ஞாயிறு, 11 ஜூன், 2017

மாட்டிறைச்சியை தடை செய்யும் மத்திய பி.ஜே.பி. அரசின் சட்ட விரோத சட்டத்தை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டம்!

தமிழர் தலைவர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு
சென்னை, ஜூன் 2 பசு, காளை, எருமை, ஒட்ட கங்களை உணவுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்னும் மத்திய பி.ஜே.பி. அரசின் மனித உரிமை விரோத, அரசமைப்பு  சட்ட விரோத சட்டத்தை எதிர்த்து, ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் தமிழர் தலைவர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும், திரளான தோழர்களும் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (1.6.2017) மாலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.
ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்ட மைப்பின் சார்பில், நேற்று (1.6.2017) மாலை சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் அருகில் மத்திய அரசின் மாட்டி றைச்சிக்குத் தடைபோடும் சட்டத்தைக் கண்டித்து  எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்றவர்களில் பெண்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு உணர்ச்சிகரமான கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் திராவ¤டர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று கண்டன முழக்கங்களை முழங்கினார். அவரைத் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்   வரவேற்று ஆர்ப்பாட்ட இணைப்புரை வழங்கினார். விடுதலை சிறுத் தைகள் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், ஆவணப்பட இயக்குநர் அமுதன், இந்திய கம்யூனிஸ்ட மார்க்சிஸ்ட் கட்சி சென்னை மாவட்ட செயற்குழு உறுப் பினர் டி.கே.சண்முகம், தமிழக முசுலீம் முன்னேற்றக்கழக நிறுவனர் பேராசிரியர் ஜவா ஹிருல்லா,  காங்கிரசு கட்சி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் உ.பலராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
தமிழர் தலைவர் உரை
நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆர்ப்பாட்டத் தலைமையுரையாற்றினார்.
பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்து, கோவா மாநிலத்தின் முதல்வராக மனோகர் பாரிக்கர் உள்ளார். கோவா மாநிலத்தில் மாட்டி றைச்சிக்கு தடை கிடையாது.
பிஜேபி எப்படியாவது கேரளாவில் காலூன்ற வேண்டும் என்று தலைகீழ் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.கலவரம்,காலித் தனம், கொலைவெறி இதெல்லாம் நடந்துகொண் டிருக்கிறது.பிஜேபி சார்பாக நிறுத்தப்பட்டவேட் பாளர் நீங்கள் ஓட்டு போட்டு நான் வெற்றி பெற்றால் நல்ல மாட்டுக்கறியை அளிப்பேன் என்றுஓட்டுக்காகசொல்கிறார்.அவர்கள் ஓட்டுக்காக சொல்கிறார்கள். நாட்டுக்காக வும் பேசுவதில்லை, மாட்டுக்காகவும் பேசு வதில்லை. ஓட்டுக்காகத்தான் பேசுகிறார்கள் என்று சொல்லக்கூடிய அளவிலே நடந்துகொண் டிருக்கிறார்கள். இன்னும் தந்திரம் சூழ்ச்சி செய்கிறார்கள். வித்தைகள் காட்டுகிறார்கள். மோடி வித்தை என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். மூர் மார்க்கெட் பகுதியில் ரொம்ப நாளைக்கு முன்பு தாயத்தை எடுக்கிறேன் என்று கடைசிவரைக்கும் கீரிக்கும் பாம்புக்கும் சண்டை என்று போய்விடுவார்கள்.  அதுமாதிரி இன்று நடந்துகொண்டிருக்கிறது. ஆகவே, எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கவலையோட சிந்திக்க வேண்டிய செய்திகள் இருக்கின்றன. எல்லோரும் அவரவர் தற்காப்புக்கு இந்த முற்போக்குவாதிகள் தயாராக வேண்டும். இந்த தமிழ்நாட்டிலேயே பதம் பார்க்கிறான் என்றால், வெளியில் செய்வது எவ்வளவு? அது ஒரு நோய்போல் ஆரம்பித்தால் என்ன ஆகும் என்றால், இந்த நாட்டிலே அவர்கள் செய்த தவறையே நாமும் செய்வதுபோல் ஆகும். ஆகவே, பொறுப்புணர்ச்சி தேவை.
தமிழ்நாட்டில் இருக்கிற ஓர் அரசு, வெளிப்படையாகவே காலூன்ற முடியாமல் மிஸ்டு கால் கட்சியாக உள்ள பாஜகவில் ஒருத்தர் சொல்கிறார், பெயர் சொல்வது தகுதிக்கு குறைவு, நாங்கதான் ஆட்சி நடத்துகிறோம், எங்க ஆட்சிதான் என்றால், ஆட்சியில் இருப்பவர்களுக்கு, அதிமுக என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு ஒரு அவுன்சு சுயமரியாதை  இருந்தால், எப்படி எங்கள் ஆட்சி இருக்கும்போது நீ யார் நான் நடத்துகிறேன் என்று சொல்கிறாயே? என்று கேட்கவேண்டாமா? ஊர் இரண்டு பட்டபோது கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு, ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வை என்றார்கள். தமிழ்நாட்டையே பங்கு போட்டுக்கொண்டு, தன்மானத்தை இழந்துவிட்டு, சொந்தக்கட்சிக்காரரையே சிபிஅய்க்கு அனுப்பி தங்களைப் பாதுகாத்துக்கொள்ள நினைப்பவர்கள், யாருக்கும் எதையும் செய்வார்கள்.
நாடுதழுவிய அளவிலே இந்தப்பிரச்சாரத்தை செய்ய வேண்டும். இது முடிவல்ல தொடக்கம். தேவையானால் இந்த கருப்புச்சட்டைப்படை உயிர்த்தியாகம் செய்யவும் தயாராக இருக்கும். ஏனென்றால், மனிதன் நோய்வந்த சாகக்கூடாது. விபத்தினால் சாகக்கூடாது. கொள்கைக்காக செத்தால் அவர்கள் என்றைக்கும் செத்தவர்கள் அல்ல, வாழ்பவர்கள். இதை நினைவூட்டி நான் முடிக்கிறேன்.
இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

ஆளூர் ஷாநவாஸ்
விடுதலை சிறுத்கைள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கண்டன உரையில் குறிப்பிடும்போது,
அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் ஒரு தீவிரப்பரப்புரையாக திராவிடம் என்று சொல்வதற்கு இனி ஆள் இருக்க மாட்டார்கள், திராவிடம்தான் அந்த கருப்பொருள்தான் தமிழ்த்தேசிய கருப் பொருளுக்கு எதிர்ப்பைச் சேர்த்திருக் கிறது. தமிழ்நாடு தமிழ்பேசும் உணர் வோடு எழ முடியாமல் வீழ்ந்து போன தற்கு திராவிடம்தான் காரணம் என் றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்படிப் பேசிக்கொண்டிருந்தவர்க ளுக்கு ஒரு சரியான விடையாக இன் றைய சூழல் அமைந்திருக்கிறது. அப் படிப்பேசியவர்கள் என்ன சொன்னார் கள் என்றால்,  திராவிடம் என்று சொல்லி, கருநாடகாவை இணைத்துப் பேசுகிறீர்கள், கேரளத்தை இணைத்துப் பேசுகிறீர்கள், ஆந்திரத்தை இணைத்துப் பேசுகிறீர்கள், ஆனால் நீங்கள்தான் திரா விடம் என்று சொல்கிறீர்களே தவிர, அவர்கள் சொல்கிறார்களா? என்று கேட்டார்கள். இப்போது நாம் சொல் கிறோமோ இல்லையோ மலையாளிகள் சொல்கிறார்கள். நாம் சொல்லுகிறோமோ இல்லையோ ஆந்திராவில் சொல்லுகி றார்கள், நாம் சொல்லுகிறோமோ இல் லையோ கன்னடத்துக்காரர்கள் சொல் கிறார்கள் என்று சொல்லுகிற அளவுக்கு திராவிட கருத்தியல் இன்றைக்கு திரா விட நாடு என்ற வடிவம் பெறக்கூடிய அளவுக்கு எழுச்சி பெற்றிருக்கிறது. அதுவும் கேரள மண்ணிலிருந்து வந் திருக்கிறது அந்த குரல்.
இதுதான் பெரியார் நூறாண்டுகளுக்கு முன்னால்,  எந்த அடிப்படையில் நம்மை வரையறுத்தாரோ, எது உண்மையான வரையறை என்று நமக்கு அடையாளம் காட்டினாரோ, அது காலம் கடந்தும் நிற்கும் என்பது இன்றைய காலத்தில் நிரூபணமாகி இருக்கிறது.
இது பெரியார் மண், சமூக நீதிமண், எங்களுககென்று நூறாண்டு கால பாரம்பர்யம் உள்ளது. எப்போதோ எதிர்த்து வீழ்த்தியவர்கள் நாங்கள் என்று செய்யக் கூடிய நிலையை நாம் உருவாக்க வேண்டும்.
இன்றைக்கு நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற இந்த விடுதலை என்பது நம்முடைய முயற்சியால் கிடைத் ததல்ல.  அருமைத் தலைவர் தந்தை பெரியார் போன்ற நம் தலைவர்கள் போராடி வாங்கிக் கொடுத்த சுதந்திரம். போராடி வாங்கிக்கொடுத்த உரிமைகள். அதை நாம் மீண்டும் மீண்டும் காப் பாற்றுவதற்கான முயற்சி எடுக்க வேண் டும். புதிதாக விடுதலையை தேட வேண்டியதில்லை. புதிதாக புதய புதிய உரிமைகளுக்காகப் போராட வேண்டிய தில்லை.
பேரா.சுப.வீரபாண்டியன்
பன்முகத்துவத்தை அழித்துவிட்டு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே யொரு மதம் என்று பண்பாட்டு சர்வாதி காரத்தைத் திணிக்கிற முயற்சியில் மத் திய அரசு  இயங்கி வருகிறது. பன்முகத் துவத்தை நீங்கள் அனுமதிக்க மறுத் தால், அவரவர் மொழி, அவரவர் பண் பாடு, அவரவர் மதம் தனியாக போய் விட வேண்டும் என்று நீங்களே சொல் லிவிடுங்கள். எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வதாக சொன்னால்தான்  வேற்று மையில் ஒற்றுமையாக இருக்க முடி யும்.
1956இல் மொழிவாரி மாநிலம் பிரிந்தபோதும், 1963இல் திமுகழகமும் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு விட்டோம். அந்த கோரிக்கை இன்று கேரளாவிலிருந்து எழுகிறது என்று சொன்னால், மத்திய அரசு அவர்களை எழுப்ப வைக்கிறது. ஒவ்வொரு பகுதி களிலும் ஒவ்வொருவரையும் ஒடுக்கி மத்திய அரசு ஒரே முகமாக பார்க்க  விரும்புவதன் நோக்கம்தான் இந்த நிலைகள் எல்லாம். இதில் வெறும் சட்டத்திருத்தம் மட்டுமா என்றால், என்னவெல்லாம் செய்கிறார்கள் என்றால், வன்முறையின்மூலம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அய்.அய்.டி.யில் நடந்துள்ளது வன் முறையின் தொடக்கம்.
பல மாநில முதல்வர்கள் இதிலே மறுப்பு தெரிவித்துள்ளார்கள். தமிழ் நாட்டில் இன்னமும் படிக்கவில்லை என்கிறார். எட்டு நாள்கள் ஆகிவிட்ட பின்பும், ஓர் ஆணையை படிப்பதற்கு நேரமில்லை என்றால் மற்ற மாநிலத்தில் என்ன நினைப்பார்கள்? பாஜகவை நாட்டை விட்டு விரட்டவேண்டும் என் பதில் நம் யாருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்துத்துவ அமைப்புகள், மதவாத அமைப்புகள் ஒரு நாளும் காலூன்றக்கூடாது.
ஒருமுறை குடிஅரசு தடை செய்யப் பட்ட போது, புரட்சி என்ற இதழ் தொடங்கப்பட்டபோது பெரியார் சொன்னார், குடிஅரசு தடை போட்டால் புரட்சிதானே வரும் என்று கேட்டார். நீங்கள் ஜனநாயகத்தைத் தடை செய் தால், குடிஅரசு என்பது ஜனநாயகம்தான், ஜனநாயகத்தைத் தடைசெய்தால் புரட்சி தானே வரும் என்று தந்தை பெரியார் கேட்டார். அதை விரிவுபடுத்தி நாம் ஒருங்கிணைந்து போராடுவோம்
ஆவணப்பட இயக்குநர் அமுதன்
மாட்டுக்கறி தடை செய்கின்ற செய லால் இந்தியா முழுக்க மாட்டுக்கறி உண்ணும் போராட்டங்கள் துவங்கப் பட்டுள்ளன. மாட்டுக்கறியைத் தடை செய்வதன்மூலமாக அவர்கள் விவச £யத்தை அழிக்கிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மாட்டுக் கறி வியாபாரம் என்பது இலட்சக்கணக் கான மக்கள் நேரடியாகவும், மறைமுக மாகவும் ஈடுபட்டுள்ளனர். அதையே நம்பி வாழ்கின்றனர். இந்த தொழிலா ளர்களை ஏழைமக்களை ஒழிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கமாக இருக்கிறது. எல்லாக் காலக் கட்டத்திலும் நம் பொறுமையை, நமது சொரணையை, சுயமரியாதையை  சோதித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருங்கிணைப்பை தெரிந்தோ, தெரியா மலோ செய்து கொண்டிருக்கிறார்கள். திராவிடர் கழகத்தின் எத்தனையோ மாநாடுகளில் மாட்டுக்கறி விருந்து நடந்திருக்கிறது என்று நான் கேள்விப் பட்டிருக்கிறேன். எல்லா நிகழ்ச்சிகளி லும் அதைத் தொடர்ந்து செய்ய வேண் டும்.
அவர்கள் தொடர்ந்து வன்முறையை செய்துவருகிறார்கள். நாம் எங்கேனும் ஓர் மூலையில் எதிர்வினை ஆற்றினால், அதைப்பயன்படுத்திக் கொண்டு ஒடுக் குவதே அவர்கள் நோக்கமாக இருக்கி றது. நமது போராட்டம் ஜனநாயகப் போராட்டம். நமது போராட்டம் அறி வாயுத போராட்டம். நமக்கு பகுத்த றிவே ஆயுதம். அந்த அடிப்படையில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து போராட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம்
மோடியின் மூன்றாண்டு சாதனை களை வேதனைகளை அலசக்கூடிய ஒரு வாய்ப்பை திட்டமிட்டு தடுக்கின்ற முயற்சிதான் இந்த மாட்டிறைச்சித் தடை சட்டம். மாட்டிறைச்சித் தடை சட்டமா? மோடியின் மூன்றாண்டு ஆட் சியின் தோல்வியா? பிஜேபியின் சதி வலையில் சிக்காமல் மோடியாட்சியின் தோல்வியை அம்பலப்படுத்துவோம்.
நம்முடைய மாநில உரிமை, நம் முடைய உணவு உரிமை. இந்தியா என்பது பல மாநிலங்களில் பல மொழி களைப் பேசக்கூடிய மக்களின் ஒன்றி யம். நாம் என்ன சாப்பிடுவது என்பதை யார் தீர்மானிப்பது?  2007ஆம் ஆண்டில் மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என்று ஒரு தடையை நாடுமுழுவதும் மத்திய அரசு கொண்டுவந்தால் என்ன? என்று ஒரு நீதிமன்றம் சொன்னபோது, மத்திய அரசு அளித்த பதிலில், இது மாநிலங் களின் பட்டியலில் இருக்கிறது.  உணவு, கல்வி மாநிலங்களின் பட்டியலில் இருப்பது, கல்வியை பொதுப்பட்டிய லில் கொண்டு போய்விட்டார்கள். இப் போது உணவையும் பொதுப்பட்டியலில் கொண்டு போவோம் என்று சொன் னால், 2007இல் மாநிலப்பட்டியலில் உணவு இருப்பதாக கூறிய மத்திய அரசு, 2016இல் நாடுமுழுவதும் மாட் டிறைச்சிக்கு தடை கொண்டு வருவோம் என்று சொன்னால், இது நம் கூட் டாட்சிக்கோட்பாட்டை சிதைப்பது, மாநில உரிமைகளைப் பறிப்பதாகும். ராமன் கோயில் பிரச்சினையில் வாக்கு அரசியல் செய்த பாஜக மாட்டு அரசியல் மூலமாக வாக்கு அரசியல் செய்கிறது. நம் நாட்டிலிருந்து மாட்டிறைச்சி ஏற்று மதி செய்கின்ற நிறுவனங்கள் மூலமாக 65ஆயிரம் கோடி  ரூபாய் வருமானம் வருகிறது. உலகத்திலேயே முதலிடத் தில் மாட்டிறைச்சி ஏற்றுமதி இந்தியாவி லிருந்து செய்கின்ற நிறுவனங்கள் ஆண் டுக்கு இரண்டரை கோடி ரூபாய் பாஜக வுக்கு நன்கொடை கொடுத்திருக்கின்றன.
பேராசிரியர் ஜவாஹிருல்லா
பெரும்பான்மை கிடைத்துவிட்டது என்கிற காரணத்தால் மோடியின் அரசு ஹெட்கேவர், கோல்வால்கர் கருத்து களை திணிக்கின்ற திட்டத்தை செய்து வருகிறது. பரவலாக எதிர்ப்பு அலை வீசிக்கொண்டிருக்கிறது. மாட்டிறைச் சிக்குத் தடை போடுகின்ற மத்திய அர சின் செயலைக் கண்டித்துள்ள கேரள மாநில முதல்வர் அனைத்து முதல்வர்க ளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். கால்நடைகள் சந்தைகளை நடத்துவது என்பது மாநில உரிமைகள்,    எடப்பாடி அரசு மோடியின் பாஜக அரசின் எடு பிடி அரசாக இருக்கிறது. அய்.அய்.டி. யில் மாணவர்மீதான தாக்குதல் முதலும் கடைசியுமாக இருக்க வேண்டும். தாக் கப்பட்ட மாணவர் தாக்கப்பட்டதைவிட சமூக நீதி மண்ணில் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டது அதிர்ச்சியாக இருக்கிறது என்றார். பாஜகவுக்கு சங் பரிவாரங் களுக்கு பசுக்கிறுக்கு, பசுப் பைத்தியம் பிடித்திருக்கிறது. அதற்கு வைத்தியம் செய்ய வேண்டும். கவ் ரக்ஷாக்களுக்கு இந்தியா முழுவதிலும் வேலை இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் அதுவரை நாம் தொடர்ந்து போராட வேண்டும்.
காங்கிரஸ் கட்சி உ.பலராமன்
மாட்டைக்காண்பித்து மனிதர்களை எல்லாம் ஏமாற்றுகிறார்கள். ஒரு நீதிபதி சொல்கிறார், ஒரு பசுவில் 33 கோடி கடவுள் இருக்கிறதாம். ஒரு நீதிபதியே இப்படி பேசினால், நீதித்துறை எப்படி இருக்கும்? நீதிபதியை விமர்சனம் செய்யக்கூடாதாம். சாதகமாக தீர்ப்பு கொடுத்து கவர்னர் ஆகிவிடலாம். சாதகமாக தீர்ப்பு கொடுத்து டில்லியில் மந்திரி ஆகிவிடலாம். இராணுவத்தில் இருக்கின்றபோது இப்படி கிறுக்கு செய்கிறானே என்றால், அவன் மத்திய அமைச்சராகவே வந்து உட்காருகிறான். இதெல்லாம் நடக்கும்.
அவன் சொல்வது மாட்டைப்பற்றி மட்டும்தான். ஆனால், மனிதனையே தின்கிறவன், அவனுக்கு மாடு பெரிதா என்ன? மனிதக்கறியையே தின்பவன். மாடு அவனுக்கு பெரிதல்ல.
33 கோடி தேவர், 48ஆயிரம் ரிஷிகள், 12ஆயிரம் கந்தர்வர்கள் இருக்கிறார்கள் அப்போது கேட்டார்கள், ஓராளுக்கு ஒன்றேகால் கடவுளா என்று கேட்டார் பெரியார்.
தமிழகத்தில் அனைத்துக்கட்சிகளுக் கும் ஆலோசனை சொல்லி வழிநடத்து கின்ற பெரும் பொறுப்பு நம்முடைய ஆசிரியர் அவர்களைத் தவிர, வேறு யாருக்கும் கிடையாது.  எதற்கும் ஆசைப் படாமல், வழிநடத்துகின்ற ஒரு தலை மைக்கு தகுதி உள்ளவர் என்று பார்த் தால், தமிழகத்தில் இவர் மட்டும்தான்.
மாட்டுக்கறி வேண்டாம் என்று அவன் சொல்லவில்லை, மதம் மாறிய வனை இந்த நாட்டில் வேண்டாம் என்று சொல்கிறான். மனித இனத்துக்கு விரோதமாக நடந்துகொள்கின்ற ஒரு கொள்கையை உடைய இந்தக் கூட் டத்தை சார்ந்தவர்களுடைய ஆணி வேரை அறுக்கின்ற பெரும்பொறுப்பை தமிழகத்திலே ஆசிரியர் அவர்கள் எடுத்திருக்கிறார்கள். அவர் தலைமையிலே இது வெற்றி பெறும்.
கலந்துகொண்டோர்:
கழக வெளியுறவுச் செயலாளர் வீ. குமரேசன், மாநில மாணவரணி செய லாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சென்னை மண்டல செயலாளர் வி. பன்னீர்செல்வம், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க. நடராசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்  கு.செல்வம், ந.செல்ல துரை, திராவிட இயக்க தமிழர் பேரவை மாறன்.
வடசென்னை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (மாவட்ட தலைவர்),  தே.ஒளிவண்ணன் (மாவட்ட செயலாளர்), கி.இராமலிங்கம், கோ.தங்கமணி, தி.சே.கோபால், கு.ஜீவா, பொன்.மாடசாமி, முத்தமிழ்நகர் சி.வாசு, திருவொற்றியூர் சேகர், அம்பேத் கர் சிறுத்தைகள் எடிசன், புரசை சு.அன் புச்செல்வன், தளபதி பாண்டியன், மங் களபுரம் பாசுகர், சி.காமராஜ், சி.பாசு கர், கண்மணிதுரை, பழைய வண்ணை கோபி, செந்தமிழ் செகுவோரா, எம்.இராசேந்திரன், வா.மணிமாறன், நித் தியகுமார், பா.பாத்திபன்.
தென்சென்னை: இரா.வில்வநாதன் (மாவட்ட தலைவர்), செ.ர.பார்த்தசாரதி (மாவட்ட செயலாளர்), சி.செங்குட்டு வன், சா.தாமோதரன், கோ.மஞ்சநாதன், க.தமிழ்ச்செல்வன், ச.மகேந்திரன், மு. சண்முகப்பிரியன், க.வெற்றிவீரன், மு. ந.மதியழகன், டி.ஆர்.சேதுராமன், கோ. வீ.ராகவன், செஞ்சி ந.கதிரவன், வழக் குரைஞர் ந.விவேகானந்தன், மயிலை ச.சந்தோஷ், பி.சீனிவாசன், ஈழமுகிலன், தி.ச.கவுதமன், ந.இராமச்சந்திரன், அ.பாபு.
ஆவடி மாவட்டம்: பா.தென்னரசு (மாவட்ட தலைவர்), ச.சிவக்குமார் (மாவட்ட செயலாளர்), பாலமுரளி, கார்வேந்தன், பெரியார் மாணாக்கன், இளவரசு, இரா.கோபால், கலைமணி, கலையரசன், கார்த்திக், ராஜேஷ் கண்ணா, உடுமலை வடிவேலு, வேலு, அ.வெ.நடராசன், இரண்யன், தமிழ் சாக்ரடீஸ், வேலன்.
தாம்பரம் மாவட்டம்: ப.முத்தையன் (மாவட்ட தலைவர்), கோ.நாத்திகன் (மாவட்ட செயலாளர்), ஆர்.டி.வீரபத்தி ரன், கெ.விஜயகுமார், தங்க ரமேஷ் குமார், சு.மோகன்ராஜ், தொழிலாளரசி நாகரத்தினம், இராசு, பழனிபாலு, மா. குணசேகரன் பி.சி.ஜெயராமன். ஜெ. குமார், பா.சு.ஓவியசெல்வன், கு.சோம சுந்தரம், சவுரியப்பன், தே.சுரேஷ், கணேச மூர்த்தி, பொய்யாமொழி,பொழிசை கண்ணன், ராமேஸ்வரம் சிகாமணி, இ.ப.இனநலம்
கழக மகளிரணி: இன்பக்கனி, சி.வெற்றிச்செல்வி, இறைவி, பூவை.செல்வி, பசும்பொன் செந்தில்குமாரி, தங்க தனலட்சுமி, பா. மணியம்மை, வளர்மதி, சி.ஜெயந்தி, மரகதமணி, ச. கற்பகம், சீர்த்தி, வி.தங்க மணி, வி.யாழ்ஒளி, சி.அறிவுமதி, அனுசுயா, வா. விமலா, வா.நிலா, சண்முக வர்ஷனி, லலிதா, எழிலரசி, மோகனப்பிரியா, பா.காயத்ரி, நதியா, தமிழரசி, தொண் டறம், நூர்ஜகான், கலைமதி
கும்மிடிப்பூண்டி: பொன்னேரி நாக ராசன், க.ச.க.இரணியன், பொன்னேரி அருள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாட்டுக்கறி உணவைத் தடை செய்யும் மத்திய பா.ஜ.க. மதவாத அரசைக் கண்டித்து ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (1.6.2017)


--------------------
பசு, காளை, எருமை, ஒட்டகங்களை உணவுக்காகப் பயன்படுத்தக்கூடாது என்னும் மத்திய பா.ஜ.க. அரசின் மனித உரிமை விரோத அரசமைப்புச் சட்ட விரோத சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள்
(1)          வாழ்க! வாழ்க!  வாழ்கவே!
தந்தை பெரியார் வாழ்கவே!

(2)          வெல்க வெல்க வெல்கவே!
திராவிடர் கழகம் வெல்கவே!

(4)          போராட்டம் போராட்டம்!
மாட்டிறைச்சியை உண்ணக் கூடாது என்று
தடை செய்யும்
மதவாத மோடி அரசை
கண்டித்து
ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!

(5)          உண்ணுவதும் எண்ணுவதும்
எங்கள் உரிமை
பிஜேபி அரசே
பார்ப்பன அரசே! தலையிடாதே,
உண்ணும் உரிமையிலும்,
எண்ணும் உரிமையிலும்
தலையிடாதே - தலையிடாதே!

(6)          திணிக்காதே திணிக்காதே!
பார்ப்பனக் கலாச்சாரத்தை
திணிக்காதே திணிக்காதே!

(6)          உழைப்பாளிகளின் உன்னத உணவு
மாட்டிறைச்சியே, மாட்டிறைச்சியே!
மதவாத அரசே, மனுதர்ம அரசே!
வயிற்றில் அடிக்காதே, வயிற்றில் அடிக்காதே
ஏழைப்பாழைகளின்
வயிற்றில் அடிக்காதே வயிற்றில் அடிக்காதே!
உழைப்பாளிகளின்
வயிற்றில் அடிக்காதே! வயிற்றில் அடிக்காதே!

(7)          ஊட்டச்சத்து உணவு மாட்டிறைச்சியே!
மலிவான உணவு
மாட்டிறைச்சியே, மாட்டிறைச்சியே!
தடை போடாதே, தடை போடாதே,
மாட்டிறைச்சிக்குத் தடைபோடாதே!

(8)          போராட்டம், போராட்டம்
ஆரியர் திராவிடர் போராட்டம்

(9)          போராட்டம் போராட்டம்
கலாச்சாரப் போராட்டம்
மூண்டுவிட்டது, மூண்டுவிட்டது
ஆரியர் திராவிடர் போராட்டம்
தயாராவீர், தயாராவீர்
திராவிடர்களே
தயாராவீர், தயாராவீர்!

(10)        மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கிறான்,
நாட்டு மக்களை உண்ணக் கூடாது
உண்ணக் கூடாதென
சபதம் செய்கிறான்!
ஒழித்துக்கட்டு, ஒழித்துக்கட்டு
பி.ஜே.பி.யை ஒழித்துக்கட்டு!
ஆர்.எஸ்.எஸ்.அய் ஒழித்துக்கட்டு
ஒழித்துக்கட்டு ஒழித்துக்கட்டு
இந்து முன்னணியை ஒழித்துக்கட்டு
சங்பரிவாரை ஒழித்துக்கட்டு!

(11)        தாக்குகிறான் தாக்குகிறான்
அய்.அய்.டி.யிலே தாக்குகிறான் தாக்குகிறான்
ஆர்.எஸ்.எஸ்.காரன் தாக்குகிறான்
மாட்டுக்கறி சாப்பிட்டால்
தாக்குகிறான் தாக்குகிறான்!
ஒன்றுபடுவோம், ஒன்றுபடுவோம்
முறியடிப்போம், முறியடிப்போம்!

(12)        திணிக்காதே, திணிக்காதே
மக்களின் உணவுப் பிரச்சினையில்
மதவாதத்தை
திணிக்காதே, திணிக்காதே!

(13)        போராடுவோம், போராடுவோம்
வெற்றி கிட்டும் வரை
போராடுவோம், போராடுவோம்
வெற்றி பெறுவோம்
வெற்றி பெறுவோம்!

(14)        வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவே!
அண்ணல் அம்பேத்கர் வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவே!
அன்னை மணியம்மையார் வாழ்கவே!

(15)        வெல்லட்டும் வெல்லட்டும்
ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு
வெல்லட்டும் வெல்லட்டும்!

(16)        தமிழர் தலைவர் தலைமையிலே
ஒன்றுபடுவோம் வென்றிடுவோம்!
 -விடுதலை,2.6.17
-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக