புதன், 14 ஜூன், 2017

வடசென்னையில் கழகப் பிரச்சாரம் தீவிரம் ஜூலை முதல் 10 நாள்களில் 6 பிரச்சாரக் கூட்டங்கள் வடசென்னை கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

சென்னை, ஜூன் 14- வடசென்னை மாவட்டத்தில் ஜூலை முதல் 10 நாள்களில் ஆறு பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவது என் றும், தலைமைக் கழகச் சொற் பொழிவாளர் இராம.அன்பழ கன் அவர்களை அழைத்து நடத்துவது என்றும் தீர்மானிக் கப்பட்டது

வடசென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட் டம், 11.6.2017 காலை 11 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.

வடசென்னை மாவட்ட மகளிர் பாசறைத் தோழர்

பா.நதியா கடவுள் மறுப்புக் கூறி னார். வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர்

சு.குமாரதேவன் தலைமை வகித் தார். அமைப்பாளர் பெரம்பூர் சி.இரகுபதி வரவேற்புரையாற் றினார். வடசென்னை மாவட்ட மகளிரணிச் செயலாளர் பொறி யாளர் ச.இ.இன்பக்கனி, பொதுக் குழு உறுப்பினர்கள் தி.வே.சு. திருவள்ளுவன், வெ.மு.மோகன், துணைச் செயலாளர் கி.இராம லிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை மண்டல செயலா ளர் வி.பன்னீர்செல்வம், மாநில தொழிலாளரணிச் செயலாளர் பெ.செல்வராசு, மாவட்டத் தலைவர் வழக்குரைஞர்

சு.குமாரதேவன், மாவட்டச் செயலாளர் தே.ஒளிவண்ணன் மற்றும் கழகப் பொறுப்பாளர் களும், தோழர்களும், மாவட் டக் கழகத்தின் ஆக்கப்பணிகள் குறித்து விளக்கிப் பேசினர்.

தொடர்ந்து, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் கருத்துரை வழங்கினார்.

“மத்திய பா.ஜ.க. ஆட்சி யின் இந்துத்துவா செயல் திட் டங்களை முறியடிப்பதற்கு கழகப் பிரச்சாரம் வேகமாக நடைபெற வேண்டும். மாட்டி றைச்சி உணவைப்  பிரச்சினை யாக்குகிறார்கள். மக்களின் அடிப்படை உரிமைகளிலும் பா.ஜ.க அரசு தலையிடுகிறது.

வடசென்னை பகுதி தொழி லாளர்களும், நடுத்தர, சாதா ரண மக்கள் மிகுந்து வாழ்கின்ற பகுதியாகும். இந்தப் பிரச்சினை குறித்து துண்ட றிக்கை விநியோகம் செய்து விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும். தெருமுனைப் பிரச் சாரக் கூட்டங்கள் நடத்தப் படும்பொழுதும் துண்டறிக்கை கள் பொதுமக்களிடம் வழங்கப் பட வேண்டும்.

“விடுதலை”க்கு புதிய சந்தாக்களை சேர்ப்பதிலும், பழைய சந்தாதாரர்களை அணு கிப் புதுப்பிக்கும் பணிகளிலும் தோழர்கள் ஈடுபட வேண்டும். சுவரெழுத்து பிரச்சார பணிக ளும் நடத்திட வேண்டும்.

மாவட்டத்தின் பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரக் கூட் டங்கள் நடத்திட வேண்டும். எளிய முறையில் நடத்தப்படும் அவ்விதத் தொடர் கூட்டங்கள் மக்களிடம் நமது கருத்துக் களைக் கொண்டு சேர்ப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக அமை யும்“ என்று தமது உரையில் குறிப்பிட்டார்.

அவ்வாறு 17.6.2017 அன்று மூலக்கடையில் நீட் எதிர்ப்புப் பிரச்சாரக் கூட்டம் நடைபெறு மென தோழர்கள் அறிவித்தனர். மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட கழகப் பொறுப்பா ளர்கள் ஒப்புக் கொண்டபடி கொருக்குப்பேட்டை (1.7.2017), வியாசர்பாடி - பக்த வத்சலம் காலனி (2.7.2017), பெரம்பூர் (3.7.2017), திருவொற் றியூர் (8.7.2017), செம்பியம் (9.7.2017), வண்ணை (10.7.2017) ஆகிய பகுதிகளில் தலைமைக் கழகப் பேச்சாளர் இராம. அன்பழகன் அவர்களைக் கொண்டு தெருமுனைப் பிரச் சாரக் கூட்டங்கள் நடத்தப்படு வதென முடிவு செய்யப்பட்டது.

மாவட்ட மற்றும் மாவட் டக் கழக இளைஞரணிக்கு புதிய பொறுப்பாளர்களைக் கழகத் துணைத்தலைவர் கவி ஞர் கலி.பூங்குன்றன் அறிவித் தார்.

வடசென்னை மாவட்டம்

மாவட்டத் துணைச் செய லாளர்கள்: கி.இராமலிங்கம், சி.பாஸ்கர், புரசைப் பகுதி தலைவர்: சு.அன்புச்செல்வன், செயலாளர்: க.பாலமுருகன், பெரம்பூர் பகுதி செயலாளர்: மங்களபுரம் ஆ.பாஸ்கர்

மாவட்ட இளைஞரணி

மாவட்ட இளைஞரணித் தலைவர்: தளபதி பாண்டியன், செயலாளர்: வி.ஜனார்த்தனன், அமைப்பாளர்: வ.தமிழ்ச்செல் வன், திருவொற்றியூர் பகுதி அமைப்பாளர்: சே.தமிழ்முரசு ஆகியோர் அந்தந்த அமைப்புக ளுக்கு புதிய பொறுப்பாளர் களாக அறிவிக்கப்பட்டனர்.

கண்ணதாசன் நகர் தலைவர் கு.ஜீவா, வியாசர்பாடி செயலா ளர் எம்.மும்மூர்த்தி, செம்பியம் செயலாளர் டி.ஜி.அரசு, புது வண்ணை தலைவர் ஏ.மணி வண்ணன், வண்ணை அமைப் பாளர் பெரியார் அசோக், திருவொற்றியூர் அமைப்பாளர் துரை.இராவணன், இராயபுரம் செ.நாகேந்திரன், திருவொற் றியூர், தி.செ.கணேசன், அயன் புரம் வி.ஜனார்த்தனன், த.சே.பறைமுரசு, சி.காமராஜ், வட சென்னை இளைஞரணித் தலை வர் புரசை சு.அன்புச்செல்வன், துணைத் தலைவர் மங்களபுரம் ஆ.பாஸ்கர், மாநில மாணவர ணித் துணைச்செயலாளர் நா. பார்த்திபன், ச.சிற்றரசு, வ.கலைச்செல்வன், கா.காரல் மார்க்ஸ், பெரியார் சுயமரி யாதை திருமண நிலைய இயக் குநர் மு.பசும்பொன், மண்டல மாணவரணிச் செயலாளர் பா.மணியம்மை, வடசென்னை மாவட்ட மகளிர் பாசறை செய லாளர் த.மரகதமணி, பொறியா ளர் இ.ப.சீர்த்தி, ஜீவாபாக்கி யவதி, நிழற்படக் கலைஞர் கலைமதி  மற்றும் கழகத் தோழர் கள் பலர் கலந்து கொண்டனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1: திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், சிறந்த நாடாளுமன்றவாதியு மான இரா.செழியன், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக நிதி அலுவலர் ப.முத்துக்கிருட் டிணன், “விடுதலை”க் குடும் பத்தின் பாசமிகுத் தோழரான “விடுதலை” இராதா ஆகியோ ரின் மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2: வடசென்னை மாவட்டத்தின் அனைத்துக் கிளைக் கழகங்கள்- பகுதிக் கழகங்களின் அமைப்புக் கூட் டங்களை நடத்தி கிளைக்கழக செயல்பாடுகளை ஊக்குவிப்புச் செய்வதெனத் தீர்மானிக்கப்படு கிறது.

தீர்மானம் 3: இனவுரிமை காப்பு ஏடான விடுதலை நாளேட்டிற்கு புதிய சந்தா சேர்ப்புப் பணியிலும், பழைய சந்தாக்களைப் புதுப்பித்தும் ஆவன செய்யுமாறு மாவட்டத் தின் அனைத்துத் தோழர்களை யும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 4: தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களை தொடர் கூட்டங்களாக நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கூட்டங்கள் அனைத்தும் சிறப் புடன் நடைபெற அனைத்துத் தோழர்களும், ஒருங்கிணைப் புடன் செயலாற்றிட வேண்டு மெனவும், உரிய ஏற்பாடுகளை முறைப்படி செய்திட வேண்டு மெனவும் கேட்டுக் கொள்ளப் படுகிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறை வாக வடசென்னை மாவட்ட செயலாளர் தே.ஒளிவண்ணன் நன்றி கூறினார்.

-விடுதலை,14.6.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக