ஞாயிறு, 15 அக்டோபர், 2023

தமிழர் தலைவர் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் முதல் பொருளாளர் தளபதி அர்ச்சுனன் மன்றாடியார் நூற்றாண்டு விழா


19
சென்னை,அக்.15- திராவிடர் கழகத்தின் முதல் பொருளாளர் தளபதி அர்ச்சுனன் மன்றாடியார் நூற்றாண்டு விழா நேற்று (14.10.2023) மாலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தளபதி அர்ச்சுனன் மன்றாடியாரின் சகோதரரின் மகனும் பழையகோட்டை பட்டக்காரர் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.எஸ்.ராஜ்குமார் மன்றாடியார், அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய அனைவருக் கும் தளபதி அர்ச்சுனன் மன்றாடியார் குடும்பத்தினர் சார்பில் பயனாடை அணிவிக்கப்பட்டு, அவர்தம் குடும்பத்தினரில் பெண்கள் தளபதி அர்ச்சுனன் மன்றாடியார் படத்துடன் நினைவுப்பரிசை வழங்கி சிறப்பு செய்தார்கள்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தளபதி அர்ச்சுனன் மன் றாடியார் பேரன் நவீன் மன்றாடியார் பயனாடை அணிவித்தும், தளபதி அர்ச்சுனன் மன்றாடியார் மருமகள் மனோ மன்றாடியார் நினைவுப்பரிசையும் வழங்கி சிறப்பு செய்தார்கள்.

கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு அரவிந்த் சபாபதி, தளபதி அர்ச்சுனன் மன்றாடியார் சகோதரியின் மகள் கவுரி மோகன்ஆகியோரும்,

தளபதி அர்ச்சுனன் மன்றாடியாரின் சகோதரரின் மகன் என்.எஸ்.எஸ்.ராஜ்குமார் மன்றாடியார், சரவணன் சுகுமார், தளபதி அர்ச்சுனன் மன்றாடி யாரின் பேரன் செந்தில் சின்னசாமி, கவுதம் முத்துக்குமார் இராமலிங்கம்,   கொள்ளுப்பேரன்கள் சுதேவ் சிவக்குமார், ஜெயேந்திரா மன்றாடியார், ராஜேஷ்விஜய்நடராஜ் ஆகியோர் சிறப்பு விருந் தினர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய் தனர்.

தளபதி அர்ச்சுனன் மன்றாடியாரின் மகள்கள் இந்திராணி சின்னசாமி, அருணா குழந்தைவேலு, தளபதி அர்ச்சுனன் மன்றாடியார் சகோதரரின் மருமகள் ஜெயசிறீ மன்றாடியார்,  பேத்திகள் பிரவீனா அரவிந்த், அகல்யா ரமேஷ், சரண்யா ராம் குமார், கொள்ளுப்பேத்தி பிரதுலா கார்த்திக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி சிறப்பு செய்தார்கள்.

தளபதி அர்ச்சுனன் ஆற்றிய கழகப்பணிகள், மாநாட்டு உரைகள் உள்ளிட்ட பல்வேறு வரலாற் றுத் தகவல்களை எடுத்துரைத்து கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்க உரை ஆற்றினார்.

திமுக. சுற்று சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி, வி.அய்.டி. பல்கலைக் கழக நிறுவனர்-வேந்தர் கோ.விசுவநாதன், தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன்,  ‘இனமுரசு’ சத்யராஜ், மாநிலங் களவை திமுக உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராசு, தமிழ்நாடு செய்தித்துறை, தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் கருத் துரை-பாராட்டுரை வழங்கினார்கள்.

 சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி வழியாக வாழ்த்துரை ஆற்றினார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தளபதி அர்ச்சுனன் மன்றாடியார் படத்தைத் திறந்து வைத்து தலை மையுரை நிறைவுரை ஆற்றினார்.

எஸ்.பி.எம். கல்வி நிறுவனங்கள் பழையகோட்டை நவீன் மன்றாடியார் நன்றியுரையாற்றினார்.

திராவிடர் கழகத்துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார். தளபதி அர்ச்சுனன் நூற்றாண்டு நிறைவு விழாவில் தளபதி அர்ச்சுனன் மன்றாடியார் வழித் தோன்றல்கள், அவர்தம் குருதிக் குடும்பத்தினர், உறவினர்கள், கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேரார்வத்துடன் பலர் மற்றும் வாணவராயர், பொள்ளாச்சி மகாலிங்கம் மகன் மாணிக்கம், நீதிக்கட்சி அரசின் மேனாள்  முதல மைச்சர் சுப்பராயன் பேரன் மோகன் குமாரமங்கலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் முத்தமிழறிஞர் கலைஞரின் மகள் செல்வி மற்றும் திமுக பொறுப்பாளர்கள்,  காங்கிரசு கட்சிப் பொறுப்பாளர்கள், திரைக் கலைஞர் சிபிராஜ், திராவிடர் கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், வழக் குரைஞர் சு.குமாரதேவன், வழக்குரைஞர் ஆ.வீரமர்த் தினி, மருத்துவர் இரா.கவுதமன், செல்வ.மீனாட்சி சுந்தரம், தே.செ.கோபால், தாம்பரம் ப.முத்தையன், இரா.வில்வநாதன், செ.ர.பார்த்தசாரதி, கோ.வீ. ராகவன், சா.தாமோதரன், தே.ஒளிவண்ணன், வேட் டவலம் பி.பட்டாபிராமன் மற்றும் கழகப்பொறுப்பா ளர்கள் பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக