித் ததலைவர் வடகரை ஜெகத்விஜயகுமார், செயலாளர் வடகரை உதயகுமார், சோழவரம் ஒன்றித்தலைவர் இரணியன், தி.மு.க.வைச் சேர்ந்த செங்குன்றம் திரா விடமணி, பெரியார் தாய்தமிழர் இயக்கம் ஒருங் கிணைப்பாளர் சீனிவாசன் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டு துணைத்தலைவரை வரவேற்று சிறப்பித்தனர்.

ஆவடியில் சந்தாக்களும்!

புதிய தோழர்கள் இணைப்பும்!

அங்கிருந்து ஆவடி மாவட்டத்திற்கு வந்தது பயணக்குழு, ஆவடியில் ஆண்டுசந்தா 24, ஆறுமாத சந்தா 12 ஆக மொத்தம் 36 சந்தாக்கள் வழங்கப்பட்டன! இதில் மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, செயலா ளர் க.இளவரசன், இளைஞரணித் தலைவர் கார்வேந் தன், இளைஞரணிச் செயலாளர் சோபன்பாபு, ஆவடி நகரக்கழகச் செயலாளர் முருகன், கொரட்டூர் பகுத் தறிவுப் பாசறை ஒருங்கிணைப்பாளர் கோபால், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பகுத் தறிவு, பெரியார் மாணாக்கன், செல்வி, மணிமாறன், வெங்கடேசன், மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதில் சிறப்பாக பணியாற்று கின்ற தோழர்களுக்கு துணைத்தலைவர் ஆடையணி வித்து மரியாதை செய்தார்! அம்பத்தூரைச் சேர்ந்த ரத்தினம் தனது இணையர் காயத்திரி இருவரும் துணைத்தலைவர் முன்னிலையில் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டனர்!

துணைத்தலைவருடன்

அளவளாவிய பெரியார் பிஞ்சுகள்!

அங்கிருந்து தாம்பரம் நோக்கி குழு புறப்பட்டது. தாம்பரத்தில் 15 ஆண்டு சந்தாக்களும், 9 ஆறு மாதச் சந்தாக்களுமாக மொத்தம் 24 சந்தாக்கள் வழங்கப் பட்டன. மாவட்டத் தலைவர் பா.முத்தையன் துணைத்தலைவருக்கு ஆடையணிவித்து சிறப்பித்தார். நிகழ்வில் மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன், மண்டல இளைஞரணித் தலைவர் சிவசாமி, பொழி சைக் கண்ணன், கரைமாநகர் சுரேசு, மோகன்ராஜ், மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். பொரியார் பிஞ்சுகள் அமுதன், யாழினி இருவரும் தனது நண்பர்களை துணைத்தலைவருக்கு அறிமுகம் செய்வித்து மகிழ்ந்தனர்.

நெருக்கடியிலும் தொடர்ந்த பயணம்!

துணைத்தலைவர் இரவில் வெளியூர் பயணம் மேற்கொள்ளவிருக்கும் சூழலில், தாம்பரத்தில் இருந்து கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தென் சென்னையில் இருக்கும் மு.ந.மதியழகன் இல்லத்திற்கு விடுதலை சேகரிப்புக்குழு சென்றது! அங்கு மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், அமைப்பாளர் மு.ந.மதியழகன், அரும்பாக்கம் தாமோதரன், செயலாளர் செ.ரா.பார்த்தசாரதி, மஞ்சநாதன், ப.க. மாணிக்கம், கோ.வி.ராகவன், நீடாமங் கலம் கூத்தரசன், மயிலை சேதுராமன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அங்கிருந்து பயணக் குழு தொடங்கிய இடமான பெரியார் திடலுக்குத் திரும்பியது. அங்கு வடசென்னை மற்றும் எண்ணூர் மாவட்டங்கள் சந்தாக்களைக் கொடுத்தனர். வட சென்னை சார்பாக 9 ஆண்டு சந்தாக்களும், எண்ணூர் சார்பாக ஆறு மாத சந்தாக்கள் 7 ம் கொடுக்கப்பட்டது. இதில் எண்ணூர் மாவட்டத் தலைவர் மோகன், வடசென்னை மாவட்டச் செயலாளர் கணேசன், ராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். நேரம் காரணமாக சோழிங்கநல்லூர் மாவட்டத்திற்கு செல்ல இயலவில்லை. ஆக மொத்தம் ஆண்டு சந்தாக் கள் 84 ம், ஆறுமாத சந்தாக்கள் 26 மாக மொத்தம் 117 சந்தாக்கள் சேகரிக்கப்பட்டன.

-  விடுதலை நாளேடு 28 12 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக