சனி, 16 மே, 2020

கால்டுவெல்' 206 வது பிறந்தநாள்

07.05.20 முற் பகல் 10.30 மணி அளவில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக 'கால்டுவெல் அவர்களின்' 206 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
நேபாள நாட்டைச் சேர்ந்த 'ஹட்சன்' என்பவர் இந்திய மொழிகள் அனைத்தும் ஆரிய மொழி சேர்ந்தது என்று ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்டார்.
இந்த மோசடி ஆய்வை வெளிப்படுத்துவது போன்ற வகையில்....
தென்னிந்திய மொழிகளை ஆய்வு செய்த கால்டுவெல் அவர்கள் தென்னிந்திய மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தை சேர்ந்தது ஆரிய மொழிக்கும் திராவிட மொழிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை அறிந்து "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" எனும் மிக நீண்ட ஆய்வு நூலை எழுதி வெளியிட்டார்.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: Parthasarathy Rationalist

''மொழி நூலானது உலக மொழிகள் எல்லாவற்றையும் தழுவும் ஒரு பொதுக்கலை. உலக மொழிகள் எல்லாவற்றையும் ஆரியம் (Aryan) ,சேமியம் (Semitic), துரேனியம் (Turanian) என்னும் முப்பெருங் குலங்களாகப் பிரித்துள்ளார் மாக்கசு முல்லர்.
அவற்றுள் துரேனியத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் திராவிடக் குடும்பத்தின் மொழிகளைத் திறம்பட வகுத்துக் காட்டியவர் கால்டுவெல்.
இங்ஙனமே பிறரும் பிற குடும்பங்களை வகுத்துக் காட்டி உள்ளனர். மேற்கூறிய முக்குலங்கட்கும் உள்ள தொடர்பை ஆராய்வதே இந்நூலின் நோக்கம்.
அவற்றுக்கொரு தொடர்புண்டென்று.அஃதாவது அம்மூன்றும் ஒரு குலத்தினின்றும் கவைத்திருக்க வேண்டுமென்று சென்ற நூற்றாண்டிலேயே மாக்கசு முல்லர் (Max Muller) திடமாகக் கூறிவிட்டார்.
அம்மூலத்திற்குத் திராவிடம் மிக நெருங்கியதென்று கால்டுவெல் கூறியுள்ளார்.இக்கூற்றை என்னாலியன்ற வரை முயன்று மெய்ப்பித்திருக்கிறேன் ''
















































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக