December 27, 2022 • Viduthalai
கடந்த 25.12.2022 அன்று சென்னை பெரியார் திடலில் ''கற்போம் பெரியாரியம்'' என்ற தலைப்பில், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம், வரலாற்று நிகழ்வுகள், நடப்பு நிகழ்வுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சிப் பட்டறையில் சென்னை மாநகர் முழுவதிலுமிருந்து ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். இப்பயிற்சிப் பட்டறையில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், எழுத்தாளர் மஞ்சை வசந்தன் ஆகியோர் மாணவர்களுக்கு வகுப்பெடுத்தனர். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். உடன் கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஆகியோர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக