விடுதலை நாளேடு
Published February 5, 2025

சென்னை ஜாபர்கான்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள தந்தை பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டதற்குப் பதிலாக நேற்று (4..2.2025) மாலை 6.30 மணிக்கு தென் சென்னை மாவட்டக் கழகத் தலைவர் வில்வநாதன் தலைமையில், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் மு.மதியழகன், அரும்பாக்கம் சா.தாமோதரன், விருகை செல்வம், மூவேந்தன், கண்ணன், மு.ஜெயலட்சுமி, அன்பரசு, மணிமொழியன், ஆவடி மாவட்டக் கழக துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக