ஞாயிறு, 2 மார்ச், 2025

சென்னையைச் சேர்ந்த இராமசாமி மாதவன் – ரஞ்சிதா ஆகியோரின் மகள் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்துச் சாதனை

 

தமிழர் தலைவருடன் சந்திப்பு

Published January 27, 2025
விடுதலை நாளேடு

சென்னை அய்.அய்.டி. வளாகத்தில் உள்ள ‘வனவாணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி’யில் முதலாம் வகுப்பு படிக்கும் சென்னையைச் சேர்ந்த இராமசாமி மாதவன் – ரஞ்சிதா ஆகியோரின் மகள் நன்கொடை(வயது-6) இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்துச் சாதனைப் புரிந்துள்ளார். தமிழ் மொழியின் 247 மொத்த தமிழ் எழுத்துக்களையும் ஒரு நிமிடம் 14 நொடிகளில் பாடல் வடிவில் சொல்லி இச்சாதனையைப் புரிந்துள்ளார். இந்நிறுவனத்தின் சார்பில் ஓர் சான்றிதழ், மெடல், ஒரு பேனா மற்றும் பேட்ச் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்த 6வயது சிறுமி ர.மா. தமிழினி தமிழர் தலைவரிடம் பதக்கத்தைக் காண்பித்தார். தமிழர் தலைவர் தமிழினிக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக