புதன், 27 செப்டம்பர், 2017

சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள்: சிலைக்கு கழகத் துணைத் தலைவர் மாலை அணிவித்தார்


சென்னை, செப். 27 சி.பா.ஆதித் தனார்  அவர்களின் 113ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி இன்று (27.9.2017) சென்னை எழும்பூரில் புதுப்பிக்கப்பட்ட சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கழகத் துணைத் தலைவர் கவி ஞர் கலி.பூங்குன்றன் மாலை அணிவித்தார்.

செய்தியாளர்களிடையே கழகத் துணைத் தலைவர் கவி ஞர் கலி.பூங்குன்றன் பேசியதா வது:

உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்றவர் சி.பா.ஆதித்தனார். அவர் எழுப்பிய அந்த ஒலிமுழக்கம் இன்றைக் கும் தேவைப்படுகின்ற ஒரு காலக்கட்டத்தில், அவருடைய பிறந்த நாள் விழாவை இன் றைக்கு நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

ஊடகங்கள் எல்லாம் உயர் ஜாதிக்காரர்களுடைய ஆதிக்கத் தில் இருந்த நிலையில், தமிழர் களாலும் மிகச்சிறந்த முறையிலே பத்திரிகையை நடத்த முடியும் என்பதை சாதித்துக் காட்டியவர் சி.பா.ஆதித்தனார் அவர்கள். தந்தைபெரியாரு டைய கெழுதகை நண்பராக இருந்தவர். சுதந்திர தமிழ்நாடு போராட்டத்தில் திராவிடர் கழ கமும், நாம் தமிழர் இயக்கமும் ஒன்றாக இணைந்து போராடி, அந்தப் போராட்டத்தில் தந்தை பெரியாருடன், ஆதித்தனார் அவர்கள் சிறையில் இருந்தார் என்ற உண்மையையும் இந்த நேரத்திலே இளைய சமுதாயத் தினருக்கு நாம் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின் றோம்.

ஆதித்தனார் எந்த கொள் கைக்காக, எந்த உணர்விற்காக பாடுபட்டாரோ, அந்த கொள்கை வெற்றிபெற இந்த நாளில் உறுதிமொழி எடுப்போம். வாழ்க ஆதித்தனார்!  இவ்வாறு செய்தியாளர்களிடையே கவி ஞர் கலி.பூங்குன்றன் குறிப் பிட்டார்.

கலந்துகொண்டவர்கள்

மாநில மாணவரணி செய லாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி,  பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந் தில்குமாரி, சி.வெற்றிசெல்வி, த.மரகதமணி, மு.பவானி, இ.ப.சீர்த்தி, நாகூர் சி.காமராஜ், விமல்ராஜ், வை.கலையரசன், சுரேஷ், ஆவடி கலைமணி, காசிநாதன், பிரபு, அருள், யுவ ராஜ் உள்பட கழகத் தோழர்கள், பொதுமக்கள் என ஏராளமா னோர் கலந்துகொண்டனர்.

-விடுதலை,27.9.2017


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக