வெள்ளி, 29 மார்ச், 2024

இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் – ஏன்?’ தெரு முழக்கம் பெரு முழக்கமாகட்டும்” மயிலாப்பூரில் மகளிர் அணி சார்பில் பரப்புரை கூட்டம்


“தெருமுழக்கம் பெருமுழக்கம் ஆகட்டும்” கழகப் பரப்புரைக் கூட்டம்

விடுதலை நாளேடுPublished March 29, 2024

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி,
மகளிர் பாசறை சார்பில் மயிலாப்பூர் பகுதியில்
“தெருமுழக்கம் பெருமுழக்கம் ஆகட்டும்” கழகப் பரப்புரைக் கூட்டம்

சென்னை, மார்ச் 29– தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி, மகளிர் பாசறை சார்பில் மயிலாப்பூர் பகுதியில் உள்ள டாக் டர் அம்பேத்கர் பாலம் அருகில் 21.03.2024 மாலை 6.30 மணி அளவில் அன்னை மணியம்மையா ரின் 105 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ”இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் – ஏன்?’ தெரு முழக்கம் பெரு முழக்கமாகட்டும்” என்கின்ற தலைப்பில் தேர்தல் பரப்புரை கூட்டம் தென் சென்னை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு.பவானி தலைமையிலும் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்த சாரதி, மாவட்ட மகளிர் அணி தலைவர் வி. வளர்மதி, செயலாளர் பி. அஜந்தா மற்றும் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குமீர் மு.பசும்பொன், மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன், ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. மாவட்ட திராவிட மாணவர் கழக அமைப்பாளர் வி.யாழ்ஒளி வரவேற்புரை ஆற்றினார்.  வி.தங்கமணி  இணைப்புரை வழங்கினார். கழக துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி தொடக்க உரையாற்றினார்.

திராவிட முன்னேற்றக் கழகத் தின் 125ஆவது வட்ட கழக செய லாளர் அ.தவநேசன் இந்தியா கூட் டணிக்கு வாக்கு கேட்டு உரையாற் றினார். கழகத் துணை பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரசு பெரியாரின் உரைக்குப்பின் கிராமப் பிரச்சாரக் குழு கழக மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் “மாநில அரசின் சம்பளத்தை பெற் றுக்கொண்டு (தமிழ்நாடு) மாநில அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநரின் முகத்திரையை கிழித் தெறிந்தார். ஆளுநர் சம்பளம் பெறு வது மாநில அரசிடம், ஆனால் வாதாட வழக்குரைஞரை ஒன்றிய அரசு நியமிக்கிறது. இது போன்ற வேடிக்கைகளை எடுத்துரைத்தார். தமிழ்நாடு அரசின் திட்டங்களை ஒன்றிய அரசு திட்டமாக சித்த ரித்து பம்மாத்து வேலை செய்கிறது என்றும், தமிழ்நாடு அரசு செய்து முடித்த நலத்திட்டங்களில் ஒரு சிலவற்றை இப்பொழுது செய்யப் போவதாக அறிக்கை விடுகிறது ஒன்றிய அரசு. நிறுவனங்களையும் தொழிற்சாலைகளையும் மிரட்டி டிஜிட்டல் முறையில் பணம் பெற்று பெரும் ஊழல் செய்து வருகிறது ஒன்றிய அரசு, வட மாநிலங்கள் முழுக்க வன்முறை களும், மதத்தின் பெயரால் படு கொலைகளும், பாலியல் வன்கொடு மைகளும் நடைபெற்று வருகின் றன. வன்கொடுமை செய்பவரை பாதுகாக்கிறது ஒன்றிய அரசு என்று கூறினார்.

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் இந்தியா முழுக்க மகளிர் உரிமை தொகையும், மகளிருக்கு இட ஒதுக்கீடும் வழங் கப்பட உள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 10 லட்சம் வங்கி கடன் வழங்கப்பட உள்ளது. கல்வி கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளது, பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்பட உள்ளது, “நீட்” ஒழித்துக் கட்டப்படவுள்ளது. ஆகையால் இந்தியா கூட்டணியை ஆதரிப்போம்! இந்த தென் சென்னை நாடாளுமன்ற தொகு தியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் திராவிட முன்னேற் றக் கழக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து உதய சூரியன் சின்னத்தில் முத்தரையிட்டு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள் கிறேன்’ என்று கூறி சிறப்பான தொரு உரையாற்றினார்.

மாமன்ற உறுப்பினர் ஏ.ரேவதி வருகை தந்து சிறப்பித்தார். உரை யாற்றியவர்களுக்கு பயனடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது. மு.பாரதி, எஸ். பிருந்தா, வி. சகானா பிரியா, வி.நிலா. ம. சுவாதி, ஜெய சங்கரி, எஸ். தமிழினி, தங்க. தனலட்சுமி, வடசென்னை மகளிர் பாசறை தலைவர் த.மரகதமணி உள்ளிட்ட ஏராளமான மகளிர் தோழர்களும், தம்பிதுரை(திமுக), மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.சண்முகப்பிரியன், தென் சென்னை மாவட்ட இளை ஞரணி செயலாளர் ந.மணிதுரை, துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து, மயிலை ஈ.குமார், கோ. தங்கமணி, தரமணி ராஜி, ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க. தமிழ்ச்செல்வன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், வட சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் நா.பார்த்திபன், இரா.அருள், வை.கலையரசன், க.கலைமணி, ஓட்டுநர் மகேஷ், உடுமலை வடிவேலு, ஆ.கவின், பேரறிவன் சேய்,திராவிட முன்னேற்றக் கழக 125ஆவது வட்ட உள்ளிட்ட தோழர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்த னர்.

இறுதியாக ஜெ.சொப்பனா அவர்கள் நன்றி கூறினார். கூட்டம் முடிந்த பின் வந்திருந்த அனை வருக்கும் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு.பவானி இல்லத்தில் இரவு உணவு வழங்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக