அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல்14 அன்று
தாலி அகற்றும் விழா, மாட்டிறைச்சி விருந்து
இந்துத்துவா நோய்க்கு இதுதான் மாமருந்து!
சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் அறிவிப்பு
சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் அறிவிப்பு
சென்னை மார்ச் 19- சென்னை பெரியார் திடலில் அண்ணல் அம் பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று தாலி அகற்றும் நிகழ்ச்சியும் மாட்டிறைச்சி விருந்தும் நடைபெறும் - இதுதான் இந்துத்துவா நோய்க்கான மாமருந்து என்றார் திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கருத் துச் சுதந்திரத்தை வலி யுறுத்தியும், புதிய தலை முறை தொலைக்காட்சி நிலையம்மீதான இந்துத் துவாவாதிகளின் வன் முறைகளைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று (18.3.2015) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் ஜி.இராம கிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், தமிழ் மாநிலக் காங்கிரசு முன்னணித் தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சிப் பொருளாளர் குணங்குடி அனீபா, பத்திரிகையாளர் ஆர்.எஸ்.மணி, முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் கள் சங்க பொறுப்பாளர் பேராசிரியர் அருணன், பத்திரிகையாளர் ஞானி, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் உள்ளிட்டோர் பல்வேறு அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்றனர்.
கண்டன ஆர்ப்பாட் டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரை வருமாறு: திடீரென்று சில நாள்களுக்கு முன்னாலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலே அருமைத் தோழர் இராம கிருஷ்ணன் அவர்களு டைய அரிய முயற்சியி னாலே ஏற்பாடு செய் யப்பட்ட இந்தக் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான வன்முறையைக் கண்டிக் கக்கூடிய கண்டன ஆர்ப் பாட்ட நிகழ்ச்சியாக கடந்த ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக இந்த ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
அன்றே சொன்னோம் - கேட்டார்களா?
கருத்துச் சுதந்திரத் துக்கு எதிராக இப்படி ஒரு போராட்டம் நடை பெறுவது நாம் எதிர் பார்க்காதது அல்ல. கடந்த 10 மாதங்களுக்கு முன்னாலே இங்கே நண் பர்கள் சுட்டிக் காட்டி யதைப்போல இப்படி ஒரு பொதுத்தேர்தல் நாடாளுமன்றத்துக்கு வந்த காலத்திலேயே, வளர்ச்சி என்ற மயக்க மருந்தை உண்டு, இளை ஞர்களே மீண்டும் காவிக் கட்சிக்கு வாக்களித்தால், என்ன விளைவுகள் ஏற் படும் என்றால் பச்சை யாக சமதர்மத்துக்கோ, மனித தர்மத்துக்கோ இடம் இல்லாமல் வெறும் மனு தர்மம்தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என் பதை மேடை தவறாமல் நாங்கள் எடுத்துச் சொன்னோம். ஆனால், வழக்கம்போல மயக்கத் தில் இருந்தவர்கள் அதை உணரவில்லை. ஆனால், இன்றைக்கு ஒருவகை யிலே, அந்தக் காவி களுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட் டிருக்கிறோம் எப்படி என்றால், அய்ந்து ஆண்டு காலம்வரையிலேகூட நாங்கள் பொறுத்திருக்க மாட்டோம். நாங்கள் எட்டு மாதங்களுக்குள் ளாக எங்கள் பொய் உரு வத்தைக் கலைத்து உண் மையான உருவத்தைக் காட்டுவோம் என்று இறங்கி இருக்கிறார்களே அதற்காக வரவேற் கிறோம்.
இந்த அணி சாதாரண மான அணி அல்ல. இது ஏதோ புதிய தலைமுறை ஒன்றின்மீது திட்டமிட்டு அந்த செய்தி ஊடகங்கள் மீது நடத்தப்பட்டத் தாக் குதல் என நினைக்காதீர்கள்.
பார்ப்பனீயப் பாதுகாப்புக்கு ஒத்திகை
இது ஒட்டு மொத்த மாக மனித தர்மத்துக்கு, கருத்துச் சுதந்திரத்துக்கு, பகுத்தறிவுக்கு, எல்லோ ருக்கும் எல்லாமும், அனைவருக்கும் அனைத் தும் என்கிற தத்துவத் துக்கு எதிராக, இன்னா ருக்கு இதுதான், இதுதான் எங்களுடைய பார்ப்பனீய, ஆதிக்க, வர்ணாசிரமப் பாதுகாப்புத் திட்டம் என்பதை வைப்பதற்கான ஒத்திகை பார்க்கிறார்கள். அவ்வளவுதான். இது ஒரு ஒத்திகை. இங்கே சொன் னார்கள். அவர்களைத் தாக்குவது என்பது மட்டும் இவர்களுடைய நோக்கம் அல்ல. அதே நேரத்திலே மத்தியிலே எங்கள் ஆட்சி இருக் கிறது. என்னவோ தெரி யாது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற அந்தக் காலக்கட்டம் இவர்களுக்கு இருக்கிறது என்று நினைக் கக் கூடிய ஒரு நிலை. இவைகளை வைத்துக் கொண்டு நீங்கள் ஆட்டம் போடலாம் என நினைத் தால், கேடு எங்களுக்கல்ல. உங்களுக்குத்தான் வரும். காரணம் இந்த மக்கள் சாதாரண மக்கள் அல்ல. இங்கே சொன்னதைப் போல, இது வெறும் வாக்குப் பெட்டியோடு கிளம்பிவிடுவது அல்ல. இது வெறும நாடாளு மன்ற மெஜாரிட்டி, மைனாரிட்டியைப் பொறுத்தது அல்ல.
இது மக்களுடைய கிளர்ச்சியாக, எழுச்சியாக இது திரும்பும். அது வெறும் ஊடகச் சுதந்தி ரத்தை மட்டும் அல்ல. மனிதர்களுடைய அத்து ணைச் சுதந்திரத்தையும் பாதுகாக்கும். பாசிசத் துக்கு விடை கொடுக்கும்.
பாசிசப் போக்கு இன் றைக்கு இருக்கிறதென்றால்,
காவிகள் ஆட்சி என்ற நிலை மாறி, காவிகள் ஆட்சி என்றாலே காலிகள் ஆட்சி என்று சொல்லக்கூடிய அளவிற்கு நீங்கள் நடந்து கொண் டிருக்கிறீர்கள் என்று சொன்னால், அதைக்கட்டுப்படுத்த வேண்டிய வர்கள் கண்டும் காணாமல் கண்டு கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டி ருக்கிறார்கள் என்று சொன்னால், எங்களைப்போன்ற பொறுப்புள் ளவர்கள் அமைதியாகக்கூட இருப் பார்கள்.
ஜனநாயகத்தின்மூலமாக அதை மாற்றிவிடலாம், மாற்றி இருக்கிறோம் என்று. நெருக்கடி காலத்தையே சந்தித்த மண் இது. இந்தியாவிலேயே நெருக் கடி காலத்தில் அதற்குத் தலை வணங்க மாட்டோம் என்று சொன்னப் பெருமை திராவிட முன்னேற்றக்கழக ஆட்சிக்கும், அதனுடைய முதல்வர் கலைஞரையும் சார்ந்தது. இன்றைக்கு அவரிடத்தி லிருந்து மாறுபடுபவர்கள்கூட இந்த உண்மையை மறுக்க முடியாது.
அந்த காலக்கட்டத்திலே நாங்க ளெல்லாம் மிசாக் கைதிகளாக இருந்தவர்கள். சிபிஎம் போன்ற நண்பர்கள் எல்லாம் எங்களோடு இருந்தார்கள்.
நெருக்கடி காலத்தைவிடவா!
அப்போது சொன்னார்கள் இனிமேல் ஒரே கட்சிதான். நீங்களெல் லாம் வெளியேகூட போக முடியாது என்று எங்களை அச்சுறுத்தினார்கள். வெளியே போகாவிட்டால் நல்லதாகி விட்டது. இருட்டிலே இருப்பதை விட இங்கே இருப்பது ரொம்ப மகிழ்ச்சி. எந்த விலையும் கொடுப்பதற்குத் தயாராகத்தான் நாங்கள் வந்திருக் கிறோம் என்று சொன்னோம்.
ஆனால், நெருக்கடி காலத்தை வைத்தவர்களே, இன்றைக்கு என்ன சூழல்? நினைத்துப்பார்க்க வேண்டும். தயவுசெய்து அரசியல் பார்வையோடு பார்க்காதீர்கள். நான் வரலாற்றுச் சம்பவங்களை உங்களுக்குப் புரட்டிக் காட்டுகிறேன். நம்முடைய நாட்டிலே. அந்த நெருக்கடிக் காலத்தைவிட நீங்கள் பெரிதாக செய்துவிட முடியுமா? அதற்குத்தான் உலகத்தைக் காட்டினார்கள் இரண்டுபேரும். அருமைச் சகோதரர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களும் சொன் னார்கள். துவங்கினார்கள். நம்முடைய இராமகிருஷ்ணன் அவர்கள் அதை விளக்கி முடித்தார்கள்.
இட்லர் உலக வரலாற்றிலேயே ரொம்ப அதிசயமான சர்வாதிகாரி. என்ன அதிசயமான சர்வாதிகாரி என்று சொன்னால், இட்லர் ஜனநாயக முறைப்படி வந்த சர்வாதிகாரி.
ஹிட்லரின் வெய்மார் அரசியல் சட்டம்
எங்களுக்கெல்லாம் அரசியல் சட்டம் படிக்கிற நேரத்திலே, பல்வேறு அரசியல் சட்டங்களை சொல்லிக் கொடுப்பார்கள். அப்படி பல்வேறு அரசியல் சட்டங்களைச் சொல்லிக் கொடுக்கிறபோது, இட்லர் வருவதற்கு முன்னாலே பழைய அரசியல் சட்டத்தை ஜெர்மானிய அரசியல் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, ஒரு புதிய அரசியல் சட்டத்தை அங்கே கொண்டுவந்தார். அதற்கு முன்னாலே அவர் பதவிக்கு வருவதற்கு முன்னாலே திட்டமிட்டு அதை நிறைவேற்றும்படி பார்த்துக் கொண்டார்.
அந்த அரசியல் சட்டத் துக்கு வெய்மார் அரசியல் சட்டம் (Weimar Constitution) என்று பெயர் கொடுத்தார்கள்.
அதிலே பிரிவு 48 என்ற ஒரு பிரிவை வைத்தார்கள். அந்த 48 என்ற பிரிவில் இருப்பது என்னவென்றால், நாட்டில் திடீரென்று ஏதாவது ஒரு நெருக்கடி ஏற்பட்டால், தலைவராக இருக்கக்கூடியவர் மற்ற அதிகாரங் களையெல்லாம் கலைத்துவிட்டு, அவரே எடுத்துக்கொள்ளலாம். இதுதான் அவசர காலம் என்று வைத்து இந்த முறையில் ஜனநாயக முறைப்படி வந்தவர் இட்லர்.
கோணிப் புளுகன் கோயபல்ஸ்
இட்லருடைய பாசிசம் என்ன ஆயிற்று? பாடத்திட்டங்களிலே மாற்றம், இனப்படுகொலை செய்தார். மாற்றுக்கருத்து உள்ளவர்களுக்கு இடமில்லை. பிரச்சாரம். இப்போது நடைபெறுகின்ற மாதிரி. கோயபல்ஸ் கோணிப் புளுகன் கோயபல்ஸ் என்று நாமெல்லாம் நாடகம் நடத்திக் காட்டவில்லையா?
பிறகு, இட்லருடைய நிலை என்ன? வரலாற்றிலே குப்பைத் தொட்டியி லேகூட இடமில்லை என்று சொல்லக்கூடிய அளவுக்குத்தானே ஆளானார்? நம்மை மாதிரி இருப் பவர்கள்தான் இட்லரை ஞாபகப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.
எனவே, மோடி அரசாங்கமாக இருந்தாலும், அல்லது அவர்களை ஆதரிக்கிற வேறு அரசுகளாக இருந் தாலும், அவர்களுக்குத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறோம். நீங்கள் எந்த அரசியல் சட்டத்தின்மீது பிரமாணம் எடுத்துப்போயிருக்கிறீர்களோ, அந்த அரசியல் சட்டம் அளிக்கின்ற கருத்து சுதந்திரத்தை, தாக்குவோம், ஊட கங்கள் இயங்கக் கூடாது, மாற்றுக் கருத்துகளே பேச முடியாது, நாங்கள் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் என்பது ஜன நாயகமா? சர்வாதிகாரமா?
எதேச்சதிகார ஆட்சியா? பாசிசத்துக்கு இடமில்லை என்று காட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. நம்மைப் பொறுதத வரையிலே இது ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சிமீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று மட்டும் கருதக்கூடாது.
பார்ப்பனியத்தைக் காப்பாற்றவே!
குறிப்பிட்ட செய்திக்காக மட்டு மல்ல. மதவாதக் கொடியை ஏற்ற வேண்டும். இந்துத்துவா என்று சொல் லக்கூடிய அந்த வெறித்தனத்தை நிலை நாட்ட வேண்டும். பச்சைப் பார்ப்பன வருணாசிரம தர்மத்தை நிலைநாட்ட வேண்டும், மனுதர்மக் கொடியை தாழ விடக்கூடாது என்பவைதான் உங்கள் நோக்கமாக இருந்தால், சந்திக்கத் தயாராக நாங்கள் வருவோம். மக்களை ஆயத்தப்படுத்துகின்ற கூட்டம்தான் இந்தக் கூட்டம். அதை நன்றாக நினைவிலே வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக அதற்காக ஒத்திகை பார்க்க வேண்டுமா?
தாலியாம் தாலி!
இரண்டு அறிவிப்புகள்-. ஒன்று எந்தத் தாலியைப்பற்றி நீங்கள் பேசு கிறீர்கள். தந்தைபெரியார் அவர்கள் நீண்ட காலத்துக்கு முன்னால், சாதாரணமாக திருமணங்களிலே சொன்னார். தாலியாவது வெங்காய மாவது என்றார். அதை அப்படியே வைத்து நம்முடைய உவமைக் கவிஞர் சுரதா பாட்டு எழுதினார். தாலியாம், தாலியாம் பெண்ணுக்கு வேலியாம், வேலியாவது, வெங்காயமாவது என்றார் பெரியார் என்று பாட்டு எழுதினார். எத்தனைக் காலத்துக்கு முன்னாலே? எங்கள் கூட்டங்களிலே தாய்மார்கள் வந்து இந்த அடிமைச் சின்னம் வேண்டாம். இதை விலக்கு கிறோம் என்று சொல்லி மேடை களிலே அவர்கள் அகற்றி, அந்தக் காட்சிகள் நடந்துகொண்டிருக் கின்றனவே.
கணவன் முன்னாலே இறந்து விட்டால், பின்னாலேஎங்கள் சகோ தரிகளை எல்லாம் நீங்கள் அவமானப் படுத்துவதற்குத்தானே அந்த அடிமைச்சின்னத்தை, விதவைக் கோலம் என்று ஆக்கி இருக்கின் றீர்கள். இதைவிடக் கொடுமை வேறு என்ன? எனவே, நாங்கள் சொல்லுகிறோம். அருணன் அவர்கள் சொன்னதுமாதிரி அந்த ஊடகத்திலே இரண்டு பேருக்கும் வாய்ப்பு கொடுத்து, இன்னும் கேட்டால், பளிச்சென்று பச்சையாகக்கூட சொல்லவில்லை. ஏனென்றால் பச்சையாகப் பேசுவதில் இருக்கின்ற தயக்கம். இங்கேயே இருக்கும் சாதாரணமாக, இங்கே பேசிய சகோதரர்கூட புனிதம் என்று சொன்னார். அது அவருடைய கருத்து.
புனிதமாவது புடலங்காயாவது! (கைதட்டல்)
ஒன்றும் கிடையாது. புனிதமாக இருந்தால் சேட்டுக் கடைக்குப் போய் அடகு வைப்பானா? புனிதமாக இருந்தால் ஏனய்யா டாஸ்மாக் போவ தற்கு விற்பதற்காகப் போகிறான்? அதனாலே இது போலித்தனம்.
ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில்!
ஆனால், இங்கே அவர்கள் தவறாக சொல்லவில்லை, நீண்டகாலமாக கருதி வருவதைத்தான் சொன்னார்கள். எங்களை மாதிரி ஒன்றுமில்லாத மொட்டையான ஆட்கள் இல்லை. அவர்கள் வாக்கு வாங்க வேண்டும். அவர்கள் ஓட்டு கேட்க வேண்டி யவர்கள். எங்களுக்கும் ஒன்றும் கிடையாது. ஏறினால் ரயில், இறங் கினால் ஜெயில் (கை தட்டல்). அப்படி என்றால் சரி. அவ்வளவுதான். மூன்றாவதாக கொலை செய்கிறாயா? அதுக்கும் தயார். நோயினால் ஒருவன் சாகக் கூடாது, விபத்தினால் சாகக்கூடாது. கொள்கைக்காக செத்தால், அதைவிட வேறு கிடையாது.
தாலி அகற்றும் விழா, மாட்டுக்கறி விருந்து. இதுதான் இந்துத்துவா நோய்க்கும் மருந்து என்பதை சொல்லி விடை பெறுகிறேன். வணக் கம். நன்றி. வாழ்க பெரியார், வளர்க பகுத்தறிவு.
_இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்கள்.
_இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்கள்.
கலந்துகொண்டவர்கள்
திராவிடர் கழக வட மாவட்டங் களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் திருமகள், மேனாள் மாவட்ட நீதிபதி பரஞ் சோதி, மாநில மாணவரணிச் செய லாளர் பிரின்சு என்னரெசு பெரியார், சென்னை மண்டலச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல இளைஞரணிச் செயலாளர் தமிழ்சாக்ரட்டிஸ், சென்னை மண்டல மாணவரணிச் செயலாளர் பா.மணி யம்மை, தொழிலாளரணி செல்வராசு, முத்துக்கிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் நீலாங்கரை ஆர்.டி.வீர பத்திரன், ஏழுகிணறு கோ.கதிரவன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணை செய லாளர்கள் கோவீஇராகவன், சா.தாமோதரன், தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தய்யன், செயலாளர், அனகை ஆறுமுகம், வடசென்னை மாவட்டத் தலைவர் தி.வே.சு.திருவள் ளுவர், கோ.தங்கமணி, சைதை தென்றல், ஜீவா, வழக்குரைஞர்கள் வீரமர்த்தினி, தெ. அருள்மொழி, பெரியார் களம் இறைவி, தங்க.தன லட்சுமி, வளர்மதி, பசும்பொன் மீனாட்சி, சுமதி, வனிதா, ஆவடி மோகனப்ரியா, மரகதமணி, பூவை செல்வி, பவானி, சந்தியா, வட சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் புரசை அன்புச்செல்வன், தென்சென்னை மாவட்ட இளைஞ ரணித் தலைவர் கு.செல்வேந்திரன், கூடுவாஞ்சேரி ராசு, பெரியார் மாணாக்கன், பொறியாளர் ஈ.குமார், ஜெகத் விஜயக்குமார், தரமணி மஞ்சுநாதன், மாணிக்கம், ஒளிவண் ணன், தங்க.இரமேஷ், திருவொற்றியூர் கணேசன், வெற்றி, சுரேஷ், கலை யரசன், கலைமணி, இசையின்பன், காரல்மார்க்ஸ், உடுமலை, சிறீராம், ராவந்த், கோடம்பாக்கம் மாரியப்பன் உள்பட திராவிடர் கழகம், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தமிழ்மாநில காங்கிரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந் திரளாக பங்கேற்றனர்.
----------------------
தாலி அகற்றும் விழா - மாட்டுக்கறி விருந்து வாரீர்!
இந்த சென்னையிலே ஒரு தொலைக்காட்சியிலே தாலிபற்றிய ஒளிபரப்பைக் காட்டக்கூடாது என்று சொல்கிறான்? மீறினால் டிபன்பாக்ஸ் குண்டு, வெடிகுண்டு என்கிறான். ஏப்ரல்-14 அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாள். அந்த நாளில் சென்னையில் பெரியார் திடலில் தாலி அகற்றுகின்ற விழாவை எங்களுடைய பெண்கள் நிகழ்த்திக் காட்டுவார்கள். (கைதட்டல்).
ஒத்த கருத்து உள்ளவர்கள் வரலாம். அன்றைக்கு மாலையிலேயே தாலியை அகற்றிய உடன், மாட்டுக்கறி விருந்து நடைபெறும். (கைதட்டல் ஆரவாரம்) மாட்டுக்கறி விருந்துக்கு யார்யார் வருகிறீர்களோ இப்போதே ரிசர்வ் செய்து கொள்ளுங்கள். குறிப்பிட்ட அளவுக்கு மட்டும்தான் உண்டு. ஏனென்றால், நான் என்ன சாப் பிடுவது என்பதை இராமகோபாலய்யர் முடிவு பண்ணுவதா? எங்கள் வீட்டில் என்ன செய்வது, அல்லது இராமகிருஷ்ணன் வீட்டிலே, முத்தரசன் வீட்டிலே, பீட்டர் அல்போன்ஸ் வீட்டிலே. என்ன சமைப்பது என்று இவர்கள் முடிவு செய்வார்களா?
எனக்கு டயாபடிசுங்க, தித்திப்பு வேண்டாம் என்றால், அது நியாயம். அதுமாதிரி சொல்லுங்கள். பசுவைமட்டும் பாதுகாப்பார்களாம். ஏன் எருமை மாடு என்னய்யா பாவம் பண்ணியது? ஒரே விஷயம் கருப்புத் தோல் என்பதாலா? (ஆரவாரம்) சிந்திக்க வேண்டாமா? ஆகவே, தான் நண்பர்களே, நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை.
-விடுதலை19.3.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக