திங்கள், 24 பிப்ரவரி, 2025

ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து கழகத்தின் சார்பில் தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம்! (தாம்பரத்தில் தமிழர் தலைவர்)


விடுதலை நாளேடு

திராவிடர் கழகம்

தாம்பரத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் எழுச்சிப் போர்க்கோலம்!

சென்னை, பிப்.24 தமிழ்நாட்டில், தமிழ் – ஆங்கி லம் என்ற இரு மொழிக் கொள்கை என்பது சட்டப்படியானதாகும். அதற்கு மாறாக தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை ஏற்றுக்கொண்டால்தான் கல்விக்கான நிதியைத் தர முடியும் என்று கூறும் ஒன்றிய அரசை எதிர்த்து நேற்று (23.2.2025) தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகம் சார்பில், மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

1938 இல் தந்தை பெரியார் தொடங்கிய ஹிந்தி எதிர்ப்பு என்ற வலுவான போராட்டம், கட்சிகளைக் கடந்து, மொழி உரிமை, பண்பாட்டுப் பாதுகாப்புக்கு ஒரு காவல் அரணாகும். தமிழ் உணர்வாளர்களும் களம் கண்டனர்.
இப்போதுள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசு, ‘‘தேசிய கல்விக் கொள்கை‘‘ என்ற ஒரு புதிய கல்வித் திட்டத்தை ‘திராவிட மாடல்‘ ஆட்சிமீது திணிக்க முயல்வதற்கு முழு முனைப்பின் முதல் கட்டமே இந்த மும்மொழியை கட்டாயமாக ஏற்கவேண்டும் என்ற ஆணவப் பேச்சு! ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், வற்றா நதியான ‘கல்வியில் சிறந்தோங்கிய தமிழ்நாடு‘ என்ற பெயரையும், புகழையும் கண்டு எரிச்சல்பட்டு, அதைத் தடுக்க தமிழ்நாட்டுக் கல்வி வளர்ச்சிக்குத் தரவேண்டிய ரூ.2,152 கோடியை தர மறுப்பதுடன், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதியை, வேறு சில மாநிலங்களுக்குக் கூடுதல் நிதியாகப் பிரித்து வழங்க ஏற்பாடுகள் நடந்துள்ளன என்ற செய்தியும் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடே குமுறி கொந்தளித்து எழுந்துள்ளது. தமிழ்நாடு மக்களின் உரிமைகளையும், நலன்களையும் ஒன்றிய அரசு ‘தாரை‘ வார்த்துள்ளது. சில கொத்தடிமை மனப்போக்குள்ளவர்கள் தவிர, அனைவரும் இதனை வன்மையாகக் கண்டித்து குரல் கொடுக்கத் தயங்கவில்லை.

தமிழ்நாடெங்கும்கழக மாவட்டங்களில்…
இந்நிலையில், 23.2.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்துக் கழக மாவட்டத் தலைநகரங்களிலும் திராவிடர் கழகம், ஒத்தக் கருத்துள்ளவர்களோடு இணைந்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை முதல் கட்டமாகத் தொடங்கும் என 17.2.2025 அன்றே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்திருந்தார். அதன்படி நேற்று (23.2.2025) தமிழ்நாடெங்கும் கழக மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாம்பரத்தி்ல் தமிழர் தலைவர் 
ஆசிரியர் தலைமையில்…
ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து நேற்று (23.2.2025) மாலை 5 மணிக்குத் தாம்பரம் பெரியார் நகர் சண்முகம் சாலையில் உள்ள பாரதி திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் மாபெரும் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கழக மாவட்டத் தலைவர்கள், எண்ணூர் வெ.மு.மோகன், இரா.வில்வநாதன், புழல் த.ஆனந்தன், வே.பாண்டு, வெ.கார்வேந்தன், வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்டச் செயலாளர்கள் ந.இராசேந்திரன், புரசை சு.அன்புச்செல்வன், செ.ர.பார்த்தசாரதி, ஜெ.பாஸ்கரன், அ.விஜய் உத்தமன்ராஜ், க.இளவரசன் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.
தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் வரவேற்புரையாற்ற, திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் தொடக்கவுரையாற்றினார்.

கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.சே.கோபால், திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், துணைப் பொதுச்செயலாளர்கள் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஷேக் அப்துல்காதர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதி செயலாளர் தா.கிருஷ்ணா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் பொறியாளர் சாமுவேல் எபினேசர், ம.தி.மு.க.செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் மாவை.கஜேந்திரன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எம்.யாக்கூப், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆதிமாறன் ஆகியோர் ஆர்ப்பாட்ட கண்டன உரையாற்றினர்.
நிறைவாக இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமையேற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து உரை நிகழ்த்தினார்.

ஒலி முழக்கங்கள்
ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்திலும், நிறைவிலும் ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், ‘‘கண்டிக்கின்றோம், கண்டிக்கின்றோம், ஹிந்தியைத் திணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டிக்கின்றோம்!, திணிக்காதே, திணிக்காதே! ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்காதே, திணிக்காதே!
ஏற்கமாட்டோம், ஏற்கமாட்டோம்! மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம்! திணிக்காதே, திணிக்காேத! தேசிய கல்விக் கொள்கையைத் திணிக்காதே, திணிக்காதே!
கண்டிக்கின்றோம், கண்டிக்கின்றோம்! தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய கல்வி நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டிக்கின்றோம், கண்டிக்கின்றோம்!
மிரட்டாதே, மிரட்டாதே! ஒன்றிய அரசே மிரட்டாதே! மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால், நிதி இல்லை என்று மிரட்டாதே, மிரட்டாதே!
பணியாது, பணியாது! தமிழ்நாடு பணியாது! பெரியார் மண் பணியாது! திராவிட மண் பணியாது! எதிர்ப்போம், எதிர்ப்போம்! ஹிந்தித் திணிப்பை எந்த நாளும் எதிர்ப்போம், எதிர்ப்போம்!
சிதைக்காதே, சிதைக்காதே! இந்தியாவின் ஒற்றுமையை, சிதைக்காதே! சிதைக்காதே! போராடு வோம், வெற்றி பெறுவோம்! வெற்றி கிட்டும்வரை போராடுவோம்!‘‘ என தோழர்கள் ஒலி முழக்கங்களை எழுப்பினர்.
இதையடுத்து தாம்பரம் மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன் நன்றி கூற, ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

தாம்பரத்தில் நடைபெற்ற ஹிந்தி திணிப்புக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் (23.2.2025)

சென்னை, பிப். 24- ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து நேற்று (23.2.2025) தாம்பரத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியா கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் விவரம் வருமாறு:

தாம்பரம்: ப.முத்தையன் (மாவட்ட தலைவர்), கோ.நாத்திகன் (மாவட்ட செயலாளர்), சு.மோகன்ராஜ் (நகர தலைவர்), பா.குமார், கே.ஏழுமலை, சீ.இலட்சுமிபதி, தே.சுரேஷ், மா.குணசேகரன், நெய்வேலி வெ.ஞானசேகரன், ந.கதிரவன், சி.புட்பநாதன், ப.கண்ணதாசன், மு.திரு மலை, தி.திலீபன், வழக்குரைஞர் ஆர்.உத்திரகுமாரன் (ஊரப்பாக்கம்), கோ.ராசு (கூடுவாஞ்சேரி), வே.மனோபாரதி, மு.பிரபாகரன் (கூடுவாஞ்சேரி), த.பாண்டியன் (கீழ்க்கட்டளை), இர.சரவணன் (பழைய பெருங்களத்தூர்), இரா.அருள் (இராமாபுரம்), ச.ராஜி (தாம்பரம்), எ.ஜீவா (தாம்பரம்), வேங்கம்பாக்கம் தோழர்கள்: இரா.சந்தோஷ், எ.அருண், மு.ராகுல், எ.விஷ்வா, ச.ராகி, ஜி.பிரின்சு (கண்டிகை), க.பழனி (மறைமலைநகர்), ஜி.குமரன் (சிட்லபாக்கம்), முரளிதரன் (தாம்பரம் கிழக்கு), திருமூர்த்தி (தாம்பரம் கிழக்கு), பாரதி (தாம்பரம் கிழக்கு) மற்றும் தாம்பரம் சுற்றுப்புற ஊர்களைச் சேர்ந்த திரளான கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

வடசென்னை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட தலைவர்), புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்), கி.இராமலிங்கம் (மாவட்ட காப்பாளர்), கோ.தங்கமணி (கொடுங்கையூர்), சி.பாசுகர் (அமைப்பாளர்), நா.பார்த்திபன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), ப.கோபால கிருட்டிணன், கொளத்தூர் ச.இராசேந்திரன், க.துரை, சொ.அன்பு, சி.வாசு, சஞ்சய் (மாணவர் கழகம்), அ.செந்தமிழ்தாசன், பா.பார்த்திபன் (பெரம்பூர் இளைஞரணி).

தென் சென்னை: இரா.வில்வநாதன் (மாவட்ட தலைவர்), செ.ர.பார்த்தசாரதி (மாவட்ட செயலாளர்), கோ.வீ.ராகவன் (பொதுக்குழு உறுப்பினர்), டி.ஆர். சேது ராமன் (மாவட்டத் துணைத் தலைவர்), கரு. அண்ணாமலை (மாவட்ட துணைச் செயலாளர்), சா.தாமோதரன், வடபழனி ச. மாரியப்பன், சூளைமேடு நல். இராமச் சந்திரன், எம்.டி.சி.இராஜேந்திரன், அரங்க. சுரேந்தர், அரங்க.இராஜா, சைதை தென்றல், பெரியார் யுவராஜ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), பெரியார் மணிமொழியன், நுங்கம்பாக்கம் சஞ்சய், விருகை செல்வம், எம்ஜிஆர் நகர் ஜான் மண்டேலா, கண்ணன், மூவேந்தன், சஞ்சய், நாகூர் கனி, சிவகுமார்.

சோழிங்கநல்லூர்: வே.பாண்டு (மாவட்ட தலைவர்), விஜய் உத்தமன் ராஜ் (மாவட்ட செயலாளர்), தமிழினியன், வெற்றி வீரன், கலைச்செல்வன், நித்யா நந்தன், சண்முகசுந்தரம், திவாகரன், குணசேகரன், மணிகண்டன், சந்தோஷ்,

ஆவடி: செ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்), க.இளவரசன் (மாவட்ட செயலாளர்), மு.ரகுபதி, க.தமிழ்ச்செல்வன், கோ.முருகன், வேல்முருகன், ரவீந்திரன், பெரியார் மாணாக்கன், சென்னகிருட்டிணன், பிரபாகரன், பாலகிருட்டிணன், பூ.இராம லிங்கம், ஜெயராமன், முத்து கிருட்டிணன், சுந்தர்ராஜன், திவாகரன், நிஷாந்த், தமிழ் மணி, மணிமாறன், வெங்கடேசன், நன்னன், இனியன், அரிகிருட்டிணன், மணி கண்டன், ஜெகதீசன், சேகுவேரா, அய்.சரவணன், கன்னடபாளையம் தமிழரசன், கலைவேந்தன், பாசறை கோபால், ஏழுமலை, வேல்சாமி, இசையின்பன், பகுத்தறிவு சந்திரபாபு

திருவொற்றியூர்: வெ.மு.மோகன் (மாவட்ட தலைவர்), ந.இராசேந்தரன் (மாவட்ட செயலாளர்), ஓவியர் பெரு.இளங்கோ (மாவட்ட காப்பாளர்), மா.சேகர் (விம்கோ நகர்), சு.செல்வம் (புதுவண்ணை). பா.பாலு.

கும்மிடிப்பூண்டி: புழல் த.ஆனந்தன் (மாவட்ட தலைவர்), இரா.சோமு, க.ச.க.இரணியன், உதயகுமார், ஜெகத் விஜயகுமார், ஒவியர் ஜனாதிபதி, சோழவரம் சக்கரவர்த்தி, கஜேந்திரன், சண்முகம், அருள், சுதாகர், முருகன்.

மகளிரணி: செ.பெ.தொண்டறம், மு.பசும் பொன், மு.பூவைசெல்வி, இ.ப.சீர்த்தி, இராணி ரகுபதி, இறைவி, வி.தங்கமணி, உத்ரா, வி.வளர்மதி, மு.பவானி, அருணா, இரா.தமிழ்ச்செல்வி, சர்மிளா, தங்க.தனலட்சுமி, வெண்ணிலா, கனிமொழி, நாகவள்ளி, தெய்வநாயகி, நூர்ஜகான், ஞானதேவி, நிர்மலா, அனுசுயா, மு.கனிமொழி, கலை யரசி, அமலசுந்தரி, மெர்சி ஆஞ்சலமேரி, மணிமேகலை, வள்ளி, நன்மொழி, சமத்துவமணி, கா.மகிழினி, கா.யாழினி, வனிதா, ச.தேன்மொழி, அன்புச்செல்வி, இரா.பகுத்தறிவு, மதியரசி, அ.கு.மான்விழி, ஆனந்தி, அபினா சுருதி, மீனாம்பாள், பெரியார் பிஞ்சு மகிழன், தமிழ்மாறன், சவுந் தரி நடராஜன், ஆற்றலரசி, அன்புச்செல்வி, சுகந்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக