யாகத்தில் பொசுக்கி பசுக் கறியைத் தின்றவர்கள்தான் பார்ப்பனர்கள்
தென்சென்னை மாவட்டக் கழகம் சார்பில் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் கழக துணைத் தலைவர் உரை
சென்னை, மார்ச்
20_சென்னை மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 14.3.2015 அன்று திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு பொறியாளர் மயிலை ஈ.குமார் தலைமையில் நடைபெற்றது.
தென்சென்னை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் மு.சண்முகப் பிரியன் வரவேற்றார். தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ.இரா.பார்த்தசாரதி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் கோவீ.இராகவன், அரும்பாக்கம் சா.தாமோதரன் முன்னிலை வகித்தனர்.
வடமாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன் தொடக்க உரை ஆற்றினார்.
தென்சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் கு.செல்வேந்திரன், சென்னை மண்டலச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல மாணவரணிச் செயலாளர் மணியம்மை, பெரியார் சட்ட உதவிமய்ய அமைப்பாளர் வழக்குரைஞர் சு.குமாரதேவன்,
சென்னை மண்டல இளைஞரணிச் செயலாளர் தமிழ்சாக்ரடீஸ், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி ஆகியோர் உரைக்குப் பின்னர் மாநாட்டு சிறப்புரையாக திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார்.
வழக்குரைஞர் அருள்மொழி பேசும்போது, இந்தி யாவில் உள்ள மக்களின் வாழ்க்கை எப்படி இருக் கிறது? இந்தியாவைப்பற்றி உலக மக்கள் என்ன நினைக்கிறார்கள்? அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டிய நேரத்திலே, நம் நாட்டில்நினைக்கிற கருத்தைப் பேசலாமா? கூடாதா?
அந்தக் கருத்துகளை தொலைக்காட்சியில் வருவதற்கு, அதை ஒளிபரப்புவதற்கு உரிமை இருக்கிறதா? இல்லையா? இதைவைத்து ஒருவாரமாக தமிழ்நாட்டில் செய்திகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. இதுகுறித்து நாடாளு மன்றத்தில் பேசப்படுகிறது. இல்லை நாங்கள் இதை யெல்லாம் அனுமதிக்கமாட்டோம் என்கிறார்கள். இதை ஆதரிக்கவில்லை, கண்டிக்கிறோம் என்கிறார்கள்.
இங்கிலாந்திலிருந்து பிபிசி எடுத்து வெளியிட் டுள்ள இந்தியாவின் மகள் ஆவணப்படத்தில் தூக் குக்கயிறை எதிர்நோக்கி உள்ள கைதியின் பேட்டியை அரசின் அனுமதிபெற்றே எடுத்து வெளியிட்டுள்ளது. அதில் கைதியாக உள்ள முகேஷ் என்பவன் கூறியுள்ள கருத்தில் ஆணாதிக்க மனப்பான்மையே இருக்கிறது. அதே கருத்துதான் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கருத்தாகவும் உள்ளது.
_இவ்வாறு பிரச்சாரச் செயலாளர் அ.அருள்மொழி உரையாற்றும்போது குறிப்பிட்டார்.
கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் உரையாற்றும்போது குறிப்பிட்டதாவது:
இப்போது நிலைமை என்னவென்றால், ஆட்டைக் கடித்து, மாட்டைக்கடித்து, மனிதனைக் கடித்து என்று சொல்வார்கள். இப்போது ஏற்பட்டிருக்கிற மதவெறி, காவி வெறி, இந்து வெறி எந்த அளவிற்கு இன் றைக்குத் தலைவிரித்து ஆடுகிறது என்று சொன்னால், இன்றைக்கு இரவு நம் வீட்டில் என்ன குழம்பு வைக்கவேண்டும் என்பதை இராம.கோபாலனைக் கேட்டுத்தான் செய்யவேண்டும்.
நாளைக்கு மதியம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை இல.கணே சனைக் கேட்டுத்தான் முடிவு செய்ய வேண்டும். இப்படி ஒரு அராஜகமான, எந்த நாட்டிலும் கேள் விப்படாததை இந்துத்துவாவாதிகள் சொல்கிறார்கள்.
அதுதான் பசுவதைத் தடுப்பு. பசுவின் கறியை சாப் பிடக் கூடாது. மகாராட்டிர மாநிலத்திலே சட்டம் போட்டது மட்டுமல்லாமல், இந்த சட்டத்தை இந் தியா முழுமையும் கொண்டுவருவதற்கு ஓர் ஏற்பாடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
பசுவதைத் தடையா?
மாநில அரசினுடைய கருத்துகளையெல்லாம் கேட்டு, அதனடிப்படையில் இப்படி ஒரு சட்டம் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொண் டிருக்கிறார்கள். இப்படி ஒரு செய்தியை வெளிநாட் டில் இருப்பவர்கள் கேள்விப்பட்டால் வாயாலேயே சிரிக்க மாட்டார்கள். இந்துமதவெறி. ஏதோ மத்தியிலே ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்கிற திமிர்.
பத்து ஆண்டுகள் மத்தியிலே காங்கிரசு ஆட்சி இருந் தது. அவர்கள் செய்த சில தவறுகளின் காரணமாக அந்த இடத்திலே போய் உட்கார வைத்தார்களே தவிர, இந்துத்துவாமீது அபரிதமான ஆர்வம் மக்களுக்குப் பெருக்கெடுத்து ஓடி இவர்களை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தால் அதைவிட படு முட்டாள்தனம் உலகத் திலே வேறு எதுவும் இருக்க முடியாது.
நாள் ஒன்றுக்கு ரூபாய் 20 சம்பாதிக்கக்கூடியவர்கள், இந் தியாவிலே 77 விழுக்காடு இருப்பதாகச் சொல்லு கிறார்கள். இரவு சாப்பாடு இல்லாமல் தூங்குபவர்கள் இந்தியாவிலே 70 கோடி பேர் இருப்பதாகச் சொல்லு கிறார்கள். ஓர் அரசு என்றால், இதுபற்றித்தான் கவலைப்பட வேண்டும்.
வெறும் 20 ரூபாயில் எப்படி ஒரு நாள் பொழுதைக் கழிக்க முடியும்? இந்தியா சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள் ஆனதற்குப் பின்னாலே, இரவு சாப்பாடு இல்லாமல் வயிற்றைப்பிசைந்துகொண்டு ஏழை எளிய மக்கள் இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே, இதற்கு என்ன திட்டம் போடுவது?
மக்களுடைய அடிப் படைத் தேவையான இருக்க இடம், உண்ண உணவு, உடுக்க உடை இந்த அத்தியவசியமான பொருளை மக்களுக்கு எப்படி உறுதிப்படுத்துவது? இதைப்பற்றி ஓர் அரசு சிந்தித்தால், திட்டமிட்டால், அது நல்லரசு என்று சொல்லலாம்.
இன்று இரவு என்ன சாப்பிடுவது, நாளை மதியம் எதைச் சாப்பிடக்கூடாது என்று சட்டாம்பிள்ளைத் தனமாக தனக்குக் கிடைத்த ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு கூட்டம் நாட்டிலே புறப்பட்டிருக்கிறது.
இந்தியக் கோமாதா கறப்பது என்ன?
இந்தியாவில் இருக்கும் பசுக்கள் கோமாதா என்று சொல்கிறார்களே, ஒரு நாளைக்கு சராசரியாக 2.19 கிலோ கிராம் அளவில்தான் பால் கறக்கிறது. இந்திய கோமாதா பாலைக் கறக்கவில்லை, நம்முடைய பணத் தைத்தான் கறக்கிறது.
கோமாதாவைப் பராமரிக்க வேண்டும் என்றால் நாம்தான் செலவு செய்யவேண் டும். ஆனால், வெளியாடுகளில் கனடா, டென்மார்க் அந்த நாடுகளில் அவன் கோமாதா என்று சொல்வதில்லை. 75 லிட்டர் பால் கறக்கும் மாடுகளை அந்த நாடுகளில் கோமாதா என்று சொல்வதில்லை.
செயற்கைக் கருவூட்டலில் எந்த விந்து?
பசுமாட்டைக் கருத்தரிக்க என்ன செய்கிறீர்கள்? கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு போகி றீர்கள். செயற்கை முறையில் கருத்தரித்தல்; அதில் எந்தக் காளையின் விந்தைப் போடுகிறார்கள் தெரியுமா? இந்தியாவில் உள்ள காளைமாடுகளின் விந்துக்களைச் சேர்ப்பதில்லை. வெளிநாட்டு காளைகளின் விந்தைத்தான் சேர்க்கிறார்கள்.
நாள் ஒன்றுக்கு 75 லிட்டர் கறக்கக்கூடிய வெளிநாட்டு பெர்சியன், ஜெர்சி
முதலிய காளைகளின் சினை முட்டைகளை கோமாதாவுக்குள்ளே செலுத்தி கருத் தரிக்கச் செய்கிறார்கள். கோமாதா கற்பு என்னாயிற்று?
அவர்களின் மிலேச்சப் பசுக்களின் விந்தணுக்களை கோமாதாவுக்குள் செலுத்தி செயற்கைக் கருத்தரித்தல் செய்கிறார்கள். கோமாதா கோமாதா என்கிறார் களே? கோயில்களில் நேர்த்திக்கடன் என்று பசுமாடு களை விடுகிறார்கள். அப்படி விடப்படும் பசுக்களை கோயில் நிர்வாகம் சரியாகப் பராமரிப்பதில்லை.
அதைத் திருட்டுத்தனமாக கசாப்புக்கடைக்கு அனுப்புகிறார்கள். பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.கோயிலுக்கு விடப் பட்ட பசுக்களையே கசாப்புக்கடைக்குக் கொண்டு செல்கிறார்கள். உலகில் அதிகமாக மக்கள் சாப்பிடக் கூடிய உணவு ஒன்று என்றால், அது மாட்டுக்கறி தான். சத்துள்ள உணவு, ஆட்டுக்கறியைவிட பாதி விலையில் கிடைக்கின்ற மாட்டுக்கறியை அரசே சாப் பிடச் சொல்லவேண்டும்.
ஆனால், அரசு என்ன செய்கிறது? பார்ப்பனர்கள் மாட்டுக்கறியை சாப் பிட்டதே இல்லையா? பசு புனிதம் என்கிறார்களே, புராணங்கள், இதிகாசங்களில் பார்ப்பனர்கள் எப்படி யாகம் நடத்தினார்கள்? பசு மாட்டை நெருப்பில் போட்டுக் கொளுத்தி, எப்படிச் சமைத்து எப்படி சாப்பிடுவது என்று கூறப்பட்டுள்ளதே. எங்களிடம் ஆதாரம் உள்ளது.
பசுக்கறியைப் பார்ப்பனர்கள் சாப்பிட்ட விதம்
பசு மாட்டை யாகத்திலே கொன்று எப்படி சாப்பிடுவது என்று பார்ப்பனர்களுடைய இதிகாசத் திலே சொல்லி இருக்கிறார்கள். மார்பிலிருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுத்தெடுக்க வேண் டும். பின் கால்களிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் கால்களிலிருந்து அஃகு வடிவமாக இரண்டு துண்டுகளை எடுக்க வேண்டும்.
அவ்வாறு அதே இடங்களிலிருந்து 26 துண்டுகளை அறுத்தெடுத்தபின், எல்லாவற்றையும் அறுத்தெடுத்துக் கொள்க. அப்படி சமைத்து சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
மாட்டைக் கொல்லும்போது நன்றாக அடித்துக் கொல்! கொல்!! என்று சத்தம் போடவேண்டும். அந்த மாட்டை அடிக்கும்போது நன்றாக அடி அடி என்று சத்தம் போடவேண்டும். இப்படியெல்லாம் புரா ணத்திலே, இதிகாசத்திலே எழுதி வைத்திருக்கிறார் கள். இப்போது இந்துக்களின் புனிதம் என்று சொல்கிறாயே, இந்து மதத்திலே இருப்பதை ஏன் மாற்றிப் பேசுகிறாய்? நாங்கள் எடுத்துச் சொல்லும் போது உனக்கு ஏன் கோபம் வருகிறது?
பார்ப்பனர்கள் மாமிச உணவை எப்போது விட் டார்கள் என்பதற்கு வரலாறு இருக்கிறது. புத்தர் காலத்திற்குமுன்வரை பார்ப்பனர்கள் சாப்பிட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். கவுதம புத்தர் தோன்றி, இந்தப் பார்ப்பன யாகங்களை எதிர்த்து, நெருப்பில் போட்டு பொசுக்குகின்ற அந்த யாகங்களைத் தடுத்து நிறுத்தி மக்கள் மத்தியிலே வைதீக, ஆரிய, பார்ப்பன எதிர்ப்பை உண்டாக்கி,
மக்கள் பவுத்த மதத்துக்கு மாறும் சூழ்நிலையில், பார்ப்பனர்கள் தங்கள் மதத் தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக சைவத்துக்கு மாறினார்கள். இதுதான் வரலாறு. இதை நாங்கள் சொல்லவில்லை. ராகுலசாங்கித்யாயன் என்கிற உலகப்புகழ்பெற்ற, மிகப்பெரிய வரலாற்றுப் பேராசிரியர் எடுத்துக்கூறியுள்ளார்.
பார்ப்பனர்கள் இதற்கப்புறம்தான் பசு மாட்டுக் கறியை உண்ணக்கூடாது என்று கொண்டுவந்தார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
_ இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரையில் உரை யாற்றும்போது குறிப்பிட்டார்.
கலந்துகொண்டவர்கள்
மயிலை சேதுராமன், வழக்குரைஞர்கள் ஆ.வீரமர்த் தினி, ந.விவேகானந்தன், ம.வீ.அருள்மொழி, க.பால முரளி, சரவணன், மு.பவானி, வி.வளர்மதி, ச.அரவிந்த், அய்ஸ்அவுஸ் சேது, ச.துணைவேந்தன், சந்தோஷ், யாழ்ஒளி, தங்கமணி, திருவொற்றியூர் கணேசன், சுமதி, கூடுவாஞ்சேரி ராசு, மதுரவாயல் தங்க.சரவணன், அம் பத்தூர் பூ.இராமலிங்கம், கோவிந்தராசன், இளை ஞரணி மகேந்திரன்,
மு.முகிலன், மணிதுரை, எம். இரமேஷ், ஜெயப்பிரகாஷ், சிவக்குமார், இசையின்பன், பசும்பொன், கலையரசன், சவுந்தரராஜன், பெரியார் பிஞ்சுகள் அபினா சுருதி, கோவன் சித்தார்த், அசுரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
-விடுதலை,20.3.15 பக்கம்-8
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக