செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

சத்துணவிலும் மதநஞ்சைக் கலக்காதே!

சத்துணவிலும் மதவாத நஞ்சா? மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (சென்னை, 25.2.2020)

அதிமுக அரசின் 'அம்மா' உணவகம் மூடும் நிலையில்  இஸ்கான் மத நஞ்சு உணவு திட்டத்திற்கு உதவியா?

கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழகத் துணைத் தலைவர் தமிழக அரசுக்கு கேள்வி!

சென்னை,பிப்.25, தமிழகத்தில் அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் என்கிற பெயரில் தனியாருக்கு தாரை வார்ப்பதுடன், இந்துத்துவா மதவாத நஞ்சினையும் புகுத்துவதைக் கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  இன்று (25.2.2020) காலை நடைபெற்றது. திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் வி.தங்கமணி வரவேற்றார். வெங்கடேசன், பகுத்தறிவாளன், பரிதின்,  நதியா, தமிழ்ச்செல்வன், விஸ்வாஸ் பவித்ரா, அறிவழகன், இனநலம், பிரபாகரன், தனுஷ், அறிவரசி, அமரன், புத்தன், கவிஞர் ம.ஜ.சந்தீப், வி.சி.தமிழ்நேசன் வீ.தமிழ்ச்செல்வன் வெ.பெரியார் செல்வன், இரா.ராம்குமார், ப.பெரியார் செல்வம், ராஜசேகர், சசிகுமார், அறிவரசன், அறிவழகன், தொண்டறம், அறிவுமதி, விஜய், பிரவீன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர்  இரா.செந்தூர்பாண்டி, திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் த.யாழ் திலீபன், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் எ.சிற்றரசு மற்றும் திராவிட மாணவர் கழகத் தோழர்கள் சென்னை மண்டலம் உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள், மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

'சத்துணவிலும் மதவாத நஞ்சா?' எனும் தலைப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமை வகித்து உரையாற்றினார்.

கண்டன  ஆர்ப்பாட்டத்தில் மாநிலக் கழக  அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்க உரையாற்றினார்.

வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் கண்டன உரையைத் தொடர்ந்து கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டு, அதற்குப் பின்னாலே பச்சைத்தமிழர் காமராசர்,  தொடர்ந்து திராவிட இயக்கங்களால் தொடரப்பட்டு வரும் திட்டம் மதிய உணவுத் திட்டம்.

நீதிக்கட்சி  காலத்தில் சென்னையில் மதிய உணவுத்திட்டம், காமராசர் ஆட்சிக்காலத்திலே மதிய உணவுத்திட்டம், கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிகளில் மதிய உணவு பிள்ளைகளுக்கு கொடுத்து, இலவச சீருடை கொடுத்து, இலவச படிப்பு, இலவச புத்தகம், இலவச சைக்கிள் திட்டம், இன்றைக்கு ஆண்டாண்டு காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட மக்களிடையே இருந்து வரும் பிள்ளைகள் படிக்கக்கூடிய ஒரு நல்ல சூழ்நிலை ஏற்பட்டது.

இப்போது காலை உணவு கொடுப்பதற்காக 'இஸ்கான்' என்று ஒரு நிறுவனம், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா  அமைப்பு, பிள்ளைகளுக்கு காலை உணவு கொடுப்பதாக சொல்கிறார்கள்.

காலை உணவுதானே கொடுக்கிறார்கள் ஏன் எதிர்க் கிறீர்கள்? என்ற கேள்வி எழலாம்.

காலை உணவு தாராளமாக கொடுக்கட்டும். ஆனால், அந்த நிறுவனங்களின் இந்துத்துவ கொள்கை - காலை உணவுத்திட்டத்திலே இருக்கிறது.

பூண்டு, வெங்காயம் உணவில் இடம் பெறாது என்று சொல்கிறார்கள்.

பெரும்பாலான பிள்ளைகளின் உணவில் இவ்விரண்டும் உண்டு தானே.

உணவிலே இந்துத்துவா கண்ணோட்டத்தோடு சொல்வது என்பது உள்ளபடியே இந்த உணவுத்திட்டத்தாலே அவர் களுடைய மதவாதத்தை திணிக்கின்ற போக்காகவே கருத வேண்டும்.

வெங்காயம் விலை அதிகமானபோது, நாடாளுமன்றத் திலேயே மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நிதிநிலை அறிக்கையின்போது, நான் வெங்காயம் சாப்பிடும் பரம் பரையில் வரவில்லை என்றார்.

அவர்களின் மத எண்ணத்தை, பார்ப்பனிய சிந்தனையை வெகுமக்கள் மத்தியிலே திணிக்கக்கூடியதாக இருக்கிறது. விஞ்ஞான முலாம் பூசுகிறார்கள். என்ன ஆதாரம் உள்ளது?

காலை உணவு என்று கூறி அதில் தங்கள் இந்துத்துவக் கலாச்சாரத்தைத் திணிக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு நிலம், மின்சாரம், குடிநீர் இனாமாக கொடுக்கிறது.

காலை உணவு என்கிற பெயரில் கார்ப்பரேட் மயமாகிறது என்றுதான் சொல்ல வேண்டும். உலகம் முழுவதும் நிதி திரட்டுகிறார்கள் -  ஆதாயம் இல்லாமல் அவர்கள் இதில் இறங்கவில்லை.

மத்தியில் பாஜக அரசு வந்த உடனே மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்றார்கள். அது பிரச்சினை ஆனது. அவர்களின் இந்துத்துவாத் திட்டத்தையொல்லாம் மக்கள் மத்தியில் திணிக்கிறார்கள். அதனுடைய தொடர்ச்சிதான் காலை உணவுத்திட்டத்தில் வெங்காயம், பூண்டு இல்லை என்கிறார்கள். அதனாலேயே நாங்கள் எதிர்க்கிறோம்.

அம்மா உணவுத் திட்டம் கொண்டு வந்தது அதிமுக அரசு. இப்பொழுது அத்திட்டம்  நசிந்து விட்டது. பெயரளவுக்குத் தான் இருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இலவசம் என்ற பெயரால் மத முக்காடு போட்டு வரும் கலாச்சாரத் திணிப்பு உணவுத் திட்டத்துக்குப் பச்சை கொடிக் காட்டுகிறது அதிமுக அரசு.

கருநாடக மாநிலத்தில்கூட எதிர்ப்பு வெடித்துள்ளது.

இந்த போராட்டம் ஒரு தொடக்கம் என்றார் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ். ஆம் இது வெறும் தொடக்கம்தான். தொடர்ந்து போராடுவோம். இந்துத்துவா திணிப்பு திட்டத்தை திரும்பப் பெறும் வரை போராடுவோம் என்று கண்டன உரையில் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்ட முடிவில் சென்னை மண்டல மாணவர் கழக செயலாளர் வ.வேலவன் நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு 25 2 20

திராவிட மாணவர் கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்

சென்னை, பிப். 26- சத்துணவிலும் மதவாத நஞ்சா, எனும் தலைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 25.2.2020 அன்று காலை நடைபெற்றது.

திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்  ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேக ரன் தொடக்க உரையாற்றினார். வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரையாற்றினார்கள்.

கண்டன முழக்கமிட்டு ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள்

செந்தூரப்பாண்டியன், யாழ்திலீபன், கா.அமுதரசன், தஞ்சை மான வீரன், துர்காதேவி, விடுதலைஅரசி, தருமபுரி பூபதிராஜா, ஒசூர் க.கா.வெற்றி, உரத்தநாடு முருகேசன், மண்டலக்கோட்டை அரவிந்த், கலையரசன், ஒக்கநாடு மேலையூர் சாமிநாதன், திருவண்ணாமலை ராம்குமார், வடசென்னை வேல வன், எஸ்.தமிழ்செல்வன், செ.பிர வீன், திருவொற்றியூர் இரா.சதீஸ், இ.பவித்ரா, வி.யாழ்ஒளி, விருத்தாச் சலம் அறிவுசெல்வம், தென்சென்னை கு.பா.கவிமலர், தாம்பரம் பரசுரா மன், ஓவியர் சிகரம், யுவராஜ், சட்டக் கல்லூரி மாணவர்கள் க.கோபி, சசி குமார், கவி, தினேஷ், திருச்சி கார்த் திக், பாலாஜி உள்பட மாணவர்கள் பெருந்திரளாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

திராவிடர் கழக பொறுப்பாளர்கள்

கழக துணைப்பொதுச்செயலா ளர் பொறியாளர் ச.இன்பக்கனி, மாநில மகளிரணி செயலாளர் தக டூர் தமிழ்செல்வி, அமைப்புச் செய லாளர் வி.பன்னீர்செல்வம், திரா விடர் வரலாற்று ஆய்வு மய்ய செய லாளர் பேராசிரியர் ந.க.மங்களமுரு கேசன், மண்டல செயலாளர் தே.செ.கோபால், ஒசூர் கண்மணி, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், தென்சென்னை மாவட் டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்டச் செயலா ளர் தி.செ.கணேசன், கும்மிடிப் பூண்டி மாவட்டத் தலைவர் புழல் த.ஆனந்தன், ஆவடி மாவட்டச் செயலாளர் க. இளவரசன், அமைப் பாளர் உடுமலை வடிவேல், பெரி யார் சமூகக் காப்பணி மாநில பொறுப்பாளர் சோ.சுரேஷ், தாம்ப ரம் மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன், சு.மோகன்ராஜ், போரூர் பரசுராமன், இராமேசுவரம் கே.எம்.சிகாமணி, ஊரப்பாக்கம் இரா மண்ணா, சி.சீனிவாசன், பொ.சுமதி, பொய்யாமொழி, கூடுவாஞ்சேரி மா.இராசு, நூர்ஜகான் ராசு, இரா மாபுரம் ஜெனார்த்தனம், ஓவியா அன்புமொழி, மா.குணசேகரன், சோழிங்கநல்லூர் பிசிஜெயராமன், கு.சோமசுந்தரம், க.தமிழினியன், கணேசமூர்த்தி, கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், மு.சேகர், மயிலை பாலு, வி.விக்கி, பிரகாஷ், க.வெற்றி வீரன், ஓவியா, க.தமிழ்செல்வன், பரசுராமன்,  முரசு, பாலு, எண்ணூர் விஜயா மோகன், மணியம்மை, கொடுங்கையூர் கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, பெரியார் களம் இறைவி, பூவை செல்வி, பசும்பொன் செந்தில்குமாரி, தமிழரசி, தென் னரசி, தமிழ்சாக்ரட்டீஸ், பெரியார் மாணாக்கன், க.கலைமணி, வை.கலையரசன், தமிழ்செல்வன், பகுத் தறிவு, சந்திரபாபு, வழக்குரைஞர் பன்னீர்செல்வம், கொரட்டூர் இரா.கோபால், வெ.கார்வேந்தன், முத்தழகு, திருமலை,  திருவண்ணா மலை கவுதமன், கும்மிடிப்பூண்டி செ.உதயக்குமார், அருள், சுகன்ராஜ், இளையராணி, குணசேகரன், பாலு, கஜேந்திரன்,  சோழவரம் சக்ரவர்த்தி, திமுக மாணவரணி விக்னேஷ் உதயன், பாலச்சந்திரன் உள்பட ஏராளமானவர்கள் இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண் டனர்.

- விடுதலை நாளேடு 26.2.20

1 கருத்து: