தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல் 201 ஆம் ஆண்டு பிறந்த நாள்:
சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
சென்னை, மே 7_ தமி ழறிஞர் இராபர்ட் கால்டு வெல் அவர்களின் பிறந்த நாளான இன்று (7.5.2015) அவரது சிலைக்குத் தமிழர் தலைவர் மாலை அணி வித்து மரியாதை செய்தார்.
தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல் அவர்களின் 201 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (7.5.2015) சென்னை காமராசர் சாலை அண்ணா நினைவிட வளாகத்தில் அமைந்துள்ள அவரின் சிலைக்கு திரா விடர் கழகத் தோழர், தோழியர் புடைசூழ கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் காலை 11 மணிக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ் வில், திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு மகள், சி.வெற்றிச்செல்வி, தொழிலாளரணி துணைச் செயலாளர் செல்வராஜ், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், சண்முகபிரியன், சென்னை மண்டல மாணவரணி செயலாளர் மணியம்மை, பவானி,
மரகதமணி, சுமதி, அரும்பாக்கம் தாமோதரன், உடுமலை வடிவேல், பெரியார் திடல் தோழர்கள் சுரேஷ், மகேஷ், சக்திவேல், விமல், பிரபாகர், வெற்றி, திருச்சி பெரியார் புத்தக நிலைய விற்பனையாளர் பூமிநாதன், கலைமணி, கலையரசன், லோகேஷ், சுகுமார், பழனிகுமார் மற்றும் தி.மு.க. கலை இலக்கிய பேரவை சென்னை பகுதி நிர்வாகி கள் எஸ்.பி.முருகேசன், சேதுராமன் மற்றும் திர ளான கல்வி அறிஞர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக