செவ்வாய், 6 ஜூன், 2017

தென் சென்னை மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

தெருமுனை கூட்டங்கள் பெருமளவில் நடத்தப்படும் தென் சென்னை மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
சென்னை, ஜூன் 5- 3.6.2017 அன்று பிற்பகல் 6 மணியளவில் திராவிடர் கழக தலைமை நிலைய கட்டிட அறையில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் அவர்கள் தலைமையிலும், கழக பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், மாவட்டத் தலை வர் இரா.வில்வநாதன்  மற்றும் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்த சாரதி ஆகியோர் முன்னிலையி லும் தென் சென்னை மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட துணைச் செயலா ளர் கோ.வீ.ராகவன் கடவுள் மறுப்பு கூறினார். இளைஞர ணியை வலுவாக கட்டமைப் பது குறித்து கலந்துரையாடப் பட்டது. மாவட்ட துணைத் தலைவர் சி.செங்குட்டுவன், ச.மகேந்திரன், செ.தமிழ்ச் சாக்ரடீசு, இரா.பிரபாகரன், மு.ஈழ முகிலன், மு.திருமலை, ந.மணித்துரை மற்றும் த.அண்ணா துரை ஆகியோர் கருத்துரை வழங்கினார்.

தென் சென்னை மாவட்ட இளைஞரணி தலைவராக செ.தமிழ்ச்சாக்ரடீசு அவர்களை கழக துணைத் தலைவர் கவி ஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் அறிவித்தார். ஏற்கெனவே அறி விக்கப்பட்டு செயல்பட்டுவந்த மாவட்ட இளைஞரணி  செயலாளர் ச.மகேந்திரன், மாவட்ட இளைஞரணி துணைச்செயலா ளர் இரா.பிரபாகரன், மாவட்ட இளைஞரணி துணைத் தலை வர், மு.ஈழமுகிலன் (முரளி), ஆகியோர் தொடர்ந்து செயல் படுவர்.
இளைஞரணியை புதுப்பிப் பதுடன் மேலும் பதிய கிளைக் கழகங்களை அமைப்பதென வும், தெருமுனைக் கூட்டங் களை நடத்துவதெனவும் தீர் மானிக்கப்பட்டது.

மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன்,  தரமணி கோ.மஞ்சநாதன், ஈ.குமார், தே.ஒளிவண்ணன், பூ.சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ந.மணித்துரை கலந்துரை யாடலின் முடிவில் நன்றி கூறினார்.

-விடுதலை,4.6.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக