வெள்ளி, 17 ஜனவரி, 2025

நீதிமன்றங்களில் சமூகநீதி கோரி சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்



Published January 11, 2025
விடுதலை நாளேடு

ஆசிரியர் உரை, திராவிடர் கழகம்

சென்னை, ஜன.11 ‘உயர்நீதிமன்றங்கள் – ‘உயர்ஜாதி நீதி மன்றங்களா?’ என்று மக்களும் சமூகநீதி ஆர்வலர்களும் கேட்கும் நிலையைத் தவிர்க்க வேண்டும் என்பதை விளக்கவும், உயர்நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்க்கவும் ஒரு சமூகநீதி ஆர்ப்பாட்டம் 9.1.2025 அன்று மாலை சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே நிரப்பப்படாமல் இருக்கும் இடங்களுக்கும், அடுத்தடுத்து காலியாக விருக்கும் இடங்களுக்கும் நீதிபதிகளை நியமனம் செய்யும் போது, அதில் நான்கு பார்ப்பனர்களை நியமனம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் கொலிஜியத்திற்கு பரிந்துரைக்கவிருப்பதாக வந்திருக்கும் செய்தி நீதித்துறையில் சமூகநீதிக்கு எதிராக நிலவும் போக்கையே எடுத்துக்காட்டுவதால், அதை விளக்கியும், நீதித்துறை நியமனங்களில் சமூகநீதியை வலியுறுத்தியும் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை மற்றும் மதுரையில் அறவழி ஆர்ப்பாட்டம் 9.1.2025 அன்று நடைபெற்றது.

சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் நேற்று மாலை நடைபெற்ற அறவழி ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை தாங்கி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூகநீதிக்கு எதிரான போக்கு நிலவுவதை விளக்கியும் – சமூகநீதியை வலியுறுத்தியும் உரையாற்றினார்.

சமூகநீதியை வலியுறுத்தி ஒலி முழக்கம்

ஆர்ப்பாட்டத்தில் தொடக்கத்தில் மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி தலைமையில் ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தேவை தேவை நீதித்துறையிலும் சமூகநீதி தேவை, உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் அனைத்து சமூக மக்களுக்கும் பிரதிநிதித்துவம் தேவை தேவை! அரசியலமைப்புச் சட்டத்தை காக்க வேண்டிய நீதிமன்றம்

அரசியலமைப்பு உறுதி செய்யும் சமூகநீதியை மறுப்பதா?

பண்ணையமா? பண்ணையமா? உயர்நீதிமன்றங்கள் பார்ப்பனர்களின் பண்ணையமா? பண்ணையமா?
மூன்று விழுக்காடு பார்ப்பனர்களுக்கு 20 விழுக்காடு பிரதிநிதித்துவமா?
தொண்ணூறு விழுக்காடு மக்களுக்கு உரிமைகளை மறுப்பதா? மறுப்பதா?
உச்சநீதிமன்றமே, உயர்நீதிமன்றங்களே உறுதி செய்! உறுதி செய்!! பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை நீதித்துறையில் உறுதி செய்! உறுதி செய்!!
ஆதிக்கம், ஆதிக்கம், நீதிமன்றங்கள் நீதிமன்றங்கள் – உயர்ஜாதி ஆதிக்கம் உயர்ஜாதி ஆதிக்கம்!
விரோதம் விரோதம்! சமூகநீதிக்கு விரோதம்!! போராடுவோம் போராடுவோம் வெற்றி பெறுவோம் வெற்றிகிட்டும் வரை போராடுவோம்!

தந்தை பெரியார் வாழ்கவே! அண்ணல் அம்பேத்கர் வாழ்கவே! என ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து திராவிடர் கழக சட்டத்துறை தலைவர் வழக்குரைஞர் த. வீரசேகரன் ஆர்ப்பாட்ட வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், திராவிட மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை, சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சேசுபாலன் ராஜன், சமத்துவ வழக்குரைஞர் சங்கப் பொறுப்பாளர் வழக்குரைஞர் பாவேந்தன், திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஆகியோர் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினர். நிறைவாக தமிழர் தலைவர் உரையாற்ற திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி நன்றி கூறினார்.

பங்கேற்றோர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர்கள் பிரின்சு என்னாரெசு பெரியார், ச. இன்பக்கனி, திராவிடர் கழக மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, தலைமை கழக அமைப்பாளர்கள் ஊமை ஜெயராமன், பொன்னேரி வி. பன்னீர்செல்வம், தே.செ. கோபால், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரஷே், வழக்குரைஞர்கள் ஆம்பூர் ஜெ.துரை, துரை. அருண், சேலம் மாவட்டத் தலைவர் வீரமணி ராஜீ, மாவட்டச் செயலாளர் பூபதி, ஆத்தூர் சேகர், கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் திராவிடமணி, திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ. மோகன், ஆத்தூர் சுரேஷ், போளூர் பன்னீர்செல்வம்.

தென் சென்னை: இரா. வில்வநாதன் (மாவட்ட தலைவர்), டி.ஆர். சேதுராமன், கோவி. இராகவன், சா. தாமோதரன், கரு. அண்ணாமலை, நல். இராமச்சந்திரன், எம்.டி.சி. இராசேந்திரன், மு. சேகர், தொழிலாளரணி பாலு, மு.இரா. மாணிக்கம், சோம சுந்தரம், சண்முகபிரியன்.

வடசென்னை: புரசை சு. அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்), கி. இராமலிங்கம், தி.செ. கணேசன், சி. பாசுகர், அயன்புரம் சு. துரைராசு, கோ. தங்கமணி, ப. கோபாலகிருஷ்ணன், ஆ. துரை ராவணன், ஜோதிராமலிங்கம், வாசகர் வட்டம் செல்லப்பன், மாணவர் கழகம் சஞ்சய், பெ.செல்வராஜ் (தொழிலாளரணி)
தாம்பரம் மாவட்டத் திராவிடர் கழகம்: ப. முத்தையன் (மாவட்டத் தலைவர்), கோ. நாத்திகன் (மாவட்ட செயலாளர்), தாம்பரம் சு. மோகன்ராஜ், மா. குணசேகரன், மா. இராசு, சீர்காழி இராமன்னா, எஸ்.ஆர். வெங்கடேசு, மாடம்பாக்கம் அ. கருப்பையா, கன்னடப் பாளையம் மா.சு. இராமச்சந்திரன், ஊரப்பாக்கம் இரா. உத்திரகுமாரன், சந்திரசேகர்.
ஆவடி மாவட்டம்: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்), க. இளவரசன் (மாவட்ட செயலாளர்), கொரட்டூர் கோபால், இரணியன் (எ) அருள்தாஸ், ஜெயராமன், அய். சரவணன், தங்கதுரை, சுந்தர்ராஜன், தமிழ்மணி, நாகராஜ், தமிழ்ச்செல்வன், சி. வஜ்ஜிரவேல், சென்னகிருட்டிணன், பெரியார் மாணாக்கன், வெ. நடராசன், வேல்முருகன், முருகேசன், முத்துக்கிருட்டிணன், உடுமலை வடிவேல், மணிமாறன், முத்தழகு.

கும்மிடிப்பூண்டி மாவட்டம்: புழல் த. ஆனந்தன் (மாவட்ட தலைவர்), வடகரை மு. உதயக்குமார் (ஒன்றிய செயலாளர்), புழல் இரணியன், புழல் சோமு, வடகரை ஜகத் விஜயகுமார், வெ. அருள், (பொன்னேரி தலைவர்)
சோழிங்கநல்லூர் மாவட்டம்: வேலூர் பாண்டு (மாவட்ட தலைவர்), ஆர்.டி. வீரபத்திரன், பி.சி.ஜெயராமன், குகா ஆனந்தராஜ், வெற்றிவீரன், தமிழினியன்.

கழக மகளிரணி: சி.வெற்றிச்செல்வி, தங்கதனலட்சுமி, பூவை செல்வி, பசும்பொன், த.மரகதமணி, நர்மதா, தொண்டறம், ஆனந்தி, கனிமொழி, ரேவதி, ஞானதேவி, பேபி – ஆவடி, தமிழ்மாறன் (பெரியார் பிஞ்சு). ஆகியோர் மற்றும் திரளான பல்வேறு இயக்கங்களை சேர்ந்த வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக