வெள்ளி, 15 மே, 2015

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள்- சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்தார்


புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள்: சிலைக்கு தமிழர் தலைவர் 
மாலை அணிவித்தார்
சென்னை, ஏப். 29_ புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2015) அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரி யாதை செய்தார்.
வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியார் அவர் களின் பகுத்தறிவுக் கருத் துக்களை கவிதை வடிவில் எழுதி தமிழர்களுக்கு இனஉணர்வை ஊட்டி வந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 125_ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2015),
சென்னை காம ராசர் கடற்கரை சாலையி லுள்ள புரட்சிக் கவிஞர் சிலைக்கு கழகத் தோழர் _ தோழியர்களுடன் புடை சூழ சென்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீர மணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்நிகழ்வில் திரா விடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் திருமகள், பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே. நடராசன், வட மாவட் டங்களின் அமைப்பு  செய லாளர் வெ.ஞானசேகரன், வழக்குரைஞரணி அமைப் பாளர், வீரமர்த்தினி, சென்னை மண்டலச் செயலாளர் பன்னீர் செல்வம்,
சென்னை மண் டல இளைஞரணிச் செய லாளர் தமிழ் சாக்ரடீஸ், தொழிலாளரணி இணைச் செயலாளர் செல்வராஜ், பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன்.
தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், வடசென்னை மாவட்டத் தலைவர் திருவள்ளுவன், பகுத்தறிவாளர் கழக வடசென்னை துணைத் தலைவர் வெங்கடேசன், தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் மயிலை சேதுராமன்.
சி.வெற்றிச்செல்வி, மீனாகுமாரி, உஷா, பசும் பொன், சீர்த்தி, மரகதமணி, தங்க.தனலட்சுமி, தங்க மணி, மஞ்சுநாதன், சண் முகப்பிரியன், மயிலை குமார், பெரியார் திடல் சுரேஷ், ரங்கநாதன், கலை யரசன், கலைமணி, தமிழ் குடிமகன், பிரபாகரன், அம்பேத்கர், விமல்ராஜ், சைதை தென்றல்,
வழக் குரைஞர் தெ.அருள்மொழி, பாலு, கோ.திராவிடமணி, கிருட்டிணகிரி மாவட்டச் இணைச் செயலாளர் சு.வனவேந்தன், பட்டுக் கோட்டை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வீரத்தமிழன், நீடாமங்கலம் இளை ஞரணிச் செயலாளர் பொன்.பாலா, செல் வேந்திரன், திராவிடமணி, ஈழமுகிலன்குமார் மற்றும் திரளான கழகத்தோழர் _ தோழியர்கள் பங்கேற்றனர்.
திமுக சார்பில் மாலை அணிவிப்பு
புரட்சி கவிஞர் பாரதி தாசன் சிலைக்கு திமுக சார்பில் முன்னாள் மேயர் சா.கணேசன், முன்னாள் அமைச்சர் வேழவேந்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவம், மற்றும் பெருங் கவிகோ வா. மு.சேதுராமன், கலைமாமணி கவிக் கொண்டல் மா.செங் குட்டுவன், கவிஞர் கண் மதியன்,
ரவிச்சந்திரன், ராஜன், ராஜேஷ்குமார், செந்தில் குமார், எம்.ஜி. செல்வம், கனல் கங்கா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்,
-விடுதலை,29.4.15


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக