திங்கள், 5 ஜூன், 2017

திருச்சி - பெண்ணுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் 36 தீர்மானங்கள்


-

*           சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு
*           ஜாதி ஒழிப்பு இணையரின் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட சதவீத இடஒதுக்கீடு
*           முழு மது விலக்கில் பெண்களின் முழுப் பங்கு
*           ஜாதி ஆணவக் கொலைகள் தடுக்கப்பட்டே ஆக வேண்டும்
நீதித் துறையிலும் சமூக நீதி அடிப்படையில்

பெண்களுக்கு வாய்ப்புகள் தேவை! தேவை!!

தற்காப்புக்கலை, துப்பாக்கி சுடுதல் பயிற்சிகளும் முக்கியம்!

திருச்சி - பெண்ணுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் 36 தீர்மானங்கள்



திருச்சி, மே 28 சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு, நீதித்துறையிலும் பெண்களுக்கான வாய்ப்பு, பாலியல் சமத்துவம், பெண்களுக்குத் தற்காப்புக் கலைப் பயிற்சிகள், ஆணவக் கொலைகள் ஒழிப்பு உள்ளிட்ட அரிய தீர்மானங்கள் திருச்சியில் நேற்று திராவிடர் கழக மகளிர் அணி, மகளிர்ப் பாசறை சார்பில் நடைபெற்ற பெண்ணுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
பெண்ணுரிமைப் பாதுகாப்பு மாநில மாநாடு திருச்சி மாநகரில் திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி அவர்கள் தலைமையில் 27.5.2017 அன்று நடைபெற்றது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் 1:
திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை தோழர்கள் தாங்களும் தாலி அணியக் கூடாது. தங்கள் குடும்பத் திருமணத்திலும் தாலி அணிவிப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.
தீர்மானம் 2:
ஈழத்தில் அரங்கேற்றப்பட்ட பாலியல் வன்கொடுமை களுக்கும், குற்றங்களுக்கும் பொது விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
தீர்மானம் 3:
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வழி செய்ததுபோல் செந்துறை கீழ மாளிகை அடுத்த சிறுகடம்பூர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நந்தினியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொடூரமான முறையில் படுகொலை செய்த கொடிய வர்களுக்கும் கடும் தண்டணை வழங்க ஆவன செய்ய வேண்டும். முக்கிய குற்றவாளிகள் தப்பித்துவிடாமல் உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஜாதி ஆணவக் கொலைகள் கடுமையாகத் தடுக்கப்பட வேண் டும். தீர்ப்புகள் விரைந்து கொடுக்கப்படவும் வேண்டும்.
தீர்மானம் 4:
தனியார் நிறுவனங்களிலும், அமைப்புசாரா நிறுவனங் களிலும் பணிபுரியும் மகளிருக்கு ஊதிய பாதுகாப்புடன் கூடிய பேறுகால விடுமுறை வழங்க அரசு ஆவன செய்ய வேண்டும்.
தீர்மானம் 5:
சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண் களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டம் மேலும் காலதாமதம் செய்யப்படாமல் எதிர்வரும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு நிறைவேற்றும் பொழுது அதில் உள் ஒதுக்கீடு மிகவும் அவசியம்.
தீர்மானம் 6:
முழு மதுவிலக்கினைச் செயல்படுத்த பெண்கள் முழு முயற்சியுடன் செயல்படுதல் வேண்டும்.
தீர்மானம் 7:
பெண்கள் படிக்க விரும்பும் காலகட்டம் வரை திருமணத்தைப் தள்ளிப்போட வேண்டும். மணஉரிமை அவர்தம் தனி உரிமை; இதில் கட்டாயமோ நிர்ப்பந்தமோ கூடாது.  பெண்களின் விருப்பத்தை அறியாமல் திருமணம் செய்து வைக்கும் நிர்ப்பந்தம் கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டும்.
தீர்மானம் 8:
அனைத்துப் பள்ளிகளிலும் முக்கியமாக பெண் குழந்தைகளுக்கு நாள்தோறும் ஒரு வகுப்பு (குறைந்தது ஒரு மணிநேரமாவது) தற்காப்புக் கலைகளை பாடத்திட்டத்தில் சேர்த்து கற்றுத்தருதல் அவசியம். துப்பாக்கிச் சுடும் பயிற்சியும் இக்காலகட்டத்தில் தேவையே!
தீர்மானம் 9:
பெண்களின் பெருமையை உயர்த்தும் வகையிலும், ஆணுக்கு நிகரானவர் பெண் என்ற கருத்து உறுதிப்படும் வகையிலும் பாடத்திட்டங்கள் அமைய வேண்டும்.
தீர்மானம் 10:
கீதையைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற தனிநபர் மசோதா போர்வையில் செய்யப்படும் முயற்சி தோற்கடிக்கப்பட வேண்டும்.
தீர்மானம் 11:
பெண்களைக் கொச்சைப்படுத்தும் பழமொழிகள், சாத்திரங்கள், மதநூல்கள் தடைசெய்யப்பட வேண்டும். நடைமுறையிலிருந்து அகற்றப்பட வேண்டும்.
தீர்மானம் 12:
சின்னத்திரை, பெரியதிரை, புதினங்களில் பெண்களை முதன்மைப் பாத்திரம் வகிக்கும் வகையில் சித்தரிக்கப்பட வேண்டும். தற்போதுள்ள வில்லிகளாகச் சித்தரிக்கும், அவமானம் ஒழிக்கப்பட வேண்டும்.
தீர்மானம் 13:
சமவேலைக்குச் சம ஊதியம் என்ற வகையில் ஆண் பெண் ஊதிய விகிதத்தில் வேறுபாடு கூடாது.
தீர்மானம் 14:
பாலின சமத்துவம் என்பது மனித உரிமை என்று அய்.நா. அறிவித்திருப்பதை இந்தியா முன்னெடுத்து உடனடியாக செயல்படுத்திட வேண்டும்.
தீர்மானம் 15:
‘குழந்தைக்கு முதல் ஆசிரியர் தாய்’ என்பதால், எல்லா வகையான மூடநம்பிக்கைகளிலிருந்தும் பெண்கள் முற்றிலும் விலகி நிற்க வேண்டும்.
தீர்மானம் 16:
பெயர், உடை ஆகியவற்றில் ஆண் பெண் வேறுபடு தெரியும் வகையில் அமைந்திடக் கூடாது: ஆணா, பெண்ணா என்பது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை (Personal)  உரிமையைச் சார்ந்ததேயாகும்.
தீர்மானம் 17:
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆண்டுக்கு 12 சதவீதம் அதிகரித்து வருவது வெட்கக் கேடாகும். நகமும், பல்லும் உள்ள சட்டங்கள் மூலம் இவை தடுக்கப்பட வேண்டும்; இதுபோன்ற குற்றங்களில் விசாரணை அதிகாரிகளாகப் பெண்களே நியமிக்கப்பட வேண்டும்.
தீர்மானம் 18:
சமையல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக்கப்பட வேண்டும்.
தீர்மானம் 19:
ஆண்டுக்கு ஒருமுறை பெண்கள் முழு உடற் பரிசோதனையைக் கண்டிப்பாகச் செய்துகொள்ளுதல் அவசியம். வயதானவர்கள் ஆண்டுக்கு இருமுறை செய்துகொள்ளல் விரும்பத்தக்கது.
தீர்மானம் 20:
மதவாத அரசியல், மதவாத ஆட்சி அதிகாரம் ஆபத்தானதால் இவைகுறித்து ஏற்படுத்தும் விழிப்புணர்வில் பெண்கள் முக்கிய பாத்திரம் வகிக்க வேண்டும். திண்ணைப் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம் செய்தல் அவசியம்!
தீர்மானம் 21:
சுயமரியாதைத் திருமணங்கள் மற்றும் சமூக நிகழ்ச்சிகளுக்குத் தலைமைப் பாத்திரம் பெண்களுக்கு வழங்கப்படுதல் வேண்டும். அதிலும் விதவைகள் என்ற கூறப்படுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுதல் மேலும் சிறப்பானதாக அமையும்.
தீர்மானம் 22:
குழந்தைகளுக்கு முன்னொட்டாக (Initial) தாய், தந்தை ஆகியோரின் முதல் எழுத்து இணைக்கப்படுதல் அவசியம். (இரண்டு இனிஷியல்கள்)
தீர்மானம் 23:
குழந்தைகளுக்குச் சூட்டப்படும் பெயர்கள் மத சம்பந்தப்பட்டதாகவோ, அயல்மொழிக் கலப்பாகவோ இல்லாமல் பார்த்துக்கொள்வதில் பெண்கள் கவனம் செலுத்துவது முக்கியமாகும்.
தீர்மானம் 24:
இரவுப் பணிகளில் ஈடுபடும் பெண்களுக்குப் போதிய பாதுகாப்பும், வாகன வசதியும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
தீர்மானம் 25:
ஓட்டுநர், நடத்துநர், பயணச் சீட்டு பரிசோதகர் போன்ற பணிகள் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் அளிக்கப்படுதல் வேண்டும்.
தீர்மானம் 26:
மத்திய, மாநில அமைச்சர் பொறுப்பு பெண்களுக்கு அளிக்கும்பொழுது முக்கிய துறைகள் அவர்களுக்கு ஒதுக்கப்படுதல் வேண்டும்.
தீர்மானம் 27:
ஊடகத் துறைகளில் பெண்களுக்கான இடங்கள் அதிக அளவில் அளிக்கப்பட வேண்டும்.
தீர்மானம் 28:
பெண்களுக்கான உரிமைகள், சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு பெண்கள் மத்தியில் பெரும் அளவில் ஏற்படுத்தப்பட வேண்டும்; அதற்கான தனித் துறையை ஏற்படுத்தி அதில் பெண்களைப் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்க வேண்டும்.


தீர்மானம் 29:
மகளிர் காவல் நிலையங்கள் நகர்ப் புறங்களில் மட்டுமேயல்லாமல் பரவலாக எல்லாப் பகுதிகளிலும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
தீர்மானம் 30:
விவாகரத்து வழக்குகள் விசாரணை - தீர்ப்பு குறுகிய காலத்தில் விரைந்து கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.
தீர்மானம் 31:
பெண் நீதிபதிகள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருக்கும் நிலை மாற்றப்பட வேண்டும் - விகிதாசார வகையில் அது அதிகரிக்கப்பட வேண்டும். அது பாலியல்ரீதியாக மட்டும் அமையாமல் சமூகநீதியை உள்ளடக்கியதாக இருப்பது அவசியம். குறிப்பாக தாழ்த்தப்பட்ட, மலைவாழ், பிற்படுத்தப்பட்ட சமூகப் பெண்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும்.
தீர்மானம் 32:
ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வோர்க்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு சமூகநீதி கிட்டிட, தாய் அல்லது தந்தையாரின் ஜாதியைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சட்டத்திருத்தம் தேவை!
தீர்மானம் 33:
ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு தனி சதவீத ஒதுக்கீடு (மினி - மிஸீtமீக்ஷீநீணீstமீ னிuஷீtணீ) அளிக்கப்பட வேண்டும். தொடக்கத்தில் 5 சதவீத இடஒதுக்கீடு என்று தொடங்கி படிப்படியாக அதனை உயர்த்தி ஜாதி அடிப்படை இடஒதுக்கீட்டின் அளவை குறைக்கவும் வழி செய்யப்பட வேண்டும்!
தீர்மானம் 34:
ஆண்கள் பெண்களுக்கென தனித்தனியே கல்வி நிறுவனங்கள் செயல்படாமல் ஒன்றிணைந்து (Co-Education) படிக்கும் நிலை உருவாக்கப்படுதல் வேண்டும்.
தீர்மானம் 35:
பாலியல் கல்வி உரிய வகையில் போதிக்கப்படுதல் அவசியமாகும்.
தீர்மானம் 36:
விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது தவிர்க்கப்பட்டு, பெண்களுக்கும் ஆண்களுக்கு நிகரான முக்கியத்துவம் அளிக்கப்படுதல் வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.


பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இயக்கக் குடும்ப மாணவ தோழர்களை கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பாராட்டி  சான்றிதழ் வழங்கினார். தமிழர் தலைவர், கழகப் பொறுப்பாளர்களுடன் மாணவச் செல்வங்களின் குழுப்படம் (திருச்சி, 27.5.2017)
கவிஞர் இன்குலாப் எழுதிய அவ்வை நாடகம், ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்ற பாடலுக்கு ஓவியா நடனம், இராவணன் எழிலனின் ‘நறுக்குகள்’, ‘பகுத்தறிவு நிகழ்ச்சி’ போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
(திருச்சி, 27.5.2017) 
தூங்கும் புலியை என்ற பாடலுக்கு யாழினி நடனம் மற்றும் கருங்குயில் கலைக்குழுவின் பறை இசை நிகழ்ச்சிகள்.
(திருச்சி, 27.5.2017)
பெரியார் களம் அமைப்பின் தலைவர் இறைவி கழகக் கொடியை ஏற்றி வைத்தார் (திருச்சி, 27.5.2017)

விடுதலை,28.5.17

பெண்ணுரிமை பாதுகாப்பு மாநாட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கொள்கை முழக்கத்தோடு கழக மகளிரணியினர் வரவேற்றனர். (திருச்சி 27.5.2017)

சென்னை, மே 27 திராவிடர் கழக செயற்குழுக் கூட்டம் நேற்று (26.5.2017) சென்னை பெரியார் திடலில் எம்.ஆர்.ராதா மன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி கழகப் பொதுச்செயலாளர்கள் துரை.சந்திர சேகரன், வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, கழக அமைப்புச் செயலாளர்கள்,  தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
தலைமைச் செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானங்களை செய்தியாளர்களுக்கு அளித்து,  தொடர்ந்து செய்தியாளர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
திராவிடர் கழகத்தினுடைய தலைமை செயற்குழுக்கூட்டம்  பெரியார் திடலில் நடைபெற்றது. முக்கியமாக ஆறு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அந்த தீர்மா னங்கள் உங்களுக்கெல்லாம் வழங்கப்பட்டிருக்கின்றது.
தமிழ்நாட்டிலே எத்தகைய சூழல் நிலவுகிறது? எப்படி பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டும்? பிரச் சார, போராட்டத் திட்டங்களையெல்லாம் எப்படி நடத்துவது என்பது பற்றி நீண்ட விவாதமாக இன்றைக்கு இந்த தலைமைச் செயற்குழு நடந்துகொண்டிருக்கிறது.
கலைஞருக்கு வாழ்த்து
இதற்கிடையிலே, தமிழ்நாட்டு பொதுவாழ்க்கையில் ஏறத்தாழ ஒரு முக்கால் நூற்றாண்டு காலத்தை தன்னுடைய  பொதுவாழ்க்கையாகக் கொண்டு, ஈரோட்டு குருகுலத்திலே பயிற்சி பெற்றவரும், வைரவிழாவை சட்டமன்றத்திலே கண்டவருமாக இருக்கக்கூடிய பெருமதிப்பிற்குரிய மானமிகு சுயமரியாதைக்காரரான, அய்ந்து முறை முதலமைச்சராக இருந்த நம்முடைய கலைஞர் அவர்கள் இன்னும் இரண் டொரு நாள்களில் அவருக்கு 94ஆம் ஆண்டு பிறக்கிறது.
கலைஞர் அவர்கள் உடல் நலம் தேறி மீண்டும் பழைய வாறு செயல்படவேண்டும் என்று இத்தலைமை செயற்குழு உறுப்பினர்களும், அவர்பால் அன்புகொண்ட தமிழ்ப் பெருமக்களும், திராவிட பெருமக்களும் விழைவதோடு, அவரால் உருவாக்கப்பட்டு, ஆழமாக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அவர்களாலே மிகப்பெரிய ஓர் அஸ்தி வாரத்தை உருவாக்கி அமைத்த திராவிடர் ஆட்சிக்குக்கூட அதிக சவால் தோன்றியுள்ள இந்த காலக்கட்டத்திலே, கலைஞர் அவர்களுடைய போராட்ட முறைகள், அவருடைய எழுத்துகள், கருத்துகள் இது அத்தனையும் அனைவருக்கும் வழிகாட்டக்கூடிய அளவிலே இருப்பதால், அவர்கள் மவுன மாக இருந்தால்கூட, அந்த மவுனம் பெரிய அளவுக்கு, புரட்சி கரமான பல பாதைகளை காட்டுவதற்கு வழிவகை செய்யும் என்று சொல்லி, நீண்ட நாள் அவர்கள் வாழவேண்டும்.  நூற்றாண்டையும் தாண்டி நல்ல உடல்நலத்தோடு மீண்டும் பழைய மாதிரி நல்ல அளவிற்கு உடல் நலத்தைப் பெற வேண்டும் என்று தலைமைச் செயற்குழு முதலில் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் மத்திய அரசின் மூன்றாண்டு ஆட்சியின் இலட்சணம்
அதற்கடுத்தபடியாக, இப்போது இருக்கின்ற மத்திய அரசு மூன்று ஆண்டுகளை மோடி அவர்களுடைய தலைமையிலே இருக்கக்கூடிய, ஆர்.எஸ்.எஸ்.சால் கண்காணிக்கப்பட்டு நடத்தப்படக்கூடிய பாஜக அரசு. மூன்றாண்டுகள் காலத்திலே அவர்கள் இதுவரை எதையெல்லாம் சொல்லி ஆட்சிக்கு வந்திருக்கிறார்களோ, அந்த வாக்குறுதிகளை செயல்படுத்திய தற்கு உரிய அளவுக்கு வாய்ப்புகள் இல¢லை. வேலைவாய்ப்பு களைக் கொடுக்கிறோம், வளர்ச்சி வளர்ச்சி என்று சொல்லி தான் இளைஞர்களை எல்லாம் தங்கள் பக்கம் ஈர்த்தார்கள். ஆனால், நாட்டிலே வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா, தளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது.
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்
வேலையின்மைதான் அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. இன்னுங்கேட்டால், வெளிநாட்டை நம்பிப் போனவர்களுக்கு விசா கிடைக்கவில்லை என்பது ஒரு பக்கத்தில், உள்நாட்டிலே எந்த புதிய தொழிற்சாலைகளும் பெரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது என்று சொல்ல முடியாது.
அதுபோலவே கருப்புப் பணத்தைக் கண்டுபிடித்து 15 லட்சம் ஒவ்வொருவருடைய கணக்கிலும் போடப்படும் என்று சொன்னதெல்லாம் விளையாட்டுக்காக நாங்கள் சொன்னோம் என்று சொல்லக்கூடிய ஒரு கேலிக்கூத்து.
விவசாயிகளுடைய வாழ்வை இரண்டாகப் பெருக்கு வோம், இரண்டு மடங்காக, பல மடங்காகப் பெருக்குவோம் என்று உறுதிமொழி சொல்லிதான் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால், அந்த விவசாயிகளுடைய தற்கொலை, வறட்சி, எங்குபார்த்தாலும் அவர்களுடைய சங்கடம். தமிழ்நாட்டு விவசாயிகள் டில்லியிலேயே முகாமிட்டு 41 நாள்களுக்குமேல் போய்க்கூட அவர்களை சந்திக்காத பிரதமர்.
காவிரி நதிநீர் ஆணையம் என்பது போன்ற தமிழ்நாட் டுக்கே வஞ்சனை செய்யக்கூடிய நிகழ்வுகள் ஏராளமிருக் கின்றன. நீட் தேர்வானாலும், காவிரி நதிநீர் ஆணையத்தை உச்சநீதிமன்றம் அதனுடைய தீர்ப்புப்படி நடத்தப்பட வேண்டும், செயல்படுத்த வேண்டும் என்று  கொடுத்தும் கூட, உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பையே கருநாடக மாநிலம் மதிக்கவில்லை. அவர்கள் எந்தக்குழுவையும், அதிகாரிகள் குழுவையும்கூட இன்னும் அமைக்கவில்லை என்று சொல்லக்கூடிய சூழல் இருக்கிறது.
ஒவ்வொரு அண்டை மாநிலமும் பக்கத்திலே அணைகள் கட்டிக்கொண்டு, மின்சாரத் தேக்கத்திலிருந்து எல்லாவற்றுக் கும் சங்கடம். குடிநீருக்கேக் கூட இங்கு வறட்சி என்று சொல் லக்கூடிய கட்டாயம். ஓராண்டுக் காலத்திலே ஆளுங்கட்சியை இரண்டாக்கி, அவர்களிடையே பொம்மலாட்டத்தை நடத்திக் கொண்டு, டில்லியிலே இருந்து மாறிமாறி அரசியல் பொம்ம லாட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திலே கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் மாநில அரசாக இருந்தாலும் சரி, மத்திய அரசாக இருந்தாலும் சரி அவைகள் எல்லாம் காற்றில் பறந்த, நீரில் எழுதப்பட்ட எழுத்துகளாகத்தான் இருக்கின்றன.
பிரச்சாரம், போராட்டம் மூலமாக
மக்களை ஆயத்தப்படுத்த வேண்டும்
எனவேதான், இவைகளையெல்லாம் எதிர்த்து மக்களை ஆயத்தப்படுத்த வேண்டும். ஒரு பக்கத்திலே மக்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, இன்னொரு பக்கத்திலே மக்கள் நல விரோத ஆட்சியாகத்தான் பல நேரங்களிலே இருக்கிறது.
மத்திய அரசை உறவுக்குக் கைகொடுத்து, உரிமைக்குக் குரல் கொடுக்கக்கூடிய ஓர் ஆட்சியாக தமிழகத்தில் இருக்கிற ஆட்சி இல்லை. தாங்கள் எவ்வளவு காலம் நீட்டிப்பார்கள் என்று அவர்களுக்கும் தெரியாது, மற்றவர்களுக்கும் தெரி யாது என்று சொல்லக்கூடிய அளவிலே தங்களுடைய ஆட் சியை ‘நிலையாமை’யினுடைய தத்துவத்துக்கு எடுத்துக் காட்டாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவேதான், தீவிர மான பிரச்சாரம், போராட்டம் என்பதன்மூலமாகத்தான் வரவேண்டும்.
நீட் விலக்¢கு சட்டம் தமிழக உரிமை
மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கக்கூடிய வகையிலே தான் இந்த நீட் தேர்வு என்பது. கல்வியை மாநிலப்பட்டி யலிலிருந்து மத்தியப் பட்டியலுக்குக் கொண்டு போய் விட்டதாகவே நினைக்கிறார்கள். நடுவிலே பொதுப் பட்டியல் என்ற ஒரு பட்டியல் (சிuஸீநீuக்ஷீக்ஷீமீஸீt றீவீst) என்று இருந்து, அதிலே நமக்குள்ள உரிமையை சட்ட ரீதியாக பயன்படுத்தித் தான் தமிழ்நாட்டிலே மசோதாவே நிறைவேற்றப்பட்டது.
இப்போது ஆளுங்கட்சி இரண்டு அணிகளாக  அதிமுக இருக்கிறதே, அந்த இரண்டு அணியிலே இருக்கின்ற முன்னாள் முதல்வர், இந்நாள் முதல்வர் என்று எல்லோரும் சேர்ந்து நீட் தேர்வு எங்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள் என்றால், இது நாம் மத்திய அரசிடம் கேட்கக்கூடிய சலுகையோ, பிச்சையோ அல்ல. மாறாக, இந்திய அரசமைப்புச்சட்டம் மாநிலங்களுக்கு வகுத்துத் தந்திருக்கின்ற சட்ட உரிமை. பொதுப்பட்டியலிலே இருக்கக்கூடிய அதைப் பயன்படுத்திதான் ஜல்லிக்கட்டு எப்படி முழுமையாக அந்த சட்டம் கொண்டு வரப்பட்டதோ, அதே அடிப்படையிலேதான் இந்த நீட் விலக்கு சட்ட மசோதாவும் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
ஒற்றை ஆட்சி முறையா?
இந்த நீட் தேர்வு குறித்து கேட்டால், நாங்கள் இந்தியா முழுக்க ஒன்றாக ஆக்கியிருக்கிறோம் என்கிறார்கள். இப் போது இருக்கின்ற கூட்டாட்டிசத் தத்துவத்தையே ஒழித்து விட்டு, ஒற்றை ஆட்சியாக (ஹிஸீவீtணீக்ஷீஹ்)  இதை நடத்த வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம்.
அதுமட்டுமல்ல, மொழி ஆதிக்கத்தை உருவாக்க  வேண் டும் என்று சமஸ்கிருதத் திட்டம். நேரடியாக இந்தியை, சமஸ்கிருதத்தைப் புகுத்தினால் அதற்கு தமிழகத்திலே வலிமையான எதிர்ப்பு இருக்கிறது என்பதைக் கண்டு, ஒரு குறுக்கு வழியான தந்திரத்தை இப்போது செய்திருக்கிறார்கள். என்ன அந்த குறுக்கு வழி என்றால், நீட் தேர்வு மாதிரி இருக்கக்கூடிய பல தேர்வுகளை நாங்கள்தான் பொதுத் தேர்வாக இந்தியா முழுக்க நடத்துவோம், அதற்கெல்லாம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை வைப்போம். சிபிஎஸ்இ பாடத் திலே இந்தியைக் கட்டாயமாக்குவோம். வேலை வாய்ப்பு வேண்டுமென்றால், படிப்பில் மேலே வரவேண்டும் என்று சொன்னால், அதற்கு அங்கே வரவேண்டும் என்று சொல் லிக்கொண்டு, (தமிழ்நாட்டில் இருக்கின்ற பள்ளிக்கூடங்களை எல்லாம், மெட்ரிகுலேஷன் பள்ளிகளையெல்லாம் பல கல்வி வியாபாரிகள் போட்டிப்போட்டுக்கொண்டு நாங்கள் சிபி எஸ்இ நடத்துகிறோம் என்று) சிபிஎஸ்இ பள்ளிக் கூடங்களை  அதிகப்படுத்துகிறோம் என்ற சாக்கிலே, இந்தியை சமஸ் கிருதத்தை திணித்து, மாநிலங்களுக்கு கொஞ்சம் நஞ்சம் இருக்கக்கூடிய கல்வி உரிமையையும் பறிக்கின்றது. ஒரே கல்லிலே இரண்டு மாங்காய் அடிக்கக்கூடிய அளவிலே செய்திருக்கிறார்கள்.
தமிழக வாழ்வாதாரப் பிரச்சினைகள்
அதேமாதிரி, பல பிரச்சினைகள் இருக்கின்றன. மொழிப் பிரச்சினை, இனப்பிரச்சினை, விவசாயிகள் வயிற்றில் அடிக் கின்ற பிரச்சினை, இதுமாதிரி பல பிரச்சினைகள் இருந்து கொண்டிருக்கின்றன. நெடுவாசலில் ஒரு பக்கம் சொல் கிறார்கள். இன்னொரு பக்கத்திலே பார்த்தீர்களேயானால், டெல்டா பகுதியிலே ஹைட்ரோகார்பன் நிலக்கரி - சுரங்கம் தோண்டுவதற்கு ஒப்பந்தம் என்று ஒரு பக்கத்திலே போட்டுக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு அரசு அதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று இங்கே சொல்கிறார்கள். நீட் தேர்வுக்கு விலக்கை வலி யுறுத்துகிறோம் என்கிறார்கள். குடியரசுத் தலைவருக்குப் போனதா என்றால், குடியரசுத் தலைவருக்கே போகலை என்று அங்கே தகவல் வருகிறது. போனவர்களில் யார் சொல்வது உண்மை?
தமிழக அரசு இயங்குகிறதா?
அதுமட்டுமல்ல, முழுக்க முழுக்க இந்த அரசைப் பொருத்தவரை இன்றைய தமிழக அரசு இயங்குகிறதா என்று தெரியாது. இதில் இரண்டு அணிகளை அவர்கள் உருவாக் கியதன் நோக்கமே, யார் அதிகமாக டில்லியிலே சரணாகதி பாடுவது?, யார் அதிகமாக டில்லிக்கு சலாம் போடுவது? என்ற அளவிலே தங்களை ஆக்கிக் கொண்டு, எதற்காக இந்த மாநில அரசும், திராவிட இயக்கமும் தெளிவாக சொன் னார்களோ, அதை அறவே, ஜெயலலிதா அம்மையார் காட் டிய அந்த உணர்வைக்கூட இவர்கள் காட்டுவதற்கு தயாராக இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள். எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்ற பேதமில்லாமல், அங்கே சட்டமன்றத்திலே நீட் தேர்வில் நிறைவேற்றப்பட்ட மசோதா சென்றிருக்கிறது.
எல்லாத் துறைகளிலும் பேராபத்து
ஆகவே, இப்படி எல்லாத்துறைகளிலும் பார்த்தீர்களே யானால், ஒரு பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. மறைமுக மான ஒரு திணிப்பு. தேர்தலில் நாங்கள் கூட்டு சேர்வோம் என்று  பாஜக கால் ஊன்ற முடியாத, மிஸ்டு காலை நம்பிக் கொண்டிருக்கின்ற ஒருவர் சொல்கிறார், ஆமாம் நாங்கள்தான் நடத்திக்கொண்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள். அதற்கு நம்முடைய அமைச்சர்கள் ஏன் வாய்மூடி மவுனியாக இருக்கிறார்கள்? ஆளுங்கட்சி தரப்பிலே பதில் சொல்ல வேண்டாமா? மக்கள் யாரைத் தேர்ந்தெடுத்தார்கள்? பாஜக வுக்கு ஓட்டு போட்டார்களா? இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கும், இந்த ஆட்சி நிலைக்கும் என்று சொல்கிறீர்களே, உங்களுடைய ஆட்சிக்கு பெயர் அதிமுக ஆட்சியா? மத்தியிலே இருக்கக்கூடிய பொம்மலாட்டத்தை நடத்தக்கூடிய ÔபினாமிÕ ஆட்சி என்று மற்றவர்கள் சொல்கிறார்கள், பொம் மலாட்ட ஆட்சியாக நடத்திக்கொண்டிருக்கிறார்களே என்று பலரும் கேட்கக்கூடிய அளவுக்கு இருக்கிறது.
மதசார்பற்ற தன்மைக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.  சமூக நீதிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. மாநில உரிமைகள் பகிரங்கமாகவே பறிக்கப்படுகின்றன. எனவே, இவைகளை யெல்லாம் எதிர்த்து, ஒத்த கருத்துள்ளவர்களை அழைத்து மாபெரும் போராட்டங்கள், பிரச்சாரக் களங்களை திராவிடர் கழகம் அமைக்க இருக்கிறது.
தீவிர எதிர்ப்புப் பிரச்சாரம்
எந்தத் தேர்தலாக இருந்தாலும், அது உள்ளாட்சித் தேர்த லாக இருந்தாலும் (ஒரு வேளைநடந்தால்) அல்லது வேறு தேர்தலாக இருந்தாலும் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்து, விவசாயிகளுடைய வயிற்றிலே அடித்து, காவிரி நதிநீர் ஆணையத்தை செயல்படுத்த முடியாமல் ஆக்கி, மொழித்திணிப்பை சமஸ்கிருதம், இந்தி போன்ற மொழித் திணிப்பெல்லாம் வந்திருக்கக்கூடிய, பகிரங்கமாக, ஒரு ஜனநாயக ஆட்சியை, நாங்கள் வேறு முகமூடிபோட்டு, டில்லி யிலிருந்து நடத்துகிறோம் என்று அந்தத் தலைவர்கள் சொல்லக்கூடிய அளவிலே போன நிலைக்கு இருக்கக்கூடிய, ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் வடிவமாக இருக்கக்கூடிய பாஜகவோடு கூட்டு சேரக்கூடிய யாரையும், அவர்களை ஆத ரிக்காமல்,  எதிர்க்கவேண்டிய பிரச்சாரத்தை திராவிடர்கழகம் தீவிரமாக செய்யும்.
இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டார்.



விடுதலை,27.5.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக