வெள்ளி, 13 மார்ச், 2015

அன்னை மணியம்மையார் 95ஆம் ஆண்டு பிறந் நாள்

அன்னை மணியம்மையார் 95ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி

தென் சென்னை திராவிடர் கழகம்  சார்பில்  அன்னை மணியம்மையார் 95ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.   



அன்னை மணியம்மையார் 95ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி சென்னை பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் நினைவிடத்தில் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கழகக் குடும்பத்தினர் புடைசூழ மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். (10.3.2015



சென்னை, மார்ச், 10_- அன்னை மணியம்மையார் அவர்களின் 95-ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (10.3.2015) தமிழர் தலைவர் தலைமையில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்பட்டது.
மணியம்மையார் சிலைக்கு மாலை
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரிரியார் அவர்களை 95 ஆண்டுகளுக்கு மேல் வாழ வைத்த அன்னை மணி யம்மையாரின் 95 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (10.3.2015) காலை 10.30 மணியளவில் ஊர்வலமாகச் சென்று சென்னை பெரியார் ஈவெரா நெடுஞ்சாலையில் உள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு தோழியர் கள், தோழர்கள் திரளாகச் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை யடுத்து பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
நினைவிடத்தில் மரியாதை
இதைத் தொடர்ந்து கழகத் தோழர்கள் தோழியர்கள் அணிவகுப்பாகச் சென்று, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். மகளிரணி சார்பிலும், அசோக் லேலேண்ட் திராவிடர் தொழிலாளரணி சார்பிலும், திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை, மணியம்மையார் மகளிர் குழு, பெரியார் மருத்துவயமனை சார்பிலும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் சார்பிலும் மலர் வளை யம் வைத்து மரியாதை செய்யப்பட்டது. அதேபோன்று தந்தை பெரியார் நினைவிடத்திலும், சுயமரியாதை சுட ரொளிகள் நினைவிடத்திலும் தமிழர் தலைவர் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். ஆண்டுதோறும் நவம்பர் 26 அன்று சுயமரியாதை சுடரொளிகள் நினைவு நாளாக கடைபிடிக்கப்படும் என்று தமிழர் தலைவர் தெரிவித்தார்.
நன்கொடை
இந்நிகழ்வின்போது பெரியார் மாணாக்கன் _ மு.செல்வி ஆகியோர் 39ஆவது முறையாக விடுதலை வைப்பு நிதியாக ரூ.1000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர். சுயமரியாதை சுடரொளி ஏ.பி.ஜே,மனோ ரஞ்சிதம் அம்மையார் அவர்களின் பிறந்த நாளை யொட்டி அவரது பேரப்பிள்ளைகள் ஆலன் மற்றும் ஆனி கிரேஸ் ரூத் ஆகியோர் தமிழர் தலைவரிடம் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 1000/- நன்கொடை வழங்கினர். வடசென்னை மகளிர் அணி சுமதிகணேசன் பிறந்த நாளையொட்டி இன்று (10.3.2015) கழக செயல் வீராங்கனைகள் மரகதமணி, மணியம்மை ஆகியோரின் கழகப் பணியை ஊக்கு விக்கும் வகையில் தமிழர் தலைவர் மூலமாக ஆடை அன்பளிப்பாக அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை செயற்குழு உறுப் பினர்கள் க.பார்வதி, திருமகள் மற்றும் மோகனா அம் மையார், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி இரா.பரஞ் ஜோதி, திரவிடர் கழக வழக்குரைஞரணி அமைப்பா ளர் வீரமர்த்தினி, வட மாவட்டங்களின் அமைப்பு செயலாளர் வெ.ஞானசேகரன், மண்டல இளைஞரணி செயலாளர் செ.தமிழ்சாக்ரடீஸ், மண்டல மாணவ ரணி செயலாளர் மணியம்மை, பேராசிரியர் பு.ராஜ துரை, பேராசிரியர் மங்கள முருகேசன், சமாஜ்வாடி கட்சி வழக்கறிஞர் வாசு, சிந்தாதிரிப்பேட்டை அ.நா. பாலகிருஷ்ணன், பொறியாளர் வேல் சோ.நெடு மாறன், ஆடிட்டர் ராமச்சந்தி ரன்.
பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், அசோக் லைலேண்ட் தொழிலாள ரணி துரை.இராவணன், பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடராஜன், விடுதலை அச்சகப்பிரிவு மேலாளர் சரவணன், பெரியார் மருத்துவமனை மேலாளர் குணசேகரன், திராவிடன்நலநிதி பொது மேலாளர் அருள், காசாளர் வெங்கடேசன், பெரியார் ஆராய்ச்சி நூலகத்தின் நூலகர் கோவிந்தன்.
தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன், செயலாளர் செ.ரா.பார்த்தசாரதி, சி.செங்குட்டு வன், கோ.மஞ்சுநாதன், ச.மாரியப்பன், ஈழமுகிலன், மு.சண்முகப்பிரியன், மு.முகிலன், ந.மணிதுரை.
மகளிரணி தோழியர்கள்
தங்கமணி குணசீலன், சி.வெற்றிச்செல்வி, உமா, வீ.அருள்மொழி, வித்யா ருக்மணி, சாந்தி, லதா, தங்க.தனலட்சுமி, இன்சொல், க.மீனாட்சி, மணிமேகலை, அனிச்சம், பசும்பொன், இறைவி, செல்வி, மீனாகுமாரி, சந்தியா, பவானி, சிவரஞ்சனி, பூங்குழலி, குஞ்சிதம் நடராசன், பாலா, ஜெயமாலா, மேரி, கற்பகம், ஜெயந்தி, காயத்திரி, சுகுணா, எப்சி, சுமதி, ஆகினேஷ், ஆதிலட்சுமி.
தொழிலாளரணி துணைச் செயலாளர் செல்வ ராஜ், ஆவடி மாவட்டச் செயலாளர் தென்னரசு, கரூர் மாவட்ட துணைச் செயலாளர் கவுதமன், மதுரை ராஜாங்கம், தொழிலாளரணி ராமலிங்கம், நாகரத் தினம், பெரியார் மாணாக்கன், தாம்பரம் குணசேகரன், சைதை தென்றல், புரசை அன்புசெல்வன் மற்றும் பெரியார் திடல் அனைத்துப் பணியாளர்களும் பங் கேற்றனர்.

டாக்டர் சி.நடேசனார் நினைவு(18.2.2015) நாளில், தியாகராயர் நகரிலுள்ள நடேசனார் பூங்காவில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு, சு.சி.அருணகிரி, அ.நா. பாலகிருஷ்ணன், சுப்புராமன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
-விடுதலை,10.3.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக