February 03, 2023 • Viduthalai
அறிஞர் அண்ணா அவர்களின் 54-ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3.2.2023) காலை 10.30 மணிக்கு சென்னை காமராசர் சாலை மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் அவரது நினைவிடத்தில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், வழக்குரைஞர் சு.குமாரதேவன், வடசென்னை மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன், மாவட்டச் செயலாளர் தி.செ.கணேசன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன், சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் மு.சண்முகப்ரியன் மற்றும் தோழர்கள் பாலு, மடிப்பாக்கம் பி.சி.ஜெயராமன், பூவை க.தமிழ்செல்வன், போரூர் தங்கதுரை, கொரட்டூர் கலைஞர் பகுத்தறிவுப் பாசறை கோபால், படப்பை சந்திரசேகர், கோ.வீ.ராகவன், சீர்காழி ராமண்ணா, மாரியப்பன், பூவை பெரியார் மாணாக்கன், அரும்பாக்கம் சா. தாமோதரன், கி.இராமலிங்கம், வாசகர் வட்டம் ஜனார்த்தனம், செல்லப்பன், க.கலைமணி, அருள், அண்ணா மாதவன், சந்திரசேகர் மற்றும் தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக