அறிஞர் அண்ணா அவர்களின் 107ஆம் ஆண்டு பிறந்த நாள்
சிலைக்கு கழகத் துணை தலைவர் மாலை அணிவித்து மரியாதை
சிலைக்கு கழகத் துணை தலைவர் மாலை அணிவித்து மரியாதை
சென்னை, செப். 15_ அறிஞர் அண்ணா அவர் களின் 1-07ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திராவிடர் முன்னேற்ற கழக நிறுவனரும், முன் னாள் முதல்வருமான பேர றிஞர் அண்ணா அவர்களின் 107ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2015) காலை 10.45 மணியளவில் சென்னை அண்ணா சாலை யில் உள்ள அவரது சிலைக்கு கழக தோழர், தோழியர்கள் புடைசூழ திராவிடர் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்கள் மலர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க.திருமகள், பழநி.புள்ளை யண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் சைதை எம்.பி.பாலு, நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், கழக வழக்குரைஞரணி அமைப் பாளர் வீரமர்த்தினி,
சென்னை மண்டல கழக செயலாளர் பன்னீர்செல் வம், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் முத் தையன், சி.செங்குட்டுவன், மயிலை சேதுராமன், சென்னை மண்டல மாணவரணி செயலாளர் மணியம்மை.
வடசென்னை மாவட்ட மகளிரணி தலைவர் கு.தங் கமணி, சி.வெற்றிச்செல்வி, இ.பசும்பொன், சீர்த்தி, தங்க.தனலட்சுமி, வட சென்னை சொ.அன்பு, அரும்பாக்கம் தாமோதரன், திருவொற்றியூர் கணேசன், பெரியார் திடல் சுரேஷ், சைதை தென்றல், கோடம் பாக்கம் மாரியப்பன், செஞ்சி கதிரவன், தரமணி மஞ்சு நாதன், சேகுவரா, அம்பேத் கர், மகேஷ், தொழிலாள ரணி நாகரத்தினம், வெற்றி வீரன், உடுமலை வடிவேல் மற்றும் திரளான கழகத் தோழர், தோழியர்கள் பங்கேற்றனர்.
-விடுதலை,15.9.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக