வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

அறிஞர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை



அறிஞர் அண்ணாவின் 46 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3.2.2015) சென்னை 
காமராசர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில், திராவிடர் கழகத்தின் 
சார்பில், கழகத் தோழர்கள் புடைசூழ சென்று கழக துணைத் தலைவர் கவிஞர் 
கலி.பூங்குன்றன் அவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன், முன்னாள் மாவட்ட நீதிபதி 
பரஞ்ஜோதி, திராவிடன் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடராசன், திராவிட வரலாற்று 
ஆய்வாளர் பேராசிரியர் ந.மங்களமுருகேசன், சுயமரியாதை திருமண நிலைய 
இயக்குநர் திருமகள், வட மாவட்டங்களின் அமைப்பு செயலாளர் நெய்வேலி 
ஞானசேகரன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.


அறிஞர் அண்ணாவின் 46-ஆம் ஆண்டு நினைவு நாள்
நினைவிடத்தில் கழக துணைத் தலைவர் தலைமையில் மரியாதை
சென்னை, பிப். 3_ அறிஞர் அண்ணாவின் 46 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3.2.2015) அவரது நினைவிடத்தில் கழக துணைத் தலைவர் தலைமையில் மலர் வளை யம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும், முன்னாள் முதலமைச்சரு மான அறிஞர் அண்ணா அவர்களின் 46-ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3.2.2015) காலை 10.30 மணிக்கு சென்னை கடற்கரை சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் கழகத் தோழர், தோழியர்கள் புடைசூழ திராவிடர் கழக துணைத் தலைவர் கவி ஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார்.
இந்நிகழ்வில் பகுத்தறி வாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன். கழகத் தலைமைச் செயற் குழு உறுப்பினர் திரும கள், வடமாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன் கழக வழக்குரைஞரணி அமைப் பாளர் வீரமர்த்தினி, மூதறிஞர் குழுவின் செய லாளர் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி இரா. பரஞ்சோதி, வரலாற்று ஆய்வு மய்ய துணைத் தலைவர் பேராசிரியர் ந,க,மங்கள முருகேசன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடரா சன், பொதுக்குழு உறுப்பி னர் சைதை எம்.பி.பாலு, தென்சென்னை மாவட் டத் தலைவர் இரா.வில்வ நாதன், துணைத் தலைவர் கள் செங்குட்டுவன், மயிலை சேதுராமன், வடசென்னை மாவட்டத் தலைவர் திரு வள்ளுவன் அமைப்பாளர் செம்பியம் கி.இராமலிங் கம், ஆர். இராஜா கதிரே சன் (68(அ) வட்ட  திமுக பகுதி பிரதிநிதி ), ஏ.லோக நாதன் (திமுக).
மகளிரணி தோழியர் கள் சி.வெற்றிசெல்வி, கு.தங்கமணி குணசீலன், மீனாகுமாரி, மரகதமணி, சிவரஞ்சினி, சுமதி கணேசன், த.தனலட்சுமி.
கழகத் தோழர்கள் முத்து கிருஷ்ணன், சி.சண் முகபிரியன், சுரேஷ், ஆ. பிழைபொறுத்தான், கதிர வன், தரமணி மஞ்சுநாதன், திருவொற்றியூர் கணேசன், விசுவநாதன், ஏழுமலை, புரசை பாலமுருகன், உடு மலை வடிவேல், கோ. வீரன், எஸ்.பழனிசாமி, டி.சவுரியப்பன் மற்றும் திரளான கழகத்தோழர் கள், தோழியர்கள் பங் கேற்றனர்.

(தென் சென்னை சார்பில் பங்கேற்றனர்.)

-விடுதலை,3.2.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக