ஞாயிறு, 23 ஜனவரி, 2022

கண்மதியன் தாயார் பாக்கியம் 101 ஆவது பிறந்த நாள் விழா


 சென்னை,ஜன.3- கவிஞர் கண்மதியனின் தாயார் பாக்கியம் 101-ஆம் ஆண்டு பிறந்த நாள், கண்மதியன் கவிதைகள் 4 நூல் வெளி யீட்டு விழா 02-1-2022 அன்று காலை 11.30 மணியளவில் கோடம்பாக்கம் நயாகரா ஓட்டலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனை வரையும் கவிஞர் கண்மதியன் வரவேற்று உரையாற்றினார்.

மேனாள் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சு.இராசேசுவரன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கண்மதியன் கவி தைகள் நூலினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்  பெற்றுக் கொண்டார்.

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், பேராசிரியர் மறைமலை இலக்குவனார் ஆகியோர் அன்னையாரின் சிறப்புகளை எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார்கள்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அன்னை யாருக்கு சிறப்பு செய்து, தனது உரையில் தம்மம்பட்டியில் பிறந்த சாதாரண குடும்பத்தி லிருந்து வந்தவர் என்றாலும் 101-ஆம் ஆண்டு பிறந்தநாளில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். தம்மம்பட்டி என்று சொல்லும் போது அந்த ஊர்  தாக்குதலுக்கு உள்ளான ஊராகும். பகுத்தறிவு கவிஞர் கண்மதியன் தனது அன்னையாரை சிறு குழந்தை போல பாதுகாத்து பேணி வந்து - அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். வேரும் சரியான முறையில் உள்ளது விழுதுகளும் சரியாகவே உள்ளது என்று நெகிழ்ந்து வாழ்த்துரை ஆற்றினார்.

திருச்சியில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு தன்னுடைய குடும்பத்தின் சார்பாக கவிஞர் கண்மதியன்  கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ரூ.25,000/- நன்கொடையாக வழங்கினார்.

நிகழ்ச்சியில் ராஜாராம் அய்.ஏ.எஸ். செல்வராசு அய்.ஏ.எஸ். பேராசிரியர் அரங்க சாமி, புலவர் பா. வீரமணி, வழக்குரைஞர் ரவிச்சந்திரன், சென்னை மண்டல செயலாளர் தே.செ. கோபால், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ.சுரேஷ், வடசென்னை மாவட்ட இளை ஞரணி தலைவர் தளபதி பாண்டியன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், அரும்பாக்கம் தாமோதரன், க.தமிழ்ச் செல் வன், இளைஞரணித் தோழர்கள் கோபால கிருஷ்ணன், பாலசந்தர், வெற்றிச்செல்வன், க.கலைமணி, சுரேஷ், அன்பரசு மற்றும் முக்கிய பிரமுகர்கள், குடும்பத்தினர் கலந்துக் கொண்டனர்.    இறுதியாக முனைவர் த.கு.திவாகரன் நன்றி கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக