
ஜாபர்கான்பேட்டை, பிப். 11- தென் சென்னை மாவட்டம், 139ஆவது வார்டு ஜாபர்கான்பேட்டை யில் அமைக்கப்பட்டிருந்த அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் சிலையை சில நாள்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த ஒருவர் அவமரியாதை செய்ததை கண்டித்து 7.2.2025 அன்று மாலை 6 மணி அளவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் மாமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் ப.சுப்பிரமணி அவர்களின் ஏற்பாட்டில் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை எடுத்து கூறுகின்ற வகையில் ஜாபர்கான்பேட்டையில் உள்ள காமராசர் சிலை அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கங்கையம்மன் கோயில் தெரு வழியாக, தந்தை பெரியாரின் புகழ் பெருமையை ஒலி முழக்கமிட்டும், தந்தை பெரியாரின் படங்களை கைகளில் ஏந்தியும் நூற்றுக் கணக்கானோர் சென்று தந்தை பெரியாரின் சிலை அருகில் குவிந்தனர்.
பொறுப்பாளர்களும் பொது மக்களும் அமைக்கப்பட்டிருந்த மேடை மீது ஏறி தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
முக்கிய பொறுப்பாளர்கள் தந்தை பெரியாரின் புகழை எடுத்துக்கூறி உரையாற்றினர்.
நிகழ்ச்சியின் முடிவில் தந்தை பெரியாரின் பெயரில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நிகழ்வில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆய்வு மய்யச் செயலா ளர் வழக்குரைஞர் ஆவடி அந்திரி தாஸ், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மண்டல மாவட்ட கழக செயலாளர்கள் தென் சென்னை கிழக்கு க.கழக குமார், திருவள்ளூர் நெமிலிச்சேரி பாபு, வடசென்னை மேற்கு டி சி ராஜேந்திரன் காஞ்சிபுரம் ஜி கருணாகரன், மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு தென் சென்னை மாவட்ட செயலாளர் சிவா, குன்றத்தூர் 20 ஆவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மதன் குமார் மற்றும் ஜாபர்கான் பேட்டை தந்தை பெரியார் புகழ் பேரணியில் கலந்து கொண்ட கழக தோழர்கள் கழக தென் சென்னை மாவட்ட கழக செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மாவட்ட காப்பாளர் மு.ந.மதியழகன், மாவட்டத் துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன், மாவட்டத் துணைச் செயலாளர் கரு. அண்ணாமலை, கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், ச.மாரியப்பன், இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து, த.ராஜா, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், வழக்குரைஞர் வேலவன், வழக்குரைஞர் சுரேசு,வழக்குரைஞர் அ, அன்பரசன், வழக்குரைஞர் கார்த்திக், வழக்குரைஞர் ராஜன், வழக்குரைஞர் தமிழ், வழக்குரைஞர் சங்கர், வழக் குரைஞர் ரமேஷ், வழக்குரைஞர் க இளவரசன் க, சுப்பிரமணி, ஜெனார்தன், பெரியார் மணி மொழியன், கண்ணன், மூவேந்தன், திருநாவுக்கரசு, ராஜசேகர், குமார் மற்றும் தோழர்கள் கலந்து கொண் டனர்
மாவட்ட துணை செயலாளர் கரு, அண்ணாமலை தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கண்டன உரை நிகழ்த்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக