சனி, 9 மார்ச், 2024

திராவிட மாணவர் கழக மாநில பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் - சென்னை

  Published August 14, 2023,விடுதலை நாளேடு

நாங்குநேரியில் நடைபெற்ற கொடூர வன்முறையை கண்டிக்கிறோம்

ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

சென்னை, ஆக. 14 – 12.08.2023 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிட மாணவர் கழக மாநில பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது

நாங்குநேரியில் நடைபெற்ற கொடூர வன்முறையை கண்டித்தும், ஆளுந‌ர் ஆர். என். ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரியும், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 145-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் திராவிட மாணவர் கழக மாநில பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திராவிட மாணவர் கழக மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில் தொடங்குவதற்கு முன்னதாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை மாணவர் கழக மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் சந்தித்து தமிழ்நாடு அரசின் சார்பில் 2023 ஆம் ஆண்டு தகைசால் தமிழர் விருதினை பெறுவதற்காக பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் வருங்கால மாணவர் கழக திட்டப்பணிகள் குறித்தும் கலந்துரையாடினர். 

திராவிட மாணவர் கழக மாநில துணை செயலாளர் செ.பெ.தொண்டறம் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து மாநில பொறியியல் கல்லூரி மாணவர் கழக செயலாளர் தங்கமணி கடவுள் மறுப்பு தெரிவித்தார். மாணவர் கழக மாநில செயலாளர் இரா. செந்தூரபாண்டியன் தொடக்கவுரை நிகழ்த்தினார். திராவிட மாணவர் கழக மாநில பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்திற்கு திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.மேலும் மாணவர் களுக்கு வழிகாட்டுதல் வழங்கி சிறப்புரையாற்றி கலந் துரையாடல் கூட்டத்திற்கு திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா. ஜெயகுமார், ஒரத்தநாடு இரா. குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்பு மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் தங்கள் பகுதி பணிகளையும், வருங்கால வளர்ச்சிப் பணிகளுக்கான பரிந்துரைகளையும் தெரிவித்து கலந்துரையாடினர். சட்டக்கல்லூரி மாணவர் கழக மாநில செயலாளர் ம. இளமாறன் கலந்துரையாடல் கூட்டத்தின் தீர்மானங்களை வாசித்தார்.

திராவிட மாணவர் கழக மாநில பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள் வருமாறு :

தீர்மானம் 1: தமிழ்நாடு அரசின் 2023 ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதினை பெற உள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு திராவிட மாணவர் கழகம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 2023ஆம் ஆண்டு தகை சால் தமிழர் விருது வழங்க இருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 2: செப்டம்பர் 17 அறிவுலக பேராசான் உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 145-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் இனிப்பு மற்றும் துண்டறிக்கைகளை வழங்கி கொண்டாடுவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3: உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 145-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவையொட்டி  பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் கருத்தரங்குகள், தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது

தீர்மானம் 4: திராவிட மாணவர் கழகத்தின் 80-ஆவது ஆண்டு மாநில மாநாட்டினை திருநெல்வேலி, கோவை, சேலம்,வேலூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் ஒரு ஊரை தேர்ந்தெடுத்து நடத்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஒப்புதல் அளிக்குமாறு இக்கூட்டம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 5: நாங்குநேரியில் 12ஆம் வகுப்பு மாணவர் மற்றும் அவரது தங்கை சகமாணவர்களின் கொடூர வன்முறை தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. கல்வி நிலையங்களில் ஜாதி, மத வெறியைத் தூண்ட ஹிந்துத்துவ சக்திகள் மேற்கொண்டு வரும் முயற்சியின் விளைவே இது. அத்தகைய உத்திகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறோம். நாங்குநேரியில் நடைபெற்ற ஜாதிவெறிச் செயலை திராவிட மாணவர் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் மாணவர் களிடம் ஜாதி ஒழிப்பு, சமூகநீதிப் பிரச்சாரத்தைத் தீவிரப் படுத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 6: தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவரும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளில் பெருமளவு மாணவர்களைப் பங்கேற்கச் செய்வது என்று தீர்மானிக் கப்படுகிறது.

தீர்மானம் 7: “நீட் தேர்வு விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன்” என்று தமிழ்நாட்டு மக்களின் நெடுநாள் போராட்டத்துக்கும், உணர்வுக்கும் மாறாக அறிவித்துள்ள தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அறிவிப்புக்கு திராவிட மாணவர் கழகம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாட்டுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படும் ஆளுநரைப் பதவி நீக்கம் செய்வதுடன், நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க. வேண்டுமென குடியரசுத் தலைவரை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

நிறைவாக திராவிட மாணவர் கழக மாநில துணை செயலாளர் சிவபாரதி நன்றியுரை நிகழ்த்தினார்.

பங்கேற்ற திராவிட மாணவர் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள்

செ.பெ.தொண்டறம், வி.தங்கமணி, மு.இளமாறன், பா.கவிபாரதி, திராவிட புகழ், அ.அறிவுச்சுடர், நிலவன், சிவ.பாரதி, வெ,இளஞ்செழியன், ம.சுபாஷ், மு.குட்டிமணி, சிந்தனை சுடர், அ.ஜெ.உமாநாத், இரா.கபிலன், ப. நீளன், பூ.மங்கலலெட்சுமி, நிரஞ்சன், ஜெனித், மு. அய்யப்பன், யுகேஷ், ஆனந்தகுமார், ச.பிரசாந்த், ஆ.அறிவு சுடர், மாணிக்க வசந்த், பிரதீப் வசந்த், ஆதிகேசவன், இன்பதமிழ், துளசிராமன், ஆதி.

திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்கள்

பொறுப்பு மாவட்டங்கள்

வடசென்னை: திருவொற்றியூர், கும்மிடிப் பூண்டி, ஆவடி திருவள்ளூர் – செ.பெ.தொண்டறம் (சென்னை)

தென்சென்னை: சோழிங்கநல்லூர், தாம்பரம் – வி.தங்கமணி (சென்னை)

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், செய்யாறு, திருப்பத்தூர் – வெ.இளஞ்செழியன் (செய்யாறு)

திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், சிதம்பரம், விருத்தாச் சலம் – எஸ்.இ.ஆர்.திராவிடபுகழ் (கள்ளக்குறிச்சி)

ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, அரூர் – ச.மணிமொழி (மத்தூர்)

சேலம், மேட்டூர், ஆத்தூர், நாமக்கல், ஈரோடு, கோபி – த.சிவபாரதி (கோபி)

மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை – பா.கவிபாரதி (உரத்தநாடு)

மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, திருவாரூர், புதுச்சேரி – மு.இளமாறன் (நாகை)

அரியலூர், பெரம்பலூர், கரூர் – சு.ச.திராவிடச் செல்வன் (அரியலூர்)

திருச்சி, துறையூர், இலால்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, இராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி – ஆ.அறிவுச்சுடர் (விருத்தாசலம்)

கோவை, மேட்டுப்பாளையம், நீலமலை, திருப்பூர், தாராபுரம், பொள்ளாச்சி – மு.ராகுல் (கோவை)

திண்டுக்கல், பழனி, கம்பம், தேனி, மதுரை மாநகர், மேலூர், உசிலம்பட்டி – நா.ஜீவா (ஆண்டிப்பட்டி)

இராஜபாளையம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி – சு.இனியன் (தென்காசி)

– ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்

திராவிட மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர்

– இரா.செந்தூரபாண்டியன்

மாநில, செயலாளர், திராவிட மாணவர் கழகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக