சனி, 1 ஜனவரி, 2022

2021ஆம் ஆண்டில் கழக முக்கிய நிகழ்வுகள்

 

 02.01.2021 தமிழ்நாடும் - தேர்தல்  nஅரசியலும் சிறப்புக் கூட்டம்

திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடும் தேர்தல் அரசியலும் எனும் தலைப்பில்  சிறப்புக் கூட்டம் காணொலி வழியாக நடைபெற்றது. கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

10.01.2021 சென்னை மண்டலத்தின்  பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

சென்னை மண்டலத்தின் சார்பில்  பெரியாரியல் பயிற்சிப் பட்டறை சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. ‘இந்துத்துவாவும் மதவெறி அபாயமும்‘ என்னும் தலைப்பில் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (காணொலி வழியாக) மாணவர்களுக்கு வகுப்பு நடத்தினார்.

16.01.2021 திராவிடப் பொழில் வெளியீட்டு விழா

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) பதிப்பித்துள்ள திராவிடப் பொழில் ஆய்விதழின் அச்சுப் பிரதி மற்றும் இணைய இதழின் (பீக்ஷீணீஸ்வீபீணீஜீஷீக்ஷ்லீவீறீ.ஜீனீu.மீபீu) வெளியீட்டு விழா இணைய வழியில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

16.01.2021 திராவிடர் திருநாள்  பொங்கல் விழா

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் சென்னை பெரியார் திடலில் திராவிடர் திருநாள், பொங்கல் விழா தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு விழா, பெரியார் விருது வழங்கும் விழா சிறப்புடன் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெரியார் விருது வழங்கி பாராட்டுரையும், சிறப்புரையும் ஆற்றினார். 

13.02.2021

சமூகநீதி பறிப்பு  சிறப்புக் கூட்டம்

ஒன்றிய பா.ஜ.க அரசின் சமூகநீதி பறிப்பும், தமிழ்நாடு அரசின் மவுனமும் எனும் தலைப்பில் காணொலி வழியாக சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

 27.02.2021

தோழர் தா.பாண்டியன் உடலுக்கு தமிழர் தலைவர்  மரியாதை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் அவர்களின் மறைவையொட்டி அவரது உடலுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

28.02.2021 ‘‘Periyar E.V.Ramasamy A MAN AHEAD OF  HIS TIME’ நூல் வெளியீட்டு விழா

‘Periyar E.V.Ramasamy A MAN AHEAD OF HIS TIME’  எனும் ஆங்கில நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் புத்தகக்காட்சியின் வெளி அரங்கில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 06.03.2021 தமிழர் தலைவருக்கு டாக்டர் நரேந்திர 
தபோல்கர் நினைவு விருது

மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவாக அமெரிக்கவாழ் மராட்டியர்களால் உருவாக்கப்பட்ட மராட்டிய அறக்கட்டளை (Maharashtra Foundation) ஆண்டுதோறும் பல துறைகளில் சமூகப் பங்களிப்பு ஆற்றிவரும் சிறப்பாளர்களுக்கு டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு (Dr.Narendra Dabolkar Memorial Award) விருதுவழங்கி வருகிறது. 2021 ஆம் ஆண்டுக்கான விருது திராவிடர் கழகத்தின் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கப்பட்டது

10.03.2021 அன்னை மணியம்மையார்  102 ஆம் ஆண்டு  பிறந்த நாள் விழா

அன்னை மணியம்மையார் 102 ஆம் பிறந்த நாள் விழா  தமிழ்நாடெங்கும் நடைபெற்றது. கழகக் குடும்பத்தினர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும் ஒலி  முழக்கங்கள் எழுப்பியும் சிறப்பாகக் கொண்டாடினர். அமெரிக்காவிலும் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

16.03.2021 அன்னை மணியம்மையார்  43 ஆம் ஆண்டு நினைவு நாள்

அன்னை மணியம்மையார் நினைவு நாளில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சென்னை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு கழகத் தோழர்கள், மகளிர் தோழர்கள் மாலை அணிவித்தனர். பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.  


07.04.2021 முதுபெரும் பெரியார் தொண்டர்  bவே.ஆனைமுத்து அவர்களுக்கு  திராவிடர் கழகத் தலைவர் இறுதி மரியாதை

06.04.2021 அன்று உடல்நலக் குறைவினால் மறைவுற்ற முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் வே.ஆனைமுத்து அவர்களின் உடலுக்கு  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தாம்பரம் இரும்புலியூரில் உள்ள அவரது இல்லத்தில் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

04.05.2021 தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு  தமிழர் தலைவர் நேரில் வாழ்த்து

07.05.2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்கும்  தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை அவரது இல்லத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

 13.05.2021 இடஒதுக்கீடுக்கு ஆபத்து - சிறப்புக் கருத்தரங்கம் 

திராவிடர் கழகத்தின் சார்பில் இடஒதுக்கீடுக்கு ஆபத்து - சிறப்புக் கருத்தரங்கம் காணொலி மூலம் நடைபெற்றது. கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரை ஆற்றினார்.

14.05.2021 முதலமைச்சர் நிவாரண நிதிக்கு  பெரியார் அறக்கட்டளை நன்கொடை

பெரியார் அறக்கட்டளைகள் சார்பில் முதலமைச்சர் கரோனா பொது நிவாரண நிதிக்கு தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ரூபாய் 10 லட்சம் வழங்கினார்.

22.05.2021 கழகத் தலைவருடன் அயலகத் திராவிடக் கல்வியாளர்கள் கலந்துரையாடல்

காணொலி மூலம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன் தந்தை பெரியார் -  திராவிட இயக்கக் கொள்கைகளை தரணியெங்கும் கொண்டு செல்லும் வழிகள் குறித்து அயல் நாடுகளில் வாழும் திராவிடச் சிந்தனைச்  செல்வர்கள் கலந்துறவாடினர். 

29.05.2021 பெரியார் மணியம்மை மருத்துவ மனையில்  சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மய்யம்

பெரியார் திடலில் இயங்கி வரும் பெரியார் மணியம்மை மருத்துவமனையில்  தமிழ்நாடு மருத்துவம்  மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில்  கரோனா சிகிச்சைப் பயன்பாட்டிற்கான சித்த மருத்துவ சிகிச்சை மய்யத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் திறந்து வைத்தார். 

26.06.2021 கன்னட திரைக்கலைஞர் சேத்தன் சிறப்புரை

பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பில் காணொலி வழியாக கன்னட திரைக்கலைஞர் சமூக நீதி குறித்து சிறப்புரை ஆற்றினார். பன்னாட்டு மய்ய இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன் அறிமுக மற்றும் முடிவுரை நிகழ்த்தினார்.

01.07.2021 நீட் தொடர்பான வழக்கு குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிகள் கூட்டம்

நீட்டை ஆதரித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க. வழக்கு தொடுத்துள்ள நிலையில் அதனை எதிர்கொள்ளும் வகையில் திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிகள், அமைப்புகள் கூட்டம் சென்னை பெரியார் திடலில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  


15.07.2021 நூற்றாண்டு நாயகர் தோழர் சங்கரய்யாவிற்கு தமிழர் தலைவர் நேரில் வாழ்த்து

நூறாவது (100) அகவை காணும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்களை அவரது இல்லத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சந்தித்து  பொன்னாடை அணிவித்து, இயக்க நூல்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்வித்தார்.

 17.07.2021 பெரியார் பண்ணையின் திராவிட நாற்றுகள்  கலந்துரையாடல் தமிழர் தலைவர் வாழ்த்துரை

அமெரிக்க பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கழக மண்டலங்கள் வழியாக நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி வகுப்பில் பங்கு பெற்று முதல் பரிசு பெற்ற பெரியார் பண்ணையின் திராவிட நாற்றுகளான இளந்திராவிட சிங்கங்களை ஒருங்கிணைத்து காணொலி வழி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கழகத் தலைவர் ஆசிரியர்கி வீரமணி  திராவிட நாற்றுகளுக்கு, வாழ்த்துரை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

19.07.2021 தொலைப்பேசிகள் உளவு  -  கண்டன ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல் நாட்டு நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ்  உளவுச் செயலியின் மூலம் நம் நாட்டு அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலரின் தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்படுவதைக் கண்டித்து மே  17  இயக்கத்தின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே  நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் பங்கேற்றன. திராவிடர் கழகத்தின் சார்பில் தோழர்கள் பங்கேற்க கழகப் பொருளாளர் வீ.குமரேசன் கண்டன உரையாற்றினார்.

07.08.2021 முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நாள் கருத்தரங்கம்

முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர்  3 ஆம் ஆண்டு நினைவு கருத்தரங்கம் காணொலி வழியாக திராவிடர் கழகத்தின் சார்பில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அனைத்து கட்சித் தலைவர்கள் உரையாற்றினர்.  

14.08.2021 அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக  அரசாணை:  முதலமைச்சர் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை

தந்தை பெரியாரின் கொள்கையைச் சட்டமாக்கியவர் கலைஞர்; அவர் தனயன் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்து ஜாதியினரையும் உள்ளடக்கிய 58 பேருக்கு அர்ச்சகர் பணி ஆணை வழங்கி, அதனைச் செயல்படுத்தி  தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி சரித்திரம் படைத்து  தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில்  வெற்றி மலர்கள் தூவி மலர்வளையம் வைத்துமரியாதை செலுத்தினார். கழகத் தலைவர் ஆசிரியர் முதலமைச்சர் அவர்களை வரவேற்று இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பெரியார் அருங்காட்சியகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, புத்தகங்களை வழங்கி வரவேற்றார்.

19.08.2021 ஜாதி ஒழிப்பு திசையில் சாதனை படைத்த சரித்திரத்திற்கு பாராட்டு- சிறப்புக் கூட்டம்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் படைத்த சட்டத்தை அமலாக்கி தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளினை அகற்றி ஜாதி ஒழிப்புத் திசையில் சாதனை படைத்த சரித்திரத்திற்குப் பாராட்டு  எனும் தலைப்பில் திராவிடர் கழகத்தின் சார்பில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பு பாராட்டுக் கூட்டம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

4.9.2021 தலைமைச் செயற்குழு

சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக செயற்குழு மற்றும் அனைத்து கழக அமைப்புகளின் பொறுப்பாளர்களின் மாநில அளவிலான கூட்டம் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

6.9.2021 சமூக நீதி நாள்

தந்தை பெரியார் பிறந்தநாள் சமூக நீதிநாள் என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பிற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சரை "சமூகநீதிக்கான சரித்திர நாயகர்"என்றே இனி அழைப்போம் என்றும் ஆசிரியர் அறிவித்தார்.


17.9.2021 தந்தை பெரியார் பிறந்தநாள்

உலகம் முழுவதும் தந்தை பெரியார் 143ஆம் ஆண்டு பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் பலர் பங்கேற்றனர். "கற்போம் - பெரியாரியம்" மற்றும் பெரியார் பற்றிய ஜப்பானிய மொழிப் புத்தங்கள் வெளியிட்டப்பட்டன.

2.10.2021 கருத்தரங்கம் -  நூல்கள் அறிமுகம்

தஞ்சாவூரில் திராவிடர் கழக சார்பில், “நீட்” தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் - ஏன்? எதற்கு? - கருத்தரங்கம், "கற்போம் பெரியாரியம்", “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரையாற்றினார்.

12.10.2021  ஆய்வுரை நூல் வெளியீடு

சென்னை, பெரியார்திடல், அன்னை மணியம்மையார் அரங்கில் க.தமிழ்மல்லன் அவர்களின் “இராவண காவிய ஆய்வுரை” நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நூலினை வெளியிட்டு கழகத் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

யாற்றினார்.

 30.10.2021 பயிற்சிப் பட்டறை

சென்னை பெரியார் திடல், நடிகவேள் இராதா மன்றத்தில் ‘உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் பங்கு’ பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைத்து தமிழர் தலைவர் சிறப்புரையாற்றினார்.

1.11.2021 பட்டமளிப்பு விழா

மெக்கன்ஸ் ஊட்டி கட்டடக் கல்லூரி 8ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பட்டமளிப்பு விழா உரையாற்றி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.

3.11.2021 ரஷ்ய தூதர் வருகை

சென்னை பெரியார் திடலுக்கு ரஷ்ய தூதர் மேதகு அலெக் அவுதேவ் வருகை புரிந்தார். ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து  நினைவுப் பரிசு வழங்கினார். மேதகு தூதருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து இயக்கப் புத்தகங்களை வழங்கினார். 

9.11.2021

தமிழர் தலைவர் ஆசிரியர் வேண்டுகோள்படி சென்னையில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கல் மற்றும் நிவாரணப் பணிகளில் கழக இளைஞரணி மாணவர் கழகத்தினர் ஈடுபட்டனர். வெள்ள இடர் தீரும் வரை இப்பணி தொடர்ந்தது.

25.11.2021

டிசம்பர் 15 முதல் டிசம்பர் 23 வரை ‘விடுதலை’ சந்தா சேர்ப்பு வாரம் என்று இயக்கமாக நடத்துமாறு கழகத்தின் அனைத்து அணியினரும் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.


2.12.2021 சுயமரியாதை நாள்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 89ஆம் ஆண்டு பிறந்தநாளை உலகம் முழுவதும் கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆசிரியர் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று "அயோத்தி தாசர் சிந்தனைகள்" புத்தகத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

13.12.2021 பெரியார் பன்னாட்டு அமைப்பு சார்பில் சுயமரியாதை நாள்

பெரியார் பன்னாட்டமைப்பு (அமெரிக்கா) சார்பில் கழகத் தலைவர் ஆசிரியர் 89ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா- உலக திராவிடர் மகளிர் மாநாடு காணொலி வாயிலாக சிறப்பாக நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு "பகுத்தறிவுப் போராளி" விருது வழங்கப்பட்டது.

20.12.2021 நூற்றாண்டு விழா

சென்னை பெரியார் திடலில் இனமானப் பேராசிரியரின் நூற்றாண்டு விழா திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் விழாவுக்கு தலைமை தாங்கினார். கருத்தரங்கில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

23.12.2021 பெரியார் நினைவுநாள் கருத்தரங்கம்

தந்தை பெரியார் 48ஆவது நினைவுநாளையொட்டி நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. "சுயமரியாதைச் சுடரொளிகள்" (3 தொகுதிகள்)  நூலினை  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் பெற்றுக் கொண்டார்.

24.12.2021 பெரியார் நினைவுநாள் 

தந்தை பெரியார் 48ஆவது நினைவுநாளை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. அய்யா - அம்மா நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை.

26.12.2021 முதுபெரும் தோழருக்கு வாழ்த்து 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் 97 வயது பிறந்தநாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

27.12.2021 தா.பாண்டியன் படத்திறப்பு - நினைவேந்தல்

தமிழ்நாடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை பெரியார் திடலில் தா.பாண்டியன் படத்திறப்பு - நினைவேந்தல் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் தா.பாண்டியன்  உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை.

28.12.2021கருத்துக் கோவை

சென்னை மாநிலக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை சார்பில் தந்தை பெரியார் நினைவுநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவர் மத்தியில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஒரு மணி நேரம் உரையாற்றினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக