செவ்வாய், 19 ஜூன், 2018

தாழ்த்தப்பட்டவர் என்பதால் குடியரசுத் தலைவரை அவமதிப்பதா? சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்


தாழ்த்தப்பட்டவர் என்பதால் குடியரசுத் தலைவரை அவமதிப்பதா?''

தீண்டாமை ஒழிப்புச் சட்டம் எங்கே? எங்கே? குறட்டை விடுகிறதா?

சென்னை, ஜூன் 7 இந்தியக் குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்களும், அவரது துணைவியாரும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதைக் கண்டித்தும், மனித உரிமை - தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்தியும் திராவிடர் கழகம் சார்பில் இன்று (7.6.2018) காலை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்கு இந்தியாவின் முதல் குடிமகனான - முப்படைக்கும் தலைவரான குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்கள் தன் துணைவியாருடன் சென் றுள்ளார்.

குடியரசுத் தலைவராக இருந்தால் என்ன? அவர் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராயிற்றே! ஏற்குமா இந்த சனாதனக் கூட்டம்? எனவே, சாமி' கும்பிட அவரை கோவிலுக்குள் நுழையவே அனுமதிக்கவில்லை.

எந்தப் பதவியில் இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர் என்றால் கோவிலுக்குள் இடமில்லை என்று கறாராகக் கூறிவிட்டனர். அதன் விளைவு படியில் அமர்ந்து வழிபாடு செய்துவிட்டுப் புறப்பட்டு விட்டார் - 120 கோடி இந்திய மக்களின் முதல் குடிமகன்.

வழிபாடு செய்ய குடியரசுத் தலைவர் கோவிலுக்குள் நுழை யவே அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தி எத்தகைய கொடுமை - எவ்வளவுக் கேவலமான ஜாதியின் பெயரால் அவமதிப்பு? ஜாதி ஆணவம்?

குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர் களும், அவர்தம் துணைவியாரும் கோவில் கருவறைக்குள் நுழைய முடியவில்லையே! கோவிலுக்குள் செல்வதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே! இதற்குக் காரணம் என்ன? குடியரசுத் தலைவராக இருந்தாலும், அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால்தானே இந்தக் கொடுமை!

இது மன்னிக்கப்பட முடியாத மிகப்பெரிய குற்றமே - தீண் டாமை ஒழிப்புச் சட்டம் என்ன செய்கிறது? இதில் சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள், நிருவாகிகள் பிணையில் வர முடியாத சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டிருக்க வேண்டாமா?

இது ஒரு கட்சி சார்ந்த பிரச்சினையல்ல - மனித உரிமைப் பிரச்சினை - சட்டத்தின் மரியாதையைக் காப்பாற்றும் பிரச் சினை. எனவே, குடியரசுத் தலைவரையே கோவிலுக்குள் நுழைய விடாததைக் கண்டித்து சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் சார்பில் முதற்கட்டமாக 7.6.2018 அன்று தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று (7.6.2018) காலை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஒத்தக் கருத்துள்ள அனைவருடன் இணைந்து திராவிடர் கழகம் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில்....

தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இன்று முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டிருக்கும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் காலை 11 மணியளவில் நடைபெற்றது.

போராடுவோம் வெற்றி பெறுவோம்!

வெற்றி கிட்டும் வரை போராடுவோம்! போன்ற ஒலி முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் விண்ணதிர முழங்கப்பட்டன.

என தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தோழர்கள் ஒலி முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் கண்டன உரையை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்,  திருவள்ளூர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், வழக்குரைஞர் சைதை சுப்பிரமணி, கழக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் நிகழ்த்தினர்.

முன்னதாக வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்கு ரைஞர் சு.குமாரதேவன் வரவேற்புரையாற்றினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் இ.ச.இன்பக்கனி, சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, மண்டல செயலாளர் தே.செ. கோபால், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் த.ஆனந்தன், செயலாளர் இரா.விஜயகுமார், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட செயலாளர் தே.ஒளிவண்ணன், சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் ஆ.இர.சிவசாமி, சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் நன்றி கூறினார்.

-  விடுதலை நாளேடு, 7.6.18

சென்னை, ஜூன் 8- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இராஜஸ்தான் கோயிலுக்கு சென்ற போது பிரம்மா கோயி லுக்குள் சென்று அவர் வழிபடு வதற்கு அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்ப தால் அனுமதி மறுக்கப்பட்ட மனித உரிமை பறிப்பைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (7.6.2018) நடைபெற்றது. திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சென் னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத் துக் கட்சியினரும் பங்கேற்றனர்.

கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மதி முக ஆட்சி மன்ற குழு செய லாளரும் திருவள்ளூர் மாவட் டச் செயலாளர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், மதிமுக மேற்கு மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் சைதை ப.சுப் பிரமணி, கழக அமைப்புச் செயலாளர் வி. பன்னீர்செல் வம்,  வடசென்னை மாவட்டத் தலைவர்  வழக்குரைஞர் சு. குமாரதேவன்,   மண்டல மாண வர் கழக செயலாளர் பா.மணி யம்மை ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

தலைமைசெயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி, மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் களம் இறைவி உள்ளிட்ட தோழர்கள் எழுச்சி முழக்கமிட்டனர்.

தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் நன்றி கூறினார்.

அனைத்து கட்சித் தோழர்கள்

மதிமுக சிறுபான்மை அமைப்பு செயலாளர் முராக்புகாரி, மதி முக வெளியீட்டுச் செயலாளர் எம்.எல்.எஃப்.ஜார்ஜ், மதிமுக தலைமை கழக சொற்பொழிவா ளர் கனல் காசிநாதன், தியாக ராசன், இரவிச்சந்திரன், செல் வமணி, ஆர்,ரவிச்சாமி, மலுக் காமலி, கே.எஸ்.அரி, கராத்தே ஜெ.பாபு, திலீபன், எட்வின், துறைமுகம் பகுதி செயலாளர் நாசர், துறைமுகம் பகுதி வட் டச் செயலாளர் சுரேஷ்,  மூத்த வழக்குரைஞர் இரத்தினவேலு, அம்பேத்கர் முன்னணி இயக் கம் திண்டிவனம் சிறீராமுலு

மகளிரணி

சி.வெற்றிச்செல்வி, பெரி யார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, கற்பகம், வி. வளர்மதி, வி.தங்கமணி, நூர்ஜ கான் ராசு, பூவை செல்வி, சகா னாப்பிரியா, சீர்த்தி, தொண்ட றம்.

தென்சென்னை

செயலாளர் செ.ர.பார்த்த சாரதி, இளைஞரணித் தலைவர் செ.தமிழ்சாக்ரட்டீசு, மு.ந. மதி யழகன், சி.செங்குட்டுவன், மயிலை டி.ஆர்.சேதுராமன், மயிலை பாலு, சா.தாமோதரன், விருகை சி.தங்கவேலு, க.தமிழ்ச்செல்வன், மு.சேகர், மு. ஆனந்தன்,  ஆர்.எம்.சிதம்பரம், சின்மயா நகர் தங்கவேல், கோ.மஞ்சநாதன், இளைஞரணி அமைப்பாளர் நுங்கம்பாக்கம் பவன்குமார், க.வெற்றிவீரன்

வடசென்னை

மண்டல செயலாளர் தே.செ.கோபால் மாவட்டச் செய லாளர் தே.ஒளிவண்ணன், பொதுக் குழு உறுப்பினர் எண்ணூர் வெ. மு.மோகன், பெரு.இளங்கோ, செல்வம், இளைஞரணி செய லாளர் சோ.சுரேஷ்,  கெடார் சு.மும்மூர்த்தி, நாத்திகம் சேகர், இனநலம், அம்பேத்கர், சட் டக்கல்லூரி மாணவர் கழகம் பிரவீன்குமார், விமல்ராஜ்

தாம்பரம் மாவட்டம்


சென்னை மண்டலத் தலை வர் தி.இரா.இரத்தினசாமி, மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், செயலாளர் கோ.நாத்திகன், மாநில இளைஞரணி துணை செயலாளர் பொழிசை கண்ணன், மண்டல இளைஞ ரணி செயலாளர் ஆ.இர.சிவ சாமி, விடுதலைநகர் செயரா மன், கடப்பேரி கு- சோமசுந்த ரம், ஊரப்பாக்கம் சீனுவாசன், நூர்ஜகான், கூடுவாஞ்சேரி இராசு, நங்கைநல்லூர் க.தமிழினியன், நடராசன், அர்ச்சுனன், தாம்பரம் சு.மோகன்ராஜ், மா. குணசேகரன், தாம்பரம் லட் சுமிபதி, செஞ்சி ந.கதிரவன், ஆதம்பாக்கம் சவரியப்பன்

கும்மிடிப்பூண்டி மாவட்டம்

மாவட்டத் தலைவர் த. ஆனந்தன், செயலாளர் இர. இரமேசு, வே.அருள், கெ.முருகன், அறிவுமானன், புழல் ஏழுமலை, சனாதிபதி, சுதாகர்

ஆவடி மாவட்டம்

மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், இல. குப்புராசு, இளைஞரணி அமைப் பாளர் கலைமணி, கலையரசன், பெரியார்மாணாக்கன், இ.ப.இன நலம், கோபால் உள்பட பல்வேறு அமைப்புக ளைச் சார்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

-  விடுதலை நாளேடு, 8.6.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக