புதன், 27 மே, 2015

தென்சென்னை மாவட்ட இளைஞரணி, மாணவரணி கலந்துரையாடல் கூட்டம்


சென்னை, மே 27_ மயிலை பெரியார் படிப்ப கத்தில் தென்சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் கு.செல்வேந் திரன் தலைமையில் தென் சென்னை மாவட்ட இளை ஞரணி, மாணவரணி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத் தில் இளைஞரணி, மாண வரணி அமைப்பு புதுப் பித்தல் உள்ளிட்ட பல் வேறு திட்டங்கள் பற்றி ஆலோசனை செய்யப்பட் டது. அதன் அடிப்படை யில் தொடர் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவதென தீர்மானிக் கப்பட்டது. ஜூன் மாதத்தில் மந்தைவெளி, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதி யில் பிரச்சாரக் கூட்டம் பகுதிவாரியாக தோழர் களை சந்திப்பது இயக்க கொள்கைகளை விளக்கி துண்டறிக்கை கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.
மறைந்த சுயமரியாதை சுடரொளிகள் அனகை அரங்க சிவா வேல்.சோம சுந்தரம், பேராசிரியை தம யந்தி இராஜதுரை, கழகத் துணைத் தலைவரின் அண்ணன் நாகராஜன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் சென்னை மண்டல இளைஞரணிச் செயலாளர் செ.தமிழ்சாக் ரடீஸ், பா.மணியம்மை இயக்க ஆக்கப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு கருத் துகளை எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியில் குமார், சண்முகப்பிரியன், முகிலன், மணித்துரை, மகேந்திரன் பங்கு கொண்டு தங்களது கருத்துகளை எடுத்துரைத் தனர்.
விடுதலை,27.5.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக