சென்னை, ஜூன் 19 விடுதலை நாளிதழின் செய்தியாளராக நீண்டகாலம் பணியாற்றியவர் எஸ்.ஆர்.ராதா. அவர் மறை வையொட்டி படத்திறப்பு நினை வேந்தல் நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் எம்.ஆர். ராதா மன்றத்தில் நேற்று (18.6.2017) மாலை நடைபெற்றது.
விடுதலை நிர்வாகியாக பணியாற்றிய ஆளவந்தார் மரு மகனும், மருத்துவர் இளமதி இணையருமாகிய விடுதலை ராதா திராவிடர் கழகத்தில் தம்மை ஒப்படைத்துக்கொண்டு நீண்ட காலம் பணியாற்றிவந்த வர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையேற்று கட்டுப்பாடுடனும் கடமை தவறாமலும் கழகப்பணிகளில் மட்டுமல்லாமல், தொடக்கத் தில் உண்மை இதழ் பணியி லும், தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலை நாளிதழின் செய்தியாளராகவும் பணியாற்றிவந்தவர் ஆவார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஒப்படைக்கின்ற பணிகளையெல்லாம் செவ் வனே செய்து முடித்துவந்தவர் விடுதலை ராதா. உடல்நிலை கருதி சிறிது காலமாக ஓய்வில் இருந்த விடுதலை ராதா 4.6.2017 அன்று மறைந்தார்.
அவர் மறைவின்போது திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத் தில் (சிங்கப்பூர்) இருந்தார். 16.6.2017 அன்றிரவு சென்னை திரும்பிய நிலையில் 18.6.2017 மாலை விடுதலை ராதா படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டார்.
உரையாற்றியோர்
கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்க உரையாற்றினார். பத்திரிகையா ளர் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் ரமேஷ், மூத்த பத்தி ரிகையாளர் ஜவகர், பத்திரி கையாளர் குடியிருப்போர் நலச் சங்க செயலாளர் குணசேகரன், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் இராசேந்திரன், விடு தலை நிர்வாகியாக பணியாற் றிய ஆளவந்தாரின் பெயரன் உசுப்பூர் புகழேந்தி ஆகியோர் விடுதலை ராதாவின் பணிகள், அணுகுமுறைகள், தொண்டறப் பணிகள் குறித்து பல்வேறு தகவல்களை குறிப்பிட்டு உரை யாற்றினார்கள்.
விடுதலை ராதாவின் படத்தை திறந்துவைத்து தமி ழர் தலைவர் ஆசிரியர் கி.வீர மணி அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையில் குறிப்பி டும்போது, தொண்டறத்துக்கு மறு பெயர் விடுதலை ராதா என்று குறிப்பிட்டார். பெரியார் திடலில் உள்ள ஆளவந்தார் கூடம் இனி ஆளவந்தார் - விடுதலை ராதா கூடம் என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்தார்.
கலந்துகொண்டவர்கள்
கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இரா.குணசேகரன், காரைக்குடி சாமி.திராவிடமணி, க.பார் வதி, வழக்குரைஞரணித் தலை வர் த.வீரசேகரன், மோகனா அம்மையார், பேராசிரியர் மங் களமுருகேசன், புலவர் பா. வீரமணி, கோ.அரங்கசாமி, மேனாள் நீதிபதி பரஞ்சோதி, சுதா அன்புராஜ், வடமாவட் டங்களின் அமைப்புச் செயலா ளர் வெ.ஞானசேகரன், சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர் செல்வம், பொதுக்குழு உறுப் பினர்கள் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன், சைதை எம்.பி. பாலு, மயிலாடுதுறை க.கிருஷ் ணமூர்த்தி, சிதம்பரம் கலிய பெருமாள், ப.சேரன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், வட சென்னை மாவட்ட மகளிரணித் தலைவர் கு.தங்கமணி, வட சென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் பொறியாளர் இன் பக்கனி, மருத்துவர் மீனாம் பாள், சி.வெற்றிசெல்வி, பெரியார் களம் இறைவி, தங்க.தனலட்சுமி, பண்பொளி, கண் ணப்பன், பெரியார் சுயமரி யாதை திருமண நிலைய இயக் குநர் பசும்பொன்செந்தில் குமாரி, சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா. மணியம்மை, பூவை செல்வி, சி.சித்தார்த்தன், க.அருள்மதி குணசேகரன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நட ராசன், அச்சகப்பிரிவு மேலாளர் க.சரவணன், விழிகள் வேணு கோபால், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், வடசென்னை மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், செயலாளர் தே. ஒளிவண்ணன், வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால், சூளைமேடு கோ.வீ.ராகவன், மயிலை டி.ஆர்.சேதுராமன், புரசை அன்புச்செல்வன், கலையரசன், கலைமணி, சுரேஷ், செம்பியம் கி.இராமலிங்கம், தரமணி மஞ்சநாதன், அரும்பாக்கம் சா.தாமோ தரன், தமிழ் செல்வன், தணிக்கையாளர் இராமச்சந்தி ரன், மருத்துவர் க.வீரமுத்து, செஞ்சி ந.கதிரவன், தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ.நாத் திகன், விடுதலை நகர் செயரா மன், நகர செயலாளர் சு. மோகன்ராஜ், மா.குணசேகரன், ஊரப்பாக்கம் பொய்யாமொழி, பெரியார் செல்வன், வழக்குரை ஞர் சென்னியப்பன், பெரியார் மாணாக்கன், பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் கி.சத்திய நாராயணன், ஆவடி முத்து கிருஷ்ணன், ஆ.சீ.அருண கிரி, அருணாசலம், ஆவடி மாவட்ட செயலாளர் அம்பத் தூர் சிவக்குமார், அமைப்பாளர் உடுமலை வடிவேல், திருவொற் றியூர் கணேசன், சுமதி, வெண் ணிலா, தாம்பரம் மு.மணிமா றன், இசையின்பன், இ.ப.இன நலம், இ. ப.சீர்த்தி, தொண்டறம், கலைமதி, திலகவதி சென் னியப்பன், விடுதலை புகைப் படக் கலைஞர் பா.சிவகுமார், ச.பாஸ்கர், விஜயலட்சுமி பாஸ்கர், ப.ஆனந்தன், ரேவதி ஆனந் தன், பெரியார் பிஞ்சுகள் ஆ.பிரியவர்சினி, ஆ.ஆதவன், பா. முகிலன், பா.கண்மணி, செ.பகுத்தறிவு, செ.அன்புவீர மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பத்திரிகையாளர்கள்
பத்திரிகையாளர் குடியிருப் பில் வசிப்பவர்கள் தங்கள் பாதுகாவலராக திகழ்ந்த ராதா மறைவுக்கு நினைவேந்தலில் பலரும் தங்கள் குடும்பத்தி னருடன் மரியாதை செலுத்த பெருந்திரளாக கலந்துகொண் டனர்.
மூத்த பத்திரிகையாளர்கள் மாலைச்சுடர் சுப்பிரமணியம், மக்கள் குரல் குணசேகரன், இளஞ்செழியன், தினமணி ராயப்பன், எஸ்.லோகநாதன், இந்தியன் எக்ஸ்பிரஸ் முரளி, ரமேஷ், ராஜேந்திரன், சுமதி சுப்பிரமணியம், சாவித்திரி குணசேகரன், மு.தருமராசன், பிரஸ்கிளப் ஜேக்கப், பாரதி தமிழன், பிடிஅய் சந்திரசேகரன், ஓய்வுபெற்ற காவல்துறை ஆய் வாளர் மணிபாபு, அச்சரப் பாக்கம் பார்த்தசாரதி, பா. ஞானமலை, பா.அறிவரசன், சென்னை கொட்டிவாக்கம் பத்திரிகையாளர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் பொறுப் பாளர்கள் சரவணன், முருகன், முரளீதரன் உள்பட ஊடகவி யலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சுயமரியாதைச் சுடரொளி 'விடுதலை' ராதா படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். உடன்: மருத்துவர் இளமதி ராதா, துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்,
முன்னாள் துணைவேந்தர் இராஜேந்திரன், பத்திரிக்கையாளர்கள் ஜவகர், ரமேஷ், குணசேகரன் மற்றும் பார்த்தசாரதி, கனிமொழி உள்ளனர். (சென்னை பெரியார் திடல், 18.6.2017)
-விடுதலை,19.6.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக