களப்பணியில் கழகப் பொறுப்பாளர்கள் தீவிரம்
தென்சென்னை
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 7.1.2023 அன்று மாலை 4.30 மணி அளவில், மயிலாப்பூர் 'சக்தி திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் இரா .வில்வநாதன் அவர்கள் தலைமையிலும் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மாநில அமைப்பு செயலாளர் வி. பன்னீர்செல்வம் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கி சிறப்பித்தார்.
மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடர் பரப்புரை பயணம் குறித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் மயிலாப்பூர் பரப்புரை பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்தும் ஆலோசனைகளையும் கருத்துகளையும் கூறி வழிகாட்டுரை வழங்கினார்.
மாவட்ட துணை செயலாளர்கள் கோ.வீ.ராகவன் மற்றும் சா. தாமோதரன், மண்டல இளைஞர் அணி அமைப்பாளர் மு. சண்முகப்பிரியன், மாவட்ட இளைஞரணி தலைவர் ச.மகேந்திரன், இளைஞர் அணி அமைப்பாளர் இரா.பிரபா கரன், கோடம்பாக்கம் பகுதி பொறுப்பாளர் ச.மாரியப்பன், சூளைமேடு பகுதி பொறுப்பாளர் ந.இராமச்சந்திரன், மயிலாப்பூர் பகுதி பொறுப்பாளர் பெரியார் யுவராஜ், திருவல்லிக்கேணி பகுதி பொறுப்பாளர் எஸ். அப்துல்லா, நொச்சி நகர் ச.துணைவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துகளை கூறினர்.
பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம்: 1
சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் மேற்கொண்டு வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மயிலாப்பூரில் சிறப்பான வரவேற்பு அளிப்பதன முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம்: 2
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரை ஆற்றும் தொடர் பரப்புரையை கூட்டத்தை மயிலாப்பூரில் 13.02.2023 அன்று மிகுந்த எழுச்சியோடு நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம்: 3
தொடர் பரப்புரை பயணக் கூட்டத்தை விளக்கி 12.02.2023 அன்று திராவிட மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை அவர்களை கொண்டு தெருமுனை கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
இளைஞர் அணி தலைவர் ச. மகேந்திரன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக