ஞாயிறு, 10 மே, 2020

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 129 வது பிறந்தநாள்
29.4.20 முற் பகல் 11.00 மணி அளவில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 129 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது
புரட்சிக்களம் பாடிய கவிஞன்
வானின் வண்ணம் பாடிய கவிஞன் வாழ்வின் வசந்தம் பாடிய கவிஞன் அழகின் மயக்கம் பாடிய கவிஞன் அருவியின் அழகைப் பாடிய கவிஞன்
மலையின் சிகரம் பாடிய கவிஞன் கலையின் உணர்வைப் பாடிய கவிஞன்
நிலத்தின் நிலையைப் பாடிய கவிஞன்
நீரின் பெருமை பாடிய கவிஞன் கடலின் அலையைப் பாடிய கவிஞன்
உடலின் தன்மை பாடிய கவிஞன் காதல் சுகத்தைப் பாடிய கவிஞன் காம சுரத்தைப் பாடிய கவிஞன் மலரின் மணத்தைப் பாடிய கவிஞன்
மாந்தரின் மனதைப் பாடிய கவிஞன்
இயற்கை எழிலைப் பாடிய கவிஞன்
இல்லாத இறையைப் பாடிய கவிஞன் என்ற வகையில் எண்ணற்ற கவிஞருண்டு
ஆனால் . . .
அறிவின் ஆற்றலைப் பாடிய கவிஞன்
அழியாக் கல்வியைப் பாடிய கவிஞன்
பசியின் கொடுமையைப் பாடிய கவிஞன்
பகுத்தறிவுக் கருத்தைப் பாடிய கவிஞன்
ஜாதியை சாகடிக்கப் பாடிய கவிஞன்
சமத்துவம் சமைக்கப் பாடிய கவிஞன்
இசையின் இனிமையைப் பாடிய கவிஞன்
புரட்சிக் கனவைப் பாடிய கவிஞன் புரட்சிக் கருவைப் பாடிய கவிஞன் புரட்சியின் உருவைப் பாடிய கவிஞன்
பாரதிதாசன் ஒருவன் மட்டுமே !
அதனால் பெரியார் அப்பெருங் கவிஞனை புரட்சிக் கவிஞர் என்றே அழைத்தார் அந்தக் கவிஞன் காண விரும்பிய புதியதோர் உலகம் படைப்போம் - கெட்டப் போரிடும் உலகை வேரோடு சாய்ப்போம்!
பேதமிலா அறிவுடைய அவ் வுலகிற்கு பேசு சுயமரியாதை உலகென்று பெயர் வைப்போம்!
வாழ்க புரட்சிக் கவிஞர் !
- அதிரடி க . அன்பழகன்
- விடுதலை நாளேடு, 29.4.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக