வெள்ளி, 24 ஜனவரி, 2025

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தென் சென்னை மாவட்டம் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு 14.01.2025  முற்பகல் 10 :45 மணியளவில் மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் தலைமையில் மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர்கள் டி.ஆர். சேதுராமன், மு. சண்முகப்பிரியன், காப்பாளர் மு.ந.மதியழகன் மற்றும் துணைச் செயலாளர் கரு. அண்ணாமலை ஆகியோர் முன்னிலையிலும் மாலை அணிவிக்கப்பட்டது. 

கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் ந.மணிதுரை, மயிலாப்பூர் ஈ.குமார், அய்ஸ் அவுஸ் க.அன்பு, இராயப்பேட்டை கோ.அரி, கோடம்பாக்கம் ச. மாரியப்பன், சூளைமேடு எம்.டி.சி. இராஜேந்திரன், அரும்பாக்கம் த.இராஜா , ச. சந்தோஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக