முன்னாள் மேயரும், நீதிக்கட்சித் தலைவருமான சர்.பிட்டி.தியாகராயர் அவர்களின் பிறந்த
நாளையொட்டி சென்னை மாநகராட்சியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகில்
வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு திராவிடர் கழகத்தின் சார்பில், கழகத் தோழர்கள் புடைசூழ சென்று, தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மகாபாண்டியன், நடராசன், சுந்தரம், சண்முகம் ஆகியோர் தமிழர்
தலைவருக்குப் பயனாடை அணிவித்து நூல்களை வழங்கி சிறப்பித்தனர் (சென்னை,
27.4.2015)
சென்னை, ஏப். 27_ வெள் ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் அவர்களின் பிறந்த நாளான இன்று (27.4.2015) அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து
மரி யாதை செலுத்தினார்.
நீதிக்கட்சியைத் தோற் றுவித்த மும்மணிகளுள்
முக்கியமானவரான வெள் ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் அவர்களின் 164 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்றுகாலை 10.30 மணியளவில் (27.4.2015), சென்னை மாநகராட்சி ரிப்பன் கட் டட வளாகத்தில்
உள்ள அவரது சிலைக்கு திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அவர்கள் கழக தோழர், தோழியர்கள் புடைசூழ சென்று மாலை அணிவித்து
மரியாதை செய்தார்.
இந்நிகழ்வில் திரா விடர் கழகத்துணைத் தலைவர்
கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளா ளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச்செயலாளர்கள் தஞ்சை இரா.ஜெயக் குமார், உரத்தநாடு இரா. குணசேகரன், மாநில விவ சாய அணி அமைப்பாளர் கணபதி, மாநில வழக் குரைஞரணி செயலாளர் வழக்குரைஞர்
சிவகங்கை ச.இன்பலாதன்,
மாநில அமைப்பாளர் வழக்குரை ஞர் வீரமர்த்தினி, தலை மைச் செயற்குழு உறுப் பினர்கள் மதுரை
தே.எடி சன்ராசா, திருமகள், சாமி, திராவிடமணி, திருப்பத் தூர் கே.சி.எழிலரசன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடரா சன், மேற்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் ஈரோடு சண்முகம், தொழி லாளரணி துணைச்செய லாளர் செல்வராஜ்.
திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் சைதை
எம்.பி.பாலு, சி.வெற்றிச்செல்வி, இறைவி, சென்னை மண் டல மாணவரணி செய லாளர் மணியம்மை தங்க. தனலட்சுமி, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன்,
செயலாளர் செ.ரா.பார்த்தசாரதி, அயன்புரம் மாடசாமி, வெற்றி வீரன், பகுத்தறி வாளர் கழக வெங்க டேசன், கலைமணி, திரு வொற்றியூர் கணேசன், செல்வேந்திரன், பாஸ்கர், தமிழ்குடிமகன், மகேஷ் மற்றும் திரளான கழகத் தோழர், தோழியர்கள் பங்கேற்றனர்
தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவிப்பு
சர்.பிட்டி.தியாகராயர் சிலைக்கு மாலை அணி
விக்கச் சென்ற தமிழர் தலைவருக்கு சர்.பிட்டி. தியாகராயர் நலச்சங்கத் தின் சார்பில்
அதன் தலைவர் கவிஞர் மகா. பாண்டியன் மற்றும் அதன் நிர்வாகிகள் நட ராஜன், சுந்தரம், சண் முகம் ஆகியோர் வர வேற்று பயனாடை அணி வித்து சிறப்பித்தனர்.
-.விடுதலை,27.4.15
சர்.பிட்டி தியாகராயர் 164வது பிறந்த நாள்-27.4.15
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சர்.பிட்டி தியாகராயர் சிலைக்கு மு.ப.10.30 மணி அளவில் மாலை அணிவித்தார்
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சர்.பிட்டி தியாகராயர் சிலைக்கு மு.ப.10.30 மணி அளவில் மாலை அணிவித்தார்
விழாக் குழுவினர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கும் , துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கும் பயனாடை அணிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக