செவ்வாய், 17 மார்ச், 2015

அன்னை மணியம்மையாரின் 37ஆம் ஆண்டு நினைவு நாள்-16.3.15

1.தென் சென்னை திராவிடர் கழகம் சார்பில் பங்கேற்பு.
தந்தை பெரியார் மறைந்தபோது அன்னை மணியம்மையார் தலைமையில் எடுத்த
 உறுதிமொழியைப் புதுப்பிப்போம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் சூளுரை!
அன்னை மணியம்மையார் அவர்களின்  37ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் நினை விடத்தில் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கழகத் தோழர்கள் - தோழியர்கள் புடைசூழ மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். (16.3.2015)
சென்னை, மார்ச் 16_ அன்னை மணியம்மை யார் அவர்களின்  37ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் அய்யா, அம்மா, சுயமரி யாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்தும், அய்யா, அம்மா சிலை களுக்கு மாலை அணி வித்தும் சூளுரை மேற் கொள்ளப்பட்டது.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர் களை 95 ஆண்டு காலம் வாழ வைத்த அன்னை மணியம்மையார் அவர் களின் 37ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (16.3.2015) காலை 10.30 மணியளவில், சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை யில் உள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு கழகத் தோழர், தோழி யர்கள் திரளாக சென்று மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் தலை மையில் கழகத்தின் சார் பிலும் மகளிரணி சார் பிலும் மாலை அணிவிக் கப்பட்டது.
மணியம்மையார் நினைவிடத்தில் உறுதி மொழி ஏற்பு
பெரியார் திடலில் உள்ள அன்னை மணி யம்மையார் நினைவி டத்தில் கழகத் தோழர் கள் மற்றும் மகளிரணி தோழர்கள் திரளாக திரண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செய் யப்பட்டது.
இதைத் தொடர்ந்து தந்தை பெரியார் நினை விடத்திலும், சுயமரியாதை சுடரொளிகளின் நினைவு தூண் இடத்திலும் மலர் வளையம் வைத்து மரி யாதை செய்யப்பட்டது.

பின்னர் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி-.வீரமணி அவர்கள் அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து; ஜாதி, மதம், பெண்ணடிமை இவைகளை எதிர்த்து தன்னுடைய வாழ்நாள் முழுவதும் போராடிய நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களை 95ஆண்டு காலம் வாழ வைத்து, அதற்குப்பிறகும் அய்ந்து ஆண்டுக்காலம் கழகத்தை வழிநடத்தி, எதிர்ப்புகளைச் சந்தித்து, துரோகங்களை முறி யடித்து, தன்னுடைய உழைப்பு, தொண்டு, செல்வம் எல்லாவற்றை யும் மக்களுக்காகவே அய்யா வழியில் அர்ப் பணித்த அன்னையார் அவர்களுடைய நினைவு நாளான இன்று அவர்கள் தலைமையில் நாம் ஏற்ற உறுதி மொழியான, தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை எந்த வித சபலத்துக்கும் ஆளா காமல், எந்த விலையையும் கொடுத்து செய்து முடிப் போம் என்ற சூளுரையை மேற்கொள்ளுகிறோம் என உறுதி மொழி கூற அதை கழகத் தோழர்கள் _- தோழியர்கள் ஏற் றார்கள்.
திராவிடர் கழக மக ளிரணி, பெரியார் நூலக வாசகர் வட்டம் திராவிட தொழிலாளரணி, பெரியார் மணியம்மை மருத்துவமனை, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் ஆகியவற்றின் சார்பில் அன்னை மணி யம்மையார் நினைவிடத் தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய் யப்பட்டது.
இந்நிகழ்வில் திரா விடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க.பார்வதி, திருமகள், மோகனா அம்மையார், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி இரா.பரஞ்ஜோதி,
கழக வழக்குரைஞரணி அமைப்பாளர் வீரமர்த் தினி, பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடராஜன், விடுதலை அச்சக பிரிவு மேலாளர் சரவணன், பெரியார் மருத்துவமனை மேலாளர் குணசேகரன், தயாளன், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான இயக்குநர் முனைவர் சிறீவித்தியா, பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் கோ. ஒளிவண்ணன், ஒளி. நளினி, ஆடிட்டர் ராமச் சந்திரன், திராவிடர் நல நிதி பொது மேலாளர் அருள்செல்வன், காசாளர் வெங்கேடசன், பெரியார் அய்.ஏ.எஸ்.பயிற்சி மய்ய ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், பெரியார் பகுத் தறிவு ஆய்வு நூலகர் கோவிந்தன்.
மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், வடமாவட்டங்களின் அமைப்பு செயலாளர் வெ.ஞானசேகரன், சென்னை மண்டலச் செயலாளர் பன்னீர் செல் வம், கடலூர் மண்டல செயலாளர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி.பாலு, ஈட்டி கணேசன், தலைமை கழக பேச்சாளர்கள் இராம. அன்பழகன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன், வடசென்னை மாவட்டத் தலைவர் தி.வே.சு. திருவள்ளுவன், பெரியார் சட்ட உதவி மய்ய அமைப்பாளர் வழக் குரைஞர் சு.குமாரதேவன், வழக்குரைஞர் தெ.அருள் மொழி, வழக்குரைஞர் ரத்தினகுமார், ஆவடி மாவட்டச் செயலாளர் தென்னரசு.
திராவிடர் கழகத் தொழிலாளரணி துணைச் செயலாளர் செல்வராஜ், ராமலிங்கம், நாகரெத் தினம் அம்பத்தூர் ராம லிங்கம், விடுதலை ராதா, சி. தமிழ் தம்பி, புரசை அன்புச் செல்வன், கருங் குழி கண்ணன், திரு வொற்றியூர் கணேசன், சொ.அன்பு, சைதை தென்றல், அரும்பாக்கம் தாமோதரன், ஜீவா, பிரபாகரன், திலீபன், வாசு, மணிவண்ணன் மற்றும் பெரியார் திடல் அனைத் துத் துறை பணியாளர் களும் ஏராள மான கழகத் தோழர் தோழியர்களும் பங்கேற்றனர்.

மகளிரணி
சி.வெற்றிச்செல்வி, கு.தங்கமணி, இறைவி, செல்வி, கற்பகம், சுமதி, மரகதமணி, மணியம்மை, பவானி, பூங்குழலி, மீனாட்சி, சந்திரா, மு. தமிழ்செல்வி, மோகனப் பிரியா, தனலட்சுமி, மேகலா, கவிதா, யாழினி, ரோஸ், கலைமதி, யாழ் மொழி, குஞ்சிதம், யுவ ராணி, மீனாகுமாரி, செம் மொழி, சிவரஞ்சனி, சென்னை பெரியார் மருத் துவமனையைச் சேர்ந்த மேரி, லலிதா, காயத்ரி, ஜெயந்தி, எப்சிமா மற்றும் ஏராளமானோர் பங் கேற்றனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக