திங்கள், 20 ஆகஸ்ட், 2018

திராவிட மாணவர் கழக தோழர்களுக்கு தலைமைத்திறன் பயிற்சி

சென்னை ஆக. 19-  சென்னை மண்டல திராவிட மாணவர் கழக தோழர்களுக்கு ஆகஸ்ட் 4, 5 ஆகிய இரு நாட்கள் சென்னை பெரியார் திடலில் தலைமைத் திறன் பயிற்சி சிறப்பாக நடைபெற்றது. சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால் இப்பயிற்சியைத் தொடங்கிவைத்தார்.முதல்வகுப்பை தலைமைத்திறன் பற்றிய ஓர் அறி முகத்தை இளைஞர் சுய முன்னேற்ற பாசறை அமைப்பாளரும், இக்குழுவின் ஒருங்கிணைப்பாளருமானதி.க.பன் னீர் செல்வம் அவர்கள் விளக்கி உரை யாற்றினார். மேலும் தலைமைத்திறன் என்றால் என்ன? தலைமைத் திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும்? அதற்கு என்னென்ன வழிமுறைகள் போன்ற பல தகவல்களை விளக்கி மாணவர்கள் ஒவ்வொருவரும் தனது தனித்திறமை மூலம் தலைமைத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார். உதாரணமாக நம் இனத்திற்காக பாடுபட்ட தலைவர்களான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பச்சைத் தமிழர் காமராசர், அண்ணல் அம்பேத்கர், ஆசிரியர் கி.வீரமணி போன்ற தலைவர் களை முன்னுதாரணமாக கொண்டு மாணவர்கள் செயல்பட வேண்டும் என கூறினார். நெட்வொர்க்கின் முக்கியத் துவம் என்ற தலைப்பில் கார்த்திக் அவர்கள் வகுப்பை எடுத்தார்கள். ஜாதி ஒழிப்பு மற்றும் சமூகநீதி தொடர்பான ஆவணப்படத்தை திரையிட்டு அதைப் பற்றிய கருத்துக்களை மாணவர்கள் அனைவரையும் கூறச்செய்தனர்.


நேரமேலாண்மை


நேரமேலாண்மை என்ற தலைப்பில் முத்து அவர்கள் வகுப்பை எடுத்தார்கள். வேக மாக சென்று கொண்டிருக்கும் இக்காலத்தில் நேரத்தை வீணாக் காமல் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும், நேரத்தை சேமிக்க நாம் என்னென்ன முறைகளை கையாள வேண்டும் போன்ற பல்வேறு செய்திகளை விளக்கினார். ராம்மோகன் 7 விதமான பழக்கங்கள் என்ற தலைப்பில் தேவையற்ற பழக் கங்களை தவிர்த்து விட்டு தேவையான பழக்கங்களை மட்டும் மாணவர்கள் கைக் கொள்ள வேண்டும் என்று வகுப்பை நிறைவு செய்தார். ஷிமீஜீலீமீஸீ ஸி.சிஷீஸ்மீஹ் எழுதிய ஜிலீமீ ஷிமீஸ்மீஸீ பிணீதீவீ ஷீயீ பிவீரீலீறீஹ் ணியீயீமீநீவீஸ்மீ றிமீஜீஷீறீமீ என்ற ஆங்கில புத்தகத்திலிருந்து பல தகவல்களை விளக்கினார். குழுவாக ஒரு செயல் செய்யும்போது அந்த செயல் எவ்வாறு இருக்கும், அதனால் என்ன நன்மைகள் ஏற்படும், அவற்றிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம் என்பதை விளக்க மாணவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து விளையாட்டு ஒன்றினை நடத் தினார்.


பேச்சுத்திறன் பயிற்சி


இறுதியாக ஜோஸ்பின் ஆனந்து பேச்சுத்திறன் பயிற் சியை மாணவர்களுக்கு அளித் தார்கள். ஒரு தலைப்பை கொடுத்தால் அந்த தலைப்பிற்கு ஏற்ற தகவல்களை எவ்வாறு சேகரிக்க வேண்டும். எந்த இடத்தில் பேசுகிறோமோ அந்த இடத்திற்கேற்றவாறு நமது பேச்சு இருக்க வேண்டும். பேச்சுப் பயிற்சியின்படி நிலைகள் வரவேற்பு, தலைப்பின் முக்கி யத்துவம், முடிவுரை என்று முறையாக பேச்சுப்பயிற்சி இருக்க வேண்டும் எனவும், மேடைபேச்சின் பயத்தை போக்கும்வழிகளையும்எடுத் துக்கூறிமாணவர்களை4 குழுக்களாகப்பிரித்துஒவ் வொரு குழுவிற்கும் சுயமரி யாதை, பகுத்தறிவு, பெரியார் பிஞ்சு, உண்மை என குழு வின் பெயரை தேர்வு செய்து குழுவினர் தாங்களே ஒரு தலைப்பைதேர்ந்தெடுத்துஒவ் வொருவரையும் அந்தந்த தலைப்பில் பேச வைத்து அதிலுள்ள திருத்தங்களை மாணவர்களுக்கு எளிதாக எடுத்துக் கூறினார். மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இப்பேச்சு பயிற்சியில் கலந்து கொண்டனர். பேசாத மாணவர்களையும் கூட தாமாக வந்து பேசும் அளவிற்கு இப்பயிற்சி அமைந்தது. பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்கள் தமது கருத்துகளை கூறினார்கள். பயிற்றுநர்கள் அனைவருக்கும் பயனாடை போர்த்தி மண்டல செயலாளர் தே.செ.கோபால், இசையின் பன், கூடுவாஞ்சேரி ராஜூ, பசும்பொன் செந்தில்குமாரி ஆகியோர் பாராட்டினர்.


பயிற்சியாளர் ஒவ்வொரு வருக்கும் சென்னை மண்டல திராவிடர்கழகம் சார்பாக சிறப்பு செய்யப்பட்டது. இரண்டு நாள் பயிற்சி வகுப்பிற்கு தேநீருக்கான செலவை தோழர் ராஜூ அவர்களும், மதிய உணவிற்கான செலவை மண்டல செயலாளர் கோபால் அவர்களும் எற்றுக் கொண்டார்கள். சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில் குமாரி மற்றும் திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் நா.பார்த்திபன் ஆகியோர் சிறப்பான முறையில் பயிற்சி வகுப்பை ஒருங்கிணைத்தனர். இப்பயிற்சி மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் அனைவருக் குமே தேவையான ஒன்றாகும்.


பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டோர்


நா.பார்த்திபன், வேலவன், இனநலம், த.மரகதமணி, நதியா, தமிழ்நிலா, தொண்ட றம், பிரவீன், ஓவியர் சிகரன், யாழ்திலீபன், சமரசம், யுவராஜ், கவுதமன், கார்த்திகேயன், கனி மொழி, மெய்மொழி, சுமித்ரா, அறிவுமதி, பா.பார்த்திபன், அன்புமணி.


- விடுதலை நாளேடு, 19.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக